AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

வியாழன், 24 நவம்பர், 2011

குஜராத் போலீஸ் 2002-ஆம் ஆண்டு முதல் நடத்திய 20-க்கும் மேற்பட்ட போலி என்கவுண்டர் படுகொலைகள்


புதுடெல்லி:குஜராத் மோடி அரசின் போலீஸ் கடந்த 2002-ஆம் ஆண்டு முதல் 20க்கும் மேற்பட்ட போலி என்கவுண்டர் படுகொலைகளை நிகழ்த்தியுள்ளது. இதில் பெரும்பாலும் முதல்வர் மோடியை கொலைச் செய்யவந்த லஷ்கர்-இ-தய்யிபா போராளிகள் மற்றும் போலீசாரை தாக்கிவிட்டு தப்பிச் சென்றவர்கள் போன்ற பொய்க் கதைகளை கூறி இவ்வளவு படுகொலைகளை நிகழ்த்தியுள்ளனர்.
இந்த கொலைகள் எல்லாம் கடந்த 2002 மற்றும் 2006 ஆம் ஆண்டிற்கு இடையே நடந்தவைகளாகும்.
2002 அக்டோபர் 22-ஆம் தேதி சமீர்கான் பத்தான் என்பவரை கொலைச் செய்து குஜராத்தின் மோடி போலீஸ் போலி என்கவுண்டர் படுகொலைகளை துவக்கி வைத்தது. ஒரு போலீஸ்காரரை கத்தியால் குத்திய வழக்கில் சமீர் பத்தானை கத்தியால் குத்திய சம்பவத்தை நடித்துக் காட்டவேண்டும் என பொய் கூறி சம்பவ இடத்திற்கு அழைத்துச்சென்று சுட்டுக் கொன்றுள்ளனர். அவ்விடத்தில் வைத்து போலீஸ்காரரின் துப்பாக்கியை பறித்து தப்பி ஓட முயன்ற பத்தான் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற பொய்க் கதையை பரப்பினர். இதுத் தொடர்பான வழக்கு நடந்துவருகிறது.
அஹ்மதாபாத் கேலக்ஸி தியேட்டருக்கு அருகே 2003 ஜனவரி 13-ஆம் தேதி ஸாதிக் ஜமால் மெஹ்தர் என்பவரை மோடியின் போலீஸ் போலி என்கவுண்டரில் படுகொலை செய்தது. மோடியை கொலைச் செய்யவந்த லஷ்கர் போராளி என பொய் கூறி இந்த படுகொலை நிகழ்ந்தது. ஆனால் பாவ் நகரில் ஸ்கூட்டர் வியாபாரியாக வாழ்க்கையை ஓட்டியவர்தாம் ஸாதிக் ஜமால் மெஹ்தர்.
2004-ஆம் ஆண்டு இஷ்ரத் ஜஹான், ஜாவேத் ஷேக், ஸீஷான் ஜோஹர், அம்ஜத் அலி ராணா ஆகியோரை மோடியின் போலீஸ் அநியாயமாக சுட்டுக் கொலைச் செய்தது. இவர்களை அஹ்மதாபாத்திற்கு வெளியே உள்ள ஒரு விவசாய பண்ணையில் வைத்து கொலைச் செய்த பிறகு போலீஸ் அஹ்மதாபாத்திற்கு அருகே உள்ள நரோடா பகுதிக்கு இறந்த உடல்களை கொண்டுவந்து அதிகாலை நான்கு மணிக்கு போலி என்கவுண்டர் நாடகத்தை அரங்கேற்றினர். இவர்களும் மோடியை கொலைச் செய்யவந்த லஷ்கர் போராளிகள் என மோடியின் போலீஸ் கூறியது.
அதனைத் தொடர்ந்து 2005-ஆம் ஆண்டு சொஹ்ரபுத்தீன் ஷேக் போலி என்கவுண்டர் படுகொலை நிகழ்ந்தது. நவம்பர் 26-ஆம் தேதி அதிகாலை நரோல் க்ராஸிங்கில் இந்த போலி என்கவுண்டர் படுகொலை நிகழ்த்தப்பட்டது. சொஹ்ரபுத்தீன் ஷேக்கையும், அவரது மனைவி கெளஸர் பீயையும் இஷ்ரத் ஜஹான் உள்பட நான்கு பேரை படுகொலைச் செய்த அதே விவசாய பண்ணை வீட்டில் வைத்து கொலைச் செய்ததாகவும், சொஹ்ரபுத்தீன் மனைவி கெளஸர் பீயை கொலைச் செய்யும் முன்பு மோடியின் போலீஸ் மிருகங்கள் அவரை பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர் என்பதும் பின்னர் நிரூபணமானது. கவுஸர் பீயை கொலைச் செய்து தீயிலிட்டு கொளுத்தியுள்ளனர்.
இந்த போலி என்கவுண்டர் படுகொலைக்கு சாட்சியான போலீஸ் இன்ஃபார்மர் துளசிராம் பிரஜாபதியை கடந்த 2006-ஆம் ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதி படுகொலைச் செய்தனர்.
2006-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7-ஆம் தேதி காந்தி நகர் போலீஸ் சவுராஷ்ட்ராவை சார்ந்த ரஹீம் காஸிம் ஸம்ராவை போலி என்கவுண்டரில் படுகொலைச் செய்தனர்.
2006 மார்ச் 17-ஆம் தேதி வாத்வாவில் வைத்து நான்கு முஸ்லிம் இளைஞர்கள் தீவிரவாதிகள் என குற்றம் சாட்டப்பட்டு மோடியின் போலீசாரால் போலி என்கவுண்டரில் படுகொலைச் செய்யப்பட்டனர். கொலைச் செய்யப்பட்டது யார் என அடையாளம் காணப்படவில்லை.

ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி நீடிப்பு!


மும்பை:எண்ணெய் நிறுவனங்கள், இறக்குமதியாளர்கள், வங்கிகள் ஆகியோரிடம் டாலரின் தேவை அதிகரித்ததை தொடர்ந்து இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி சாதனை படைத்துள்ளது.
ரூபாய் மதிப்பின் வீழ்ச்சிக்கு தடைபோட வெளிநாட்டு நாணய சந்தையில் ரிசர்வ் வங்கி தலையிட்டதை தொடர்ந்து சற்று மதிப்பு மேம்பட்ட போதிலும் அதற்கு முன்பு டாலருக்கு வரலாறு காணாத மிகவும் குறைந்த மதிப்பை ரூபாய் பதிவுச்செய்தது. திங்கள் கிழமை க்ளோஸிங் செய்யும்பொழுது இருந்த மதிப்பை விட 15 பைஸா மேலும் குறைந்து டாலருக்கு 52.29/52.30 ரூபாய் என்ற மதிப்பில் செவ்வாய்க்கிழமை வெளிநாட்டு நாணய பரிவர்த்தனைகள் முடிவடைந்தன.
ஆனால் இதற்கு முன்பு டாலருக்கு 52.73 ரூபாய் மதிப்பில் இந்திய நாணய மதிப்பு வீழ்ச்சியை சந்தித்திருந்தது. பவுண்ட், ஸ்டெர்லிங் உள்ளிட்ட இதர பிரபல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிரான ரூபாயின் மதிப்பும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
அண்மை காலத்தில் உலகில் நான்காவது மிகப்பெரிய நாணய வீழ்ச்சியை சந்தித்த நாணயமாக இந்திய ரூபாய் மாறியுள்ளது.

எகிப்து:அடுத்த ஆண்டு ஜூன் மாதம் அதிபர் தேர்தல் – ராணுவ கவுன்சில் அறிவிப்பு


கெய்ரோ:எகிப்து அதிபருக்கான தேர்தல் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நடத்தப்படும் என ராணுவ கவுன்சில் அறிவித்துள்ளது. இடைக்கால ராணுவ அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள சூழலில் ராணுவ சுப்ரீம் கவுன்சிலின் தலைவர் மார்ஷல் ஹுஸைன் தன்தாவி இதனை அறிவித்துள்ளார்.
ஜூன் 30-ஆம் தேதிக்கு முன்பு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட் அரசிடம் அதிகாரம் ஒப்படைக்கப்படும் என கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த ராணுவ கவுன்சில் உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் தீர்மானிக்கப்பட்டது.

புதன், 23 நவம்பர், 2011

ஓர் வஃபாத் செய்தி

நமதூர் மேலத் தெருவில் இருக்கும் கசாப்பு ஜக்கரியா அவர்களின் மகன் முஹம்மது அலி அவர்கள் இன்று தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை சென்றடைந்தார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக. அனைவரும் அவரது மஃரபித்திற்காக பிரார்த்திப்போமாக...

