AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

திங்கள், 13 பிப்ரவரி, 2012

ஓர் வபாத் செய்தி

நமதூர் கொள்ளுமேட்டில் சிராஜுல் மில்லத் வீதியில் வசிக்கும் K. தல்ஹா மற்றும் K.தலிபா அவர்களுடைய தஹப்பனார் A முஹம்மது காசிம் அவர்கள் இன்று மாலை 6.00 மணியளவில் தாருல் பணாவை விட்டும் தாருல் பகாவை சென்றடைந்தார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் . எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் கொள்ளுமேடுடைம்ஸ்  இணையதளம் பிரார்த்தனை செய்கிறது..

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

மாதுளையின் மகத்துவம்

மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது இருமலை நிறுத்துகிறது.
புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது. இரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது. தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது. பித்தநோய்களை நிவர்த்தி செய்கிறது. குடற்புண்களை ஆற்றுகிறது. எந்த வகையான குடல் புண்ணையும் குணமாக்குகிறது. மாதுளம் விதைகளைச் சாப்பிட்டால் இரத்தவிருத்தி ஏற்படும். சீதபேதிக்குச் சிறந்த நிவாரணம் அளிக்கும்.

தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடை கூடும். தொண்டை, மார்பு, நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது. ஆண் தன்மையில் பலகீனம் உள்ளவர்கள் மாதுளம்பழம் சாப்பிடுவதால் மிகுந்த சக்தியை அடைய முடிகிறது.

மாதுளம்பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும், அதிக தாகத்தைப் போக்கும். மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும். சரீரம் குளிர்ச்சியடையும். காய்ச்சல் தணியும். மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும். புதிய இரத்தம் உற்பத்தியாகிவிடும். மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.

மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு நிவர்த்தியாகும். மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த மூலம் நீங்கும். மூலக் கடுப்பும், உடல் சூடும் தணியும். வாந்தி, மயக்கத்திற்குக் கொடுத்தால் நோய் தீரும்.

மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், தொல்லைப் படுத்தும் பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும். மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கொண்டால் தலைவலி, வெப்பநோய் தீரும்.

தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடை கூடும். தொண்டை, மார்பு, நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது. ஆண் தன்மையில் பலகீனம் உள்ளவர்கள் மாதுளம்பழம் சாப்பிடுவதால் மிகுந்த சக்தியை அடைய முடிகிறது.
மாதுளம்பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும், அதிக தாகத்தைப் போக்கும். மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும். சரீரம் குளிர்ச்சியடையும். காய்ச்சல் தணியும். மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும். புதிய இரத்தம் உற்பத்தியாகிவிடும். மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.
மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு நிவர்த்தியாகும். மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த மூலம் நீங்கும். மூலக் கடுப்பும், உடல் சூடும் தணியும். வாந்தி, மயக்கத்திற்குக் கொடுத்தால் நோய் தீரும்.
மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், தொல்லைப் படுத்தும் பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும். மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கொண்டால் தலைவலி, வெப்பநோய் தீரும்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழக - ம ம க குவைத் - மண்டல ரிக்கா கிளை ஒருங்கிணைப்புக் கூட்டம்


தமிழக முஸ்லிம் முன்னேற்றக்கழக - ம ம க குவைத் மண்டல ரிக்கா கிளை ஒருங்கிணைப்புக் கூட்டம் 10-02 -2012 வெள்ளிக்கிழமை அன்று ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு கத்தா ஒன்றில்அமைந்துள்ள ஜும்மா பள்ளியில் வைத்து மதியம் 1 மணிக்கு இறைவன் அருளால் சகோ. வலங்கைமான்அப்துல்ரஹீம்அவர்கள் தலைமையில் நடந்தது மண்டல தலைமை நிர்வாககுழு உறுப்பினர் சகோ.கூனிமேடு அமானுல்லாகான் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்துவழங்கினார் .சகோ ஈரோடு அபுதாகிர் அவர்களின் திருமறை குர்ஆன் ஓதலுடன் கூட்டம்தொடங்கியது.

