மருத்துவத் துறைக்கான மானியக் கோரிக்கையின் போது மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவர் பேரா. முனைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் சட்டமன்றத்தில் ஆற்றிய உரை:
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,
இந்த நல்லாட்சியிலே, கடந்த ஆண்டைவிட மருத்துவத் துறைக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளதை மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக முதலிலே வரவேற்கிறேன். அதேபோல, தமிழகத்திலுள்ள குக்கிராமங்களுக்கும் சிறந்த மருத்துவ வசதி செய்வதற்காக நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்திருக்கக்கூடிய அருமையானத் திட்டங்களையும் தொடக்கத்திலேயே மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக வரவேற்கிறேன்.
போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கையிலே பேசும்போது நம்முடைய மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் கடந்த திமுக ஆட்சியிலே எப்படிப் புதிய பேருந்து தடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன என்றால், பச்சைக் கொடி காட்டி ஒரு கண்காட்சியை நடத்திவிட்டு மீண்டும் மீண்டும் அதேபோன்று செய்ததாகச் சொன்னார்களோ, அதேபோலத்தான் இராமநாதபுரத்திலே ஒரு அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும் என்று அறிவித்து, அதற்கான விழாவை நடத்திவிட்டு, அந்த மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான எந்தவொரு பணியையும் செய்யாமல் சென்ற ஆட்சியினர் சென்றுவிட்டார்கள்.
இராமநாதபுரம் தொகுதி மக்கள் ஒட்டுமொத்தமாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவு தெரிவித்து, எங்களையெல்லாம் வெற்றிபெற வைத்திருக்கின்றார்கள். ஆண்டுக்கு ஒரு புதிய அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும் என்று மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்கள். அந்தக் கல்லூரியை டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களால் உருவாக்கப்பட்ட இராமநாதபுரம் மாவட்டத்தில் முதலிலே அமைக்கப்பட வேண்டுமென்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இங்கே மிக முக்கியமாக அரசாங்கத்தினுடைய கவனத்திற்கு ஒரு கருத்தைக் கொண்டுவர விரும்புகின்றேன். சித்த மருத்துவ முறை நம்முடைய தமிழ் மண்ணினுடைய மருத்துவ முறையாக இருக்கின்றது. இன்று 70 சதவிகிதம் மக்கள் சித்தா, ஆயுர்வேதா, யுனானி போன்ற இந்திய மருத்துவ முறைகளில் நம்பிக்கைக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் தமிழகத்திலே இந்த சித்த மருத்துவ முறையை விரிவுபடுத்துவதற்கு, வளப்படுத்துவதற்கு முறையான முயற்சிகள் நடக்காமலிருப்பது வருந்துவதற்குரிய ஒன்றாகக் கருதுகின்றேன். எடுத்தக்காட்டுக்கு சொல்ல வேண்டுமென்றால் 1996-லே சித்தா மெடிக்கல் கவுன்சில் தொடங்கப்பட்டது. ஆனால் 15 ஆண்டுகள் ஆன பிறகும்கூட சித்தா மெடிக்கல் கவுன்சில் இன்றுவரை செயல்பாட்டுக்கு வரவில்லை. காரணம் என்னவென்றால், சித்தா மெடிக்கல் கவுன்சிலில் 2 உறுப்பினர்களை தமிழக அரசு நியமிக்க வேண்டும். அவர்களை நியமிக்காததன் காரணமாக, சித்தா மருத்துவக் கவுன்சில் இன்றுவரை செயல்படாமல் இருக்கக்கூடிய நிலையை இந்த ஆட்சியிலே மாற்றி சித்தா மருத்துவ முறை தமிழகத்திலே தழைத்தோங்குவதற்கு நிச்சயமாக இந்த அரசு முன்வர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
அதுமட்டுமல்லாமல், சித்த மருத்துவ முறையை வளப்படுத்துவதற்காக உண்மையான நிபுணர்களைக் கொண்ட, அரசு உறுப்பினர்கள் அல்ல, மருத்துவத் துறையிலே பாண்டித்தியம் பெற்ற, பல்கலைக்கழகத்தில் படித்த ங்ஷ்ல்ங்ழ்ற்ள் ஸ்ரீர்ம்ம்ண்ற்ற்ங்ங் நிபுணர் குழு அமைக்கப்பட்டு, சித்தா மருத்துவ முறையை வளப்படுத்த வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
தற்சமயம் தமிழகத்திலே இயங்கிவரும் ஆறு சித்த மருத்துவக் கல்லூரிகளை, அதிலும் குறிப்பாக, இரண்டு அரசு சித்த மருத்துவக் கல்லூரிகளை மூடுவதற்கு மத்திய மெடிக்கல் கவுன்சில் உத்தரவிட்டிருக்கின்றது.
