AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

சனி, 15 செப்டம்பர், 2012

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று அறிவிப்போம்- தலைமை நீதிபதி இக்பால் அதிரடி எச்சரிக்கை !


சென்னை: கடலூர் மாவட்ட மாஜிஸ்திரேட் புகழேந்தியை அவரது சேம்பருக்குள் புகுந்து கடுமையாக மிரட்டிய இன்ஸ்பெக்டர் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று அறிவிக்க நேரிடும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால் தலைமையிலான முதன்மை பெஞ்ச் இன்று கடும் எச்சரிக்கை விடுத்தது. சென்னை உயர்நீதிமன்றத்தின் 150வது
ஆண்டு விழாவுக்கு முதல்வர் ஜெயலலிதாவை நேரில் போய் உயர்நீதிமன்ற நீதிபதிகள் அழைத்தபோதே கடும் சர்ச்சை எழுந்தது. இதனால் நீதித்துறையில் ஆட்சி அதிகார துஷ்பிரயோகம் அதிகரிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும் என்று வக்கீல்கள் பலரும் குமுறினர். அதற்கேற்ப அடுத்த சில நாட்களிலேயே கடலூர் மாவட்ட கோர்ட்டில் ஒரு பெரும் சர்ச்சை வெடித்தது.
மாஜிஸ்திரேட் புகழேந்தி என்பவரிடம், இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் என்பவர் மிரட்டும் தொணியில் பேசியதால் கடும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வக்கீல்களும், கோர்ட் ஊழியர்களும் இன்ஸ்பெக்டரை சிறை பிடித்தனர். இதையடுத்து மாவட்ட எஸ்.பி.யே நேரில் வந்து அந்த இன்ஸ்பெக்டரை மீட்டுச் சென்றார்.
குற்றவியல் இன்ஸ்பெக்டராக இருப்பவர்தான் இந்த கார்த்திகேயன். இவர் திருட்டுப் போன பொருட்களை மீட்டது தொடர்பாக மாஜிஸ்திரேட் புகழேந்தியிடம் ஒரு விண்ணப்பம் அளித்தார். ஆனால் அது சரியில்லை என்று மாஜிஸ்திரேட் நிராகரித்து விட்டார். இதனால் கோபமடைந்த கார்த்திகேயன் மாஜிஸ்திரேட்டை கடுமையாக மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால்தான் அவரை வக்கீல்கள் சிறை பிடித்தனர்.
இந்த விவகாரம் பெரிதானதைத் தொடர்ந்து மாவட்ட செஷன்ஸ் நீதிபதி தலையிட்டு வக்கீல்களை அமைதிப்படுத்தினார். அதேசமயம், மாவட்ட மாஜிஸ்திரேட் புகழேந்தி நடந்த விவரங்களை விளக்கிசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பாலுக்கு விரிவான புகார் ஒன்றை அனுப்பினார்.
இதையடுத்து தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று அரசு தலைமை வக்கீல் நவநீதகிருஷ்ணனை அழைத்து இந்த விவகாரத்தில் இன்ஸ்பெக்டர் மீது என்ன நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது என்று கேட்டனர்.
அதற்கு நவநீதகிருஷ்ணன், டிஜிபி மற்றும் மாவட்ட எஸ்.பியிடம் பதில் கேட்டு அளிப்பதாக தெரிவித்தார். இதையடுத்து 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்று அறிவிக்க நேரிடும் என்று நீதிபதிகள் அதிரடியாக அறிவித்தனர்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அக்டோபர் 1-ந் தேதி முதல் விண்ணப்பம் வினியோகம்: பிரவீன்குமார்


தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது: 

வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்கவும், திருத்தம் செய்யவும் அக்டோபர் 1 முதல் 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 2013-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியோடு 18 வயது பூர்த்தி அடையை இருப்பவர்கள் அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இப்போது விண்ணப்பிக்கலாம். 

தாலுகா அலுவலகங்கள் மற்றும் வாக்குச் சாவடிகளில் இதற்கான விண்ணப்பங்களை கொடுக்கலாம். தேர்தல் ஆணையத்தின் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். 

இதற்காக அக்டோபர் 1-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இவற்றை தாலுகா அலுவலகங்கள், வாக்குச் சாவடிகளில் பொதுமக்கள் பார்வையிடலாம். இணையதளம் மூலமும் பார்க்கலாம். 

அக்டோபர் 6, 9 தேதிகளில் கிராம சபை கூட்டங்கள், குடியிருப்போர் நலச்சங்கக் கூட்டங்கள் ஆகியவற்றில் வாக்காளர் பட்டியல் பொதுமக்கள் முன்னிலையில் படிக்கப்பட்டு, தவறுகள் நீக்கப்படும். 

அக்டோபர் 7, 14, 21 ஆகிய மூன்று ஞாயிற்றுக்கிழமைகளில் வாக்குச் சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். போஸ்டர்கள், பேனர்கள், துண்டுப் பிரசுரங்கள் மூலம் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்ப்பது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மேலும், பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ரோட்டரி சங்கம், அரிமா சங்கம் போன்ற 23 அரசு சாரா தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து நடத்த இருக்கிறோம்.

இதுதவிர தமிழகம் முழுவதும் உள்ள 4,089 வங்கிக் கிளைகள், 7,343 அஞ்சல் அலுவலகள் மூலமும்  வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது குறித்து மக்களிடம் பிரசாரம் மேற்கொள்ளப்படும். வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்த்தவர்கள் தாங்கள் அளித்த விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை விண்ணப்பித்த 10 நாள்களுக்குப் பிறகு தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் சரிபார்க்கலாம். 

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, திருத்தம் செய்வது தொடர்பான விவரங்களைப் பெற கால் சென்டர் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 1950 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு காலை 10 முதல் மாலை 6 மணி வரை இதற்கான தகவல்களைப் பெறலாம். 

2013-ம் ஆண்டு ஜனவரி 5-ம் தேதி 100 சதவீதம் புகைப்படங்களுடன் கூடிய புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். தேசிய வாக்காளர் தினமான ஜனவரி 25-ம் தேதி புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும். வாக்காளர் அடையாள அட்டையை தொலைத்தவர்கள் படிவம் எண் 001சி-யை பூர்த்தி செய்து ரூ. 25 கட்டணத்துடன் விண்ணப்பித்தால் ஒரு மாதத்தில் புதிய அடையாள அட்டை வழங்கப்படும். 

கல்லூரிகளில் மாணவர்கள் சேரும் போதே வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்ப்பதற்காக இந்த ஆண்டு கல்லூரிகளுக்கு விண்ணப்பங்களை அனுப்பியிருந்தோம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆசிரியர்கள் மூலம் பெற்று வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

வெள்ளி, 14 செப்டம்பர், 2012

லால்பேட்டையில் தமுமுக அலுவலகத்தை தாக்கியவர்களை கைது செய்ய வலியுரித்தி காட்டுமன்னார்குடி காவல் நிலையம் முற்றுகை


காட்டுமன்னார்குடி,செப்-14
/
லால்பேட்டை  தமுமுக  அலுவலகத்தில் 09 -09 -2012 ஞாயிறு  மாலை 4 மணியளவில் காட்டுமன்னார்குடியில் மருத்துவமனை நடத்தி வரும் பாண்டியன் பிள்ளை மகன் டாக்டர் ராமச்சந்திரனின் தூண்டுதலினால் அவரின் அடியாட்களாக செயல்படும் சமூக விரோதிகள் சிலர் தமுமுக  அலுவலகத்தில் நுழைந்து அங்குள்ள பொருட்களை சேதம் படுத்தியும் அங்கு இருந்த வர்களின் மீது ஆயுதங்களால் தாக்க முயற்சித்தனர்.
இப்பிரச்சினையில் சம்பந்தப்பட்ட டாக்டர் ராமச்சந்திரன் ,அவரது தம்பி பாலச்சந்திரன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு தொடரப் பட்ட நிலையில்  கைது நடவடிக்கையில் காவல் துறை மொத்தன போக்கை கடைபிடித்தது இவற்றை கண்டித்து 10.09.2012 மாலை லால்பேட்டை கைக்காட்டியில் லால்பேட்டை முஸ்லிம் ஜமாஅத் சார்பில் சாலை மறியல் செய்து குற்றவாளிகளை கைது செய்ய வலியுரத்தப்பட்டது.
இது வறை குற்றவாளிகள் கைது செய்யப்படாததால் இன்று வெள்ளிகிழமை மலை  காட்டுமன்னார்குடி காவல்நிலையத்தை  முற்றுகையிட்டு த.மு.மு.க சார்பில் போராட்டம்  நடைபெற்றது.
இவ்வழக்கில் சம்பத்தப் பட்டவர்களை உடனடியாக கைது செய்யக் கோரி கண்டன கோசங்கள் ஓங்கின இந்நிலையில் குற்றவாளிகளை ஓரிரு நாட்களில் கைது செய்வதாக காவல்துறையினர் உறுதி அளித்ததின் பேரின் போராட்டம் முடித்து மக்கள் கலைந்து சென்றனர் .

thank lalpet.net

டீசல் விலை 5 ரூபாய் உயர்வு: நள்ளிரவில் அமலுக்கு வந்தது

புதுடெல்லி: டீசல் விலை அதிரடியாக லிட்டருக்கு ரூ.5 உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு  முதல் இது அமலுக்கு வந்துள்ளது. அதுபோல, இனி ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு 6 காஸ் சிலிண்டர் மட்டுமே மானிய விலையில் அளிக்கப்படும் என்ற கட்டுப்பாடும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகரிப்பு, கட்டுப்பாடுக்கு இடையே, பெட்ரோல் விலை தப்பி விட்டது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறைந்தது, கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவற்றுக்கு ஏற்றாற்போல், உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை. இதனால், டீசல் லிட்டர் ஒன்றுக்கு ரூ. 19.26ம், மண்ணெண்ணெய்க்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ.34.34ம், காஸ் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.347ம், பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.6ம் நஷ்டம் ஏற்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்தன. டீசல் மற்றும் சமையல் காஸ் விற்பனை மூலம் நாளொன்றுக்கு ரூ.560 கோடி நஷ்டமும், பெட்ரோல் விற்பனையில் நாளொன்றுக்கு ரூ.16 கோடி நஷ்டம் ஏற்படுவதாகவும், இதனால் உடனடியாக பெட்ரோல், டீசல், சமையல் காஸ் ஆகியவற்றின் விலையை உயர்த்த வேண்டும் என்றும் எண்ணெய் நிறுவனங்கள் வலியுறுத்தின. பெட்ரோலியப் பொருட்களின் விலையை ஏற்றுவது தொடர்பாக ஆலோசிக்க அரசியல் விவகாரங்களுக்கான கேபினட் கமிட்டி கூட்டம் கடந்த 11ம் தேதி நடப்பதாக இருந்தது. ஆனால், திடீரென மறுதேதி குறிப்பிடப்படாமல் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.  இதனால் பெட்ரோல், டீசல், காஸ், மண்ணெண்ணெய் ஆகியவை விலையேற்றத்தில் இருந்து தற்காலிகமாக தப்பித்தன.

பெட்ரோலியத்துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘கடினமான சூழ்நிலையில் பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்த வேண்டியுள்ளது. இப்போதுள்ள நிலையில் விலையேற்றத்தை தவிர்க்க முடியாது’’ என்று கூறியிருந்தார். இதற்கிடையே, பெட்ரோலிய நிறுவனங்கள் கூறுகையில், ‘‘பெட்ரோலியப் பொருட்களின் விலையேற்றம் குறித்து உடனடியாக முடிவு செய்ய வேண்டும். மேலும், டீசல் விலைக் கட்டுப்பாட்டை மத்திய அரசு கைவிட வேண்டும். வீட்டு உபயோகத்துக்கான எல்லா சிலிண்டர்களுக்கும் மானியம் அளிப்பதால் பெரும் சுமை ஏற்படுகிறது. இதை தடுக்க ஒரு குடும்பத்துக்கு, ஆண்டு ஒன்றுக்கு 4 சிலிண்டர் மட்டும் மானிய விலையிலும், மற்றவற்றை சந்தை விலையிலும் அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தின.

இப்பிரச்னைகளுக்கு இடையே அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று மாலை அவரது வீட்டில் நடந்தது. இக்கூட்டத்தில் டீசலுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ.5 உயர்த்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இதில் வாட் வரி சேர்க்கப்படவில்லை. ஆனால், பெட்ரோல், காஸ், மண்ணெண்ணெய் விலை குறித்து எந்த முடிவு செயயப்படவில்லை. எனினும், பெட்ரோல் விலையில் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் லிட்டருக்கு ரூ.6 இழப்பை சரிகட்டுவதற்காக பெட்ரோல் மீதான கலால் வரியை மத்திய அரசு ரூ.5.50 குறைத்துள்ளது. இதன் காரணமாக, எண்ணெய் நிறுவனங்களுக்கு நஷ்டம் குறையும். ஆனால், இந்த வரி குறைப்பால் மக்களுக்கு பலன் இருக்காது. எனினும், பெட்ரோலிய நிறுவனங்களின் கோரிக்கைப்படி, வீட்டு உபயோகத்துக்கான மானிய விலை சிலிண்டர்களின் எண்ணிக்கையை குறைப்பது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதில் ஒரு குடும்பத்துக்கு இனி 6 சிலிண்டர்களை மட்டுமே மானிய விலையில் அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, டீசல் விலை உயர்வு, நேற்று நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வந்தது. டீசல் விலை உயர்வால் ரூ.19,000 கோடியும், காஸ் கட்டுப்பாடு மூலம் ரூ.2000 கோடியும் மிச்சம் ஏற்படும் என கூறப்படுகிறது. 

