AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

புதன், 20 பிப்ரவரி, 2013

அரசிதழில் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு: மத்திய அரசின் முடிவு பாராட்டுக்குரியது


மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி வெளியிடும் பத்திரிகை அறிக்கை:
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பினை, உச்ச நீதிமன்ற வழிகாட்டலின்படி அரசிதழில் வெளியிட்ட மத்திய அரசின் முடிவை மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கிறது.
இம்முடிவு தமிழக அரசின் உறுதியான நடவடிக்கைகளுக்கு கிடைத்த  மகத்தான வெற்றியாகும். மத்திய அரசின் நடவடிக்கை காவிரிப் பாசன விவசாயிகளுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக மக்களையும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
கர்நாடக அரசு இம்முடிவை அமல்படுத்த மத்திய அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.
அன்புடன்
(எம். தமிமுன் அன்சாரி)

சவூதி வரலாற்றில் முதல்முறையாக... 'ஷுரா' ஆலோசனை குழு உறுப்பினர்களாக 30 பெண்கள் பதிவேயற்பு


சவூதி அரேபியாவில் மன்னரின் ஆட்சி முறை குறித்து ஆலோசனை வழங்கும் ஷுரா குழுவில் முதல்முறையாக 30 பெண்கள் இடம்பெற்றுள்ளனர். 30 பெண்கள் உள்பட 150 பேர் கொண்ட ஷுரா குழு நேற்று மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜீஸ் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர்.

புதன், 13 பிப்ரவரி, 2013

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் சென்னை மாநகர மகளிரணி மாநாடு

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் சென்னை மாநகர மகளிரணி மாநாட்டில்நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
பாலியல் வன்கொடுமை போன்ற கொடூரமான குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்க சட்டத்தில் இடமளிக்க வேண்டும் என்ற வர்மா குழு பரிந்துரையை உடனடியாக நடைமுறை படுத்த வேண்டும். இந்தத் தண்டனைகளைப் பொதுமக்கள் முன்னிலையில் நிறைவேற்ற வேண்டும். இதுபோன்ற தண்டனைகளைப் பொதுமக்களைச் சாட்சியாக்கி வழங்கினால் அது நிச்சயமாக குற்றத் தடுப்பு நடவடிக்கையாக அமையும்.
Conference of Islami Hind jamaatte makalirani1அச்சு ஊடகங்களிலும் காட்சி ஊடகங்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், திரைப்படங்களிலும் விளம்பரங்களிலும் பெண்களை அரைகுறையாகக் காட்டுவதை கட்டாயம் தடை செய்ய வேண்டும். அதனைக் குற்றமாக அறிவிக்க வேண்டும்.

இன்ஷாஅல்லாஹ்! கடலூர் மாவட்டம் லால்பேட்டை TNTJ நடத்தும் ”மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம்”


திங்கள், 11 பிப்ரவரி, 2013

இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக சதித் திட்டங்கள் தீட்டுவதில் காங்கிரஸ்சும் பாஜகவும் இணைந்து செயல்பட்டு வருகின்றன.

இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக சதித் திட்டங்கள் தீட்டுவதில் காங்கிரஸ்சும் பாஜகவும் இணைந்து செயல்பட்டு வருகின்றன.இது இன்று நேற்றல்ல.. ஜவஹர்லால் நேரு காலம் முதல் சமீபத்தில் தூக்கிலிடப்பட்ட அப்ஸல் குரு வரை இந்த ஜனநாயக தேசத்தில்; 23 சதவீதம் இருக்கும் முஸ்லிம்களை ஒழித்தே தீர வேண்டுமென்று கங்கனம் கட்டிக் கொண்டு ஆட்சி செய்து வருகிறார்கள்.

காஷ்மீரியான குலாம் நபி ஆசாத் மற்றும் உபி யைச் சேர்ந்த சல்மான் குர்ஷித் உள்ளிட்ட சில முஸ்லிம் பெயர் தாங்கிகள் காங்கிரஸ்சின்; இத்தகைய துரோக செயல்களுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
காந்தி,மொரார்ஜி தேசாய்,வி.பி.சிங்,ஜெயப்பிரகாஷ் நாராயணன்,மது தண்டவதே போன்ற வட இந்தியாவைச் சேர்ந்த தேசிய தலைவர்கள் இந்த தேசத்தின் இஸ்லாமியர்களுக்காகவும் அவர்களது நலனுக்காகவும் ஆதரவாக இருந்துள்ளனர்.இவர்களைத் தவிர மற்ற அரசியல்வாதிகள் அணைவருமே முஸ்லிம் சமுதாயத்துக்கு எதிராகத் தான் அரசியல் செய்து வருகின்றனர்.

ஞாயிறு, 10 பிப்ரவரி, 2013

ஹஜ் விண்ணப்ப படிவத்தை இலவசமாக வழங்க கோரிக்கை

சென்னை: இந்திய தேசிய முஸ்லிம் லீக் மாநில தலைவர் ஜவஹர்அலி வெளியிட்ட அறிக்கை:ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் இருந்து ஹஜ் பயணம் செல்ல 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கின்றனர். விண்ணப்ப படிவ கட்டணம் ரூ.300 வசூலிக்கப்படுகிறது. விண்ணப்பித்த அனைவருக்கும் விசா கிடைப்பதில்லை. விசா கிடைக்காதவர்களுக்கு விண்ணப்ப படிவ கட்டண தொகை திரும்ப கொடுப்பதில்லை. எனவே, விண்ணப்ப படிவத்தை அரசு இலவசமாக வழங்க வேண்டும்.மேலும், ஹஜ் பயணத்துக்கு தமிழகத்தில் இருந்து 3,300 பேருக்கு மட்டும் மத்திய அரசு அனுமதி அளிக்கிறது. இந்த ஆண்டு 7,000 பேருக்கு அனுமதி தரவேண்டும். ஹஜ் பயணத்துக்கு சர்வதேச பாஸ்போர்ட் தேவைப்படுகிறது. இதை பெற பிறப்பு சான்றிதழ், பள்ளி சான்றிதழ் கொடுக்க வேண்டியதுள்ளது. ஆனால், தமிழகத்தில் உள்ள வயதான முஸ்லிம்களிடம் இத்தகைய சான்றிதழ்கள் இருக்க வாய்ப்பில்லை. எனவே, அவர்களுக்கு இதிலிருந்து விலக்கு அளித்து பாஸ்போர்ட் வழங்க வேண்டும். இவ்வாறு ஜவஹர் அலி தெரிவித்துள்ளார்.

சனி, 9 பிப்ரவரி, 2013

அப்சல் குருவுக்கு கூட்டு மனசாட்சிப்படி தூக்குத்தண்டனை தமுமுக கண்டனம்

அப்சல் குரு விவகாரத்தில் நேரடியான சாட்சியம் இல்லாத நிலையில் கூட்டு மனசாட்சியின் அடிப்படையில் அப்சல் குருவுக்கு நிறைவேற்றப்பட்டுள்ள தூக்குத்தண்டனை கண்டிக்கத்தக்கது.

இந்திய நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக இந்திய உச்சநீதிமன்றத்தினால் கூட்டு மனசாட்சி என தீர்ப்பின்படி அப்சல் குரு இன்று அதிகாலை தூக்கில் இடப்பட்டுள்ளார். எந்த நேரடி சாட்சியமும் இல்லாத நிலையில் அப்சல் குருவுக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. 2005ஆம் ஆண்டு ஆகஸ்ட் அன்று உச்சநீதிமன்றம் அப்சல் குருவுக்கு எந்த பயங்கரவாத குழு அல்லது அமைப்பை சேர்ந்தவர் அல்ல என்று தெளிவுபடுத்தியுள்ளது.
அப்சல் குருவுக்காக வாதாட நியமிக்கப்பட்ட வக்கீல் மிக முக்கியமான சாட்சியங்களைக்கூட குறுக்கு விசாரணை செய்யவில்லை என்ற தகவல்கள் வெளிவந்தன. நாடாளுமன்றம் தாக்கப்பட்டது கடுமையான கண்டனத்துக்குரியது என்பதிலும் அது எந்த விதத்திலும் பொறுத்துக்கொள்ள முடியாத அக்கிரம செயல் என்பதிலும் எவ்வித சந்தேகமும் இல்லை ஆனால் அந்த கொடிய குற்றம் குறித்த விசாரணைகள் தீர்ப்புகள் வழங்கப்பட்ட வழிமுறையின் மீது பல்வேறு கேள்விகள் எழுகின்றன.

வியாழன், 7 பிப்ரவரி, 2013

லால்பேட்டை சிவன்கோயில் தெரு பாத்திமா பீவி மறைவு


லால்பேட்டை சிவன்கோயில் தெருவில் இருக்கும் சட்டி ஜெக்கரியா அவர்களின் மனைவி பாத்திமா பீவி அவர்கள் இன்று மதியம் 4 மணியளவில் தாருல் பனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள், இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று இரவு 10 மணிக்கு பெரிய பள்ளியில் நடைபெறுகிறது.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் கொள்ளுமேடுடைம்ஸ் இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது.