கி.பி.1526 - முதல் பாணிபட் போர் டெல்லிக்கு அருகே (இன்றைய ஹரியானா மாநிலத்தில்) பாபருக்கும் அப்போது டெல்லியை ஆண்ட இப்ராஹிம் லோடிக்கும் இடையே நடந்தது. லோடி கொல்லப்பட்டு பாபர் வெற்றி பெறுகிறார். இந்தியாவின் வரலாறு மாறுகிறது. பாபர் முகலாயப் பேரரசின் தலைவராக அறியணை ஏறுகிறார்.
கி.பி.1528 - பாபரின் தளபதி மீர்பாகி அயோத்திக்கு வருகிறார். அங்கு முழுமை அடையாமல் கிடந்த பள்ளிவாசலை கட்டி முடித்து அதற்கு பாபரின் பெயரை சூட்டுகிறார். 1524ல் இப்ராஹிம் லோடி டெல்லியை ஆண்டபொழுது இப்பள்ளிவாசலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டிருந்தது.
கி.பி.1853 - முதல் முறையாக பாபர் மஸ்ஜித் நிலம் தொடர்பான சர்ச்சை ஆங்கிலேயர்களால் தூண்டிவிடப்படுகிறது
கி.பி.1855 - பாபர் பள்ளிவாசலின் ஒரு பகுதி நிலம், ராம பக்தர்கள் என கூறிக்கொண்ட ஒரு கூட்டத்தாரால் ஆக்கிரமிக்கப்படுகிறது.