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு அமைச்சர் அவர்களின் விளக்கத்திற்கு நன்றி. சென்னையிலுள்ள அருங்காட்சியகத்தில் நம்முடைய பாரம்பரிய தமிழக மருத்துவமுறை தொடர்பான அரிய ஓலைச் சுவடிகள், பழமைவாய்ந்த நூல்கள் குவியலாக, மூட்டையாக வைக்கப்பட்டுள்ளன. மனிதநேய மக்கள் கட்சியின் கோரிக்கை என்னவென்றால், இதையெல்லாம் முறைப்படுத்தி, அதற்காக ஒரு தனிப்பிரிவை ஏற்படுத்தி அந்தப் பழஷவாய்ந்த, விலைமதிப்பில்லாத ஓலைச்சுவடிகள், பழமை நூல்களையெல்லாம் சி.டி. வடிவத்தில், இணைய வழியாக அனைவரும் பயன்படக்கூடிய வகையிலே இந்த அரசு ஆவன செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
அதைப்போல, நம்முடைய தமிழகத்தில் வர்ம மருத்துவமுறை அரிய மருத்துவ முறையாக இருக்கிறது. தண்டுவடம் மற்றும் மூட்டு நோய்களுக்கு இந்த வர்ம மருத்துவ முறைதான் சிறந்த சிகிச்சையை அளிக்கக்கூடியதாக இருக்கிறது.
ஆக, இந்த வர்ம மருத்துவத்தை வளப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் இந்த அரசாங்கம் ஈடுபட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். தமிழகத்தில் யுனானி மருத்துவத்திற்காக மத்திய அரசாங்கத்தின் ‘‘மருத்துவத் திட்டம்’’ இன்னும் அமல்படுத்தவில்லை. அதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
சுகாதாரத்துறை அமைச்சர் வி.எஸ்.விஜய் பதில்:
‘‘தி.மு.க. ஆட்சியில் தேர்தலை முன்னிட்டு மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படும் என அவசர கோலத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால் அரசு மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஒரு மருத்துவக் கல்லூரி தொடங்க வேண்டுமானால், 25 ஏக்கர் நிலம்-500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை-90 சதவீத உள் நோயாளிகள்-பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் விகிதங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். எனவே முதல்வர் ஜெயலலிதாவின் ஆலோசனையுடன் நடைமுறையில் சாத்தியமாகும் வகையில் இத்தகைய வசதிகளுடன் மாவட்டங்களில் ஆண்டுக்கு ஒரு மருத்துவக் கல்லூரி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் உள்ள 100 பி.எஸ்.எம்.எஸ். இடங்களில் மாணவர்களைச் சேர்க்க மத்திய இந்திய முறை மருத்துவக் கவுன்சிலின் (சிசிஐஎம்) அனுமதி பெறத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன'' என்றார்.
சென்னை அண்ணாநகர், பாளையங்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள சித்த மருத்துவக் கல்லூரிகளை மூட மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது உண்மைதான். கடந்த திமுக ஆட்சியில் அவைகள் சிறப்பாக செயல்படவில்லை. கடந்த ஆட்சியின் போது மத்திய இந்திய மருத்துவக் கழகம் இந்தக் கல்லூரிகளில் ஆய்வு செய்தபோது 50 சதவீதத்திற்கும் குறைவான மாணவர்களே சேர்க்கப்பட்டிருந்தனர். இதனால்தான் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
ஆனால் இப்போது முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்கள் எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட மாணவர்களை இந்தக் கல்லூரிகளில் சேர்த்துள்ளனர். இதுபற்றிய தகவல்களை துறையின் அதிகாரிகள் 28.07.2011 அன்று மத்திய இந்திய மருத்துவக் கழகத்திற்கு நேரில் சென்று தெரிவித்துள்ளனர்'' என்றா..




0 கருத்துகள்:
கருத்துரையிடுக