AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

வெள்ளி, 4 ஜனவரி, 2013

விஸ்வரூபம் திரைப்படத்தை எங்களிடம் காட்டிய பிறகே திரையிட வேண்டும் – இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு


முஸ்லிம் தலைவர்களிடம் காட்டிய பிறகே விஸ்வரூபம் திரைப்படத்தை திரையிட வேண்டும் !தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு கோரிக்கைகேளிக்கை , பொழுதுபோக்கு , சுயசம்பாத்தியம் ஆகியவற்றை மைய்யமாகக் கொண்டு எடுக்கப்படும் திரைப்படங்களில் கோடிக்கணக்கான மக்கள் தங்களின் கொள்கை நெறியாக ஏற்றுச் செயல்படும் இஸ்லாத்தையும் , அதை வாழ்வியல் நெறியாகக் கொண்ட முஸ்லிம்களையும் தவறாகச் சித்தரிப்பது தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது .
அந்த வகையில் அண்மையில் வெளியான ” துப்பாக்கித் ” திரைப்படம் தமிழக முஸ்லிம்களின் உணர்வுகளைக் காயப்படுத்தி கொந்தளிப்பான சூழலை உருவாக்கியது . முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் விதமாகத் துப்பாக்கி படக்குழுவினர் மன்னிப்புக் கோரியதுடன் , ஆட்சேபனைக்குரிய காட்சிகளையும் நீக்கினர் .” துப்பாக்கி ” ஏற்படுத்திய காயத்தின் வலி தீரும் முன்னே மீண்டும் கமல்ஹாசன் “விஸ்வரூபம் ” எடுத்திருக்கிறார் . மென்மையான மத உணர்வுகளைக் காயப்படுத்தும் விதமாக இத்திரைப்படம் வெளிவரும் பட்சத்தில் அது அமைதிப் பூங்காவான தமிழகத்தின் நல்லிணக்கச் சூழலைச் சிதைத்து விடுமோ என நாங்கள் அஞ்சுகிறோம் .
மேலும் கமல்ஹாசனின் “விஸ்வரூபம் ” திரைப்பட முன்னோட்டக் காட்சிகள் அடிமட்டத்திலிருக்கும் முஸ்லிம் சகோதரனுக்கும் கூட பெரும் ஐயத்தை ஏற்படுத்துகிறது . இந்த அச்சத்தையும் ஐயத்தையும் போக்க ஒட்டு மொத்த தமிழக முஸ்லிம்களின் பிரதிநிதிகளான 24 முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்புகளின் தலைவர்களுக்குத் திரையிட்டுக் காட்டுவதற்கு கமல்ஹாசன் கடமைப்பட்டிருக்கிறார் .

காவிரி பாசனப் பகுதிகள் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட 32 கிராமங்களை மீண்டும் பட்டியலில் சேர்க்க மமக கோரிக்கை


மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி வெளியிடும் பத்திரிகை அறிக்கை:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில், கீரப்பாளையம் ஆகிய வட்டங்களைச் சேர்ந்த 32 கிராமங்கள் காவிரிப் பாசனப் பகுதிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
இதுதொடர்பாக, விவசாயிகளிடம் கருத்து எதுவும் கேட்கப்படாத நிலையில் யாருடைய பரிந்துரையின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டது எனத் தெரியவில்லை. தமிழக அரசின் இந்த நடவடிக்கையால், காவிரி பாசனப் பகுதிகள் என்ற அடிப்படையில் இப்பகுதி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த 12 மணி நேர மும்முனை மின்சாரம் நிறுத்தப்பட்டு, தினந்தோறும் 3 மணி நேரம் மட்டுமே வழங்கப்படுகிறது.

வியாழன், 3 ஜனவரி, 2013

முஸ்லிம்களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மார்ச்சில் பேரணி


முஸ்லிம்களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி வரும் மார்ச் மாத இறுதியில் மாநில தலைநகரங்களில் பேரணி நடத்தப்படும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவரும், மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சருமான இ. அகமது தெரிவித்தார்.
சென்னையில் செவ்வாய்க்கிழமை அபு பேலஸ் நட்சத்திர ஹோட்டலில்  நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய நிர்வாகிகள் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியது:-
இந்தியாவில் 18 சதவிகித சிறுபான்மையினர் உள்ளனர். இதில் 13.5 சதவிகிதம் பேர் முஸ்லிம்கள். ஆனால், ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். உள்பட மத்திய, மாநில அரசுப் பணிகளில் முஸ்லிம்கள் 3 சதவிகிதத்துக்கும் குறைவாகவே உள்ளனர்.
எனவே, சச்சார் கமிட்டி, ரங்கநாத் மிஸ்ரா கமிட்டி ஆகியவற்றின் பரிந்துரைகளின் அடிப்படையில் முஸ்லிம்களுக்கு கல்வி, அரசு வேலைவாய்ப்புகளில் 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதன், 2 ஜனவரி, 2013

பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை அளிப்பது குறித்து சட்டத் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு கேட்டுக் கொள்ளப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையிலும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை ஒழித்திடும் வகையில் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், தமிழகத்தில் 1992-ம் ஆண்டு தொடங்கப்பட்டன.

பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஒடுக்கும் வகையில், ""தமிழ்நாடு பெண்கள் இன்னல் தடுப்புச் சட்டத்தின்'' கீழ் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனைகள்

2002-ம் ஆண்டு கடுமையாக்கப்பட்டது. இதன்படி, துன்புறுத்தலால் ஏற்படும் மரணம் மற்றும் தற்கொலை ஆகியவற்றில் குற்றம் அற்றவர் என்று நிரூபிக்கும் பொறுப்பு குற்றவாளிகளைச் சார்ந்ததாக மாற்றி அமைக்கப்பட்டது.

இவை காரணமாக மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது, பெண்களுக்கு எதிரான

குற்றங்கள் தமிழகத்தில் குறைவாகவே இருந்தாலும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறிப்பாக பாலியல் பலாத்காரம் இல்லாத மாநிலமாக தமிழகம் திகழ வேண்டும் என அரசு விரும்புகிறது. 

இந்த நிலையில், பாலியல் குற்றங்களைத் தடுக்கும் வகையில், முதல்வர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட 13 உத்தரவுகள்:

முறைகேடான பாலியல் உறவு முஸ்லிம், ஹிந்து சமூகத்தில் மிகவும் குறைவு! – ஆய்வில் தகவல்!


நியூயார்க்:குடும்ப கட்டமைப்பை சீர்குலைப்பதில் முக்கிய பங்கினை வகிக்கும் திருமண உறவு வெளியேயான  முறைகேடான பாலியல் உறவுகள் முஸ்லிம், ஹிந்து சமூகத்தில் மிகவும் குறைவு என்று அமெரிக்கன் சோசியலாஜிக்கல் ரிவியூ நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
31 வளர்ச்சியடைந்த நாடுகளில் 15-59 வயது வரையிலான ஆறுலட்சத்திற்கும் மேற்பட்ட நபர்கள் பங்கேற்ற ஆய்வில் பொதுவாகவே பாலியல் ஒழுக்கங்களை பேணுவதில் முஸ்லிம் நாடுகள் முன்னணியில் இருப்பதாக தெரியவந்துள்ளது. அனைத்து மதங்களும் திருமண உறவிற்கு வெளியே உள்ள முறைகேடான பாலியல் உறவுகளை ஊக்கப்படுத்துவதில்லை. ஆனால், அனைத்து மத நம்பிக்கையாளர்களும் ஒன்றுபோல் இல்லை என்று இந்த ஆய்விற்கு தலைமை தாங்கிய ஆமி ஆடம்ஸிக் சுட்டிக்காட்டுகிறார்.

லால்பேட்டையில் மமக மது ஒழிப்பு பரப்புரை நடத்தியது.


லால்பேட்டையில்  30/12/12 மாலை மமக மது ஒழிப்பு பரப்புரை  நடத்தியது.
மதுவால் ஏற்படும் தீமைகள் பற்றிய துண்டு பிரசுர வினியோகம் செய்யப்பட்டது இதில் தமுமுக,மமக தொண்டர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Thanks lalpet.net

செவ்வாய், 1 ஜனவரி, 2013

கடலூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் இன்று முதல் அமுலுக்கு வருகிறது


கடலூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். இந்த உத்தரவு  (செவ்வாய்க்கிழமை) முதல் அமுல்படுத்தப்படுவதாக மாவட்ட கலெக்டர் கிர்லோஷ்குமார் அறிவித்துள்ளார்.
கலெக்டர் அறிவிப்பு
கடலூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தடை செய்ய வேண்டும். மீறி பயன்படுத்தினால் ஜனவரி மாதம் முதல் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று அப்போதைய மாவட்ட கலெக்டர் ராஜேந்திரரத்னூ அறிவித்து இருந்தார். இதற்கிடையில் அவர் திடீரென வணிகத்துறை இணை கமிஷனராக மாற்றப்பட்டார்.
இதையடுத்து புதிய கலெக்டராக கிர்லோஷ்குமார் பதவி ஏற்றார். இதையடுத்து அந்த திட்டம் மீண்டும் அமுல்படுத்தப்படுமா? என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்தது. இந்நிலையில் அந்த திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என்று மாவட்ட கலெக்டர் கிர்லோஷ்குமார் அறிவித்து உள்ளார்.
இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் கிர்லோஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

