AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

திங்கள், 31 டிசம்பர், 2012

புதிய வாக்காளர்களுக்கு 25ல் அடையாள அட்டை

ஆண்டுதோறும் ஜனவரி 25ல் வாக்காளர்கள் விழிப்புணர்வு தினம் கொண்டாடப்படுகிறது. வரும் 25ம் தேதி புதிய வாக்காளர்களாக சேர்க்கப்பட்டவர்களுக்கு அடையாள அட்டை வழங்க தேர்தல் அதிகாரிகளை, தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. ஓட்டுச்சாவடி மையங்களில், அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள், வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, மாணவர்களுக்கு கலை நிகழ்ச்சிகள், பேச்சு, கட்டுரை, கவிதை, ஓவியப்போட்டிகள் நடத்தி, பரிசுகள் வழங்க வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள், தொண்டு நிறுவனங்கள் இணைந்து, விழிப்புணர்வு ஊர்வலங்கள் நடத்த வேண்டும். இதில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட வேண்டும்.

ஞாயிறு, 30 டிசம்பர், 2012

மதுபானக் கடைகள், ஆலைகள் முற்றுகைப் போராட்டம்: மனிதநேய மக்கள் கட்சியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கைது!


மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் டிசம்பர் 20 முதல் 30 வரை மது ஒழிப்பு பரப்புரை பெரும் மக்கள் எழுச்சியுடன் நடைபெற்றது. மதுவின் தீமையை விளக்கி நகரங்கள் தொடங்கி கிராமங்கள் வரை துண்டுப் பிரசுரம் வினியோகம், சுவரொட்டி மற்றும் சுவர் எழுத்து பரப்புரை, வாகனப் பரப்புரை, வீதிமுனைக் கூட்டங்கள், குறுந்தகடு வினியோகம் என பல்வேறு வடிவங்களில் நடைபெற்ற பரப்புரைகளில் சுமார் 1 கோடி மக்களிடம் மதுவின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு செய்யப்பட்டது.
7 ஆயிரம் கிராமங்கள் உட்பட 8 ஆயிரம் இடங்களில் இவ்விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
இறுதியாக இன்று (டிசம்பர் 30) தமிழகம் முழுவதும் 48 இடங்களில் நடைபெற்ற மதுபான ஆலைகள் மற்றும் மதுக்கடைகள் முன்பு மனிதநேய மக்கள் கட்சியினர் அணிதிரண்டனர்.
காவல்துறை தடையை மீறி மதுபான ஆலைகள் மற்றும் மதுக்கடைகளை முற்றுகையிட முயன்ற ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். இந்த முற்றுகைப் போராட்டத்தில் ஏராளமான பெண்களும் கலந்துகொண்டனர்.
இம்மாபெரும் அறப்போராட்டம் வெற்றிபெற ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து மக்களுக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

நெல்லை கிழக்கு

மலேகான் குண்டுவெடிப்பு:குண்டுவைத்த ஹிந்துத்துவா தீவிரவாதி கைது!


புதுடெல்லி:2006-ஆம் ஆண்டு மலேகானில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியில் குண்டுவைத்த ஹிந்துத்துவா தீவிரவாதியை தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) கைது செய்துள்ளது. இக்குண்டுவெடிப்பின் பின்னணியில் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் செயல்பட்டது குறித்து சுவாமி அஸிமானந்தா அளித்த வாக்குமூலத்தை தொடர்ந்து முதல் கைது சம்பவம் நடந்துள்ளது.

சனி, 29 டிசம்பர், 2012

நமதூர் ஓர் வபாத் செய்தி

நமதூர் M.I. இக்பால் மனைவியும் ,மர்ஹும் முஹம்மத் கவுஸின் மகளும் ,என் நண்பன் ரில்வான் தாயாருமான செல்லகனி என்கின்ற சலிமா  அவர்கள்  இன்று மாலை சவுதியில் தாருல் பனாவை விட்டும்தாருல் பகாவை அடைந்து விட்டார்கள்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன் ....

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின்  பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருள வேண்டும் என.  கொள்ளுமேடுடைம்ஸ் இணையதளம்  பிரார்த்தனை செய்கிறது.



