திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சிங்கப்பூர் கிளை நேற்று கருத்தரங்கு ஒன்றை நடத் தியது. “செயல்ன்திறமிக்க கருத்துப் பரிமாற்றுத் திறமைகள்” என்ற தலைப்பிலான இக்கருத்தரங்கு வில்கி ரோட்டிலுள்ள கப்லான் இன்ஸ்டிடியூட் 2வது தளத் தில் நடைபெற்றது. திரு. ஹாஜா ஜபருல்லாஹ் நடத்திய இக்கருத் தரங்கில் சுமார் 100 பேர் பங் கேற்றனர். தமிழ் மொழி பண்பாட்டுக் கழகத்தின் தலைவர் திரு ஹரி கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, பேச்சாளர் மன்றத்தின் சிறப்பை எடுத்துரைத் தார். சங்கத்தின் செயலாளர் அப்துல் சுபஹான் கருத்தரங்கை தொடங்கி வைக்க, நினைவுப் பரிசு களை வழங்கினார் சங்கத்தின் தலைவர் முஹிய்யத்தீன் அப்துல் காதர். சமுதாய நலனையும் மேம்பாட்டை யும் கருத்தில் கொண்டு இக்கருத் தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக சங்கத்தின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
செவ்வாய், 20 செப்டம்பர், 2011
ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத் கருத்தரங்கு
லேபிள்கள்:
kollumedutimes
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)




0 கருத்துகள்:
கருத்துரையிடுக