AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

ஞாயிறு, 4 மார்ச், 2012

ரமலான் இரவுகளை பக்தி பரவசபடுத்தும் குரல் ராம்லீலாவிலும் ஒலித்தது!


புதுடெல்லி:மக்காவில் உள்ள புனித மஸ்ஜிதுல் ஹரமில் ரமலான் இரவுகளில் தராவீஹ் தொழுகைகளில் திருக்குர்ஆன் வசனங்களை ஓதும் போதும், பிரார்த்தனைகளின் போதும் மக்களின் உள்ளங்களை நெகிழச்செய்து கண்ணீரை வரவழைக்கும் குரல் ராம்லீலாவில் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையில் கலந்துகொண்டவர்களையும் பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது.
ஜம்மியத்துல் அஹ்லே ஹதீஸின் 2 தின மாநாடு நேற்று(வெள்ளிக்கிழமை) ராம்லீலா மைதானத்தில் துவங்கியது. வெள்ளிக்கிழமை ஜும்ஆ சிறப்பு தொழுகைக்கு புனித மக்கா ஹரம் ஷெரீஃபில் ரமலானில் தராவீஹ் தொழுகைகளுக்கு தலைமை வகிப்பவர்களில் ஒருவரான இமாம் டாக்டர்.ஷேக் ஸஊத் அஷ்ஷுரைம் தலைமை வகித்தார்.
ராம் லீலாவில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஸஃபுகளில்(அணிவரிசையில்) மக்கள் கூட்டம் காணப்பட்டது. 1991-ஆம் ஆண்டு முதல் ஹரமில் தராவீஹ் தொழுகைக்கு தலைமை வகித்து வரும் அறிஞர் அஷ்ஷுரைம் சவூதி அரேபியாவில் நீதிபதியாகவும் பணியாற்றுகிறார்.
ஜும்ஆவின் முன்னோடியாக நிகழ்த்திய உரையில் இமாம், ஐக்கியத்தையும், நல்லிணக்கத்தையும் நிலைநாட்டிட இந்திய முஸ்லிம்களுக்கு அழைப்பு விடுத்தார். நபி(ஸல்…) அவர்களின் தோழர்களிடமிருந்து கேட்ட இந்தியாவை குறித்த செய்திகளை வரலாறு பதிவுச்செய்துள்ளது.
உலகம் முழுவதும் மனிதர்கள் தங்களது பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல் மிகவும் மனோரீதியான நெருக்கடியை அனுபவித்து வருகின்றார்கள். உலகம் முழுவதும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கான மிகச்சிறந்த வாழ்க்கை திட்டம்தான் இஸ்லாம். இஸ்லாத்தை அனைத்து அனாச்சாரங்களில் இருந்து விடுவிக்க பாடுபட வேண்டும்.
ஒவ்வொரு முஸ்லிமும் இஸ்லாத்தை தனது வாழ்க்கையிலும் செயல்படுத்த முனையும்பொழுதே சமூகத்தில் அமைதியும், நல்லிணைக்கவும் நிலவும். இவ்வாறு இமாம் அஷ்ஷுரைம் உரையாற்றினார்.
ஜம்மியத்துல் அஹ்லே ஹதீஸ் ஹிந்தின் அமீர் ஹாஃபிஸ் முஹம்மது யஹ்யா தஹ்லவி மாநாட்டின் நோக்கங்கள் குறித்து விவரித்தார். ஜம்மியத்து அஹ்லே ஹதீஸின் பொதுச்செயலாளர் மவ்லானா அஸ்கர் அலி இமாம் அலி மஹ்தி ஸலஃபி, மவ்லானா அப்துற்றஹ்மான் அப்துல்லாஹ் ரஹ்மானி முபாரக்பூரி ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
மாநாட்டின் இறுதி நாளான இன்று(சனிக்கிழமை) இரவு இஷா தொழுகைக்கு இமாம் அஷ்ஷுரைம் தலைமை வகிப்பார்.

சிரியா:போராளிகளுக்கு ஆயுதங்களை வழங்க குவைத் பாராளுமன்றத்தில் தீர்மானம்!


குவைத்சிட்டி:சிரியாவில் அப்பாவி மக்கள் மீது அடக்குமுறையை தொடரும் சர்வாதிகாரி பஸ்ஸாருல் ஆஸாதின் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திவரும் ஃப்ரீ சிரியன் ஆர்மிக்கு ஆயுதங்கள் உள்ளிட்ட உதவிகளை வழங்க குவைத் அரசு முயற்சி மேற்கொள்ளவேண்டும் என்று அந்நாட்டின் பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சிரியா அரசு மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க கோரிய பாராளுமன்றம், பஸ்ஸார் அரசுடன் எல்லாவிதமான உறவுகளையும் குவைத் துண்டிக்க வேண்டும் என்று தீர்மானத்தில் கோரிக்கை விடுத்துள்ளது.
போராளிகளுக்காக நிதி திரட்டவேண்டும், குவைத்தில் வசிக்கும் சிரியாவாசிகளுக்கு அவர்களுடைய உறவினர்களை சிரியாவில் இருந்து குவைத் அழைத்து வர வசதிகளை ஏற்பாடுச் செய்தல் ஆகியன தீர்மானத்தில் கோரப்பட்டுள்ளன.
தொடர்ச்சியாக 2-வது தினமாக சிரியா விவாகாரம் குறித்து குவைத் பாராளுமன்றம் விவாதித்துள்ளது. சிரியா நேசனல் கவுன்சிலை நாட்டின் மக்கள் பிரதிநிதிகளாக அங்கீகரிக்க வேண்டும் என்று குவைத் அரசுக்கு கோரிக்கை விடுக்கும் தீர்மானம் கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

வியாழன், 1 மார்ச், 2012

மிரட்டும் மின்வெட்டு


போர்க்கால அடிப்படையில் களமிறங்க வேண்டும்..

மின்வெட்டு தற்போது தமிழகத்தை மிரட்டும் அம்சமாக மாறிவிட்டது. தலைநகர் சென்னை தொடங்கி, பட்டிதொட்டியெங்கும் எப்போது மின்வெட்டு நிகழுமோ என்ற பீதியில் உறைவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது.
மின்வெட்டினால் தொழில்கள் பாதிக்கப்படுகின்றன. உற்பத்திகள் குறைகின்றன. தொழிலாளர்கள் வேலை இழக்கின்றனர். விவசாயிகள் மின்வெட்டினால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். விளை பயிர்களுக்கு சரியான நேரத்திற்கு தண்ணீர் பாய்ச்ச மின்சாரத் தேவையின்றி வரும்காலங்களில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சத்தையும் புறக்கணிப்பதற்கில்லை. மின்வெட்டினால் போதுமான அளவிற்கு குளிரூட்டப்படும் வாய்ப்பின்மையால் மீன்களும், காய்கறிகளும், கனிவர்க்கங்களும் பதம்கெட்டு வீணாகும் வாய்ப்பு அதிகம் என்பதையும் யாராலும் மறுக்க முடியாது. மருத்துவமனைகள், கல்விக்கூடங்கள் போன்றவை இந்த மின்வெட்டுகளால் படும் சிரமங்களை சொல்லில் வடிக்க இயலாது.
வருங்கால தமிழகத்தைக் கட்டமைக்க காத்திருக்கும் மாணவ சமுதாயம் மின்வெட்டினால் மிகப்பெரும் ஏக்கத்திலும் விரக்தியிலும் ஆழந்துள்ளது. வாழ்க்கைப் பருவத்தின் திருப்புமுனையாம் பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளின் இறுதித் தேர்வின் மதிப்பெண்களை வைத்து எதிர்காலத்தை நிர்ணயிக்க வேண்டிய சூழலில் பல மணிநேரங்கள் மின்சாரம் இல்லையென்றால் இளையதலைமுறையின் எதிர்காலம் ஒளிமயமாக இருக்கும் என எப்படி எதிர்பார்க்க முடியும்?
அதற்கு நம் மத்திய மாநில அரசுகள் என்ன திட்டங்களை முன்வைத்துள்ளன. மின் ஆளுமை, மின்மிகை மாநிலம் என்று பெருமையுடன் பேசப்பட்ட தமிழகம் இந்நிலையை அடைந்தது ஏன்? என்பதை சுயபரிசோதனை செய்யவேண்டிய வேளை இது. பன்னாட்டு பகாசுரக் கம்பெனிகளுக்கு அள்ளிஅள்ளி வழங்கப்படும் மின்சார வளம் சாமான்ய மக்களுக்கு தடையின்றி வழங்க அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டணிக் கட்சி ஆளாத மாநிலம் என்றால் ஓரவஞ்சனைப் பார்வை பார்க்கும் மத்திய அரசின் செயல் மெச்சும்படியாக இல்லை.
குறைந்தபட்சம் 2000 மெகாவாட் மின்சாரத்தை மத்திய அரசு தனது தொகுப்பில் இருந்து வழங்க வேண்டும். நிலைமை இவ்வளவு நெருக்கடியில் இருக்க, கூடங்குளம் உலை செயல்படுத்தப்பட்டால் மின்தட்டுப்பாடு நீங்கும் என்ற பித்தலாட்டமான பரப்புரை சிலரால் திட்டமிட்டு பரப்பப்படுகிறது. கூடங்குளம் உலை செயல்பட்டால் கூட 15 நிமிடத்திலிருந்து 20 நிமிடம் வரை தான் மின்வெட்டை நீக்கமுடியும். மொத்த உலைகளின் செயல்பாட்டின் மூலமே வெறும் 4 சதவீதம் கூட மின்வளத்தை உருவாக்க முடியாத நிலையில் கூடங்குளம் உலை தனது உற்பத்தியைத் தொடங்கினால் மின்சார வளம் பெருகும் என எதிர்பார்ப்பது பேதமையன்றோ. மின் ஆளுமையை சரிவர செயல்படுத்தி மின்வெட்டில்லா மாநிலமாக தமிழகத்தை மாற்ற ஆள்வோர் போர்க்கால அடிப்படையில் களமிறங்க வேண்டும்.

பாப்ரி மஸ்ஜித்:அகழ்வாராய்ச்சித்துறை அறிக்கையை வெளியிட சி.ஐ.சி உத்தரவு!


புதுடெல்லி:அயோத்தியில் பாபர் மசூதி உரிமையியல் வழக்கில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சி பற்றிய அறிக்கையை வெளியிட வேண்டும் என்று இந்திய அகழ்வாராய்ச்சி அமைப்புக்கு (ஏ.எஸ்.ஐ.) மத்திய தகவல் உரிமை கமிஷன்(சி.ஐ.சி) உத்தரவிட்டுள்ளது.எனினும், இந்த அறிக்கையை வெளியிடுவதற்கு, உயர் நீதிமன்றத்தின் தடை இருக்கும் பட்சத்தில், அந்த உத்தரவின் நகலை மனுதாரரான சுபாஷ் அகர்வாலுக்கு அளிக்க வேண்டும் என்று தலைமைத் தகவல் கமிஷனர் சத்யானந்த மிஸ்ரா கூறியுள்ளார். அலாகாபாத் நீதிமன்ற உத்தரவுப்படி, அயோத்தியில் பாப்ரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த இடத்தில் இந்திய அகழ்வாராய்ச்சி அமைப்பு ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்தது.இந்த அறிக்கையின் நகலைக் கோரி தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி ஏ.எஸ்.ஐ.க்கு சுபாஷ் அகர்வால் விண்ணப்பித்திருந்தார். ஆனால், இது உயர் நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு மட்டுமான அறிக்கை என்று கூறி, அதை அளிப்பதற்கு ஏ.எஸ்.ஐ. மறுத்துவிட்டது.இந்த விவகாரம் ட்ரான்ஸ்ஃபரன்ஸி தீர்ப்பாயத்தில் கொண்டு செல்லப்பட்டபோதும் அகழ்வாராய்ச்சித்துறை தனது முடிவில் உறுதியாக இருந்தது.இதனை தொடர்ந்து அகர்வால் தகவல் உரிமை கமிஷனை நாடினார். அறிக்கையை வெளியிடுவதற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தால், அந்த உத்தரவின் நகலை தமக்கு வழங்க வேண்டும் என்று அகர்வால் தகவல் உரிமை கமிஷனிடம் தெரிவித்தார். இதையடுத்து மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

நோன்பு இருந்தால் மூளைக்கு பாதிப்பில்லை – ஆய்வில் தகவல்


லண்டன்:நோன்பு அல்லது விரதம் இருப்பதால் உடலில் சர்க்கரை குறைந்துவிடும், வயிற்றில் அமிலம் சுரந்து அல்சர்(குடல் புண்) வந்துவிடும் என்று பலருக்கு சந்தேகம் ஏற்படுவதுண்டு. ஆனால், முஸ்லிம்கள் 14 நூற்றாண்டுகளுக்கும் மேலாக தங்களது மார்க்கத்தின் அடிப்படை கடமைகளில் ஒன்றாக நோன்பை வருடந்தோறும் ரமலான் மாதத்தில் கடைப்பிடித்து வருகின்றனர். அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் வருவதில்லை. மேலும் மாதந்தோறும் 3 நோன்புகள், திங்கள், வியாழன் கிழமைகளில் நோன்புகள், வருடத்தில் சில குறிப்பிட்ட தினங்களில் நோன்புகள் ஆகிய உபரியான(கட்டாயக் கடமை அல்ல) குறித்து இஸ்லாத்தின் இறுதித் தூதர் முஹம்மது நபி(ஸல்…)அவர்களுடைய நடைமுறையிலிருந்து புரிந்து கொள்ளலாம்.நோன்பை முஸ்லிம்கள் கடைப்பிடிப்பதற்கான காரணம் ஆன்மீக வாழ்வில் இறைவன் மீதான அச்சம் ஏற்படுவதற்காகும். இதன் காரணமாக ஒரு மனிதனின் ஆன்மீக வாழ்வு பரிசுத்தமடைகிறது.இந்நிலையில் லண்டனில் நடந்த மருத்துவ ஆய்வில் நோன்பின் மகிமையை குறித்து தெரியவந்துள்ளது. அல்சமீர், பார்க்கின்சன் நோய்கள் முதியோருக்கு வருவதை தடுப்பது எப்படி? என்ற ஆராய்ச்சின்போதுதான் நோன்பின் மகிமை மருத்துவ ஆராய்ச்சியாளர்களுக்கு தெரியவந்துள்ளது.வாரத்தில் ஒரு நாளோ அல்லது இரு நாளோ உண்ணாவிரதம் இருப்பவர்களுக்கு மூளையில் பாதிப்பு ஏற்படுவது இல்லை என்று தெரியவந்துள்ளது. சாப்பாடு அதிகம் இருந்தால் ஏராளமான கலோரி உடலுக்குள் செல்கிறது. அதை ஜீரணிக்க செரிமான உறுப்புகள்தான் உதவுகின்றன, மூளையை அது எப்படி வலுப்படுத்தும் என்று நீங்கள் கேட்கலாம்.சாப்பிடாமல் இருக்கும்போது மூளையில் சுரக்கும் ஒரு திரவம் மூளையின் செயல்திறனைக் கூட்டுகிறதாம். இதனால் மூளைக்கு எந்தக் கேடும் வருவதில்லையாம். இதை முதலில் எலிகளிடத்திலிருந்து அறிந்தார்கள். பிறகு சில முதியவர்களிடமும் சோதித்ததில் உறுதி செய்துகொண்டார்கள்.நோன்பு ஆன்மீக பயிற்சியுடன் மூளையின் திறனையும் வலுப்படுத்துகிறது.

செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

குடும்ப அட்டை (Family Card) பெறுவது எப்படி !?