டிசம்பர் 6, 2011 போராட்டத்தில் சிறப்புரையாற்றுவோர் விபரம்


செவ்வாய், 22 நவம்பர், 2011

ஆயங்குடியில் தமுமுக&மமகவின் மாவட்ட பொதுகுழு









 தமுமுக&மமகவின் கடலூர் மாவட்ட பொதுகுழு ஆயங்குடியில் மிகவும் எழுச்சியுடன் நடைப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ் பொதுக்குழுவை மாவட்ட தலைவர் மெஹ்ராஜ்த்தின் தலைமைத்தாங்க பொதுகுழுவிற்கு சிறப்பு அழைப்பாளராக மமகவின் மாநில பொருளாளர் ஹாருன் ரஷித் வருகை புரிந்தார்.நடைப்பெற்ற ஊராட்சிமன்ற தேர்தல் கலந்தாய்வு நடைப்பெற்றது.பிறகு முஸ்லிம் சமுதாயத்திற்கு கருப்பு தினமான வருகின்ற டிசம்பர் 6 ரில் பாபரி மஸ்ஜித் வழக்கில் உச்ச நீதிமன்றமே விரைந்துதீர்ப்பை வழங்க கோரி மாவட்ட தழுவிய போராட்டம் நடத்தவேண்டும் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொதுகுழுவில் மா.வ .செயலாளர் அமானுல்லாஹ்,பொருளாளர் அய்யூப்,யாசிர் அரபாத் ,சமது ,மற்றும் மாவட்ட அனைத்து கிளைகழக நிர்வாகிகள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

ஞாயிறு, 20 நவம்பர், 2011

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்தவர்கள் வாக்குச்சாவடி களப்பணியாளர் கோரும் விவரங்களை அளிக்க வேண்டும்


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்தவர்கள் வாக்குச்சாவடி களப்பணியாளர்கள் கோரும் விவரங்களை தவறாமல் அளிக்குமாறு கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக கடலூர் மாவட்ட கலெக்டர் அமுதவல்லி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வாக்காளர் பட்டியல்
தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி வருகிற ஜனவரி 1-ந்தேதியை தகுதி நாளாக கொண்டு 2012-ம் ஆண்டுக்கான சுருக்குமுறை திருத்த வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த மாதம் 24-ந்தேதி வெளியிடப்பட்டது.
இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் தொடர்பாக கடந்த மாதம் 24-ந்தேதி முதல் கடந்த 11-ந்தேதி வரை நேரிலும், ஆன்-லைன் மூலமும் பெறப்பட்ட விண்ணப்பங்களின் மீது தற்போது வாக்குசாவடி களப்பணியாளர்கள் மூலம் நேரடி விசாரணை நடைபெற்று வருகிறது.
களப்பணியாளர்கள் விசாரணை
அவ்வாறு பெறப்பட்ட மனுக்கள் மற்றும் ஆன்-லைன் மூலம் பெறப்பட்ட மனுக்களின் மீது களப்பணியாளர்களைக்கொண்டு விடுமுறை நாட்களிலும் விசாரணை மேற்கொள்ள இருப்பதால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல் தொடர்பாக மனு கொடுத்தவர்கள், அவரவர்களின் இருப்பிடத்தில் விடுமுறை நாட்களிலும் இருந்து களப்பணியாளர்கள் கோரும் விவரங்களை அளித்தும், ஆன்-லைனில் விண்ணப்பித்தவர்கள், தங்கள் மனுவில் மீள் கையொப்பம் இட்டும், தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் சேர தகுந்த ஒத்துழைப்பு நல்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். களப்பணியாளர்கள் கோரும் விவரங்களை அளிக்க தவறுபவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

பால் விலை, பஸ் கட்டணம் குறைக்கக் கோரி தமிழகம் முழுவதும் போராட்டம்

சென்னை : பால் விலை, பஸ் கட்டண உயர்வை குறைக்கக் கோரி தமிழகம் முழுவதும் நேற்றும் 2வது நாளாக பல இடங்களில் போராட்டம் நடைபெற்றது. பஸ்களில் கண்டக்டருடன் பயணிகள் தகராறில் ஈடுபட்டனர். கோவையில் பாரதிய ஜனதா கட்சியினர் பிச்சை எடுக்கும் நூதன போராட்டத்தை நடத்தினர். விருதுநகரில் மார்க்சிஸ்ட் தொண்டர்கள் பஸ்சை சிறைபிடித்தனர். இதனால் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் சாதாரண பஸ் கட்டணம், டீலக்ஸ் பஸ்கள், விரைவு பஸ்கள், ஏசி பஸ்களின் கட்டணங்கள் கடுமையாக உயர்த்தப்பட்டன. முன் அறிவிப்பு இல்லாமல் நள்ளிரவில் திடீரென்று பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். நேற்றுமுன்தினம் பல இடங்களில் கட்டண உயர்வை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தினர். மக்கள் கோபம் தணியாத நிலையில் 2&வது நாளாக நேற்றும் போராட்டம் தொடர்ந்தது.

சென்னை தாம்பரத்தில் ஏற்கனவே எடுக்கப்பட்ட பஸ் பாஸ் செல்லாது என்று கூறியதால் நூற்றுக்கும் மேற்பட்ட கூலி தொழிலாளர்கள், டெப்போ முன்பு கூடி ஆர்பாட்டம் செய்தனர். அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் வந்து பொதுமக்களை சமாதானப்படுத்தினர்.

புதுக்கோட்டை அருகே தஞ்சை& புதுகை& பட்டுக்கோட்டை மெயின் ரோட்டில் இச்சடி முக்கத்தில் இச்சடி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் நேற்று காலை 8 மணியளவில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 200 பெண்கள் உள்பட 600 பேர் கலந்துகொண்டனர். Ôமிக், கிரைண்டர், மின்விசிறி வேண்டாம். பஸ் கட்டணம், பால் விலை உயர்வை குறைக்க வேண்டும்Õ என மறியலில் ஈடுபட்டோர் கோஷம் எழுப்பினர்.

கோவை மாநகர பா.ஜ தலைவர் நந்தகுமார் தலைமையில் பீளமேடு பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நேற்று காலை அக்கட்சியினர் பயணிகளிடம் பிச்சையெடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலையில் செல்கிறவர்களிடமும், பஸ் பயணிகளிடமும் பிச்சை எடுத்தனர். இதனால், போராட்டத்தில் ஈடுபட்ட நந்தகுமார் உட்பட 13 பேரை பீளமேடு போலீசார் கைது செய்தனர். ÔÔபிச்சையெடுத்ததில் 21 வசூலானது. அதை நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள தமிழக அரசுக்கு அனுப்பி வைப்போம்ÕÕ என்று நந்தகுமார் கூறினார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் இருந்து சென்னை செல்ல, அல்ட்ரா டீலக்ஸ் பஸ்களில் பழைய கட்டணம் 270ம், ஏசி பஸ்களில் 440ம் வசூலிக்கப்பட்டது. அரசு பஸ் கட்டண உயர்வை அறிவிப்பதற்கு முன், அருப்புக்கோட்டையில் இருந்து சென்னைக்கு செல்வோர், இந்த பஸ்களில் பழைய கட்டணத்தை செலுத்தி முன்பதிவு செய்திருந்தனர். நள்ளிரவில் பஸ் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டதால், அருப்புக்கோட்டையில் இருந்து சென்னை செல்லும் அல்ட்ரா டீலக்ஸ் பஸ்களுக்கு 375ம், ஏசி பஸ்களுக்கு 475ம் நிர்ணயிக்கப்பட்டன. பழைய கட்டணத்தில் முன்பதிவு செய்தவர்களிடம் புதிய கட்டணம் கேட்கப்பட்டது. இதனால், கண்டக்டருக்கும், பொதுமக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. 

விருதுநகரில் அரசு டவுன் பஸ்களில் அரசு நிர்ணயித்ததை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் பஸ்களில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார், 25 பேர் விருதுநகரில் இருந்து சிவகாசி சென்ற அரசு டவுன் பஸ்சில் ஏறி கண்டக்டருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து அனைத்து பயணிகளும் பஸ்சில் இருந்து கீழே இறங்கிவிட்டனர். பஸ் நிறுத்தப்பட்டது. 

கோவையில் நேற்று 2வது நாளாக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். சென்னையில் மாணவர் அமைப்பு சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதற்கிடையில் தமிழகம் வரும் புதுவை பஸ்களிலும் கட்டணத்தை உயர்த்தி உள்ளனர்.
நேற்று காலை சென்னையிலிருந்து புதுவை வந்த பிஆர்டிசி பஸ்சில் டிக்கெட் விலை 55 லிருந்து 97 ஆக வசூலிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த பயணிகள் புதுவையை அடுத்த காலாப் பட்டு அருகே பஸ்சை சிறைபிடித்தனர்.