டிசம்பர் 30ல் மது ஆலைகள், டாஸ்மாக் கடைகள் முற்றுகை! மனிதநேய மக்கள் கட்சி அறிவிப்பு


மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ அவர்கள் வெளியிடும் பத்திரிகை அறிக்கை:
மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் பூரண மதுவிலக்கை வலியுறுத்தி, மது-மதுக் கடைகளுக்கு எதிரான தொடர் பரப்புரை டிசம்பர் 20 அன்று தொடங்கியது. டிசம்பர் 30வரை நடைபெறும் இத்தொடர் பரப்புரை, மதுவின் தீமையை விளக்கி நகரங்கள் தொடங்கி கிராமங்கள் வரை துண்டுப் பிரசுரம் வினியோகம், சுவரொட்டி மற்றும் சுவர் எழுத்து பரப்புரை, வாகனப் பரப்புரை, வீதிமுனைக் கூட்டங்கள், குறுந்தகடு வினியோகம் என பல்வேறு வடிவங்களில் பரப்புரை நடைபெறுகிறது.

குடும்ப அட்டைகளுக்கு உள்தாள் இணைப்பு பணி

கடலூர், : கடலூர் மாவட்ட ஆட்சியர் கிர்லோஷ்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தற்போது நடைமுறையில் உள்ள குடும்ப அட்டைகளில் புழங்கு காலத்தை 1.1.13 முதல் 31.12.13 வரை நீட்டித்து அரசு ஆணை பிறப்பித்துள்ளது. 
அதன்படி குடும்ப அட்டைகளை புதுப்பிக்கும் பணி நியாய விலை கடைகளில் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நடைபெற உள்ளது. எனவே குடும்பத்தலைவர் அல்லது வயது வந்த குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் நியாயவிலை கடைக்கு சென்று 2013ம் ஆண்டிற் கான உள்தாள் இணைப்பு பெற்று கொண்டு கடைகளில் பராமரிக்கப்படும் 2012ம் ஆண்டின் வழங்கல் பதிவேட்டில் கையொப்பமிட்டு அல்லது இடது கை பெருவிரல் ரேகை பதிக்க கேட்டு கொள்ளப்படுகிறது.

காட்டுமன்னார்கோவில், சிதம்பரத்தில் திடீர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி

காட்டுமன்னார்கோவில் பகுதியில் நேற்று காலை திடீரென கனமழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில், குமராட்சி பகுதியில் கடந்த 3 மாதங்களாக பருவமழை பெய்யாததால் பயிரிடப்பட்ட விளை நிலங்களில் பயிர்கள் கருகின. 
சில பகுதிகளில் பொதுமக்கள் பயிரிடப்பட்ட வயல்களில் ஆடு, மாடுகளை மேய்த்தனர். தொடர்ந்து தண்ணீர் திறக்க கோரி சாலை மறியல்கள், உருவபொம்மை எரிப்பு, கண்டன ஆர்ப்பாட்டம் என பல்வேறு போராட்டங்கள் நடந்தது. மழை வேண்டி யாகங்கள், சிறப்பு பூஜைகள் ஆகியவையும் நடத்தப்பட்டது. தொடர்ந்து பயிர்கள் பாதிக்கப்படுவதை அறிந்து விவசாயிகள் கவலையுற்ற நிலையில் நேற்று அதிகாலை கனமழை பெய்து வருகிறது. இந்த மழை விவசாயிகளுக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதமாக கருதுகின்றனர். 

2013 ரேஷன் கார்டு உள்தாள் இணைப்புக்கு 8 இலக்க எண்

2013ம் ஆண்டுக்கான ரேஷன் கார்டு உள்தாளுக்கு 8 இலக்க பிரத்யேக எண் வழங்கப்பட்டுள்ளது. இந்த உள்தாள் தொலைந்தாலோ, கிழிந்தாலோ வேறு உள்தாள் இணைப்பு வழங்க முடியாது. தமிழகம் முழுவதும் 1.97 கோடி ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. இதில் 20 சதவீதத்திற்கும் மேல் போலி கார்டுகள் இருப்பதாக கூறப்படுகிறது. போலி கார்டுகளை ஒழிக்க தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிக்கும் பணி முடிந்த பின்னர் பயோ மெட்ரிக் ரேஷன் கார்டுகள் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே பொதுமக்களுக்கு அரசு வழங்கிய ரேஷன் கார்டு 2009ம் ஆண்டுடன் முடிவடைந்தது. 2010, 2011, 2012 ஆகிய ஆண்டுகளுக்கு தனியாக உள்தாள் இணைப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் 2013ம் ஆண்டுக்கும் உள் தாள் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான உள் தாள் இணைப்பு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.