புதிய குடும்ப அட்டை பெற தகுதியுடையோர் யார் ?
 தனிக் குடும்பமாக உள்ள இந்திய குடிமக்கள்கள் அனைவர்களும் தகுதியுடையோர் ஆவார்கள்.
குடும்ப அட்டை பெற விண்ணப்பம் படிவம் எங்கு கிடைக்கும் ?
தமிழக அரசு விண்ணப்ப படிவங்களை ஆங்கிலம் மற்றும் தமிழில் நிர்னையித்துள்ளது. இவை அனைத்து தாலுக்கா அலுவலங்களிலும் மற்றும் ஜெராக்ஸ் எடுக்கும் கடைகளிலும் கிடைக்கும். மேலும்http://www.tn.gov.in/tamiltngov/appforms/ration_t.pdf என்ற அரசு இணை தளத்திலும் தரைஇறக்கம் செய்து கொள்ளலாம்.
 விண்ணப்ப படிவத்தினை யாருக்கு அனுப்ப வேண்டும் ?
அந்தந்த தாலுக்கா அலுவலங்களில் உள்ள வட்ட உணவுப் பொருள் வழங்கல் அதிகாரி ( TSO ) அவர்களிடம் தாக்கல் செய்யவேண்டும்.
விண்ணப்ப படிவத்துடன் இணைக்க வேண்டிய சான்றுகள் எவை ?
விண்ணப்ப படிவத்தில் அதில் கோரப்பட்ட விவரங்கள் அனைத்தையும் பூர்த்திசெய்து கையொப்பம் இட வேண்டும். முழுமையற்ற படிவம் நிராகரிக்க வாய்ப்புகள் அதிகம்.
தேவையான ஆவணங்கள் :
1.  இருப்பிடச் சான்று
2.  தேர்தல் வாக்காளர் அடையாள அட்டை
3. வீட்டு வரி செலுத்திய / மின்சார கட்டணம் செலுத்திய / தொலைப்பேசி கட்டணம் செலுத்திய போன்றவைகளின் ஏதாவது ஒரு ரசீதுகள் / வங்கி கணக்கு புத்தகத்தின் முதல்பக்க நகல் / பாஸ்போர்ட் நகல் ( இதில் ஏதாவது ஓன்று மட்டும் போதுமானவை )
4. முந்தைய முகவரியில் குடும்ப அட்டை வழங்கு அதிகாரியிடம் ( TSO )  பெறப்பட்ட பெற்றோர் அல்லது பாதுகாவலர் குடும்ப அட்டையிலிருந்து பெயர் நீக்கல் சான்று அல்லது பெயர் சேர்க்கப்படவில்லை என்பதற்கான சான்று.
5. முந்தைய முகவரியில் குடும்ப அட்டை இல்லை எனில் அதற்கான “ குடும்ப அட்டை இல்லா “ சான்று.
6. எரிவாயு இணைப்பு ஏதேனும் இருப்பின், இணைப்பு யாருடைய பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் எரிவாயு இணைப்பு முகவர் மற்றும் எண்ணெய் நிறுவனத்தின் பெயர்.
7. விண்ணப்பதாரரின் தனது விண்ணப்பம் குறித்த தகவல்கள் பெற இலகுவாக தங்களின் கைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை விண்ணப்பத்தில் பூர்த்தி செய்யவும். அல்லது சுய முகவரியிட்ட தபால் தலையுடன் கூடிய தபால் உறை அல்லது அஞ்சல் அட்டை இணைக்கலாம்.
மனுதாரர் தனது விண்ணப்பத்தின் முடிவினை அறிந்து கொள்ள முடியுமா ?
1.       தமிழக அரசு புதிய குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்பத்தின் பேரில் 60 நாட்களுக்குள் குடும்ப அட்டை வழங்க அல்லது மனுவின் முடிவை தெரிவிக்க கால நிர்ணயம் செய்துள்ளது.
2.       வட்ட வழங்கல் அலுவலகத்திலிருந்து மனு பெறப்பட்ட நாளிலிருந்து அடுத்த 30 நாட்களுக்குள் தணிக்கை அதிகாரிகளால் மனுதாரரின் விண்ணப்பத்தின் உண்மை நிலவரத்தை அறிந்துகொள்ள மனுதாரரின் வீட்டிற்க்கே வந்து ஆய்வு செய்வார்கள்.
3.       விண்ணப்பத்தினை அளித்த உடன் விண்ணப்பத்தின் வரிசை எண், தேதி, அலுவலக முத்திரையுடன் மற்றும் இறுதி முடிவு தெரிந்து கொள்ளும் தேதி ஆகியவற்றுடன் கூடிய ஒப்புகை சீட்டினை மனுதாரர் பெற்றுக்கொள்ள வேண்டும்.
புதிய குடும்ப அட்டை பெற கட்டணம் உள்ளதா ?
அரசால் ரூ 5 /- கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையை உணவு வட்ட வழங்கல் அலுவலகத்தில் செலுத்தப்பட வேண்டும்

