AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

திங்கள், 19 செப்டம்பர், 2011

கடல் அட்டைக்கான தடையை நீக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் சட்டமன்றத்தில் ம.ம.க. கோரிக்கை தமிழக சட்டமன்றத்தில் மீன்வளத் துறை மானியக் கோரிக்கையின்போது மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லா


தமிழக சட்டமன்றத்தில் மீன்வளத் துறை மானியக் கோரிக்கையின்போது மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து...
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே...

மாண்புமிகு தமிழக மீனவர்களின் நலன் காக்க, கட்சத் தீவை மீட்க வழிவகுக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம், 35.85 கோடி ரூபாய் செலவில் நாகப்பட்டினத்திலும், 27.56 கோடி ரூபாய் செலவில் பழையாற்றிலும், நவீன மீன்பிடி துறைமுகங்கள் அமைக்க நடவடிக்கை, 75 கோடி ரூபாய் செலவில் பூம்புகாரிலும், இராமேஸ்வரம் தெற்கில் உள்ள மூக்கையூரிலும், மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்கும் திட்டம், சூரை மீன்பிடி தூண்டில் படகுகள் வாங்குவதற்கு 25 சதவீத மானியத்தில், ஐந்து லட்சம் ரூபாய் வரையில் மீனவர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம், நடுக்கடலில் மீன்பதப்படுத்துவதும், அலகு ஏற்படுத்துதல் என்று நாள் வரிசையாக அடுக்கிக்கொண்டே போகலாம்.

அதுமட்டுமல்லாமல், திமுக ஆட்சியிலே இலங்கையின் கடற்படையினரால் நம்முடைய மீனவர்கள் தாக்கப்பட்டு, கொல்லப்படுவது தொடர்ந்து நடைபெற்று வந்தது. ஆனால், இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு, தாக்குதலும் குறைந்திருக்கிறது, கொல்வதும் அறவே ஒழிந்திருக்கிறது என்ற நிலையில் இந்த அரசு மீனவர்களுக்கு என்றும் நண்பனாகவே திகழும், அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் என்பதைப் பறைசாற்றக்கூடிய வகையில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் தலைமையிலான இந்தச் சீரிய அரசு மீன் வளத்தை மேம்படுத்த எடுத்துவரக்கூடிய நடவடிக்கைகளை முதலில் மனமார வரவேற்கிறேன், பாராட்டுகிறேன்.

தொடக்கமாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன்.

எனது தொகுதிக்குட்பட்ட மண்டபத்தைச் சேர்ந்த முருகானந்தம் என்ற 28 வயது மீனவர் கடந்த ஆகஸ்டு 20ஆம் தேதி ஐவருடன் தென்கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்கிறார். அரிசல் என்ற கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது முருகானந்தம் தவறி கடலிலே விழுந்து விடுகிறார். இவரைத் தேடுவதற்கான பணிகள் அரசால் முடுக்கிவிடப்பட்டும் இவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இப்போது இவருடைய உடல் இலங்கைக் கடல் பகுதியிலே ஒதுங்கி, அவரது பிணம் யாழ்ப்பாணம் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இவரது குடும்பத்தினர் இவரை நம்பியே வாழ்ந்து வந்தவர்கள். இறந்துபோன முருகானந்தத்தின் குடும்பத்தினர் இவரை நம்பியே வாழ்ந்து வந்தவர்கள். இறந்துபோன முருகானந்தத்தின் குடும்பத்தினர் ஈவிரக்கமுள்ள மாண்புமிகு முதலமைச்சரின் அரசு நிவாரணத் தொகை அளிக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பில் உள்ளார்கள். முறையாக இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் இதற்கான கோரிக்கை மனுவையும் அவருடைய குடும்பத்தினர் அளித்துள்ளார்கள்.  நிர்க்கதியாக நிற்கும் முருகானந்தம் குடும்பத்தினருக்கு நமது அரசு உரிய நிவாரணத் தொகையை வழங்கு வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

