கோலாலம்பூர் : மலேசிய சர்வதேச விமான நிலையத்தில் அறிவிப்புக்கள் அனைத்தும் தமிழில் செய்யப்பட ஏற்பாடு செய்யப்பட்டு வரவதாக மலேசிய போக்குவரத்து துறை அமைச்சர் காங் ஷோ ஹா தெரிவித்துள்ளார். மலேசியாவில் அனைத்து சமூக மக்களும் வசித்து வருவதால் அவர்களின் தரம் குறித்த விழிப்புணர்வை அனைவரிடமும் ஏற்படுத்த இது போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இந்த அறிவிப்புக்கள் அடுத்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மலேசியாவில் வசிக்கும் 27 மில்லியன் மக்களில் 8 சதவீதத்தினர் தமிழர்களாக உள்ளனர். மேலும் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பலரும் தென்னிந்தியாவை சேர்ந்தவர்களாக உள்ளனர். இங்கு பணிபுரிபவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்களாக உள்ளனர். அவர்கள் ஆங்கிலம் தெரியாதவர்களாக இருப்பதால் சென்னை உள்ளிட்ட இந்திய நகரங்களில் இருந்து வருபவர்களுக்காக பொது மக்களின் கோரிக்கையின் பேரில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
புதன், 21 டிசம்பர், 2011
மலேசிய ஏர்போர்டில் தமிழில் அறிவிப்பு...
லேபிள்கள்:
kollumedutimes
எரிமலை உருவாகும் பகுதியில் கூடங்குளம் அணுமின்நிலையம் – நிபுணர் குழுவின் அதிர்ச்சி அறிக்கை
சென்னை:கூடங்குளம் அணுமின்நிலையம் எரிமலை உருவாகும் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக நிபுணர்கள் குழுவின் அறிக்கை கூறுகிறது. அணுமின்நிலைய எதிர்ப்பு குழுவினருக்காக ஆய்வு நடத்திய 21 உறுப்பினர்களை கொண்ட நிபுணர்கள் குழு கூடங்குளம் பகுதியில் மிதமான எரிமலை பாறைக் கற்களை (சப் வோல்கானிக் ராக்ஸ்) கண்டெடுத்துள்ளனர்.
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக சுற்றுச்சூழல் பாடப்பிரிவு தலைவர் பேராசிரியர் அருணாச்சலம், டெல்லி இந்திராகாந்தி சுற்றுச்சூழல் ஆய்வு மையத்தின் விஞ்ஞானி சவுமியா தத்தா, பிரபல பத்திரிகையாளர் பிரஃபுல் பித்வாய் ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
எரிமலை வெடிப்பின் மூலம் உருவாகும் மேக்மா பின்னர் உறுதியாகி ஸப் வோல்கானிக் ராக்ஸ் (அதாவது மிதமான எரிமலை பாறைக் கற்களாக) ஆகிறது. இத்தகைய பாறைக்கற்கள் அணுமின்நிலையம் அமைந்துள்ள பகுதியில் பெருமளவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் பூமியில் வெடிப்பு ஏற்படவும், சிறிய எரிமலை வெடிப்புகள் உருவாகவும் வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
1990-ஆம் ஆண்டு முதல் 1998-ஆம் ஆண்டுவரை இந்திய அணுசக்தி துறை அணுமின்நிலையத்திற்காக கூடங்குளத்தில் நில பரிசோதனை நடத்தியிருந்தது. அப்பொழுது கண்டுபிடிக்க முடியாத வோல்கானிக் ராக்ஸ் 2004-ஆம் ஆண்டு அணுநிலையத்திற்கு அடித்தளம் அமைக்க தோண்டிய பொழுது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கலாய்ப்பில் ஆழ்ந்த அதிகாரிகள் நிலத்தின் உள்பகுதியில் காங்கிரீட் போட்டு உறுதியாக்கிய பிறகு கட்டிடங்களை கட்டியுள்ளனர். இப்பகுதியில் அணுமின்நிலையம் நிர்மாணித்தது ஆபத்தை உருவாக்கும் என நிபுணர்கள் குழு அறிக்கையில் சுட்டிக்காட்டுகிறது.
அணுமின்நிலையம் தொடர்பாக மக்களின் பீதியை அகற்ற மத்திய அரசு நியமித்த நிபுணர்கள் குழுவிடம் இக்காரியம் குறித்து கூறியபொழுது அவர்கள் அங்கீகரிக்கவில்லை என அணுமின்நிலைய எதிர்ப்புக் குழுவின் தலைவரான புஷ்பராயன் கூறுகிறார்.
நில பரிசோதனை அறிக்கை உள்பட அணுமின்நிலையம் தொடர்பான ஆவணங்களை பார்வையிட வேண்டும் என அணுமின்நிலைய எதிர்ப்புக் குழுவினரின் கோரிக்கையை மத்திய நிபுணர்குழு அங்கீகரிக்கவில்லை. இப்பகுதியில் எரிமலை வெடிப்பு உருவாக எவ்வித வாய்ப்பும் இல்லை என்றும், மக்களை பீதிவயப்படுத்துவதற்கான முயற்சி என்றும் மத்திய நிபுணர் குழுவின் தலைவரும், கன்னியாகுமரி மாவட்டம் குமாரகோவில் நூருல் இஸ்லாம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருமான முத்துநாயகம் கூறுகிறார்.
லேபிள்கள்:
kollumedutimes.com
செவ்வாய், 20 டிசம்பர், 2011
கலை, அறிவியல், பொறியியல், முதுநிலை மற்றும் +2 மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவிகள்
தினசரி வாழ்க்கையில் இயற்பியல் எப்படி பயன்படுத்தப்படுகிறது, இயற்பியலை மாணவர்களுக்கு புரியும் வகையில் எப்படிக் கற்றுத்தரலாம் என்பதிலிருந்து, பள்ளி முதல் கல்லூரி வரை படிக்கும் மாணவர்களுக்கு தனியார் தொண்டு நிறுவனங்கள் அளிக்கும் கல்வி உதவித்தொகை குறித்த தகவல்களை வழங்கி வருகிறார் டி.ஜி. வைஷ்ணவா கல்லூரி இயற்பியல் துறை தலைவர் டி.உத்ரா.
இந்த யோசனை எப்படி வந்தது என்று பேராசிரியை உத்ராவிடம் கேட்டபோது, என் மகளுக்கு கதை சொல்ல ஆரம்பித்தபோது, என் பெற்றோர் எனக்குச் சொன்ன கதை,புத்தகத்தில் நான் படித்த கதைகள் இவற்றை தவிர அவளுக்கு புதிதாக பல விஷயங்கள் கற்றுக்கொடுக்கத் தீர்மானித்தேன். அதன் அடிப்படையில் தினசரி வாழ்க்கையில் அறிவியலை நாம் எந்தெந்த வகையில் பயன்படுத்துகிறோம் என்பதை அவளுக்கு சின்னச் சின்னக் கதைகள் மூலம் சொல்ல ஆரம்பித்தேன். விளையாட்டாக கேட்க ஆரம்பித்த அவள், பிறகு ஒவ்வொரு விஷயத்திலும் உள்ள அறிவியலை அவளாக கேட்டுத் தெரிந்து கொள்ள ஆரம்பித்தாள். அதற்குப் பிறகு என் மகள் தெரிந்துகொண்ட அறிவியலை மற்ற குழந்தைகளும் தெரிந்துகொள்வதற்காக கை கழுவுதல் ஆரம்பித்து, சமையல் செய்தல் உள்பட எல்லாவற்றிலும் இயற்பியல் விதிகள் எப்படி பயன்படுத்தப்படுகின்றன என்பதை இதழ்களில் எழுத ஆரம்பித்தேன்.
இதுதவிர பள்ளி ஆரம்பித்து கல்லூரி வரை படிக்கவரும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், பல மாணவர்கள் தங்கள் கல்வியை பின் தொடர முடியாத நிலை இருக்கிறது. இம்மாதிரியான மாணவர்களுக்கு பல்வேறு தனியார் நிறுவனங்கள், அரசு அமைப்புகள், சமூகத் தொண்டு நிறுவனங்கள் கல்வி உதவித்தொகைகள், பாடப் புத்தகங்கள்,கல்வி உபகரணங்கள், சீருடைகள், வழங்கி வருகின்றன. இம்மாதிரியான விஷயங்களை அனைத்து மாணவர்களும் தெரிந்துகொண்டால், இளநிலைப் பட்டப் படிப்பு மற்றும் முதுநிலைப் பட்டப் படிப்பு உதவித்தொகையை வைத்துக்கொண்டே படித்து முடித்துவிடலாம் என்று கூறும் உத்ரா, இதுவரை 96 அறிவியல் கட்டுரைகள் எழுதியுள்ளார். இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு சர்வதேச அறிவியல் மாநாட்டில், நிறமாலைமானியியல் குறித்த ஆய்வறிக்கையை சமர்ப்பித்திருக்கிறார்.
கலை அறிவியல் கல்லூரி , பொறியியல் கல்லூரி, முதுநிலைப் பட்டப் படிப்பு மற்றும் பிளஸ் டூ மாணவர்களுக்கு அளிக்கப்படும் கல்வி உதவித்தொகைகள் குறித்து உத்ரா தொகுத்துத் தந்த தகவல்கள் இதோ:
ராஜஸ்தான் யூத் அசோசியேஷன்
ராஜஸ்தான் யூத் அசோசியேஷன் என்ற அமைப்பு பட்டப் படிப்பு மற்றும் டிப்ளமோ பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் மூன்று ஆண்டுகாலம் படிப்புக்குத் தேவையான கல்வி உபகரணங்கள் வாங்குவதற்கான உதவித்தொகை அளிக்கிறது. இந்த உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்கள் சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களாக இருக்க வேண்டும். சாதி, பாலினம் போன்ற எந்த விதிவிலக்கும் இந்த உதவித்தொகைக்கு கிடையாது.
விவரங்களுக்கு: www.ryabookbank.com
ஜெய்கோபால் கரோடியா விவேகானந்தா டிரஸ்ட்
படிக்கும் ஆர்வமும் அதேநேரம் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது ஜெய்கோபால் கரோடியா விவேகானந்தா டிரஸ்ட். இந்த தனியார் நிறுவனம் சமுதாயத்தில் பின்தங்கிய மாணவர்களும் சிறந்த கல்வியை பெறவேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் இந்த உதவித்தொகையை அளித்து வருகிறது. இளநிலை பட்டப் படிப்பு மற்றும் முதுநிலைப் பட்டப் படிப்பு,தொழிற்கல்வி பயின்றுகொண்டிருக்கும் மாணவர்கள் இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
இந்த உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்கள், Jaigopal Garodia Scholarships Centre, Jaigopal Garodia Vivekananda Vidyalaya Trust, U – 6, Seventh Street, Anna Nagar, Chennai. தொலைபேசி எண் :26206261 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
கௌரவ் ஃபவுண்டேஷன்
சென்னையில் இயங்கி வரும் கௌரவ் ஃபவுண்டேஷன் என்ற நிறுவனம், இந்திய மாணவர்களுக்கு ஆய்வு மற்றும் உயர்கல்வி மேற்கொள்வதற்கு உதவித்தொகை அளித்து வருகிறது. இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் இந்தியராக இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் 4 லட்ச ரூபாய்க்கு குறைவாக இருக்க வேண்டும்.10 வயது முதல் 50 வயது வரை உள்ள படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே உதவித்தொகைக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இளநிலை பட்டப் படிப்பு மற்றும் முதுநிலைப் பட்டப் படிப்பு,எம்.பி.பி.எஸ். பி.இ., பி.டெக். படிப்பு மேற்கொள்ளும் மாணவர்கள், சி.ஏ., சி.எஸ்., இன்டீரியர் டெக்கரேஷன், ஃபேஷன்/டிசைன் சம்பந்தமான படிப்பு மேற்கொள்ளும் மாணவர்களும் இந்த கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
விவரங்களுக்கு: http://gauravfoundation.org/scholarship.html
எஸ்.கே.டி.பி. தொண்டு நிறுவனம்
சென்னை தி.நகரில் உள்ள எஸ்.கே.டி.பி. எனும் சமூக தொண்டு நிறுவனம் படிக்க வசதியில்லாத பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அளித்து வருகிறது. இளநிலை பட்டப் படிப்பு மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளை உதவித்தொகையுடன் படிக்க விரும்பும் மாணவர்கள் இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். சென்னை மற்றும் தமிழ்நாட்டில் உள்ள பிற மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். இந்த நிறுவனம் இந்த ஆண்டில் சென்னையைச் சேர்ந்த 64 மாணவர்களுக்கும் மற்றும் பிற பகுதியைச் சேர்ந்த 50 மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகையை வழங்கியுள்ளது.
விவரங்களுக்கு : www.skdbassociation.com/scholarships.html
ஸ்ரீ வித்யாசாகர் எஜுக்கேஷனல் டிரஸ்ட்
சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ வித்யாசாகர் எஜுக்கேஷனல் டிரஸ்ட் அமைப்பு பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை ஆண்டுதோறும் அளித்து வருகிறது. உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்கள் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு அல்லது
பிளஸ் டூ வகுப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு இளநிலைப் பட்டப் படிப்பில் சேருவதற்கு உதவித்தொகை அளிக்கப்படுகிறது. அதேபோல எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாமல் தற்போது ஐ.டி.ஐ. கல்வி நிலையத்தில் முதல் ஆண்டு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களும் இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
பிளஸ் டூ வகுப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு இளநிலைப் பட்டப் படிப்பில் சேருவதற்கு உதவித்தொகை அளிக்கப்படுகிறது. அதேபோல எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாமல் தற்போது ஐ.டி.ஐ. கல்வி நிலையத்தில் முதல் ஆண்டு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களும் இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
விவரங்களுக்கு : B-1, Narumukai apartment, Brindavan Nagar Extension, Adambakkam, Chennai – 88 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
சோபியா நிறுவனம்
சென்னையில் உள்ள சோபியா என்ற தனியார் நிறுவனம்,கல்லூரி செல்லும் மாணவர்களுக்கு இலவச கல்வி உதவித்தொகையை வழங்கி வருகிறது. பொறியியல் கல்லூரி,மருத்துவக் கல்லூரி பயில விரும்பும் மாணவர்களும் இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். கல்லூரியில் முதல் ஆண்டு பயிலும்போதே இந்த உதவித்தொகைப்பெற விண்ணப்பிக்க வேண்டும். இரண்டாம் ஆண்டு அல்லது மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கும்போது, கல்வி உதவித்தொகை கேட்டு புதிதாக விண்ணப்பிக்க முடியாது.
விவரங்களுக்கு : www.sophiascholarship.org
சாகு ஜெயின் டிரஸ்ட்
சாகு ஜெயின் டிரஸ்ட் என்ற அமைப்பு தொழிற்கல்வி,தொழில்நுட்பக் கல்வி மற்றும் கலை அறிவியல் கல்லூரியில் இளநிலை பட்டப் படிப்பு மற்றும் முதுநிலைப் பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு புத்தகம் மற்றும் கல்வி உபகரணங்கள் வாங்குவதற்காக மாதம்தோறும் ரூ.150லிருந்து ரூ.1000 வரை உதவித்தொகை அளித்து வருகிறது. பிளஸ் டூ தேர்வில் மாணவர்கள் பெற்ற அதிகபட்ச மதிப்பெண்களைப் பொருத்து இந்த உதவித்தொகை பெறுவதற்குரிய மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
விவரங்களுக்கு : http://sahujaintrust.timesofindia.com
ஃபவுண்டேஷன் ஃபார் அகாதெமிக் எக்ஸலன்ஸ் அண்ட் ஆக்சஸ் நிறுவனம்
புதுதில்லியில் உள்ள பவுண்டேஷன் ஃபார் அகாதெமிக் எக்ஸலன்ஸ் அண்ட் ஆக்சஸ் நிறுவனம் கலை, வணிகம்,அறிவியல், மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் தொழிற்படிப்பு, இளநிலைப் பட்டப் படிப்பு மேற்கொள்ளும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை அளித்து வருகிறது. பயணச்செலவாக ஆண்டுக்கு ரூ.1,000,கல்லூரியில் தங்கியிருந்து படிக்க ஆண்டுக்கு ரூ.9,000,ஆடைகள் வாங்க ஆண்டுக்கு ரூ.1000, புத்தகம் மற்றும் கல்வி உபகரணங்கள் வாங்குவதற்கு ரூ.2,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. மாணவர்களின் அதிகபட்ச மதிப்பெண்கள் அடிப்படையிலேயே இந்த உதவித்தொகைக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விவரங்களுக்கு: www.faeaindia.org/index.asp
சத்தியகாமா சாரிடபிள் டிரஸ்ட்
பெங்களூருவில் உள்ள சத்தியகாமா சாரிடபிள் டிரஸ்ட் என்ற சமூகத் தொண்டு நிறுவனம் பிளஸ் டூ மற்றும் பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்று மேல்நிலைப் பள்ளிப் படிப்புக்கு கல்விக் கட்டணம் கட்ட முடியாமல் தவிக்கும் ஏழை எளிய மாணவிகள் மற்றும் பிளஸ் டூ வகுப்பு முடித்துவிட்டு பட்டப் படிப்பு மேற்கொள்ளவிருக்கும் பிராமண சமுதாய மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை அளிக்கிறது. பிளஸ் டூ மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வுகளில் பெற்ற அதிக மதிப்பெண்கள் அடிப்படையில் இந்த உதவித்தொகை பெற மாணவிகள் இந்த உதவித்தொகைக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
விவரங்களுக்கு : www.tamilbrahmins.com
டி.வி.எஸ். சோல்ட்ரி டிரஸ்ட் நிறுவனம்
ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியைச் சேர்ந்த டி.வி.எஸ். சோல்ட்ரி டிரஸ்ட் நிறுவனம் தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குகிறது. பிளஸ் டூ முடித்துவிட்டு உயர்கல்வி மேற்கொள்ள விரும்பும் மாணவர்கள் இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
விவரங்களுக்கு: www.nellorebrahmins.com
ஸ்ரீபிரகாத் பாரதீய சமாஜ்
மும்பையைச் சேர்ந்த ஸ்ரீபிரகாத் பாரதீய சமாஜ் என்ற அமைப்பு ஆண்டுதோறும், பிளஸ் டூ முடித்துவிட்டு முழுநேர இளநிலைப் பட்டப் படிப்பு அல்லது முதுநிலைப் பட்டப் படிப்பு மேற்கொள்ளும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குகிறது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., ஆயுர்வேதம்,ஹோமியோபதி, என்ஜினீயரிங், பார்மஸி, கம்ப்யூட்டர் சயின்ஸ்,வேளாண்மை, கால்நடை அறிவியல், நர்ஸிங் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளில் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப் படிப்பு படிக்க விரும்பும் மாணவர்கள், கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். வெளிநாட்டைச் சேர்ந்த இந்திய மாணவர்கள் குறைந்தபட்சம் பிளஸ் டூ வகுப்பில் 70 சதவீத மதிப்பெண்களும், இந்திய மாணவர்களாக இருப்பின் 60 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். ஆசிரியர் பயிற்சி மற்றும் நர்சிங் படிப்பில் சேரும் மாணவிகள் 45 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால், இந்த இலவச கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
விவரங்களுக்கு : shri brihad Bharatiya samaj, 178 NK Mehta International House, behind LIC Yogakshema, Babubhai chinai Marg, Backbay Reclamation, Mumbai – 400020.
இன்போசிஸ் அறக்கட்டளை
இன்போசிஸ் தொழில்நுட்ப நிறுவனம், இன்போசிஸ் அறக்கட்டளையின் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை எளிய மாணவர்களுக்கு ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. பத்தாம் வகுப்பில் 80சதவீத மதிப்பெண்களுக்கு அதிகம் பெற்ற மாணவர்கள் தங்கள் மேல்நிலைக் கல்வி மற்றும் உயர்கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் மாணவர்கள் எழுத்துத் தேர்வு மூலம் கல்வி உதவித்தொகை பெற தகுதியுடைய மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விவரங்களுக்கு : www.infosys.com/infosys_foundation/about.htm
தமிழ்நாடு பெண்கள் தன்னார்வ அமைப்பு
சென்னை சேத்துப்பட்டு பகுதியில் உள்ள தமிழ்நாடு பெண்கள் தன்னார்வ அமைப்பு சமுதாயத்தில் பொருளாதார அளவில் பின்தங்கிய பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பள்ளி சீருடை மற்றும் கல்விக் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்து வருகிறது தமிழ்நாடு பெண்கள் தன்னார்வ அமைப்பு.
விவரங்களுக்கு: Womens voluntary service of Tamilnadu, old no.19, New no.6, Near presidency school, Mayor VR Ramanathan Road, Chetpet, Chennai. Phone: 044 – 28361434 , 28361825.
பிரைட் பியூச்சர் ஃபார் பிளைண்ட்
சென்னையைச் சேர்ந்த பிரைட் பியூச்சர் ஃபார் பிளைண்ட் என்ற சமூகத் தொண்டு நிறுவனம் பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் பார்வைத்திறன் அற்ற மாணவர்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளுக்கு ஆண்டு தோறும் கல்வி உதவித்தொகை அளித்து வருகிறது. இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் டூ வரை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிப்பவராக இருக்கவேண்டும் மற்றும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் இளநிலைப் பட்டப் படிப்பு மற்றும் பொறியியல் பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. கல்விக் கட்டணம், புத்தகச் செலவு மற்றும் சீருடைகளுக்காக இந்த உதவித்தொகை அளிக்கப்படுகிறது.
விவரங்களுக்கு : www.brightfutureforblind.com
லேபிள்கள்:
kollumedutimes
Laptop வாங்கும்போது கவனிக்க வேண்டியவை
Desktop Computer மட்டுமே பயன்படுத்தும் பல பேருக்கு எப்படியாவது ஒரு லேப்டாப் வாங்கிவிடவேண்டும் என்று நீண்ட கால கனவு ஒன்று இருக்கத்தான் செய்யும்.
அப்படி கனவு காணும் பலருக்கு பணம் பட்ஜெட் பற்றாக்குறை பிரச்சனையால் லேப் டாப் வாங்க முடியாமல் கால நேரம் தள்ளிபோக்கொண்டிருக்கும்.
ஆனால் சிலருக்கு ஒரு லேப்டாப் வாங்கும் அளவுக்கு பணம் இருந்தும் நம்மால் ஒரு தரமான லேப்டாப்பை பார்த்து வாங்க முடியாது அப்படி வாங்க வேண்டுமென்றால் நல்ல கணினி அறிவு உள்ள ஒரு நண்பர் நம்முடன் ஒன்றாக வரவேண்டுமே அவரை நாம் எங்கு தேடி பிடிப்பது யாரை நம்புவது என்று தெரியாமல் லேப்டாப் வாங்கும் படலம் தள்ளிப்போய்க்கொண்டிருக்கும்.
இனி கவலை வேண்டாம் இந்த பதிவு உங்களுக்காகத்தான். நீங்களே தனியாக தைரியமாக சென்று ஒரு தரமான லேப்டாப்பை உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரி வாங்கி வரலாம்.
லேப்டாப் வாங்க வேண்டும் என்றால் முதலில் உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரியான லேப்டாப் பிராண்ட் எதனை வாங்குவதென்று தீர்மானித்துக்கொள்ளுங்கள்.
சிறந்த பிராண்ட் லேப்டாப் வாங்கவேண்டுமென்றால் முதலில் இங்கு கொடுப்பட்டுள்ள சிறந்த பிராண்டில் எந்த பிராண்டை வாங்கவேண்டுமென்று முடிவுசெய்துகொள்ளுங்கள்…..
SONY
HP
DELL
SAMSUNG
THOSHIBA
LENOVA
ACER
HP
DELL
SAMSUNG
THOSHIBA
LENOVA
ACER
சரி இனி நீங்கள் வாங்கப்போகும் இந்த பிராண்ட் லேப்டாப்புகளில் எந்தெந்த விசயத்தை கவனமாக பார்க்கவேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்…
Laptop Configuration
Processor
Processor என்பது அனைத்து லேப்டாப் Mother Board களிலும் மிக முக்கியமாக பொருத்தக்கூடிய சதுரமான ஒரு சிப். இந்த Processor இன்றைய மார்கெட்டில் அதிக தரம் உள்ளதாக விற்பனையில் உள்ளது Intel Core i7. அடுத்ததாக Intel Core i5 அடுத்ததாக Intel Core i3 என்பதாகும்.
எனவே நீங்கள் விலை கூடுதலான ஒரு லேப்டாப்பை வாங்க வேண்டுமென்றால் முதலில் நல்ல ஒரு பிராண்டை தேர்ந்தெடுத்துக்கொண்டு இந்த Processor ஐ
Intel Core i7
Intel Core i5
Intel Core i3
Intel Core i5
Intel Core i3
என்ற வரிசையில் உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரி ஒன்றை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.
இந்த மூன்று வகையான Core வரிசையில் உள்ள Processor களில் ஒன்று உங்கள் பட்ஜெட்டுக்கு விலை கூடுதல் என்று நீங்கள் நினைத்தால் இவைகளை விட தரம் குறைந்த Intel Core 2 Duo அல்லது Intel Dual Core என்ற Processor ஐ நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
இதை விட தரம் குறைவான Processor ஐ நீங்கள் தேர்ந்தெடுத்தால் அது இன்றைய நவீன டெக்னாலஜிக்கு பொருத்தமானதாக இருக்காது.
Intel® Core™ i7-640M Processor 2.80 GHz
அடுத்ததாக இங்கு மேலே காண்பதுபோல் இந்த Processor உடன் 2.80 GHz என்று குறிப்பிடு இருப்பதை போல நீங்கள் வாங்கும் லேப்டாப்பிலும் ஒரு நம்பருடன் GHz என்று குறிப்பிட்டு இருக்கும். இந்த நம்பரையும் நீங்கள் கவணமாக பார்க்கவேண்டியது மிக அவசியம். ஏனென்றால் இந்த 2.80 GHz என்பதை விட 2.00 GHz அல்லது 1.60 GHz என்பதன் Processor வேகம் மிக குறைவானது. 2.00 GHz லேப்டாப் மாடலை விட 2.80 GHz லேப்டாப் மாடலின் விலை குறைவானதாக இருக்குமேயானால் வேறு எந்த டெக்னாலஜி இதில் இல்லை என பார்க்கவேண்டியது அவசியம்.
RAM
அடுத்ததாக மிக முக்கியமான விசயம் RAM. நீங்கள் கம்ப்யூட்டரை திறந்த பிறகு ஒன்றுக்கு மேற்பட்ட புரோகிராம்களை பயன்படுத்தும்பொழுது கம்ப்யூட்டரின் வேகம் குறைந்துவிடாமல் பாதுகாப்பதில் இந்த RAM மிக முக்கிய பங்கு வகுக்கிறது. அதனால் இன்றைய அட்வாண்ஸ் புரோகிராம்களை பயன்படுத்த நினைக்கும் நீங்கள் குறைந்தது 2 GB RAM இருக்கிறதா என பார்த்துக்கொள்ளுங்கள். (4 GB RAM இருந்தால் சிறந்தது) இதில் இன்னொரு முக்கியமான விசயம் DDR3 என்ற அட்வாண்ஸ் டெக்னாலஜி கொண்ட RAM நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் பொருத்தப்பட்டுள்ளதா என கேளுங்கள். ( பொதுவாக விலை குறைந்த லேப்டாப் வாங்கும்பொழுது அதில் DDR2 RAM மட்டுமே பயன்படுத்தப்படுகிறது).
HARD DISK
அடுத்தாக நீங்கள் கவனிக்கவேண்டியது இந்த ஹார்ட் டிஸ்க். பொதுவாக கம்ப்யூட்டரை பற்றிய விபரங்கள் அதிகம் அறியாதவர்கள் கம்ப்யூட்டரின் இயங்கும் வேகம் அதில் பொருத்தப்படும் ஹார்ட் டிஸ்கின் அளவை பொருத்துதான் உள்ளது என தவறாக என்னுகிறார்கள். கம்ப்யூட்டர் இயங்கும் வேகத்திற்கும் இந்த ஹார்ட் டிஸ்கின் அளவுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. ஆனால் இன்றைய மென்பொருள்களின் அதி வேக வளர்ச்சியின் காரணமாக நாம் ஹார்ட் டிஸ்க் அளவிலும் கொஞ்சம் கவணம் செலுத்த வேண்டி உள்ளது.
நீங்கள் கோரல்ட்ரா, போட்டோசாப் போன்ற போட்டோ டிசைனிங் மென்பொருள் மற்றும் வீடியோ டிசைன் செய்யும் மென்பொருள்களை இன்ஸ்டால் செய்து பயன்படுத்துபவராக இருந்தால் மற்றும் உங்களுக்கு விருப்பமான ஆடியோ வீடியோ பைல்களை உங்கள் லேப்டாப்பில் காப்பி செய்து வைத்து பயன்படுத்தும் பழக்கம் உள்ளவராக இருந்தால் உங்கள் ஹார்ட் டிஸ்கின் அளவு குறைந்தது 320 GB இருக்கவெண்டும்.
ஆடியோ வீடியோ கம்ப்யூட்டரில் காப்பி செய்ய தேவை இல்லை என்றால் 160 GB போதுமானது.
எனக்கு எந்த தேவையும் இல்லை மைக்ரோசாப் ஆபீஸ் மட்டும் தான் பயன்படுத்துவேன் அடுத்ததாக நான் இண்டெர்நெட் பயன்படுத்துவேன் அதோடு யூடுப் பயன்படுத்துவேன் என்று நீங்கள் சொல்பவராக இருந்தால் உங்களுக்கு 80 GB ஹார்ட் டிஸ்க் என்பதே மிக அதிகம்.
பொதுவாக இந்த ஹார்ட் டிஸ்குகளில் நீங்கள் பார்க்கவேண்டிய இன்னொரு விசயம் அதன் வேகம். SPEED 7200 RPM அல்லது SPEED 5400 RPM போன்றவை மிக சிறந்தது. இதனை விட நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் ஹார்ட் டிஸ்க் ஸ்பீடு குறைந்ததாக இருந்தால் அங்கு இருப்பதில் எது கூடுதலாக RPM என்பதை தேர்ந்தெடுங்கள்.
DVD DRIVE
நீங்கள் மேலே குறிப்பிட்டது போன்று பிராண்டட் லேப்டாப் வாங்கும்பொழுது DVD டிரைவை பற்றி அதிக கவணம் எடுக்க தேவை இல்லை. ஏனென்றால் பிராண்டட் லேப்டாப்புகளில் அதற்கு பொருத்தமான தரமிக்க DVD டிரைவ் பொருத்தி இருப்பார்கள். இந்த டிரைவில் SuperDrive 8x(DVDR DL/DVDRW/CD-RW) என்பது போன்ற குறிப்பு இருக்கிறதா என பார்த்துக்கொள்ளுங்கள்.
GRAPHIC CARD
பொதுவாக விலை குறைந்த லேப்டாப் அல்லது டிஸ்கவுண்ட் விலைகளில் கிடைக்கும் லேப்டாப்புகளில் இந்த கிரபிக் கார்டு இணைந்திருப்பது இல்லை. கீராபிக் கார்டு இணைக்கப்பட்டுள்ளது என்று அந்த லேப்டாப் குறிப்பில் எழுதப்பட்டிருந்தால் அது மற்ற லேப்டாப்பை விட விலை கூடுதலாகவே இருக்கும்.
சரி இந்த கிராபிக் கார்டு இணைந்திருப்பதால் நமக்கு என்ன பயன் ?
நீங்கள் வீடியோ அனிமேசன் மற்றும் போட்டோசாப், கோரல்ட்ரா டிசைனிங் செய்பவராக இருந்தால் மற்றும் வீடியோ கேம் அதிகம் பயன்படுத்துபவராக இருந்தால் உங்களுடைய லேப்டாப்பில் கிராபிக் கார்டு இணைந்திருப்பது மிக அவசியமான ஒன்று. அல்லது உங்கள் லேப்டாப்பில் அதிக தெளிவுமிக்க வீடியோ (HD High Definition Video) படங்களை பார்க்கவேண்டும் மற்றும் ஸ்டீரியோ இசையுடன் தெளிவான ஆடியோ பாடல்களை கேட்கவேண்டும் என்ற ஆர்வம் கொண்டவராக நீங்கள் இருந்தால் இந்த கிராபிக் கார்டு இணைந்துள்ள லேப்டாப் நீங்கள் வாங்குவது சிறந்தது.
இந்த கிராபிக் கார்டு இணைந்த லேப்டாப்பை நீங்கள் வாங்கும்பொழுது இன்னொரு முக்கியமான விசயத்தையும் பார்க்கவேண்டியது அவசியம். அதாவது இந்த கிராபிக் கார்டு Dedicated Graphic அல்லது Integrated graphics (shared memory) என இரண்டு வகைகளில் லேப்டாப்பில் பொருத்தப்படுகிறது.
இதில் Dedicated Graphic என நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் எழுதப்பட்டிருந்தால் இதுவே சிறந்தது.
இந்த Dedicated Graphic Card உங்கள் லேப்டாப்பில் இணைக்கப்பட்டிருந்தால் நீங்கள் அதிக கெபாசிடி உள்ள ஒரு வீடியோ கேம் விளையாடும் நேரத்தில் அந்த வீடியோ கேமுக்கு தேவையான மெமரியை இந்த Dedicated Graphic Card கொடுப்பதால் கம்ப்யூட்டர் எந்த விதத்திலும் வேகம் குறைவது இல்லை. கம்ப்யூட்டர் மெமரி அப்படியே இருக்கும். இதனால் வீடியோ கேம் இயங்குவதில் தடை எதுவும் ஏற்படாது.
ஆனால் Integrated graphics (shared memory) என்று குறிப்பிட்டுள்ள லேப்டாப் நீங்கள் வாங்கினால் இந்த வீடியோ மெமரி உங்கள் கம்ப்யூட்டரின் வேகத்தில் அதிக இடத்தை எடுத்துக்கொள்வதால் அதிக கெபாசிடி உள்ள வீடியோ கேம் விளையாடும்பொழுது கம்ப்யூட்டர் மெமரி குறைந்து கம்ப்யூட்டர் எரர் ஆக வாய்ப்பு இருக்கிறது.
அதனால் நீங்கள் 3D வீடியோ கேம் போன்ற அதிக கெபாசிடி உள்ள கிராபிக் பயன்படுத்துபவராக இருந்தால் உங்கள் லேப்டாப்பில் Dedicated Graphic Card இணைந்துள்ளதா என பார்த்துக்கொள்ளுங்கள்.
போட்டோசாப், கோரல்ட்ரா மற்றும் சின்ன சின்ன கிராபில் சாப்ட்வேர்கள் பயன்படுத்துபவராக இருந்தால் Integrated graphics (shared memory) உள்ள லேப்டாப் வாங்கினால் போதும்.
Operating System ( OS)
விலை அதிகம் உள்ள லேப்டாப் வாங்க நினைக்கும் நீங்கள் இந்த ஆபரேடிங் சிஸ்டத்தில் கவனக்குறைவாக இருந்துவிடாதீர்கள். ஏனென்றால் எல்லாம் சரியாக இருந்து ஆபரேடிங் சிஸ்டம் சரி இல்லை என்றால் லேப்டாப் பயன்படுத்துவதே சிரமம் என்று ஆகிவிடும்.
இப்பொழுதெல்லாம் அட்வான்ஸ் லேப்டாப்களில் Widows 7 ஆபரேடிங்க் சிஸ்டம்தான் இன்ஸ்டால் செய்து விற்பனை செய்கிறார்கள். ஆனால் இந்த Winsows 7 ல் பல வித்தியாசம் இருக்கிறது.
Windows 7 Ultimate
Windows 7 Professional
Windows 7 Home Premium
Windows 7 Home Basic
Windows 7 Starter version
Windows 7 Professional
Windows 7 Home Premium
Windows 7 Home Basic
Windows 7 Starter version
இப்படி விண்டோஸ் 7 வெரிசனில் பல வகை உண்டு.
இதில் Windows 7 Ultimate மற்றும் Windows 7 Professional இவை இரண்டும் மிகச்சிறந்தது என்றாலும் இந்த வெரிசன் இணைக்கப்பட்ட லேப்டாப்புகள் மற்றவற்றை விட விலை மிக அதிகமாக இருக்கலாம். இருப்பினும் இதற்கு அடுத்ததாக மிக சிறப்பாக செயல்படக்கூடிய Windows 7 Home Premium வெரிசனையாவது நாம் வாங்குவது மிக சிறந்தது. மேலும் இதில் 64 Bit என்ற வெரிசனை தேர்ந்தெடுங்கள். Windows 7 Home Premium 32 Bit ஐ விட Windows 7 Home Premium 64 Bit கிராபிக் மென்பொருள் பயனடுத்துவதற்கு மிக சிறந்தது.
Widows 7 Home Basic மற்றும் Windows 7 starter Version இவை இரண்டிலும் நீங்கள் எந்த வித நவீன மென்பொருளையும் ( Software) சிறப்புடன் பயன்படுத்த முடியாது.
அடுத்ததாக புதிய வகை லேப்டாப்புகளில் மைக் வெப் கேம் அனைத்தும் இணைந்தேதான் வருகிறது.இருப்பினும் இவை உள்ளனவா என பார்த்துக்கொள்ளுங்கள்.
நீங்கள் உங்கள் லேப்டாப்பை LCD அல்லது LED T.V யில் HDMI வீடியோ கேபிள் மூலம் இணைத்து பயன்படுத்த விரும்பினால் நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் HDMI Port உள்ளதா என பார்த்துக்கொள்ளுங்கள்.Memory Card Slot, Front Mic, Audio, SRS Speaker System இவை இணைந்ததா என பார்த்துக்கொள்ளுங்கள்.
இது தவிர நீங்கள் வாங்கும் லேப்டாபுக்கு இலவசமாக கிடைக்கும் மவுஸ் மற்றும் லேப்டாப் பேக் கிடைக்கிறதா என கேட்டுக்கொள்ளுங்கள்.
லேபிள்கள்:
kollumedutimes
குவைத் TMMK நடத்தும் ரத்த தான முகாம்
தேதி:ஜனவரி 6
இடம்:Jabriya Blood Bank
நேரம்:ஜும்மா தொழுகைக்கு பின்
மேலும் விவரங்களுக்கு....
லேபிள்கள்:
kollumedutimes
மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு
நமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி ஒருங்கிணைந்த மாநில செயற்குழு வரும் 2012 ஜனவரி 27 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 .30 க்கும், 2012 ஜனவரி 28 ஆம் தேதி காலை 10 .30 மணிக்கும் மாநில பொதுக்குழுவும் சென்னை தாம்பரம் அருகில் உள்ள மேடவாக்கத்தில் கூடுகிறது (இன்ஷா அல்லாஹ்). என்று மாநில தலைமையகம் அறிவித்துள்ளது.
லேபிள்கள்:
kollumedutimes
சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு: மத்திய அரசின் ஆலோசனை நீடிக்கிறது
புதுடெல்லி:சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக அமைச்சகங்கள் ஆலோசனை செய்து வருவதாக மத்திய சிறுபான்மையினர் நலத்துறை இணை அமைச்சர் வின்சென்ட் எச். பாலா, மாநிலங்களவையில் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது; ’மத்திய, மதம் மற்றும் மொழி சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையம், இடஒதுக்கீடு தொடர்பாக இரண்டு பரிந்துரைகளை அளித்துள்ளது.
சிறுபான்மையினருக்கு 15 சதவீத இடஒதுக்கீடும், அதில் 10 சதவீதத்தை முஸ்லிம்களுக்கு ஒதுக்கீடு செய்யும் படியும் பரிந்துரை செய்துள்ளது.
அதற்கு மாற்றாக,இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டில், சிறுபான்மையினருக்கு 8.4 சதவீதத்தை தனியாக ஒதுக்கீடு செய்யும் படியும், அதில் 6 சதவீதத்தை முஸ்லிம்களுக்கு வழங்கும் படியும் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்தப் பரிந்துரைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் ஆலோசனை செய்துவருகின்றன. விரைவில் இது தொடர்பாக முடிவு எடுக்கப்படும்’ என்றார்.
லேபிள்கள்:
kollumedutimes
அரபு லீக்கின் சமாதான ஒப்பந்தத்தில் சிரியா கையெழுத்திட்டது
டமாஸ்கஸ்:சிரியாவில் நடக்கும் மோதலை முடிவுக்கு கொண்டுவர அரபு லீக் பரிந்துரைத்த அமைதி ஒப்பந்தத்தை அமுலாக்குவது குறித்து பரிசோதிப்பதற்கான கண்காணிப்பு குழுவிற்கு சிரியா அரசு அனுமதி அளித்துள்ளது.
கெய்ரோவில் அரபு லீக்கின் தலைமையகத்தில் நடந்த கூட்டத்தில் இதுத்தொடர்பான ஒப்பந்தத்தில் சிரியாவின் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் ஃபைஸல் மிக்தாத் கையெழுத்திட்டார்.
கண்காணிப்பாளர்களை அனுமதிப்பதற்கு சிரியா பரிந்துரைத்த திருத்தங்களை அரபு லீக் அங்கீகரித்ததாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சிரியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாலித் அல் முஅல்லிம் டமாஸ்கஸில் தெரிவித்தார்.
அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட சிரியாவுக்கு புதன்கிழமை வரை அரபு லீக் கால அவகாசம் அளித்திருந்தது. முன்னர் அரபு லீக்கில் இருந்து சிரியா இடைநீக்கம் செய்யப்பட்டு பொருளாதார தடை விதிக்கப்பட்டிருந்தது. அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட பல முறை சிரியாவுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த அரபு லீக் இறுதியாக, இனியும் கையெழுத்திட முடியாது என்றால் வலுவான நடவடிக்கை மேற்கொள்ள ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலுக்கு சிபாரிசு செய்யப் போவதாக அறிவித்தது.
பிரச்சனையை சுமூகமாக தீர்ப்பதற்கு நேற்று முன்தினம் அண்டை நாடான ஈராக்கின் வெளியுறவுத்துறை அமைச்சரும், தேசிய பாதுகாப்பு பிரிவு தலைவரும் டமாஸ்கஸிற்கு சென்றனர். ஒப்பந்தத்தில் சிரியா கையெழுத்திட்டதை தொடர்ந்து எட்டு மாதமாக பஸ்ஸாருல் ஆஸாதிற்கு எதிராக நடக்கும் போராட்டம் முடிவுக்கு வருவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.
சிரியாவில் பஸ்ஸாருல் ஆஸாத் அரசின் அடக்குமுறை மற்றும் மோதலில் 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இறந்ததாக ஐ.நா
புள்ளிவிபரம் கூறுகிறது.
புள்ளிவிபரம் கூறுகிறது.
லேபிள்கள்:
kollumedutimes
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)







