AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

செவ்வாய், 20 செப்டம்பர், 2011

கடலூர் மாவட்டத்தில் 16 லட்சம் வாக்காளர்களை கொண்ட பட்டியல் வெளியீடு


கடலூர்,செப்.20-
உள்ளாட்சி தேர்தலுக்காக கடலூர் மாவட்டத்தில் 16 லட்சத்து 15 ஆயிரத்து 476 வாக்காளர்களைக்கொண்ட புகைப்பட வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இப்பட்டியலில் பெண்களைக்காட்டிலும் ஆண் வாக்காளர்களே அதிகமாக உள்ளனர்.
கலெக்டர் வெளியிட்டார்
தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் அடுத்த மாதம் (அக்டோபர்) 24-ந் தேதியுடன் முடிவடைவதால் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை,மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.
இதையொட்டி கடலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் புகைப்பட இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. கடலூர் மாவட்ட கலெக்டர் அமுதவல்லி தனது அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் புகைப்பட வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். அப்போது நகராட்சி ஆணையாளர் இளங்கோவன்,கலெக்டரின் நேர்முக உதவியாளர்(தேர்தல்) சினேகலதா,செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி பொன்.முத்தையா,பஞ்சாயத்து ïனியன் ஆணையாளர்கள் பத்மநாபன்,சீனிவாசன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
ஆண்களே அதிகம்
வாக்காளர் பட்டியலில் 16 லட்சத்து 15 ஆயிரத்து 476 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் 8 லட்சத்து 21 ஆயிரத்து 685 பேர் ஆண்கள்,7 லட்சத்து 93 ஆயிரத்து 791 பேர் பெண் வாக்காளர்கள் ஆவார்கள். பெண்களை காட்டிலும் ஆண் வாக்காளர்கள் கூடுதலாக உள்ளனர்.
மாவட்டத்தில் உள்ள 13 பஞ்சாயத்து ïனியன்களில் 11 லட்சத்து 71 ஆயிரத்து 126 வாக்காளர்கள் உள்ளனர். பஞ்சாயத்து ïனியன் வாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை விவரம் வருமாறு:-
கடலூர் ïனியன்
கடலூர் பஞ்சாயத்து ïனியனில் 68,897 ஆண்வாக்காளர்களும்,66,130 பெண் வாக்காளர்களும் ஆக மொத்தம் ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 27 வாக்காளர்கள் உள்ளனர். அண்ணாகிராமம் பஞ்சாயத்து ïனியனில் 83,973 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 42,429 பேர் ஆண்கள்,41,544 பேர் பெண்கள். ஒருலட்சத்து 4 ஆயிரத்து 563 வாக்காளர்களைகொண்ட பண்ருட்டி பஞ்சாயத்து ïனியனில் 53,458 பேர் ஆண்கள்,51,105 பேர் பெண்கள்.
குறிஞ்சிப்பாடி பஞ்சாயத்து ïனியனில் 61,168 ஆண்வாக்காளர்களும்,57,503 பெண் வாக்காளர்களும் ஆக மொத்தம் 1,18,671 பேர் உள்ளனர்.
காட்டுமன்னார்கோவில் பஞ்சாயத்து ïனியனில் 37,315 ஆண் வாக்காளர்களும்,34,823 பெண் வாக்காளர்களும் உள்ளனர். மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 72,138.
குமராட்சி பஞ்சாயத்து ïனியனில் 40,399 ஆண் வாக்காளர்களும்,38,229 பெண் வாக்காளர்களும் உள்ளனர். மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 78,628.
கீரப்பாளையம்
கீரப்பாளையம் பஞ்சாயத்து ïனியனில் ஆண் வாக்காளர்கள் 41,224,பெண் வாக்காளர்கள் 39,619 பேர் உள்ளனர். மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 80,843 ஆகும்.
மேல்புவனகிரி பஞ்சாயத்து ïனியனில் 30,354 ஆண் வாக்காளர்களும்,28,976 பெண் வாக்காளர்களும் ஆக மொத்தம் 59,330 வாக்காளர்கள் உள்ளனர்.
பரங்கிப்பேட்டை பஞ்சாயத்து ïனியனில் 36,471 ஆண் வாக்காளர்களும்,35,203 பெண் வாக்காளர்களும் ஆக மொத்தம் 71,674 வாக்காளர்கள் உள்ளனர்.
விருத்தாச்சலம் பஞ்சாயத்து ïனியனில் 39,765 ஆண் வாக்காளர்களும்,38,187 பெண் வாக்காளர்களும் உள்ளனர். மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 77,952.
கம்மாபுரம் பஞ்சாயத்து ïனியனில் 51,376 ஆண் வாக்காளர்களும்,48,579 பெண் வாக்காளர்களும் உள்ளனர். மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 99,955.
நல்லூர் பஞ்சாயத்து ïனியனில் ஆண் வாக்காளர்கள் 45,028,பெண் வாக்காளர்கள் 43,545,மொத்த வாக்காளர்கள் 88573.
