AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

செவ்வாய், 20 செப்டம்பர், 2011

சென்னையில் இருந்து 4088 பேர் ஹஜ் பயணம்: அமைச்சர் முகமது ஜான் தகவல்


சென்னை மெரீனா டவர் ஓட்டலில் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்துக்கு பிற்பட்டோர் நலத்துறை மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முகமதுஜான் தலைமை தாங்கினார்.
 
அரசு செயலாளர் அலாவுதீன், ஹஜ் கமிட்டி துணை தலைவர் அபுபக்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் போலீஸ்துறை, விமானத் துறை, பாஸ்போர்ட் துறை, சுகாதாரதுறை, குடியுரிமை துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  
 
கூட்டத்தில் அமைச்சர் முகமது ஜான் பேசியதாவது:-
 
2011-ம் ஆண்டுக்கான புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மனு செய்தனர். தமிழ்நாட்டில் மக்கள்தொகை அடிப்படையில் ஒதுக்கீடு 3057 ஆகும். ஆனால் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்ததன் பேரில் கூடுதலாக 761 இடங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதற்காக புரட்சித் தலைவி ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
 
மேலும் மத்திய அரசின் விருப்ப ஒதுக்கீட்டின் கீழ் 241 இருக்கைகள் கூடுதலாக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் தமிழ்நாட்டில் இருந்து 3810 பேர் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்கள்.  
 
அவர்களில் 1921 ஆண்கள்,1893 பேர் பெண்கள், இது தவிர புதுச்சேரியில் இருந்து 59 பேரும், அந்தமான் நிகோபரை சேர்ந்த 29 பேரும் சேர்ந்து 4088 பேர் சென்னையில் இருந்து ஹஜ் பயணம் செல்ல இருக்கின்றனர்.
 
இவர்கள் பயணம் செய்யும் முதல் விமானம் வருகிற அக்டோபர் 17-ந் தேதி புறப்படுகிறது. புனித ஹஜ் பயணத்திற்காக சென்னையில் இருந்து 14 விமானங்கள் இயக்கப்பட உள்ளன. இந்த பயணம் வருகிற அக்டோபர் 31-ந் தேதியுடன் நிறைவடையும்.
 
சவுதிஅரேபியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் விமானங்களை இயக்குகிறது. அவர்களுக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் உதவிகளை செய்கிறது. சவுதிஅரேபியா செல்லும் புனித ஹஜ் பயணிகளுக்கு வருகிற 26-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை தடுப்பூசி போடப்படுகிறது.
 
இவ்வாறு அமைச்சர் முகமது ஜான் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக