வியாழன், 31 மே, 2012
லால்பேட்டையில் இ.யூ.முஸ்லிம்லீக் சார்பில் ஆம்புலன்ஸ்
வியாழன், 24 மே, 2012
புனித ஹஜ் பயணத்திற்கு திருச்சியிலிருந்தும் விமானம் ஹஜ் மாநாட்டில் எம்.அப்துர் ரஹ்மான் எம்.பி கோரிக்கை
மானியம் என்ற பெயரால் புனித ஹஜ் பயணத்திற்கு வழங்கப் படும் விமான கட்டண சலுகை ஆயுளில் ஒரு முறை வழங்கப்பட வேண்டும் என்றும், புனித ஹஜ் பயணத்திற்கு திருச்சியிலிருந்து விமான இயக்கப்பட வேண்டும் என்றும் காயிதே மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளர் எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி. வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மத்திய ஹஜ் குழுவின் சார் பில் ஹஜ் தொடர்பான மாநாடு டெல்லி- வித்தியான் பவனில் மே 22 செவ்வாய் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடை பெற்றது.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ஹஜ் குழு தலைவர், முஹ்சினா கித்வாய் துணைத்தலைவர் அபூபக்கர், இந்தியாவிற்கான சவூதி அரேபியா தூதர் அலி ஆசிப் ராவ், மும்பை ஹஜ் கமிட்டி-முதன்மை நிர்வாக அலுவலர் ஜாகிர் உசேன், தமிழக ஹஜ் கமிட்டி செயலாளர் அலாவுதீன் ஐ.ஏ.எஸ்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கேரள மாநில பொதுச் செயலாளர் இ.டி.முஹம்மது பஷீர் எம்.பி,.காயிதே மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளர் எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஹஜ் குழு உறுப்பினர் கள், அலுவலர்கள், உலமா பெரு மக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் மாநாட்டில் கலந்து கொண்டனர்.
இம்மாநாட்டில் எம்.அப்துர் ரஹ்மான் பேசியதாவது:
ஹஜ் மானியம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித் ததற்கு பின் இந்த கலந்த ஆலோசனை மாநாடு நடைபெரு கிறது. புனித ஹஜ் பயணத்திற்கு வழங்கப்படுவது மானியம் அல்ல, அது விமான கட்டண சலுகை அது தொடர்ந்து நீடிக்க வேண்டும்.
இதில் மத்திய அரசு உறுதி யாக இருக்க வேண்டும் இந்த சலுகை ஆயுளில் ஒரு முறையே பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.
தனியார் ஹஜ் பயண ஏற் பாட்டாளர்கள் சிலர் முறைகேடு களில் ஈடுபடுவதால் புனித ஹஜ் பயணிகள் பலர் ஏமாற்றப் படுவதாக கடந்த ஆண்டில் தகவல் வந்தன. புனித பயணத் திற்கு எண்ணம் கொண்டு அனைத்து ஏற்பாடுகளும் செய்து விட்டு உற்றார் உறவினர் களிடம் சொல்லிவிட்டு நூற் றுக்கணக்கான மையில் பயணம் செய்து வந்த பின் சவூதி செல்ல வேண்டிய நேரத்தில் உங்களுக்கு அனுமதி கிடைக்க வில்லை என்று அவர்களிடம் சொன்னால் மன நிலை எப்படி இருக்கும். ஊருக்கு கூட திரும்பி செல்ல முடியாமல் வெட்கப்பட்டு வேதனைப்பட்டது கடந்த காலத்தில் நடைபெற்றது.
இதனை தடுப்பதற்கு பிரத் யோக ஏற்பாடு செய்ய வேண்டும் இதற்காக படிவங்கள் அச்சிடப் பட்டு பெயர்,பாஸ்போட் எண் உள்ளிட்ட தகவலோடு 50 அல் லது 100 என தனியார் ஹஜ் பயண ஏற்பாட்டாளருக்கு வழங்கி அதைவிட அதிகபடி யான எண்ணிக்கை அவர்கள் பெறாமல் இருப்பதற்கும் பெறப் பட்ட படிவங்களை தவறாக பயன்படுத்த இருப்பதற்கும் இதன் மூலம் உறுதி செய்யப் படும். திருச்சியிலிருந்து விமானம்
புனித ஹஜ் பயணத்திற்கு தமிழ் நாட்டில் சென்னையிலி ருந்து மட்டுமே விமானம் இயக் கப்படுகிறது. தென் மாவட்டங் களிலிருந்து அதிக எண்ணிக் கையில் ஹஜ் பயணிகள் பய ணிப்பதை கருத்தில் கொண்டு திருச்சியில் இருந்தும் விமானம் இயக்கப்படவேண்டும் அதன் மூலம் தென் மாவட்ட மக்கள் மிகுந்த பயன் அடைவார்கள்.
ஹஜ் நல்லெண்ண தூதுக் குழு தொடர்ந்து அனுப்பப் படவேண்டும். அதில் இடம் பெறக்கூடியவர்களை சரியான முறையில் தேர்வு செய்ய வேண் டும்.
