ஹைதராபாத்:எனது தாய்நாட்டை நேசிப்பது எப்படி என்று காந்தியைக் கொன்றவர்கள், பாபர் மஸ்ஜிதை இடித்தவர்கள், குஜராத்தில் ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம்களைக் கொன்றவர்களிடம் இருந்து பாடம் கற்க வேண்டிய அவசியம் இல்லை ஹைதராபாத் எம்.பி.யும், மஜ்லிஸ் இ இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சி தலைவருமான அஸாதுத்தீன் ஒவைசி கூறியுள்ளார்.
ஆந்திர மாநிலம் ஆதிலாபாத் மாவட்டத்தில் உள்ள நிர்மல் நகரில் கடந்த மாதம் 24ம் தேதி நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மஜ்லிஸ் இ இத்திஹாதுல் முஸ்லிமீன் எம்.எல்.ஏ.அக்பருத்தீன் ஒவைசி மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக குற்றம்சாட்டப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவரது சகோதரர் ஹைதராபாத் எம்.பி.யும், மஜ்லிஸ் இ இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சி தலைவருமான அஸாதுத்தீன் ஒவைசி ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள டண்டூரில் நடந்த கூட்டத்தில் பேசினார்.