பிளஸ்–2 தேர்வு மார்ச் 1–ந்தேதி தொடங்குகிறது எஸ்.எஸ்.எல்.சி. மார்ச் 27–ல் ஆரம்பம்


பிளஸ்–2 பொதுத்தேர்வு மார்ச் 1–ந் தேதி தொடங்கி 27–ந்தேதி முடிவடைகிறது. இதே போல், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மார்ச் 27–ந் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 12–ந்தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது.இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;–
மார்ச் 1–ந் தேதி பிளஸ்–2 தேர்வு
பிளஸ்–2 தேர்வை மார்ச் மாதம் 1–ந்தேதி தொடங்கி நடத்தவும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை மார்ச் 27–ந் தேதி தொடங்கி நடத்திடவும் தமிழக அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. பிளஸ்–2 தேர்வு தினமும் காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை நடக்கும்.காலை 10 மணிக்கு வினாத்தாள் விநியோகிக்கப்படும். மாணவர்கள் கேள்வித்தாளை படித்து பார்ப்பதற்கு 10 நிமிடம் கொடுக்கப்படும். விடைத்தாளில் உள்ள விவரங்களை பூர்த்தி செய்வதற்கு 5 நிமிடம் வழங்கப்படும். தட்டச்சு தேர்வு மட்டும் காலை 10 மணி முதல் மதியம் 12.20 மணி வரை நடைபெறும். தேர்வு தொடங்கி 15 நிமிடம் கழித்து தாமதமாக வரும் தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வு அட்டவணை கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.
தேர்வு காலஅட்டவணை
மார்ச் 1–ந் தேதி – மொழித்தாள்–1
மார்ச் 2, 3–ந் தேதிகள் – விடுமுறை
மார்ச் 4–ந் தேதி – மொழித்தாள்–2
மார்ச் 5–ந் தேதி – தேர்வு இல்லை
மார்ச் 6–ந் தேதி – ஆங்கிலம் முதல் தாள்
மார்ச் 7–ந் தேதி – ஆங்கிலம் 2–ம் தாள்
மார்ச் 8–ந் தேதி – தேர்வு இல்லை
மார்ச் 9, 10–ந் தேதிகள் – விடுமுறை
இயற்பியல்–பொருளாதாரம்
மார்ச் 11–ந் தேதி – இயற்பியல், பொருளாதாரம்
மார்ச் 12, 13–ந் தேதிகள் – தேர்வு இல்லை
மார்ச் 14–ந் தேதி – கணிதம், விலங்கியல், மைக்ரோபயாலஜி, நியூட்ரிஷியன் மற்றும் டயட்டிக்ஸ்
மார்ச் 15–ந் தேதி – வணிகவியல், மனையியல், புவியியல்
மார்ச் 16, 17–ந் தேதிகள் – விடுமுறை
மார்ச் 18–ந் தேதி – வேதியியல், கணக்குப்பதிவியல்
மார்ச் 19, 20–ந் தேதிகள் – தேர்வு இல்லை
உயிரியல்–வரலாறு
மார்ச் 21–ந் தேதி – உயிரியல், வரலாறு, தாவரவியல், பிசினஸ் மேத்ஸ்
மார்ச் 22–ந் தேதி – தேர்வு இல்லை
மார்ச் 23, 24–ந் தேதிகள் – விடுமுறை
தட்டச்சு பாடம்
மார்ச் 25–ந் தேதி – கம்யூனிக்கேட்டிவ் இங்கிலீஷ், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், உயிரி–வேதியியல், அட்வான்ஸ் தமிழ், தட்டச்சு தமிழ் மற்றும் ஆங்கிலம்
மார்ச் 26–ந் தேதி – தேர்வு இல்லை
மார்ச் 27–ந் தேதி – அரசியல் அறிவியல், நர்சிங் (பொதுப்பிரிவு), புள்ளியியல், தொழிற்கல்வி பாடங்கள்
மார்ச் 27–ல் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மார்ச் மாதம் 27–ந் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 12–ந்தேதி முடிவடைகிறது. தேர்வு தினமும் காலை 10 மணி முதல் மதியம் 12.45 மணி வரை நடைபெறும். காலை 10 மணிக்கு வினாத்தாள் கொடுக்கப்படும். வினாத்தாளை படிக்க 10 நிமிடம் வழங்கப்படும். அதன்பிறகு விடைத்தாளில் விவரங்களை பூர்த்தி செய்ய 5 நிமிடம் கொடுக்கப்படும்.