AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

செவ்வாய், 20 செப்டம்பர், 2011

இந்தியாவில் பெண் குழந்தைகளின் தத்தெடுப்பு அதிகரிப்பு


புதுடெல்லி:இந்தியாவின் பல பகுதிகளில், பல மதங்களில் பெண் பிள்ளைகளை வெறுக்க கூடிய சூழ்நிலையிலும், பெண் பிள்ளைகளுக்கு பாகுபாடு காட்டக் கூடிய இந்த சூழ்நிலையில் “இருண்ட கண்டத்தில் சூரியனின் வெளிச்சம் போல்” என்று பெண் பிள்ளைகளின் வாழ்வில் பல மாற்றங்கள்.
குழந்தை தத்தெடுப்பு நிறுவனத்தின் கணக்கெடுப்பின் படி, இந்தியாவில் கடந்த சில வருடங்களாக பெரும் அளவில் பெண் பிள்ளைகள் தத்தெடுப்பு அதிகரித்துள்ளது.
இன்று மக்கள் மனதில் பெரும் மற்றம் ஏற்ப்பட்டுள்ளது மகிழ்ச்சித் தரக்கூடிய  விஷயம் என்றும், சமூக விளம்பரங்கள், திரைப்படங்கள்  மற்றும் அவர்களின் வாழ்வியல் சம்பவங்களே இந்த மன மாற்றத்திற்கு காரணம் என்று ஊடகங்களுக்கு பேட்டி அளித்த மத்திய குழந்தை தத்தெடுப்பு நிறுவனத்தின் செயலாளர் அணு.ஜெ.சிங் தெரிவித்துள்ளார்.
2008-ல் தத்தெடுக்கப்பட்ட 2990 குழந்தைகளில் 1819 பெண் பிள்ளைகளும், 2009-ல் தத்தெடுக்கப்பட்ட 2518 குழந்தைகளில் 1436 பெண் பிள்ளைகளும், கடந்த வருடம் தத்தெடுக்கப்பட்ட 6286 குழந்தைகளில் 2638 பெண் பிள்ளைகளும், இவ்வருடம் பெண்பிள்ளைகளின் எண்ணிக்கை குறைந்ததற்கான காரணம், தத்தெடுப்பவர்கள் பெண் பிள்ளைகளை கேட்டும் எங்களிடம் பற்றாக்குறை இருந்ததனால் அவர்கள் ஆண் பிள்ளையை தத்தெடுத்து சென்றனர். மேலும் 2009-ஐ விட 2010-ல் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிகை மிகப்பெரும் அளவில் உயர்ந்துள்ளது.
காலம் மாறிவிட்டது, பெண் பிள்ளைகளுக்கான தத்தெடுப்பு கோரிக்கைகளும், வழி முறைகளைகளும் கேட்பவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உயர்ந்துள்ளது என்று டெல்லி குழந்தைகள் காப்பகத்தின் தலைவர் அமோத் காந்த் தெரிவித்துள்ளார்..
எடுத்துக்காட்டாக, ரிஷி வாத்வா மற்றும் அவரது மனைவி காயத்ரிக்கு கடந்த எட்டு வருடங்களாக குழந்தை இல்லாததால் அவர்கள் ஒரு பெண் பிள்ளையை தத்தெடுத்தனர், இன்று மைஷா என்னும் அந்த பெண் குழந்தை அவர்கள் வாழ்வின் தேவதையாக திகழ்கிறாள். மேலும் நடிகை சுஷ்மிதா சென் கடந்த வருடம் ரிணீ என்னும் ஒரு பெண் பிள்ளையை தத்தெடுத்து, இந்த வருடம் அலிஷா என்னும் மற்றுமொரு பெண் குழந்தையை தத்தெடுத்து சென்றார்.
ஒவ்வொரு குழந்தை தத்தெடுப்பும், ஹிந்து தத்தெடுப்பு சட்டம் 1956-ன் கீழ் நடைமுறைப் படுத்தப்படுகிறது.  மேலும் குழந்தையை தத்தெடுக்க எங்களிடம் சில கட்டுப்பாடுகள் உள்ளது,  ஒரு ஆண் மட்டும் குழந்தையை தத்தெடுக்க விரும்பினால் எங்களால் கொடுக்க இயலாது, ஏனெனில் ஒரு பெண்குழந்தை வளர்ந்த பிறகு அனைத்து விஷயங்களையும் தான் தகப்பனிடம் பகிர்ந்துக் கொள்ள இயலாது என்றும் மற்றும் சில அடிப்படை கட்டுப்பாடுகளும் பின்பற்றப்படுகிறது.
இவ்வருட அறிக்கையின் படி டெல்லியில் மட்டும் இதுவரை 600 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டுள்ளனர், அதில் 65% பெண் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது என்றும் அணு தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக