மிகவும் கவலைக்கிடமான உடல் நிலையில் கோவை சிறையில் அடைக்கப்பட்டிருக் கும் ஆயுள் சிறைவாசி அபு தாஹிரை சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்ட பின்னரும்,சிகிச்சைக்காக பரோலில் விடுவிக்க தமிழக அரசு மறுப்பது ஏன்? என எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. கேள்வி எழுப்பி யுள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் பங்கேற்பதற் காக டெல்லியில் முகாமிட்டுள்ள காயிதெ மில்லத் பேரவை சர்வ தேச ஒருங்கிணைப்பாளர் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. தமிழக அரசு தலைமைச் செயலாள ருக்கு தொலை நகல் மூலம் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியி ருப்பதாவது-
உயிருக்கு போராடும் சிறைவாசி அபுதாஹிர்
 இப்ராஹீம் என்பவரின் மகன் அபு தாஹிர் கோயம்புத்தூர் மத்திய சிறையில் கைதி எண்.1478ஆக அடைக்கப்பட்டி ருக்கிறார். அவர் சிறுநீரக கோளாறு உள்பட பல்வேறு கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டு அவ்வப்போது பரோலில் சிகிச்சைக்காக வெளிவந்திருக்கிறார். இதுவரை, அப்படி 11 தடவைகள் மருத்துவ சிகிச்சைக்காக வெளியே வந்திருக்கிறார். ஆனால்,கடந்த ஓர் ஆண்டாக வைத்திய சிகிச்சைக்காக கூட அவருக்கு பரோல் மறுக்கப்படு கிறது.