வியாழன், 13 செப்டம்பர், 2012

ஆப்பிள் நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் ‘ஐபோன்-5’ அறிமுகம்


சான்பிரான்சிஸ்கோ: உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘ஐபோன்5’ ஸ்மார்ட்போனை அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனம் நேற்று அறிமுகப்படுத்தியது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் கூப்பர்டீனோ நகரை தலைமையிடமாக கொண்ட நிறுவனம் ‘ஆப்பிள் இன்கார்ப்பரேஷன்’. கம்ப்யூட்டர்கள், சாப்ட்வேர், ஹார்டுவேர், ‘ஐபேட்’ டேப்லட் கம்ப்யூட்டர், மீடியா பிளேயரான ‘ஐபாட்’ ஆகியவற்றை தயாரித்து வருகிறது. பல்வேறு நவீன வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் போன்களை 2007-ம் ஆண்டு முதல் தயாரித்து வருகிறது. முதல் தலைமுறை ஸ்மார்ட்போன் ‘ஐபோன்’ என்ற பெயரில் 2007-ம் ஆண்டு ஜனவரியில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் ஐபோன் 3ஜி (2008), 3ஜிஎஸ் (2009), ஐபோன்4 (2010), 4எஸ் (2011 அக்டோபர்) ஆகியவை வெளியிடப்பட்டது.

இந்நிலையில், ஐபோன் வரிசையில் 6-வது தலைமுறை ஸ்மார்ட் போன் ‘ஐபோன் 5’ நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவரை வந்த மாடல்களைவிட இது நீளமானது, ஒல்லியானது, எடை குறைந்தது, பளபளப்பானது. கருப்பு, சில்வர் என இரு நிறங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய 4எஸ் மாடல் போலவே 16ஜிபி, 32ஜிபி, 64ஜிபி மாடல்கள் முறையே ரூ.11 ஆயிரம், ரூ.16,500, ரூ.22 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் செல்போன் சேவை வழங்கும் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்வதால் இந்த விலை. இந்தியாவில் ஐபோன் 4எஸ் பேசிக் மாடல் ரூ.44,500 என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்மார்ட்போனுக்கே உரித்தான டச் ஸ்கிரீன், ஜிபிஎஸ் வசதி, மீடியா பிளேயர், வீடியோ கேமரா, வை-பி மற்றும் ப்ளூடூத் இணைப்பு வசதிகள் இதிலும் உண்டு.

7.66 மி.மீ. தடிமன், 112 கிராம் எடை, இன்னும் அதிக தெளிவான ஸ்கிரீன் ஆகியவை சிறப்பு அம்சங்கள். லித்தியம் அயான் பாலிமர் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அதிகபட்சம் 225 மணி நேரம் வரை பேட்டரி சார்ஜ் நிற்கும். பேசினால் 8 மணி நேரம் வரை சார்ஜ் இருக்கும்.

ஐபோன்5 வாங்குவதற்கான முன்பதிவு நாளை தொடங்குகிறது. அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் வரும் 21-ம் தேதி விற்பனை தொடங்குகிறது. இந்தியாவில் அனேகமாக நவம்பரில் விற்பனைக்கு வரலாம் என தெரிகிறது..

புதன், 12 செப்டம்பர், 2012

அபுதாபி லால்பேட்டை ஜமாஅத் சார்பில் தீவிபத்தில் பாதிக்கப்ட்டவர்களுக்க நிதி வசூல் செய்யப்படுகிறது


