AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

சனி, 17 செப்டம்பர், 2011

அசாருத்தீன் மகன் சிகிச்சை பலனின்றி மரணம்


ஐதராபாத்:மோட்டார் பைக் விபத்தில் படுகாயம் அடைந்த அசாருதீன் மகன் அயாஸுத்தீன் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், மொராதாபாத் எம்.பியுமான முகமது அசாருத்தீனின் இளைய மகன் அயாஸுத்தீன்(19) கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹைதராபாத் அவுட்டர் ரிங் ரோட்டில் நடந்த பைக் விபத்தில் படுகாயம் அடைந்து அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவருக்கு மார்பு, சிறுநீரகம், நுரையீரல் ஆகியவற்றில் பலத்த அடிபட்டிருந்தது. கடந்த செவ்வாய்க்கிழமை அவருடைய இடது சிறுநீரகம் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. கடந்த 5 நாட்களாக சுய நினைவின்றி உயிருக்கு போராடி வந்த அயாஸுத்தீன் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிர் இழந்தார் என்று அவருக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அயாஸுத்தீன் புனித மேரி கல்லூரியில் பி.காம். இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இதே விபத்தில் அசாருத்தீனின் சகோதரியின் மகன் அஜ்மல்(16) சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக