AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

திங்கள், 19 செப்டம்பர், 2011

ஏழைகளுக்கு வழங்குவதற்காக உணவு வங்கி தொடங்கப்படும்!

புதுடெல்லி: திருமணம் போன்ற விழாக்களில் வீணாகும் உணவை சேமித்து, ஏழை மற்றும் பசியால் வாடுபவர்களுக்கு வழங்கும் வகையில் உணவு வங்கியை தொடங்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளது. அமெரிக்காவின் சிகாகோ நகரில் சில சமுக அமைப்புகள் சார்பில் உணவு வங்கிகள் செயல்படுத்தப்படுகின்றன. ஓட்டல்கள், திருமணங்கள் ஆகிய இடங்களில் மீதமாகும் உணவை சேகரித்து, ஏழைகளுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன. பல நிறுவனங்கள், தனிநபர்கள் பலர் இதற்கு அன்பளிப்பாக பணமும் வழங்குகின்றன. கடந்த ஜூன் மாதம் இந்தியா வந்திருந்த  தொழில்நுட்ப ஆலோசகர் சாம் பிட்ரோடா, முதல்வர் ஷீலா தீட்சித்தை சந்தித்தார். அப்போது, சிகாகோவில் செயல்பட்டு வரும் உணவு வங்கிகள் பற்றி கூறினார்.பிட்ரோடா உறுப்பினராக உள்ள உலக உணவு வங்கியின் ஆதரவில் 21 நாடுகளில் இது போன்ற உணவு வங்கிகளை தொண்டு நிறுவனங்கள் செயல்படுத்தி வருவதையும் ஷீலா தீட்சித்திடம் தெரிவித்தார். டெல்லியிலும் இதுபோல் உணவு வங்கி தொடங்கப்பட வேண்டும் என்று பிட்ரோடா கேட்டு கொண்டார். இதற்கு முதல்வர் ஷீலா தீட்சித் மகிழ்ச்சியுடன் சம்மதம் தெரிவித்தார். 
டெல்லியில் சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் ஒருவரின் மகன் திருமணம் நடந்தது. இதில் உணவு பொருட்கள் அதிகளவில் வீணானதாக தகவல் வெளியாது. இதற்கு கண்டனம் தெரிவித்த  முதல்வர் ஷீலா தீட்சித், திருமணங்கள் மிகவும் எளிமையாக நடத்த வேண்டும் என்று கட்சியினரை கேட்டு கொண்டார். 
இப்போது, திருமணம் போன்ற விழாக்களில் உணவு பொருட்கள் வீணாவது சர்வசாதாரணமாகிவிட்டது. இந்த உணவுகளை சேகரித்து, ஏழைகளுக்கு வழங்குவதற்கு டெல்லியில எந்த வழியும் இல்லை. இதையடுத்து, டெல்லியில் உணவு வங்கியை தொடங்க அரசே முடிவு செய்துள்ளது. இப்போது, அரசு சார்பில், ‘ஆப் கி ரசோல்’ என்ற பெயரில் ஏழைகளுக்கும் வீடில்லாதவர்களுக்கும் உணவு வழங்கப்படுகிறது. இதற்கு பல்வேறு தொழில் நிறுவனங்களும், பொதுதுறை நிறுவனங்களும் உதவி செய்கின்றன. 13 இடங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 
இந்த நிலையில், உணவு வங்கி தொடங்குவது பற்றி அரசின் மூத்த அதிகாரி கூறுகையில்,‘உணவு வங்கி தொடங்குவது பற்றி முதல்வர் தீவிரமாக ஆலோசித்து வருகிறது., தொண்டு நிறுவனம் சார்பிலேயே இந்த உணவு வங்கிகள் செயல்படுத்தப்படும். இந்த வங்கிகளுக்கு மக்கள் தாங்களாகவே முன்வந்து உணவுபொருட்கள், சமைத்த உணவுகளை வழங்கலாம். வீணாகும் உணவுகளை ஏழைகளுக்கு வழங்குவது இறைவனுக்கு செய்யும் தொண்டாக கருதி, இந்த வங்கிக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும். விரைவில் உணவு வங்கி தொடங்கப்படும்’ என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக