AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

புதன், 10 அக்டோபர், 2012

பூரண மதுவிலக்கை அமல்படுத்தாவிட்டால் மதுபானக் கடைகளை ‘அடித்து நொறுக்கும் போராட்டம் நடத்தப்படும்’ – எஸ்.டி.பி.ஐ


சென்னை:பூரண மதுவிலக்கை அமல்படுத்த தமிழக அரசு தவறும் பட்சத்தில், மக்களை ஒன்று திரட்டி மதுபானக் கடைகளை  ‘அடித்து நொறுக்கும் போராட்டம் நடத்தப்படும்’ என்று எஸ்.டி.பி.ஐ கட்சி மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் தெரிவித்துள்ளார். பூரண மதுவிலக்கை தமிழகத்தில் அமல்படுத்தக்கோரி எஸ்.டி.பி.ஐ கட்சி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக பூரண மதுவிலக்கை கோரி சென்னையில் ஏழுகிணறு பகுதியில்  பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அப் பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் மாநில தலைவர்  கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி;  “தமிழகத்தில் கந்து வட்டி லாட்டரி சீட்டு, ஆகியவற்றை தடை செய்த தமிழக அரசு மதுவை தடை செய்யாதது ஏன் என்று கேள்வி எழுப்பினார். பெண்களின் திருமணத்திற்கு தாலிக்குத் தங்கம் வழங்கும் தமிழக அரசு டாஸ்மாக் மதுக்கடை மூலம் ஆயிரக்கணக்கான பெண்களின் தாலி அறுபடக் காரணமாக இருக்கிறது. தமிழகத்தில் நடைபெறும் அனைத்து குற்றங்களுக்கும் மூல காரணமாக இருக்கக்கூடிய மதுவினை தமிழக அரசு தடை செய்ய வேண்டும்.
மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி தமிழக அரசை வலியுறுத்தி, வருகின்ற அக்டோபர் 17 ல் தலைமைச் செயலகம் முற்றுகை போராட்டம் நடத்தவிருக்கிறோம். அதன் பிறகும் மதுவை தடைசெய்ய தமிழக அரசு தவறும் பட்சத்தில், அனைத்து கட்சிகளையும், பொது மக்களையும் ஒன்று திரட்டி மதுபானக் கடைகளை  ‘அடித்து நொறுக்கும் போராட்டம் நடத்தப்படும்.” என்று தெரிவித்தார்.

திங்கள், 8 அக்டோபர், 2012

கேன் வாட்டர் குடிக்கிறீங்களா…? – ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்


தமிழகம் முழுவதும் குறிப்பாக நகர்ப்புறங்களில் குடிநீருக்காக 20 லிட்டர் கொண்ட ‘வாட்டர் கேன்’களை பயன்படுத்துகிறார்கள். கேன்களில் குடிநீர் வாங்கினால் அது சுகாதாரமானதாகத்தான் இருக்கும் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்
. ஆனால் அது முற்றிலும் தவறு. உதாரணத்திற்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்துதான் வாட்டர் கேன் சப்ளையாகிறது. இதில் ஒரு சில கம்பெனிகள் தவிர பல கம்பெனிகளில் ஐ.எஸ்.ஐ. முத்திரை குத்திய லேபிள் இருக்குமே தவிர உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ள தரத்துடன் தண்ணீர் சப்ளை செய்யப்படுவதில்லை. உண்மையில் 100 சதவீத ‘வாட்டர் கேன்’களில் 60 சதவீதம் தண்ணீர் தரமற்றதாக உள்ளது.

இது போன்ற தரமற்ற வாட்டர் கேன் தண்ணீரை தொடர்ந்து குடித்து வருவதால் நமது உடம்பும் குறிப்பிட்ட தண்ணீரை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்துக்கு மாறிவிடும். ஆனால் திடீரென கோடை வெயிலில் சுற்றிவிட்டு ஏதாவது ஒரு இடத்தில் அல்லது உறவினர், நண்பர்கள் வீடுகளில் போர் மற்றும் கிணற்று தண்ணீரால் தயாரிக்கப்பட்ட குளிர்பானங்கள், மோர், ஐஸ் கிரீம் சாப்பிடும் போது தொண்டையில் அலர்ஜி ஏற்படுகிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தொண்டை கரகப்பு, சளி காய்ச்சல் போன்ற நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள்.
இது நிமோனியா தொற்றாக மாறி நுரையீரலையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. நுரையீரல் தொற்று காரணமாக ஏற்படும் நிமோனியா எந்த மருந்துக்கும் கட்டுப்படாத கிருமியாக உருவாகி உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. மேலும் கடந்த சில மாதங்களாக இந்தியாவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இறந்தவர்களில் அதிகமானோர் சுவாச மண்டல தொற்று நோய் காரணமாக இறந்துள்ளது தெரியவந்துள்ளது.
நுரையீரலை பாதிக்கும் நிமோனியாவில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள குளிர் மற்றும் கோடை காலம் என எந்த சீசனிலும் குடி தண்ணீரைக் காய்ச்சிக் குடிப்பதைப் பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். தொண்டை கரகரப்பு பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் காது, மூக்கு, தொண்டை (இஎன்டி) டாக்டரிடம் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

சென்னையில் ஹஜ் பயணிகள் விமானம் திடீர் விபத்து!

சென்னையில் ஹஜ் பயணிகள் விமானம் விபத்து!சென்னை விமானநிலையத்தில் நின்றுகொண்டு இருந்த ஏர் இந்தியா விமானம் திடீரென விபத்துக் குள்ளானது.இதில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசம...ாக உயிர் தப்பினர்.

சென்னையிலிருந்து சவூதி அரேபியா ஜித்தாவிற்கு, செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம் இன்று காலை 10:30 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது. இதில் ஹஜ் பயணிகள் 421 பேர், சோதனை முடிந்து விமானத்தில் அமர்ந்திருந்தனர்.

பயணிகளின் சரக்குகளை ஏற்றி வரும் டிராக்டர் எதிர்பாராதவிதமாக, விமானத்தின் மீது மோதியது இதனால் விமானம் குலுங்கியது, மேலும் உள்ளே இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். உடனே அதிலிருந்த ஹஜ் பயணிகள் அனைவரும் உடனே விமானத்திலிருந்து இறக்கப் பட்டு விமான நிலையத்துக்கு மீண்டும் அழைத்து வரப் பட்டனர்.

இதனை தொடர்ந்து குறிப்பிட்ட ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப் பட்டதாக அறிவிக்கப் பட்டது.

இதேபோன்று பல தடவை சென்னை விமான நிலையத்தில் டிராக்டர் மோதிய விபத்துகள் நடைபெற்றது குறிப்பித்தக்கது,

லால்பேட்டையில் மாபெரும் இலவச மருத்துவ முகாம்


சனி, 6 அக்டோபர், 2012

ஹஜ் பயணம் இனி மெட்ரோ ரெயிலில்!


இந்த வருட ஹஜ் பயணத்தில் இனி ஹாஜிகள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்யலாம். இதனால் 25 லட்சம் மக்கள் ஒரே நேரத்தில் இடம் பெயரும் போது ஏற்படும் போக்கு வரத்து சிக்கல்களை எளிதாக்கலாம். குழந்தைகள், பெண்கள், வயதானவர்களுக்கு இந்த மெட்ரோ திட்டம் மிக உபயோகமாக இருக்கும். முன்பெல்லாம் ஹஜ் நாட்களில் ஒரு இடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு வாகனத்தில் செல்ல 5 மணி நேரம் ஆறு மணி நேரம் கூட காத்திக்கிடக்க நேரும். தற்போதய மெட்ரோ பயணத்தால் அந்த சிரமங்கள் வெகு இலகுவாகும்.

ஒரு வார ஹஜ் கிரியைகளை முடிக்க நீங்கள் 250 ரியால் டிக்கெட் எடுத்து அதனை ஏழு நாட்களுக்கும் பயன் படுத்திக் கொள்ளலாம். மற்றொரு டிக்ககெட் 100 ரியால் பெறுமானமுள்ளது. இதனை ஹாஜிகள் நான்கு நாட்கள் மட்டுமே பயன் படுத்திக் கொள்ள முடியும். ஆங்கிலமும் அரபியும் தெரியாமல் ஹாஜிகள் சிரமப்படக் கூடாது என்பதற்காக ரயிலில் பயணிப்போருக்கு வசதியாக அவர்களின் பயணத்தை காட்டும் விதமாக மூன்று கலர்களில் கைகளில் கட்டிக் கொள்ள சில டேக்கள் தருவார்கள். ஹாஜிகளை அழைத்து வந்த வழிகாட்டிகள் அதன் பயன்களை ஹாஜிகளுக்கு விளக்கிச் சொல்வார்கள். இதனால் ஹாஜிகள் சரியான இடத்தில் ஏறி இறங்க வசதியாக இருக்கும்..

6.7 பில்லியன் ரியால் (1.8 பில்லியன் டாலர்) இந்த ரயில்வே பணியை முடிக்க செலவாகியுள்ளது. இந்த வருடம் முதல் ஹாஜிகள் மெட்ரோ ரயிலின் பலனை அனுபவிக்கலாம் என்று ரயில்வே துறைக்கான செகரட்டரி ஜெய்னுல்லாபுதீன் தெரிவித்தார். இந்த மெட்ரோ பணிகளை சைனாவின் ஒரு கம்பெனி காண்ட்ராக்டை வென்றெடுத்து தற்போது பூர்த்தி செய்துள்ளது. 5000 பணியாளர்கள் இரவு பகல் பாராது பணி புரிந்து தற்போது பணியினை முடித்துள்ளார்கள். மன்னராட்சியோ, மக்களாட்சியோ, சர்வாதிகார ஆட்சியோ, ஜனாதிபதி ஆட்சியோ எதுவாக இருந்தாலும் தனது நாட்டு மக்களையும் உலக மக்களையும் சுபிட்சமாக வைத்திருக்க நினைக்கும் ஆட்சியாக இருந்தால் அது எந்த ஆட்சியாக இருந்தாலும் மக்கள் விரும்புவர் என்பதற்கு சவுதி ஆட்சி ஒரு உதாரணமாகத் திகழ்கிறது..


த.மு.மு.க போராட்டத்தின் எதிரொலி : முஸ்லிம் மதகுருவை சந்தித்த அமெரிக்க அதிகாரி


முஸ்லிம்களைப் புண்படுத்தும் வகையில் நபிகள் நாயகம் பற்றி அவதூறாக எடுக்கப்பட்ட படத்திற்கு எதிர்வினையாக உலகெங்கும் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னையிலும் ஐந்து நாட்களுக்கு பல்வேறு முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  இந்நிலையில், சென்னை மசூதி ஒன்றின் தலைமை மதகுருவான ஷம்சுத்தீன் காசிமி என்பவரை சென்னை அமெரிக்க தூதரக அதிகாரிகள் டேவிட் .கே .கேய்னர் (பொது விவகாரத்துறை அதிகாரி), மத்தேயு .கே பேஹ்(அரசியல் ரூபொருளாதார அதிகாரி ) , பின்னி ஜேகப் (மக்கள் தொடர்பு அதிகாரி). ஆகியோர் சந்தித்து விளக்கம் அளித்தனர்.
படம் குறித்து அமெரிக்க அரசு தரப்பில் வருத்தத்தையும், படக்குழுவினருக்குக் கண்டனத்தையும் தெரிவித்த அமெரிக்க அதிகாரிகளிடம், அமெரிக்கா உடனடியாக நடவடிக்கை எடுக்காதது பற்றி கண்டனம் தெரிவித்துள்ளார் காசிமி.

அமெரிக்க அரசின் சட்டத்தில் கருத்துச் சுதந்திரம் அபரிமிதமாக உள்ளது என்றும்,  கடந்த 50 ஆண்டுகளாக சட்டத்திருத்தம் செய்யப்படவில்லை என்றும் அதிகாரிகள் கூறிய போது,  இனியேனும் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் பிறர் மனதைக் காயப்படுத்துவது  கருத்துச் சுதந்திரத்தின் கீழ் வராது என்றும் மெளலவி தெரிவித்தார்.  உணர்வுகளைப் புரிந்துகொள்வதாகவும், அமெரிக்க அரசிடம் இது பற்றி தெரிவிப்போம் என்றும்  அதிகாரிகள் கூறியுள்ளனர்.
நன்றி : இந்நேரம்

வெள்ளியங்கால் ஓடையில் பலப்படுத்தும் பணி தீவிரம்

காட்டுமன்னார்கோவில், : காட்டுமன்னார்கோவில் வீராணம் ஏரியிலிருந்து மழைக் காலங்களில்  வெள்ளியங்கால் ஓடை வழியாக உபரிநீர் வெளியேற்றப்படும்.  கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனிநபர் ஒருவர்  வெள்ளியங்கால் ஓடை வழியே எள்ளேரி கிழக்கு அமைந்துள்ள இடத்தில் மண் எடுத்தார். இதில் பொதுப்பணித்துறை மண் எடுக்க கூடாது என்று தடுத்து நிறுத்தியது. 
கனரக இயந்திரத்தின் மூலம் வெள்ளியங்கால் ஓடையில் குவிக்கப்பட்ட மண் அங்கேயே கிடந்தது.  இந்நிலையில் நேற்று இந்த பகுதி ஊராட்சி தலைவர் வெள்ளியங்கால் ஓடையின் கரையை பலப்படுத்துவதற்காக குவிக்கப்பட்ட மண்ணை அப்புறப்படுத்தினார். இதுபற்றி பொதுப் பணி துறை உதவி பொறியாளரிடம் கேட்டபோது வெள்ளியங்கால் ஓடையில் மண் அள்ளுவது குற்ற மாகும். தற்போது மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில் ஓடையில் அதிக அளவு தண்ணீர் செல்லும் போது குவிக்கப்பட்ட மண்ணால் கரை உடையும் அபாயம் ஏற் படும். இதை கருத்தில் கொண்டே தனிநபர் மூலம் மண்ணை கொண்டு கரைகளை பலப்படுத்தி வருவதாக தெரிவித்தார். 