இந்த தூதுக்குழுவின் நோக் கம் நமது நாட்டின் நன்றி விசு வாசம் அத்துடன் சவூதி அர சுக்கு வாழ்த்துக்களை தெரி விப்பதோடு ஹஜ்ஜுக்கு இந்தி யாவில் இருந்து செல்பவர் களின் பிரச்சனை தெரிந்து அதனை தீர்த்து வைக்க கூடியதும் ஆகும்.
எனவே நல்லெண்ண குழு தேர்ந்தெடுப்பது தொடர்பாகவும் புதிய வழிகாட்டின் நெறிமுறை களை அரசு வகுக்க வேண்டும்.
இவ்வாறு எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி.குறிப்பிட்டார்..
கொள்ளுமேடில் விசமிகள் அட்டுழியம்
அன்பார்ந்த கொள்ளுமேடு நண்பர்களே அஸ்ஸலாமு அழைக்கும் (வராஹ் ) நமதூரில் சில நாட்களாக விசமிகளின் அராஜகம்,அட்டுழியம் எல்லை கடந்து செல்கிறது. இரவு நேரத்தில் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட மது அருந்துவது ,வேசிகளை வரவைத்து கும்மாளம் அடிப்பதும் இவர்களுடைய அட்டுழியம் எல்லையில்லாமல் செல்கிறது.இன்றுஇரவு மளிகையில் 200 லிட்டர் எண்ணெய் பாரலை தரையில் சாய்த்து நாசமாக்கி இருக்கிறார்கள் சில தினங்களாக இந்த கயவர்கள் கோழைத்தனமான செயல்களில் ஈடுப்படுகிரார்கள். இதைக்கொண்டு நாசகார கும்பல் சந்தோசம் அடையலாம் ஆனால் அநீதி இழைக்கப்பட்டவரின் சாபத்திலிருந்து ஒருபோதும் அவர்கள் மீல முடியாது, இன்ஷா அல்லாஹ் அவர்களுக்கு இதைவிட மிக பெரிய இழப்பை அல்லாஹ் ஏற்ப்படுத்துவான்الْحَمْدُ لِلَّهِ الَّذِي نَجَّانَا مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ“அநியாயக்காரரான சமூகத்தாரை விட்டும் எங்களைக் காப்பாற்றிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்”. 23:28
புதன், 23 மே, 2012
ஹஜ்:சவூதி ஏர்லைன்ஸ் மற்றும் ஜெட் ஏர்வேஸிற்கு அனுமதி!
இவ்வாண்டு புனித ஹஜ் பயணத்திற்கான சர்வீஸ்களை நடத்த சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ் மற்றும் ஜெட் ஏர்வேஸ் ஆகிய விமானப் போக்குவரத்து நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாண்டு ஹஜ் பயண சர்வீஸ் நடத்துவதில் இருந்து ஏர் இந்தியா முற்றிலும் வாபஸ் பெற்றுள்ளது. மேலும் கடந்த ஹஜ் சர்வீஸ் நடத்திய நாஸ் ஏர் நிறுவனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
நேற்று நடந்த ஹஜ் கமிட்டி கூட்டத்தில் இதுத்தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது. சவூதி அரேபியாவும், இந்தியாவும் பல ஆண்டுகளாக சமமான அளவில் ஹஜ் சர்வீஸ்களை நடத்தி வருகின்றன. ஏர் இந்தியாவும், சவூதி ஏர்லைன்சும் விமான சேவைகளை கவனித்துக் கொண்டன. ஆனால், இவ்வாண்டு ஏர் இந்தியா பூரணமாக விமான போக்குவரத்து சேவை மற்றும் க்ரவுண்ட் ஹேண்ட்லிங் பணிகள் ஆகியவற்றில் இருந்து விலகிவிட்டது. இதனைத் தொடர்ந்து இந்தியாவின் தனியார் நிறுவனமான ஜெட் ஏர்வேஸிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஹஜ் சர்வீஸிற்கு அனுமதி வழங்கப்பட்ட சவூதி தனியார் விமானப் போக்குவரத்து நிறுவனமான நாஸ் ஏர், இவ்வாண்டிற்கான பயணத்திற்கான விலைப்புள்ளி
அதிகம் அளித்ததால் அந்நிறுவனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
விமானக் கட்டணத்தை பிற விமானப் போக்குவரத்து நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் குறைவான விலைப்புள்ளி அளித்த ஜெட் ஏர்வேஸிற்கு அனுமதி வழங்கப்பட்டது. 30 சதவீத ஹஜ் விமான சர்வீஸ்களை ஜெட் ஏர்வேஸும், மீதமுள்ளவற்றை சவூதி ஏர்லைன்சும் நடத்தும்

பிளஸ் 2வில் 6 பாடத்தில் பெயிலானாலும் உடனடி தேர்வு
திண்டுக்கல்: பிளஸ் 2 தேர்வில் மூன்று பாடங்கள் வரை தோல்வியடைந்தால் மட்டுமே சிறப்பு உடனடி தேர்வு எழுத முடியும் என்ற நிலை இந்த ஆண்டு முதல் மாற்றப்பட்டுள்ளது. அனைத்துப் பாடங்களிலும் பெயிலாகி இருந்தாலும், தேர்வு எழுதாதவர்களும் இந்த ஆண்டு சிறப்பு உடனடி தேர்வை எழுதலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. பிளஸ் 2 தேர்வுகள் நேற்று வெளியாகின. இதில் தோல்வியடைந்தவர்கள் சிறப்பு உடனடித் தேர்வு எழுதி தங்கள் கல்வியைத் தொடரலாம் என்ற நடைமுறை சில ஆண்டுகளாக இருந்து வருகிறது.