அபுதாபியில் பிரமாண்டம்: கட்டிடத்தை சுற்றி சன் ஸ்கிரீன்

அபுதாபி: அபுதாபியில் பிரமாண்ட கட்டிடத்தை சுற்றிலும் பைபர் கிளாஸ் போர்வை அமைக்கப்பட்டுள்ளது. சூரியன் நகர நகர இந்த போர்வையும் சுற்றிக்கொண்டே இருக்கும். கம்ப்யூட்டர் உதவியுடன் இது இயங்குகிறது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைநகர் அபுதாபியில் ‘அல் பாஹர் டவர்ஸ்’ என்ற கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. சூரிய வெளிச்சம் கண்ணை கூசாமல் இருக்க இதில் பிரத்யேக, பிரமாண்ட ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. கட்டிடத்தை சுற்றிலும் போர்வை போல பிரமாண்ட சன் ஸ்கிரீன் அமைக்கப்பட்டுள்ளது. கட்டிடத்தை விட்டு 6 அடி தொலைவில் இது உள்ளது. காலை அலுவலகம் துவங்கும் நேரத்தில், இந்த சன் ஸ்கிரீன் கிழக்கு பக்கத்தில் இருக்கும். வெயில் உச்சிக்கு ஏற, ஸ்கிரீன் மெல்ல நகர தொடங்கும். மாலை நேரத்தில் மொத்த ஸ்கிரீனும் மேற்கு பக்கம் போய்விடும். இவ்வாறு சூரியனின் இருப்பிடத்துக்கு ஏற்ப கம்ப்யூட்டர் உதவியுடன் சன் ஸ்கிரீன் நகர்கிறது. பைபர்கிளாஸ் பொருளால் இந்த ஸ்கிரீன் தயாரிக்கப்பட்டுள்ளது.

கண்ணை கூசாத அளவுக்கு போதிய வெளிச்சம் மட்டுமே உள்ளே வரும். சூரிய ஒளி விழாததால் வெப்பமும் குறையும். இதனால், மின்விளக்கு, ஏசி செலவு கணிசமாக குறையும் என்கின்றனர் இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கி தந்த ஏய்டஸ் நிறுவன இன்ஜினியர்கள். கட்டிடத்தை சுற்றி போர்வை அமைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. பணிகள் சில மாதங்களில் நிறைவடையும் என்கின்றனர்.

செவ்வாய், 11 செப்டம்பர், 2012

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? பேரூராட்சி செயல் அலுவலர்கள் ஆய்வு


காட்டுமன்னார் கோவில், செப்.11-
காட்டுமன்னார் கோவில், லால்பேட்டை பகுதிகளில் உள்ள கடை களில் தடை செய்ய ப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என பேரூராட்சி செயல் அலுவலர்கள் ஆய்வு செதனர்.
பிளாஸ்டிக் பொருட்கள் தடை
கடலூர் மாவட்டம் காட்டு மன்னார் கோவில் பேரூராட் சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்து கிறார்களா? என பேரூராட்சி செயல் அலுவலர் பால சுப்பிர மணியன் மற்றும் அலுவலர்கள் அனைத்து கடை களிலும் ஆய்வு செய்த னர்.அப்போது கடை உரிமையாளர்கள் பிளாஸ்டிக் பொருட்களை மாவட்ட நிர்வாகம் தடை செய்த பின்னர் நாங்கள் பொருட்களை விற்பனை செய்யும் போது பிளாஸ்டிக் பைகளை உபயோகப்படுத்து வது இல்லை.
பொதுமக்கள் விழிப்புணர்வு தேவை
மேலும் பொருட்கள் வாங்க வருகின்ற பொதுமக்களிடம் துணி பைகள் எடுத்து வருவது இல்லை. பிளாஸ்டிக் பைகள் கேட்கிறார்கள். தடை செய்யப்பட்ட பொருள் என்று கூறினாலும் ஏற்க மறுப்ப தில்லை.தாங்கள் வாங்கும் பொருட்களை கேரி பேக்கில் கொடுங்கள் என்று கூறுகி ன்றனர்.இதனால் விற்பனை குறைந்து விடுகிறது.அதனால் பொதுமக்களிடம் பிளாஸ் டிக்கினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படு த்த வேண்டும்.என செயல் அலுவலரிடம் கடை உரிமை யாளர்கள் கூறினர். அதைய டுத்து டீ கடைகளில் ஆய்வு செய்த அவர்கள் பிளாஸ்டிக் கப்புகள் உபயோகப்படுத்தக் கூடாது.அறிவுரை கூறி னர்.
மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
அதேபோல் லால்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலர் திருஞான சம்பந்தம் மற்றும் அதிகாரிகள் லால்பேட்டை பகுதிகளில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின் றதா? என ஆய்வு செய்தார்.
மேலும் வரும் 15-ந்தேதிக்குள் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் உபயோக படுத்த தடை செய்யப் படுகிறது என மாவட்ட நிர்வாகம் அறிவித்து ள்ளது.மேலும் காட்டுமன்னார் கோவில்,லால்பேட்டை பகுதிகளில் பிளாஸ்டிக் பொரு ட்களை பயன் படுத்தினால் அபராதம் விதிக்கப்படும்