திங்கள், 27 பிப்ரவரி, 2012

4 மணி நேரம் பவர் கட் : மக்கள் கடும் அவதி

சென்னை: மின் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் தமிழக அரசு அறிவித்துள்ள புதிய மின்வெட்டு, இன்று முதல் அமலுக்கு வந்தது. சென்னையில் முதல்முறையாக 2 மணி நேரம் மின் சப்ளை நிறுத்தப்படுகிறது. தமிழகத்தில் நாளொன் றுக்கு 4 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறையாக உள்ளது.  இதனால் சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் கடந்த சில மாதங்களாக வரலாறு காணாத மின்வெட்டு நீடிக்கிறது. கிராமப்புறங்களில் 10 மணி நேரம் வரையும் நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் சுழற்சி முறையில் 8 மணி நேரமும் மின்தடை செய்யப்பட்டது. அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட இரண்டு மணி நேரம் தவிர பகலில் 3 மணி நேரம், இரவில் 3 மணி நேரம் மின்வெட்டு ஏற்படுத்தப்பட்டது. இதனால் தொழில்துறையினரும், பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தமிழகம் முழுவதும் மக்கள் தொடர்ந்து போராட் டம் நடத்தி வருகின்றனர்.

மின் பற்றாக்குறையால் மக்கள் மத்தியில் எழுந்துள்ள கோபத்தை சமாளிக்க வழி தெரியாமல் மின்வாரியம் தவித்து வருகிறது. இதை தவிர்ப்பது குறித்து கடந்த 17 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மின்வாரிய தலைவர் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார். இதையடுத்து சென்னை உள்பட மாநிலம் முழுவதும் சீரான மின்தடை ஏற்படுத்தவும், தொழிற்சாலைகளுக்கு மின்சார விடுமுறை விடவும் அரசு தீர்மானித்தது. அதன்படி, புதிய மின்வெட்டு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு அறிவித்துள்ள புதிய மின்வெட்டு திட்டம் இன்று அமலுக்கு வந்தது. சென்னையில் 2 மணி நேரமும், மற்ற மாவட்ட பகுதிகளுக்கு 4 மணி நேரமும் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் முதல்முறையாக 2 மணி நேரம் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலை மற்றும் வணிக மின் பயனீட்டாளர்களுக்கு 40 சதவீத மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது. வணிக பயனீட்டாளர்களுக்கு மாலை 6 முதல் இரவு 10 மணி வரை மின்தடை இருக்கும் என்றும் புதிய மின்வெட்டு மூலம் 1,200 மெகாவாட் மின்சாரம் சேமிக்க முடியும் என்றும் மின் வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், மார்ச் 1-ம் தேதி முதல் தொழிற்சாலைகளுக்கு வாரத்தில் ஒரு நாள் Ôமின் விடுமுறைÕ அமல்படுத்தப்பட உள்ளது. ஞாயிறு தவிர, மற்ற 6 நாட்களுக்கு 6 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு சுழற்சி முறையில் தொழிற்சாலைகளுக்கு ஒருநாள் விடுமுறை அளிக்கப்படும்.

இதன்படி, ஈரோடு மண்டல தொழில் நிறுவனங்களுக்கு திங்கள்கிழமையும், சென்னை தெற்கு மண்டலம், திருப்பத்தூர் பகிர்மான வட்டத்துக்கு செவ்வாய், சென்னை வடக்கு, மதுரை மண்டலத்துக்கு புதன், கோவை மண்டலம் திருப்பூர், நீலகிரி பகிர்மானவட்டம் தவிர்த்து பிற பகுதிகளுக்கு வியாழன், நெல்லை மண்டலம் மற்றும் திருப்பூர், நீலகிரி மின்பகிர்மான வட்டத்துக்கு வெள்ளிக்கிழமை, திருச்சி, விழுப்புரம் மற்றும் வேலூர் மண்டலம் திருப்பத்தூர் பகிர்மான வட்டம் தவிர்த்து மற்ற அனைத்து மாவட்டங்களுக்கும் சனிக்கிழமைகளில் மின் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை விடப்படுவதால் சிறு மற்றும் குறுந் தொழில்கள் பெரிதும் பாதிக்கப்படும். இதனால் 50 சதவீத வருவாய் இழப்பு ஏற்படும் என தொழில் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

ஹீமோகுளோபின் உடலில் அதிகரிக்க எளிய வழி.....!

உடலில் அதிகமான அசதி. எந்த செயலை செய்ய வேண்டுமானாலும், பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடும் மனநிலை. உற்சாகமின்மை, எதிலும் ஆர்வமின்மை, உண்பதற்கு கூட எழுந்துபோய் உட்கார்ந்து உண்ண வேண்டுமே, என்று எண்ணத் தோன்றும்! எப்பொழுது பார்த்தாலும் களைப்பு, தூங்கவேண்டும் போல் இருக்கும், ஆனால் படுத்தால் தூக்கம் வராது. தூக்கம் வராததால் உடல் ஓய்வு பெறாமல் ஏற்படும் உடல் வலி, அதனால் ஏற்படும் அசதி. எழுந்து வேலை செய்ய சோம்பேறித்தனம். இந்த நிலையில்தான் இன்று பலபேர் இருக்கின்றனர்.
இந்த நிலைமையை நீக்க, மருத்துவரிடம் சென்று இதற்கு ஏதாவது மாத்திரை, மருந்து வாங்கி சாப்பிடலாம் என்று, மருத்துவமனையில் வரிசையில் காத்திருந்து அவரை பார்த்தால் பல பரிசோதனைகளை செய்யச் சொல்லுவார். அவர் கூறிய பரிசோனைகள் அனைத்தும் செய்து, அந்த பரிசோதனைகள் அனைத்தும் அவரிடம் காண்பித்தால், உங்களுக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறது என்று கூறுவார். நான் உங்களுக்கு மாத்திரை, மருந்து எழுதித்தருகிறேன். ஆறு மாதங்கள் சாப்பிடுங்கள் சரியாகிவிடும் என்பார். அவர் கொடுக்கும் அதிக விலையுள்ள மாத்திரைகளையும், மருந்துகளையும் விலை கொடுத்து வாங்கி, அவருக்குரிய கட்டணத்தையும் கொடுத்து, ஆறுமாதம் சாப்பிட்டாலும் ஏதோ சிறிது பரவாயில்லை என்று சொல்லும் அளவிற்கு உள்ளதே தவிர, மறுபடியும் பழைய நிலையில் பாதிகூட சரியாகவில்லை.
நமது உடலில் ஹீமோகுளோபின் குறையும் பொழுது அந்த அணுக்கள் குறைந்த ரத்தம் உடல் முழுவதும் உற்சாகமாக ஓட முடிவதில்லை. நமது உடலின் பாகங்கள் சுறுசுறுப்பாக இயங்கமுடி வதில்லை. உடல் களைப்பு அடைகிறது. பத்து பேர்கள் செய்யவேண்டிய வேலையை இருவர் செய்வார்களானால், எவ்வளவு தாமதம் ஆகுமோ, எவ்வளவு தடங்கல் ஏற்படுமோ, அதே தடங்கலும், தாமதமும் நம் உடலில் ஏற்படுகிறது. 
உடலில் ஹீமோகுளோபின் குறையும் பொழுது மேலே குறிப்பிட்ட அத்தனை குறைபாடுகளும் ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்படுகிறது.
நமது உடல் அதற்கு தேவையான சத்துக்களை, நாம் உட்கொள்ளும் ஆகாரத்திலிருந்து பிரித்து எடுத்துக் கொள்ளுகிறது. எவ்வளவு சத்துக்கள், எந்தெந்த சத்துக்கள் தேவையோ, அந்த அளவு மட்டும் உறிஞ்சி எடுத்துக்கொண்டு, மீதி உள்ளவற்றை கழிவு பொருட்களாக உடலிருந்து வெளியேற்றி விடுகிறது. அதிகமான சத்துக்களை நாம் உண்டாலும், அத்தனை அளவு சத்துக்களையும் உடல் ஏற்றுக்கொள்வதில்லை. மீதியை கழிவுப் பொருட்களாக தள்ளிவிடுகிறது.
ரத்தத்தில் ஆண்களுக்கு ஹீமோகுளோபின் 14 - 18 கிராம் அளவிலும், பெண்களுக்கு 12 - 16 கிராம் அளவிலும் இருக்கவேண்டும். 8 கிராம் அளவிற்கு கீழே குறையும் பொழுது, இரத்த சோகை என்ற நோயும், மற்ற தீவிரமான நோய்களும் வருவதற்கு சந்தர்ப்பங்கள் உருவாகின்றன. ரத்தத்தில் எவ்வளவு அளவு ஹீமோகுளோபின் இருக்கிறது என்பதை சோதனைச் சாலையில் ரத்தத்தை பரிசோதிக்கும் பொழுது தெரியவரும். ஹீமோகுளோபின் இருக்க வேண்டிய அளவிற்கு குறையும் பொழுது, உடல் மெலிந்து, களைப்பு, இயலாமை முதலியன ஏற்பட ஆரம்பிக்கின்றன.
ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும் பொழுது ரத்தம் நல்ல சிகப்பு நிறமாகவும், உடலில் ரத்த ஓட்டத்தின்போது நுரையீரலுக்குச் சென்று நாம் மூச்சுக் காற்றை உள்ளே இழுக்கும்போது, அந்த மூச்சுக் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை ரத்தம் ஏற்று உற்சாகம் பெறுகிறது. பிறகு ரத்தம் உடல் முழுவதும் சுற்றி வரும் பொழுது, தன்னில் ஏற்கும் கழிவுப் பொருட்களை கார்பன்டை ஆக்ûஸடு ஆக மாற்றி, நுரையீரலுக்கு திரும்ப வந்து வெளியேற்றுகிறது. பிறகு உற்சாக ரத்த ஓட்டமாக மாறி உடலுக்கு சக்தியூட்டுகிறது. மேலும் நாம் உண்ணும் உணவிலுள்ள சத்துக்களை ரத்தத்தில் ஏற்றுக்கொண்டு, உடலில் உள்ள பல சுரப்பிகளுக்கு வழங்கி, அவைகளை நன்கு இயக்கி, உடலுக்கு வேண்டிய திரவங்களை உற்பத்தி செய்ய வைக்கிறது.
உடலில் ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி இருக்கிறது. நாட்டு மருந்து கடைகளில் கருப்பு உலர்ந்த திராட்சை பழம் கிடைக்கும். அவற்றை வாங்கி 72 நல்ல கருப்பு உலர்ந்த திராட்சை பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு டம்ளரில் தண்ணீர் நிறைய எடுத்துக் கொண்டு, அதில் முதல் நாள் மூன்று பழங்களை மாலை 6 மணிக்கு நீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவிடுங்கள். காலையில் 6 மணிக்கு பல் துலக்கி விட்டு, காலை ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள். பிறகு மதியம் 12 மணிக்கு ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள். மாலை 6 மணிக்கு கடைசியாக உள்ள பழத்தை தின்றுவிட்டு மீதியுள்ள நீரை குடியுங்கள். இதே மாதிரி கீழே உள்ள பட்டியலில் குறிப்பிட்டபடி பழங்களை தின்றுவிட்டு, பழம் ஊறிய நீரை குடியுங்கள்.
நாட்கள் காலை 6 மணி மதியம் 12 மணி மாலை 6 மணி மொத்தம் பழங்கள் 1வது நாள் 1 1 1 3 2வது நாள் 2 2 2 6 3வது நாள் 3 3 3 9 4வது நாள் 4 4 4 12 5வது நாள் 4 4 4 12 6வது நாள் 4 4 4 12 7வது நாள் 3 3 3 9 8வது நாள் 2 2 2 6 9வது நாள் 1 1 1 3
ஒன்பது நாட்கள் செய்து முடித்த பிறகு, ரத்தத்தில் ஹீமோகுளோபின் பரிசோதித்துப் பாருங்கள். தேவையானால் மறுபடியும் ஒரு தடவை பட்டியலில் குறிப்பிட்டபடி செய்து பாருங்கள். இப்பொழுது உங்கள் ரத்தத்தில் ஹீமோகுளாபின்கள் திருப்தியான அளவில் உயர்ந்து இருக்கும். இந்த ஹீமோகுளாபின் உயர்வு நமக்கு பல வியாதிகளை வராமல் தடுக்கும். உடலில் உற்சாகம் பெருகும். வலிவோடும், வனப்போடும் உடல் மிளிரும். இப்படி செய்து அருந்தும் கருப்பு திராட்சை ஊறிய நீர், ரத்தத்தில் கலந்து ஹீமோகுளோபின்கள் உருவாக காரணமாக இருக்கும். செலவு அதிகமில்லாத இந்த எளிய வழியால் உடலில் இழந்த சக்தியையும், உற்சாகத்தையும் நாம் பெறலாம்.

செய்து பார்க்கலாமே!