இதற்காக 2 பாடங்களில் தவறியவர்கள் உடனடித் தேர்வு எழுதி அந்த ஆண்டிலேயே கல்லூரி செல்ல வழிவகை செய்யப்பட்டது. பின்பு 3 பாடங்கள் தோல்வியடைந்தவர்கள் உடனடித் தேர்வு எழுதலாம் என்ற நடைமுறை மாற்றப்பட்டது. தற்போது இந்த விதிமுறையை மேலும் தளர்த்தி, அனைத்து பாடங்களிலும் தோல்வி அடைந்தவர்களும், தேர்வே எழுதாதவர்களும் அனைத்துப் பாடங்களையும் உடனடித் தேர்வில் எழுதலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்கக இணை இயக்குனர்(மேல்நிலை) ஆரோக்கியசாமி அறிவித்துள்ளார்.
தோல்வியடைந்த பள்ளி மாணவர்கள் எஸ்.எச். எனக் குறிப்பிடப்பட்ட விண்ணப்பப் படிவங்களை முதன்மைக் கல்வி அலுவலகங்களில் இருந்து பெற்று விண்ணப்பிக்க வேண்டும். வரும் 28ம் தேதி மாலை 5 மணிக்குள் பூர்த்தி செய்து பயின்ற பள்ளியிலேயே சமர்ப்பிக்க வேண்டும். இவற்றை சரிபார்த்து புகைப்படத்தில் தலைமையாசிரியரின் சான்றொப்பமிட வேண்டும். மிக முக்கியமாக மார்ச் 2012 மேல்நிலைத் தேர்விற்கு மாணவருக்கு வழங்கப்பட்ட பதிவெண்ணை விண்ணப்பத்தின் முதல்பக்கத்தின் மேல் அதற்கு உரிய கட்டங்களில் பூர்த்தி செய்ய வேண்டும்.
விண்ணப்பங்களுடன் தேர்வுக்கட்டணத்தையும் பணமாக பெற்றுக் கொள்ளலாம். கட்டண விவரம்: ஒரு பாடத்திற்கு ரூ.85, இரண்டு பாடங்களுக்கு ரூ.135, மூன்றுபாடங்களுக்கு ரூ.185, நான்கு பாடங்களுக்கு ரூ.235, ஐந்து பாடங்களுக்கு ரூ.285, ஆறுபாடங்களுக்கு ரூ.335. தேர்வுகள் வரும் ஜூன், ஜூலையில் நடைபெறும். தேர்வு எழுதுவதற்கான அனுமதிச்சான்று பள்ளி மூலமாக தேர்வு தொடங்குவதற்கு 5 நாட்களுக்கு முன்பாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனி, 12 மே, 2012
k.முஹம்மது அனஸ் - முபீனா பர்வீன் திருமணம் & k.இம்தியாஸ் - ஆயிஷா பர்வீன் திருமணம்
வெள்ளி, 11 மே, 2012
AL- AMAN NURSERY & PRIMARY SCHOOL KOLLUMEDU
செவ்வாய், 8 மே, 2012
கொள்ளுமேடு பொது மக்களுக்கு ஓர் நர்செய்தி
கொள்ளுமேடு அல் அமான் நர்சரி&பிரமேரி கடந்த நான்கு ஆண்டுகளாக நடைப்பெற்று வருவதை தங்கள் அறிவீர்கள். அல்லாவின் மாபெரும் கிருபையால் இன்று அல் அமான் பள்ளிக்கு தமிழ் நாடு அரசு ஒப்புதல் கிடைத்துயிருக்கிறது. அல்ஹம்து லில்லாஹ்
என்பதை பள்ளியின் தாளாலர் அமானுல்லாஹ் பொது மக்களுக்கு மகிழ்ச்சிவுடன் தெரிவித்தார். மேலும் தங்களின் ஆதரவும் பள்ளியின் வளர்ச்சிக்கு தாங்கள் அனைவரும் இறைவனிடம் பிராத்தனை செய்யுமாறு
- கொள்ளுமேடு டைம்ஸ்
இணைய தளத்தின் முலம் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்தார். AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU
APPROVED BY TAMILNADU GOVERNMENT
REG NO: 03/165/2012
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)