புதன், 21 நவம்பர், 2012
கருணை மனு நிராகரிப்பு – கசாப்பிற்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றம்!
பஹ்ரைன் பாராளுமன்றத்தில் இஸ்ரேல் கொடி எரிப்பு!
மனாமா:பஹ்ரைன் பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கு இடையே இஸ்ரேலின் கொடி தீக்கிரையாக்கப்பட்டது.
பாராளுமன்ற கூட்டம் நடக்கும் பொழுது உஸாமா முஹன்னா என்பவர் இஸ்ரேல் கொடியை தீவைத்துக் கொளுத்தினார். இதனைத் தொடர்ந்து பாராளுமன்ற ஹாலில் புகை நிறைந்து, நடவடிக்கைகளை சபாநாயகர் நிறுத்திவைத்தார். அனைவரது கவனத்தையும் ஈர்க்கவே கொடியை எரித்ததாக உஸாமா தெரிவித்தார்.
திங்கள், 19 நவம்பர், 2012
திருத்தப்பட்ட துப்பாக்கி திரைபடம். மமக பொதுச்செயலாளர் நேரில் உறுதி செய்தார் தாணு.
- திருத்தப்பட்ட துப்பாக்கி திரைபடம். பொதுச்செயலாளரிடம் நேரில் உறுதி செய்தார் தாணு.
துப்பாக்கி படத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான சர்ச்சைக்குரிய சில காட்சிகளை நீக்க …
வேண்டும் என்று தமுமுக உள்ளிட்ட சமுதாய அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.
ஞாயிறு, 18 நவம்பர், 2012
இதுவரை 19 லட்சம் பேர் விண்ணப்பம் வாக்காளர் பட்டியலில் 20க்குள் பெயர் சேர்க்கலாம்
சென்னை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, வரும் 20ம் தேதி கடைசி நாள் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறினார். வரும் 2013ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதியை அடிப்படையாக கொண்டு, வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த அக்டோபர் 1ம் தேதி வெளியிடப்பட்டு அந்தந்த மாநகராட்சி மண்டல அலுவலகம், அங்கீகரிக்கப்பட்ட வாக்கு சாவடி மையம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், நகராட்சி ஆணையர் அலுவலகம் மற்றும் தாசில்தார் அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், இடமாற்றம் செய்வதற்கான படிவங்கள் அங்கேயே வழங்கப்பட்டன. இதனால், பெரும்பாலானவர்கள் அங்கேயே படிவங்களை பூர்த்தி செய்து வழங்கி வருகின்றனர்.
புதன், 14 நவம்பர், 2012
நமதூர் ஓர் வபாத் செய்தி
கொள்ளுமேடு நமதூர் மேலத்தெருவிலிருக்கும் அஷ்ரப் அலி ,மற்றும் ஹலிபுல்லாஹ் இவர்களின் தாயாரும் எங்கள் ஊரின்பெண்கள் மதரஸாவின் நீண்ட காலம் தலைமை ஆசிரியர்மான ஹஸீனா பூ அவர்கள் இன்று அதிகாலை தாருல் பனாவை விட்டும்தாருல் பகாவை அடைந்து விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன் ....
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருள வேண்டும் என. கொள்ளுமேடுடைம்ஸ் இணையதளம் பிரார்த்தனை செய்கிறது.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன் ....
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருள வேண்டும் என. கொள்ளுமேடுடைம்ஸ் இணையதளம் பிரார்த்தனை செய்கிறது.
சனி, 10 நவம்பர், 2012
சிம் கார்டு வாங்க போலியான ஆவணம் தருவார்கள் மீது போலீஸ் நடவடிக்கை...
புதுடெல்லி: செல்போன், சிம் கார்டு வாங்க போலியான ஆவணம் தருவார்கள் மீது கடும் நடடிவக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. செல்போன் மற்றும் சிம் கார்டு வாங்க மத்ததிய அரசு புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. போலியான ஆவணங்களை கொடுத்து. சேல்போன் சேவை நிறுவனங்களிலிருந்து, சிம் கார்டு பெவதை கட்டுபடுத்தும் வகையில், புதிய வழிமுறைகளை வகுத்து வெளியிட்டுள்ளது. இதன்படி, ப்ரீபெய்டு, போஸ்ட் பெய்டு செல்போன் இணைப்பு பெற தவறான தகவல்களை அளிக்கும் வாடிக்கையாளர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டெங்கு கொசுவை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை
கடலூர்:டெங்கு கொசுவை முழுமையாக ஒழிக்க கடலூர் மாவட்ட கலெக்டர் தொலைபேசி மூலம் நூதன பிரசாரம் செய்து வருகிறார். இந்த பிரசாரம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நூதன பிரசாரம் கடலூர் மாவட்டத்தில் டெங்கு கொசுவை முற்றிலும் ஒழித்து முன்மாதிரி மாவட்டமாக மாற்ற கலெக்டர் ராஜேந்திரரத்னூ பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
அதன் முன்னோடி திட்டமாக ஒரே நாளில், ஒரே நேரத்தில் கொசு ஒழிப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள தொலைபேசிகளில் ரிசீவரை எடுத்தவுடன் மாவட்ட கலெக்டர் ராஜேந்திரரத்னூ டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு குறித்த பேச்சு ஒலிப்பரப்பாகி வருகிறது. அது பற்றி விவரம் வருமாறு:– டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு வணக்கம், நான் கடலூர் மாவட்ட கலெக்டர் ராஜேந்திரரத்னூ பேசுகிறேன்.
அதன் முன்னோடி திட்டமாக ஒரே நாளில், ஒரே நேரத்தில் கொசு ஒழிப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள தொலைபேசிகளில் ரிசீவரை எடுத்தவுடன் மாவட்ட கலெக்டர் ராஜேந்திரரத்னூ டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு குறித்த பேச்சு ஒலிப்பரப்பாகி வருகிறது. அது பற்றி விவரம் வருமாறு:– டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு வணக்கம், நான் கடலூர் மாவட்ட கலெக்டர் ராஜேந்திரரத்னூ பேசுகிறேன்.
விஸ்வரூபம் திரைப்படம்: முதலில் எங்களுக்கு காண்பிக்கப்படவேண்டும்-தமுமுக கோரிக்கை
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜே.எஸ். ரிபாயி வெளியிடும் அறிக்கை:
பிரபல திரைப்பட நடிகர் கமல்ஹாசன் விஸ்வரூபம் என்ற படத்தை நடித்து இயக்கியிருக்கிறார். அதில் ஆப்கானிஸ்தான் போரை முன்னிலைப்படுத்தி கதை இருப்பதாகவும் அதில் முஸ்லிம்களை வன்முறையாளர்களாக சித்தரிக்கும் காட்சிகள் இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.
கடந்த பல வருடங்களாக தமிழகத்தில் சிலர் தங்களின் பிழைப்புக்காகவும், வளர்ச்சிக்காகவும் முஸ்லிம்களை மட்டுமே குற்றவாளிகளாக சித்தரித்து படம் எடுத்து வருகிறார்கள். ஈராக்கில் 6 லட்சம் மக்களை கொன்ற அமெரிக்க பயங்கரவாதம் பற்றியோ, 60 ஆண்டுகளுக்கு மேலாக பாலஸ்தீனர்கள் மீது இன அழிப்பை நடத்தி வரும் இஸ்ரேலின் பயங்கரவாதம் பற்றியோ யாருக்கும் படம் எடுக்க மனமில்லை, துணிவில்லை. இந்தியாவில் குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் அவலங்களை தோலுரிக்க தைரியமில்லை. எதிர்விளைவுகளையும், உலக அளவில் வஞ்சிக்கப்படும் சமூகத்தையும் மட்டுமே குறிவைத்து திரைப்படம் எடுப்பது இப்போது வழக்கமாகி வருகிறது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)