எனது தொகுதியில் கடல் அட்டை விவகாரம் தினமும் மீனவர்களுக்கு மட்டுமல்ல, எனக்கு மன அழுத்தத்தைத் தரும் வகையிலே அமைந்துள்ளது. வாஜ்பாய் அவர்கள் தலைமையிலே தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மத்தியிலே இருந்தபோது, டி.ஆர்.பாலு அவர்கள் சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த நேரத்தில் கடல் அட்டை உள்பட 53 வகையான கடல் பொருட்களைப் பிடிப்பதற்கு 2001 ஜூலை 11-இல் தடை விதித்தார். இதற்கு மீனவர்களிடையே கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து 2001 டிசம்பர் 15 அன்று 53 வகையான கடல் பொருட்களில் 23 பொருட்கள் மீதான தடை நீக்கப்பட்டது. ஆனால், தமிழகத்தில் இராமநாதபுரம், தஞ்சாவூர், நாகை, புதுக்கோட்டை, தூத்துக்குடி மற்றும் குமரி மாவட்ட மீனவர்கள் பிடிக்கும் கடல் அட்டை மீன்களில் கருப்பு அட்டை மீன், வெள்ளை அட்டை மீன், சிவப்பு அட்டை மீன் ஆகிய 3 வகை கடல் அட்டைகள் மீதான தடை மட்டும் நீக்கப்படவில்லை. இதனால் கடல் அட்டை மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கான மீனவர்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக பெரும் மன உளைச்சலில் உள்ளார்கள். கடல் அட்டை மீதான தடையை நீக்கக்கோரி பலமுனைகளில் இத்தொழிலில் ஈடுபடுவோர் முயற்சி செய்தபோதிலும் மத்திய அரசு இதனைக் கண்டுகொள்ளவில்லை.

இதிலே வேடிக்கையான ஒரு நிகழ்வு என்னவென்றால், சென்ற திமுக ஆட்சியில் மீன்வளத் துறை அமைச்சர், 19.10.2007-லே கடல் அட்டை மீன்பிடித்தல் மீதான தடையை நீக்க வேண்டுமென்று மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுகிறார். தமிழக நலனில் அக்கறை இல்லாமல், பதவியைப் பயன்படுத்த பணத்தைச் சுருட்டுவதில் குறியாக இருந்த ஒரு திமுககாரர்தான் அப்போது மத்திய அமைச்சரவையிலே சுற்றுச்சூழல் அமைச்சராகவும் இருந்தார். இருந்தபோதிலும் கடல் அட்டை மீதான தடை நீக்கம் செய்யப்படவில்லை.

இங்கே பேசிய நம்முடைய மாண்புமிகு உறுப்பினர் பிரின்ஸ் அவர்கள், குமரி மாவட்டத்தில் ஏர்போர்ட் அமைக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். இப்போது தமிழகத்தைச் சேர்ந்த திருமதி ஜெயந்தி நடராஜன் அவர்கள்தான் சுற்றுச்சூழல் அமைச்சராக இருக்கின்றார். கடல் அட்டை பிரச்சினை அவருடைய தொகுதியிலும் முக்கியமான பிரச்சினையாக உள்ளது. இருப்பினும் கடல் அட்டை மீதான தடையை நீக்குவதற்கு மத்திய அரசு எந்தவொரு முயற்சியும் எடுக்கவில்லை. கடல் அட்டை என்பது மீஸீபீணீஸீரீமீக்ஷீமீபீ sஜீமீநீவீமீs அல்ல, அழியக்கூடிய ஒரு இனம் அல்ல; சிமீஸீtக்ஷீணீறீ விணீக்ஷீவீஸீமீ திவீsலீமீக்ஷீவீமீs ஸிமீsமீணீக்ஷீநீலீ மிஸீstவீtutமீ மிகத்தெளிவாக, ஆண்டு ஒன்றுக்கு 20 இலட்சம் முட்டைகளை கடல் அட்டைகள் இடுகின்றன என்று சொல்லியிருக்கிறது. உலகத்திலே எந்த நாட்டிலும் கடல் அட்டை மீதான தடை இல்லை, இந்தியாவிலே மட்டும்தான் இருக்கிறது. நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், பரமக்குடியிலே தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலே பேசும்போது, ”இந்தக் கடல் அட்டை மீதான தடையை நீக்குவதற்கு மத்திய அரசை வலியுறுத்துவோம்' என்று குறிப்பிட்டிருக்கின்றார்கள்.

இந்தச் சூழலில் இன்று தமிழ்நாட்டில் கடல் அட்டை பிடிக்கக்கூடிய மீனவர்கள் மும்முனைத் தாக்குதலுக்கு இலக்காகி இருக்கின்றார்கள். ஒருபக்கம் கடற்படை, இன்னொரு பக்கம் வனப்படை, 3வது பக்கம் காவலர்கள். இதிலே மிக வேடிக்கையான விஷயம் என்னவென்றால், ஒரு தீவிரவாதியை, பயங்கரவாதியைப் பிடிக்கிற மாதிரி காவல் துறையினரும், வனத் துறையினரும் இந்தக் கடல் அட்டை பிடிக்கும் மீனவர்களை பாடாய்படுத்துகின்றார்கள். வேதாளையைச் சேர்ந்த கே.ஏ. ஜப்பார் என்பவர் நம்முடைய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தனுடைய உறுப்பினர். அவர் இராமநாதபுரம் மாவட்ட சங்கு, பாசி தொழிலாளர் கூட்டமைப்பின் தலைவராக இருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு அவருடைய வீட்டிற்கு வீடியோ சகிதமாகச் சென்று, ஏதோ தீவிரவாதி வீட்டை தேடுவதைப் போல கடல் அட்டையைத் தேடிவிட்டு, எதுவும் கிடைக்காமல் சென்று விட்டார்கள். ஆனால், அதேநேரத்தில் இங்கே இன்னொன்றைக் குறிப்பிட விரும்புகிறேன்.

இராமேஸ்வரத்தைச் சேர்ந்த வில்வநாதன் என்பவர் வில்லாயுதம் என்ற திமுக பிரமுகர் நாளன்றுக்கு 5 இலட்ச ரூபாய் மதிப்புள்ள கடல் அட்டைகளை எவ்விதக் குறுக்கீடும் இல்லாமல் கடத்திக்கொண்டே இருக்கின்றார். இத்தகைய சமூக விரோதிகள் மீது இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விடுத்து, இயற்கையாகவே வலையில் வரக்கூடிய கடல் அட்டை மாட்டும்போதுகூட மீனவர்களை வனத் துறையினரும், காவல் துறையினரும் தினமும் நச்சரிப்பதும், அவர்கள் மீது வழக்குப் போடுவதும் தவிர்க்கப்பட வேண்டுமென்று இந்த நேரத்திலே கேட்டுக் கொள்கிறேன்.

மீனவ நல வாரியப் பயன்கள் முறையாகச் சென்றடைய மீன் துறையில் நல வாரியப் பணிகளுக்கென்று தனி மீன் துறை உதவி இயக்குநர் ஒருவரை மாவட்டந்தோறும் நியமனம் செய்து அரசின் நலத் திட்டங்கள் மீனவ மக்களைச் சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். கடல் வளங்களைப் பாதுகாக்க அமைக்கப்பட்டிருக்கும் மன்னார் வளைகுடா உயிர்கோளக் காப்பக அறக்கட்டளை சென்ற திமுக ஆட்சியில் மீனவர் அல்லாதவர்களை மீனவர்களாகக் கருதி, அவர்களை இந்த அறக்கட்டளையின் பயனாளிகளாகச் சேர்த்து மீனவர்களுக்குக் கிடைக்கும் நன்மைகளை மீனவர்கள் அல்லாதவர்களுக்கு வழங்கி வருகிறது. இந்த அறக்கட்டளையில் மீனவர் அல்லாதவர்களை வைத்து, சுற்றுச் சூழல் மேம்பாட்டுக் குழுக்கள் அமைத்து உண்மையான மீனவர்களுக்கெதிராகத் திட்டமிட்டுக் கடல் வளங்களை மீன்பிடித் தொழிலை உண்மையான மீனவர்களிடமிருந்து பறிக்க சதி நடைபெற்று வருகிறது. இந்த அடிப்படையிலே தான் கடலில் மிதவை அமைக்க குறுக்கு வழியில் முயற்சி எடுத்து மீனவர்கள் அல்லாதவர்களை வைத்து தீர்மானம் போட்டு, மீன் பிடிக்கத் தடை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கடலுக்கும், மீன்பிடித் தொழிலுக்கும் தொடர்பில்லாதவர்களை மீனவர்களக்கெதிராகத் தூண்டி இந்த அறக்கட்டளை பணிகளைச் செய்து வருகிறது. உண்மையான மீனவர்கள் எவரும் கடலில் 21 தீவுகளைச் சுற்றி மிதவை அமைப்பதை ஆதரிக்கவில்லை. ஆகவே, மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு உலை வைக்கும் இந்த மிதவை அமைக்கும் திட்டத்தை மீனவர் நலனில் அக்கறை உள்ள இந்த அரசு கைவிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

கூடங்குளம் அணு உலை பூங்கா திட்டம், நிலக்கரி மற்றும் எரிவாயு தொடர்பான அனல் மின் உற்பத்தித் திட்டங்கள் தமிழகக் கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் அமைந்துள்ளது. மீனவர்களுக்கு மற்றும் கடல்வாழ் உயிரினங்களுக்கு மிகுந்த அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இத்திட்டங்கள் அனைத்தும் மீன்பிடித் தொழிலுக்கு இடையூறாகவும், கடலரிப்பை அதிகப்படுத்துவதாகவும், பேரிடர்களை உருவாக்குபவைகளாகவும் இருக்கின்றன. இத்திட்டங்கள் அனைத்தும் உடனடியாகக் கைவிடப்பட வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றேன்.

கடற்கரை ஒழுங்காற்று அறிவிப்பாணை 2011ஐ மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்த அறிவிப்பாணை குறித்து மீனவ மக்களிடம் மீண்டும் கருத்து கேட்க வேண்டும். மீனவப் பெண்களுக்கு மீன் விற்பதற்கென பிரத்தியேக குளிர்சாதன வசதி மற்றும் குடிநீர் வசதியுடன் மீனவச் சந்தைகள் உள் நகரங்களிலே, பேரூராட்சிகளிலே, ஊராட்சிகளிலே அமைத்துக் கொடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றேன். அதேபோல, இறுதியாக கடந்த ஐந்தாண்டுகளாக சிங்காரவேலர் தொகுப்பு வீடுகள் திட்டத்தின் கீழ் தமிழகக் கடற்கரை கிராமங்களிலே எந்தப் புதிய வீடுகளும் கட்டித் தரப்படவில்லை. பழைய வீடுகளும் பழுதுபார்க்கப்படவில்லை. ஏழை மீனவர்களுக்கு வீடு வழங்கும் தொகுப்பு வீடுகள் இந்தத் திட்டத்தின் மூலம் மீண்டும் செயல்படுத்தப்பட வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றேன். 1983 முதல் இலங்கைக் கடற்படையினரால் கொல்லப்பட்ட, காயமடைந்த மீனவர்களுடைய வாரிசுகளுக்கு அரசு வேலை அளிக்க வேண்டுமென்பதோடு மட்டுமல்லாமல், இந்தக் கொலையில் ஈடுபட்ட இலங்கைக் கடற்படை வீரர்கள் நாட்டிற்குக் கொண்டு வரப்பட்டு, சட்டத்திற்கு முன்னால் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டுமென்று சொல்லி, இந்த வாய்ப்பைத் தந்த பேரவைத் தலைவருக்கு நன்றி தெரிவித்து விடைபெறுகின்றேன்...

0 கருத்துகள்:

கருத்துரையிடுக