மங்களூர் பஞ்சாயத்து ïனியனில் ஆண் வாக்காளர்கள் 50,396,பெண் வாக்காளர்கள் 49,403,மொத்த வாக்காளர்கள் 99799.
நகராட்சிகள்
5 நகராட்சிகளிலும் 2 லட்சத்து 64 ஆயிரத்து 375 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 524 பேர் ஆண்கள்,ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 851 பேர் பெண்கள் ஆவார்கள். நகரங்களில் மட்டும் ஆண்வாக்காளர்களை காட்டிலும் பெண்கள் அதிகமாக உள்ளனர். நகராட்சி வாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை விவரம் வருமாறு:-
கடலூர் நகராட்சியில் ஆண் வாக்காளர்கள் 52,212,பெண் வாக்காளர்கள் 53,244,மொத்த வாக்காளர்கள் 1,05,456.
நெல்லிக்குப்பம் நகராட்சியில் ஆண் வாக்காளர்கள் 15,692,பெண் வாக்காளர்கள் 16,323,மொத்த வாக்காளர்கள் 32,015.
பண்ருட்டி நகராட்சியில் ஆண் வாக்காளர்கள் 19,437,பெண் வாக்காளர்கள் 19,486,மொத்த வாக்காளர்கள் 38,923.
விருத்தாச்சலம் நகராட்சியில் ஆண் வாக்காளர்கள் 22,751,பெண் வாக்காளர்கள் 22,308,மொத்த வாக்காளர்கள் 45,059.
சிதம்பரம் நகராட்சியில் ஆண் வாக்காளர்கள் 21,432,பெண் வாக்காளர்கள் 21,490,மொத்த வாக்காளாக்ள் 42,922.
பேரூராட்சிகள்
16 பேரூராட்சிகளிலும் 1,79,975 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண்கள் 91,881 பேரும்,பெண்கள் 88,094 பேரும் உள்ளனர். பேரூராட்சி வாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை விவரம் வருமாறு:-
அண்ணாமலை நகரில் ஆண்கள்-3,122,பெண்கள்-3,045,மொத்த வாக்காளர்கள்-6,167.
காட்டுமன்னார்கோவிலில் ஆண்கள்-8,919,பெண்கள்-8372,மொத்த வாக்காளர்கள்-17,291.
பரங்கிப்பேட்டையில் ஆண்கள்-7775,பெண்கள்- 8008,மொத்த வாக்காளர்கள்-15,783.
வடலூரில் ஆண்கள்-12,470,பெண்கள்-12,082,மொத்த வாக்காளர்கள்-24,552.
திட்டக்குடியில் ஆண்கள்-7,510,பெண்கள்-7,411,மொத்த வாக்காளர்கள்- 14,921.
குறிஞ்சிப்பாடியில் ஆண்கள்-9253,பெண்கள்-8777,மொத்த வாக்காளர்கள்- 18,030.
புவனகிரியில் ஆண்கள்- 7209,பெண்கள்-6900,மொத்த வாக்காளர்கள்- 14,109.
கங்கைகொண்டானில் ஆண்கள்-4772,பெண்கள்- 4,429,மொத்த வாக்காளர்கள்-9201.
பெண்ணாடத்தில் ஆண்கள்-6577,பெண்கள்-6195,மொத்த வாக்காளர்கள்- 12,772.
ஸ்ரீமுஷ்ணத்தில் ஆண்கள்- 4,390,பெண்கள்-4,301,மொத்த வாக்காளர்கள்- 8,691.
லால்பேட்டை
லால்பேட்டையில் ஆண்கள்-5,147,பெண்கள்-4,429,மொத்த வாக்காளர்கள்- 9,576.
மங்கலம்பேட்டையில் ஆண்கள்-2,738,பெண்கள்-2,782,மொத்த வாக்காளர்கள்-5,520.
தொரப்பாடியில் ஆண்கள்-2,773,பெண்கள்-2,602,மொத்த வாக்காளர்கள்- 5,375.
மேல்பட்டாம்பாக்கத்தில் ஆண்கள்-2,296,பெண்கள்-2,283,மொத்த வாக்காளர்கள்-4,579.
கிள்ளையில் ஆண்கள்- 3,853,பெண்கள்-3,657,மொத்த வாக்காளர்கள்- 7,510
சேத்தியாத்தோப்பில் ஆண்கள்-3,077,பெண்கள்-2,821,மொத்த வாக்காளர்கள்- 5,898.
கிராமங்களில் 4 ஓட்டுகள்
வாக்காளர் பட்டியலில் புதிதாக வாக்காளர் பெயர் சேர்த்தல்,நீக்கல்,திருத்தம் செய்ய விரும்புவோர் அதற்கான படிவத்தை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதி வாக்காளர் பதிவு அதிகாரியிடம் (வருவாய் கோட்டாட்சியர்) சமர்ப்பிக்கலாம்.
இந்த தேர்தலில் பேரூராட்சி தலைவர்,நகராட்சி தலைவர் ஆகியோரை மக்கள் நேரடியாக ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுக்கிறார்கள். அதனால் நகராட்சியிலும்,பேரூராட்சியிலும்,கவுன்சிலருக்கும்,தலைவருக்கும் என இரண்டு ஓட்டுப்போட வேண்டும்.
கிராம ஊராட்சியில் கிராம ஊராட்சி தலைவர்,கவுன்சிலர்,ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்,மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் ஆகிய 4 பேரை தேர்ந்தெடுப்பதற்காக 4 ஓட்டுப் போடுவார்கள்.
கிராம ஊராட்சியின் துணைத்தலைவர்,ஊராட்சி ஒன்றிய தலைவர்,துணைத்தலைவர்,மாவட்ட ஊராட்சி தலைவர்,துணைத்தலைவர் ஆகியோரை தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுப்பார் கள். 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக