டெகரான் : போலி மருந்து விற்பனை செய்த வழக்கில் சிக்கிய 5 பேருக்கு ஈரானில் நேற்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம், போலி மருந்து விற்பனை, விபசாரம், கள்ளத் தொடர்பு போன்றவற்றில் ஈடுபடுவதை கடுமையான குற்றமாக கருதி, குற்றம் புரிபவர்களுக்கு ஈரானில் தூக்கு தண்டனை வழங்கப்படுகிறது. அண்மையில் போலி மருந்து விற்றது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு சிறையில் நேற்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
ஈரானில் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 192 பேர் தூக்கிலிடப்பட்டதாகவும், இது கடந்த ஆண்டு 179 என்றும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்த எண்ணிக்கையைவிட அதிகமானோர் தூக்கிலிடப்பட்டதாக மனித உரிமைகள் அமைப்புகள் தெரிவிக்கின்றன. நாட்டின் சட்ட ஒழுங்கை பாதுகாக்க தூக்கு தண்டனை அவசியமானது. அதை பூரண சட்ட நடவடிக்குப் பின்னரே நிறைவேற்ற வேண்டும் என்று டெஹ்ரான் தெரிவித்துள்ளது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக