முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, அருந்ததியின மக்கள் விளிம்பின் விளிம்பிலே இருக்கக்கூடிய மக்கள். 18 சதவிகித இட ஒதுக்கீடு செட்யூல்டு இனத்தைச் சேர்ந்த எல்லாத் தரப்பினர்களுக்கும் இருக்கின்றது. ஆனால், நீங்கள் புள்ளிவிவரங்களை எடுத்துப் பார்த்தால் வேலைவாய்ப்பிலும், கல்லூரிகளில் இடம் பிடிப்பதிலும் அருந்ததியின மக்கள் இந்த 3 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கு முன்னால் மிகப்பெரிய அதல பாதாளத்தில் இருந்தார்கள். இந்த ஆண்டு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களில் 50 பேர் அருந்ததியின மக்கள். அதற்கு முன்பு இருந்த புள்ளிவிவரங்களை பார்த்தீர்கள் என்றால் 3,4 பேர்கள் தான். இந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளிலே அருந்ததியின மக்கள் 2000க்கும் மேற்பட்டோருக்கு இடம் கிடைத்திருக்கின்றது.
அதே போன்று பல்கலைக்கழககங்களினுடைய பேராசிரியர் பணிகளிலும் அவர்களுக்கு வாய்ப்பு இருக்கின்றது. இந்த உள் ஒதுக்கீட்டின் மூலம் நிச்சயமாக அருந்ததியின மக்களுக்கு பயன் கிடைந்திருக்கிறது என்பதைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.




0 கருத்துகள்:
கருத்துரையிடுக