திட்டங்கள் செயல்படுத்த 7 ஆண்டுகளாகும் மின் பற்றாக்குறை தொடரும் பொறுத்துக் கொள்ளுங்கள்

தமிழகத்தில் மின்சார பற்றாக்குறைக்கு மின்சார வாரியம் புதிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. மின் திட்டங்களை செயல்படுத்த 7 ஆண்டுகள் வரை ஆகும் என்பதால் இன்னும் பல ஆண்டுகளுக்கு மின் தட்டுப்பாடு நிலை தொடரும் என்று தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சில ஆண்டுகளாக மின்வெட்டு இருந்து வருகிறது. சமீப காலமாக இது அதிகரித்து தினசரி 14 மணி நேரம் முதல் 16 மணி நேரம் வரை மின்சாரம் தடைபடுகிறது. தினசரி மின்சாரம் இருக்கின்ற நேரத்தைவிட மின்சாரம் இல்லாத நேரமே அதிகம் இருப்பதால் பொதுமக்கள், வியாபாரிகள், வணிகர்கள் பல வகையிலும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் விலைவாசியும் மறைமுகமாக உயர்ந்து வருகிறது. மின் உற்பத்தி குறைவு, மத்திய தொகுப்பில் இருந்து மின்சாரத்தை கொண்டு வருவதில் சிக்கல்கள் என்று பல்வேறு காரணங்களை மின்வாரியம் கூறுகிறது.இந்நிலையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் சார்பில் மின் தட்டுப்பாட்டுக்கு காரணம் என்ன என்பதை பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் மின் உற்பத்தியில் சந்திக்கும் சவால்கள் என்ற பெயரில் துண்டு பிரசுரங்கள், போஸ்டர்களை வெளியிட்டுள்ளது.
அதில் நிலம் கையகப்படுத்துவதில் பொதுமக்களின் எதிர்ப்பால் ஏற்படும் சிரமங்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் எதிர்ப் பால் தடைபட்டு வரும் மின் திட்டங்கள் உட்பட மின் உற்பத்திக்கு தடையாக இருப்பதாக பல்வேறு காரணங்களை பட்டியல் இட்டுள்ளனர். 
அதன் விவரம்:
*நீர், எரிபொருள், போக்குவரத்து மற்றும் சாலை, ரயில் வரூ.த்தட இணைப்பு போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை ஒருங்கிணைப்பதில் ஏற்படும் சிரமங்கள்.
*மின் உற்பத்தி திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் எதிர்ப்பு. 
*ஒடிசா மாநிலத்தில் மேற்கு வங்காளத்தில் இருந்து நிலக்கரியை எடுத்து வருவதில் ஏற்படும் சவால்கள். 
*மின்சார மற்றும் இயந்திர உபகரணங்களை உரிய நேரத்தில் கொண்டு வந்து சேர்ப்பதில் ஏற்படும் தாமதம். 
*கட்டுமான பணிகளில் ஏற்படும் தாமதம். மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரத்தை கொண்டு வருவதிலும், விநியோகி ப்பதிலும் ஏற்படும் சிக்கல்கள்.
*மொத்தத்தில் திட்டங்களை செயல்படுத்த வசதி செய்வதற்கு 2 ஆண்டுகளும், திட்டங்களை உருவாக்க 5 ஆண்டுகளும் என்று மொத்தம் 7 ஆண்டுகள் தேவைப்படுகிறது . 
*பொதுமக்கள் புரிந்துகொண்டு ஒத்துழைக்க வேண்டும் . 
*மலிவான விலையில் தரமான, தடையில்லா மின்சாரம் வழங்குவதே எங்கள் லட்சியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் வாரியம் திடீரென இப்படியொரு விளக்கத்தை அளித்துள்ளது பொது மக்களை கவலை அடைய செய்துள்ளது.