"மக்கள் சேவையில் தமுமுக" ன்ற தலைப்பில் மண்டல செயலாளர் சகோ, பெருங்களுர் முஜிபுர் ரஹ்மான் அவர்களும் ,கானகிளியனுர்அன்வர் அலிஅவர்கள் "வருங்கால சமுதாயம்" என்ற தலைப்பிலும்சிறப்புரையாற்றினர்கள். இளையான்குடி சீனிமுஹம்மத் அவர்கள் நன்றிஉரையுடன் தூஆ ஓதி ரிக்கா கிளை புதிய நிர்வாகிகள் அமைக்கப்பட்டு இனிதாக கூட்டம் முடிவு பெற்றது. கூட்டத்தில் கைத்தான் கிளை பொருளாளர் திருமங்கலம் இலாஹிபக்ஸ் மிஸ்ரிப் தமுமுக ஷேக்பாரித் ,வேலூர் அதாவுல்லா ,மற்றும் தலைமை நிர்வாககுழு பெரம்பலூர் இஸ்மாயில் கூனிமேடு சர்புதின் முஹம்மத்பாருக்ஆகியோர் கலந்து கொண்டனர்.இந்த ஒருங்கிணைப்பு கூட்டத்தை கைதான்கிளை தமுமுக வினர்கள் ஏற்ப்பாடு செய்து இருந்தனர்.
ரிக்கா தமுமுக புதிய நிர்வாகிகள்:
தலைவராக வலங்கைமான் அப்துல்ரஹீம்,
செயலாளராக அப்துல்லாஹ்,
பொருளாளராக முஹம்மத் ரபிக்,
துணைத்தலைவராக சையதுஅபுதாகிர்
ஆகியோர் நியமிக்க பட்டனர்




இன்ஷா அல்லாஹ் "பிப்ரவரி 14" இட ஒதுக்கீடு போராட்டம்!!!!


இன்ஷா அல்லாஹ் இட ஒதுக்கீடு என்ற நமது உரிமையை வென்று எடுத்திட, நமது சமுதாயம் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் மற்ற சமுதாய மக்களைப் போன்று சம அந்தஸ்த்து பெற்றிட, தற்போது இருக்கும் இட ஒதிக்கீடு 3.5 சதவிததிளிருந்து 10௦ சதவிதமாக மற்றக் கோரியும், அரசு அங்கிகரித்த இட ஒதிக்கீட்டை அரசு மற்றும் தனியார் சார்ந்த எல்லா துறையிலும் உடனடியாக அமுல் படுத்தக் கோரியும் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் தமிழ்நாடு முழுவதும் எல்லா மாவட்டங்களிலும் வருகின்ற "பிப்ரவரி 14" அன்று மிகப் பெரிய போராட்டம் நடத்த உள்ளது. 
நமது பகுதியில் நமது மாவட்ட தலை நகர் கடலூரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மாபெரும் போராட்டத்தில் கலந்து கொள்ள கொள்ளுமேடு தவ்ஹீத் கிளையிளுருந்து வேன் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. போராட்டத்தில் கலந்து கொண்டு நமது தலைமுறை கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் எல்லா உரிமைகளையும் பெற்றிட வல்ல நாயகன் அல்லாஹ்வை பிரார்த்திப்போம். போராட்டத்தில் கலந்தது கொள்ள ஆர்வமுள்ளவர்கள் கொள்ளுமேடு தவ்ஹீத் கிளை சகோதரர்களை தொடர்பு கொண்டு உடனடியாக தங்கள் பெயர்களை பதிவு செய்யவும்.      thanks  kollumeduxpress

இறைத்தூதரை அவமதித்த சவூதி வலைப்பூ பதிவர் மலேசியாவில் கைது


கோலாலம்பூர்:ட்விட்டர் சமூக இணையதளம் வாயிலாக முஸ்லிம்களின் உயிரினும் மேலான இறைத்தூதர் முஹம்மது நபியை குறித்து கேலி செய்யும் வகையில் விமர்சனம் செய்த சவூதி அரேபியாவை சார்ந்த வலைப்பூ பதிவரை மலேசியா போலீஸ் கைது செய்தது. 23 வயதான ஹம்ஸா கஸ்காரி சவூதி அரேபியா அதிகாரிகளின் உத்தரவின் பேரில் மலேசியாவில் வைத்து கைதானார்.


அரசியல் புகலிடம் தேடி நியூசிலாந்திற்கு செல்லவிருந்த ஹம்ஸா, விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
கடந்த வாரம் ஹம்ஸா, ட்விட்டர் சமூக வலை தளத்தில் முஹம்மது நபியின் பிறந்த நாளில் அவர்களைக் குறித்து அவமதிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை ட்விட்டரில் போஸ்ட் செய்தார். இவரின் கருத்துக்களுக்கு எதிராக சவூதி அரேபியா மார்க்க அறிஞர்களும், மக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து கஸ்காரி தனது ட்விட்டர் கருத்தை வாபஸ் பெற்றார். இவரின் ட்விட்டர் அக்கவுண்ட் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

வெள்ளி, 10 பிப்ரவரி, 2012

முஹம்மது அலி - மிஸ்காத்பேகம் திருமணம்


பாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர்{அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும் மேலும் உங்கள் மீது அபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்றிணைத்து வைக்கட்டும்}                                                                                 வாழ்த்துக்களுடன்…
                                         இணையதளம்

10.02.2012 அன்று துபையில் சகோதரர் கோவை அய்யூப் சிறப்புச் சொற்பொழிவு!


அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

கடந்த ஆண்டு 13.08.2011 அன்று அல் மனார் சென்டரில் அமீரக வரலாற்றில் முதன்முறையாக இஸ்லாமிய நிகழ்ச்சி ஒன்றுதமிழில் துபை அரசாங்க அனுமதியுடனும் ஆதரவுடனும் முஃப்தி உமர் ஷரீஃப் காஸிமி அவர்களின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றதை அனைவரும் அறிவீர்கள்.
 
.
தொடர்ந்து இஸ்லாமிய தமிழ் அமர்வுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த 2வது சந்தர்ப்பத்தில், வரும் வெள்ளிக்கிழமை 10.02.2012  மாலை சரியாக 5 மணியளவில் அல் மனார் சென்டரில் தாயகத்திலிருந்து வருகை தந்துள்ள சகோதரர் கோவை அய்யூப்அவர்கள் கலந்து கொண்டு இஸ்லாம் - அன்றும் இன்றும் என்ற தலைப்பின் கீழ் கருத்தாழமிக்க, இம்மை மறுமைக்கு பயனுள்ளதோர் சிறப்புரையாற்றவுள்ளார்கள்.
 
அனைவரும் கலந்து பயனடைய அன்போடு அழைக்கின்றோம்.
 
குறிப்பு : பெண்களுக்கு தனியிட வசதியும். வாகன வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
 
முன்பதிவுக்கு மற்றும் மேலதிக விபரங்களுக்கு......
04-2981931, 055-2177618.
 
-அதிரை அமீன்.

பிப்ரவரி 14 முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம்


சிதம்பரம்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பிப்ரவரி 14 முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் நடைபெறுகின்றது. இதற்காக மாநில முழுவதும் மாநில நிர்வாகிகள் சுற்றுபயணம் செய்துவருகிறார்கள்.
அதன் அடிப்படையில் கடலூர் மாவட்டத்திற்கு மாநில செயலாளர்கள் சகோ.அப்துல் ஜப்பார் மற்றும் சகோ.முஹம்மது யூசுஃப் ஆகியோர்களை மாநில நிர்வாகம் நியமித்தது. சிதம்பரம் தவ்ஹீத் பள்ளியில் 07.02.2012 லுஹர் தொழுகைக்கு பிறகு “மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்” மாவட்ட தலைவர் சகோ.A.K.மூஸா அவர்களின் தலைமையில் நடைப்பெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய மாநில செயலாளகள் சகோ.அப்துல் ஜப்பார் மற்றும் சகோ.முஹம்மது யூசுஃப் ஆகியோர் மாவட்டதில் இதுவரை போராட்டத்திற்காக நடந்துள்ள பணிகளை கேட்டுயறிந்தார். மேலும் இன்னும் செய்யவேண்டிய பணிகளை பற்றியும் விளக்கி பேசினார். இதன் மூலம் மாவட்டதில் போராட்டத்திற்கான பணிகளை மூடுக்கிவிடப்பட்டது.
இதில் மாவட்டத்தின் அனைத்து கிளைகலிருந்தும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!