AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

சனி, 6 அக்டோபர், 2012

த.மு.மு.க போராட்டத்தின் எதிரொலி : முஸ்லிம் மதகுருவை சந்தித்த அமெரிக்க அதிகாரி


முஸ்லிம்களைப் புண்படுத்தும் வகையில் நபிகள் நாயகம் பற்றி அவதூறாக எடுக்கப்பட்ட படத்திற்கு எதிர்வினையாக உலகெங்கும் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னையிலும் ஐந்து நாட்களுக்கு பல்வேறு முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  இந்நிலையில், சென்னை மசூதி ஒன்றின் தலைமை மதகுருவான ஷம்சுத்தீன் காசிமி என்பவரை சென்னை அமெரிக்க தூதரக அதிகாரிகள் டேவிட் .கே .கேய்னர் (பொது விவகாரத்துறை அதிகாரி), மத்தேயு .கே பேஹ்(அரசியல் ரூபொருளாதார அதிகாரி ) , பின்னி ஜேகப் (மக்கள் தொடர்பு அதிகாரி). ஆகியோர் சந்தித்து விளக்கம் அளித்தனர்.
படம் குறித்து அமெரிக்க அரசு தரப்பில் வருத்தத்தையும், படக்குழுவினருக்குக் கண்டனத்தையும் தெரிவித்த அமெரிக்க அதிகாரிகளிடம், அமெரிக்கா உடனடியாக நடவடிக்கை எடுக்காதது பற்றி கண்டனம் தெரிவித்துள்ளார் காசிமி.

அமெரிக்க அரசின் சட்டத்தில் கருத்துச் சுதந்திரம் அபரிமிதமாக உள்ளது என்றும்,  கடந்த 50 ஆண்டுகளாக சட்டத்திருத்தம் செய்யப்படவில்லை என்றும் அதிகாரிகள் கூறிய போது,  இனியேனும் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் பிறர் மனதைக் காயப்படுத்துவது  கருத்துச் சுதந்திரத்தின் கீழ் வராது என்றும் மெளலவி தெரிவித்தார்.  உணர்வுகளைப் புரிந்துகொள்வதாகவும், அமெரிக்க அரசிடம் இது பற்றி தெரிவிப்போம் என்றும்  அதிகாரிகள் கூறியுள்ளனர்.
நன்றி : இந்நேரம்

வெள்ளியங்கால் ஓடையில் பலப்படுத்தும் பணி தீவிரம்

காட்டுமன்னார்கோவில், : காட்டுமன்னார்கோவில் வீராணம் ஏரியிலிருந்து மழைக் காலங்களில்  வெள்ளியங்கால் ஓடை வழியாக உபரிநீர் வெளியேற்றப்படும்.  கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனிநபர் ஒருவர்  வெள்ளியங்கால் ஓடை வழியே எள்ளேரி கிழக்கு அமைந்துள்ள இடத்தில் மண் எடுத்தார். இதில் பொதுப்பணித்துறை மண் எடுக்க கூடாது என்று தடுத்து நிறுத்தியது. 
கனரக இயந்திரத்தின் மூலம் வெள்ளியங்கால் ஓடையில் குவிக்கப்பட்ட மண் அங்கேயே கிடந்தது.  இந்நிலையில் நேற்று இந்த பகுதி ஊராட்சி தலைவர் வெள்ளியங்கால் ஓடையின் கரையை பலப்படுத்துவதற்காக குவிக்கப்பட்ட மண்ணை அப்புறப்படுத்தினார். இதுபற்றி பொதுப் பணி துறை உதவி பொறியாளரிடம் கேட்டபோது வெள்ளியங்கால் ஓடையில் மண் அள்ளுவது குற்ற மாகும். தற்போது மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில் ஓடையில் அதிக அளவு தண்ணீர் செல்லும் போது குவிக்கப்பட்ட மண்ணால் கரை உடையும் அபாயம் ஏற் படும். இதை கருத்தில் கொண்டே தனிநபர் மூலம் மண்ணை கொண்டு கரைகளை பலப்படுத்தி வருவதாக தெரிவித்தார். 

திட்டங்கள் செயல்படுத்த 7 ஆண்டுகளாகும் மின் பற்றாக்குறை தொடரும் பொறுத்துக் கொள்ளுங்கள்

தமிழகத்தில் மின்சார பற்றாக்குறைக்கு மின்சார வாரியம் புதிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. மின் திட்டங்களை செயல்படுத்த 7 ஆண்டுகள் வரை ஆகும் என்பதால் இன்னும் பல ஆண்டுகளுக்கு மின் தட்டுப்பாடு நிலை தொடரும் என்று தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சில ஆண்டுகளாக மின்வெட்டு இருந்து வருகிறது. சமீப காலமாக இது அதிகரித்து தினசரி 14 மணி நேரம் முதல் 16 மணி நேரம் வரை மின்சாரம் தடைபடுகிறது. தினசரி மின்சாரம் இருக்கின்ற நேரத்தைவிட மின்சாரம் இல்லாத நேரமே அதிகம் இருப்பதால் பொதுமக்கள், வியாபாரிகள், வணிகர்கள் பல வகையிலும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் விலைவாசியும் மறைமுகமாக உயர்ந்து வருகிறது. மின் உற்பத்தி குறைவு, மத்திய தொகுப்பில் இருந்து மின்சாரத்தை கொண்டு வருவதில் சிக்கல்கள் என்று பல்வேறு காரணங்களை மின்வாரியம் கூறுகிறது.இந்நிலையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் சார்பில் மின் தட்டுப்பாட்டுக்கு காரணம் என்ன என்பதை பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் மின் உற்பத்தியில் சந்திக்கும் சவால்கள் என்ற பெயரில் துண்டு பிரசுரங்கள், போஸ்டர்களை வெளியிட்டுள்ளது.
அதில் நிலம் கையகப்படுத்துவதில் பொதுமக்களின் எதிர்ப்பால் ஏற்படும் சிரமங்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் எதிர்ப் பால் தடைபட்டு வரும் மின் திட்டங்கள் உட்பட மின் உற்பத்திக்கு தடையாக இருப்பதாக பல்வேறு காரணங்களை பட்டியல் இட்டுள்ளனர். 
அதன் விவரம்:
*நீர், எரிபொருள், போக்குவரத்து மற்றும் சாலை, ரயில் வரூ.த்தட இணைப்பு போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை ஒருங்கிணைப்பதில் ஏற்படும் சிரமங்கள்.
*மின் உற்பத்தி திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் எதிர்ப்பு. 
*ஒடிசா மாநிலத்தில் மேற்கு வங்காளத்தில் இருந்து நிலக்கரியை எடுத்து வருவதில் ஏற்படும் சவால்கள். 
*மின்சார மற்றும் இயந்திர உபகரணங்களை உரிய நேரத்தில் கொண்டு வந்து சேர்ப்பதில் ஏற்படும் தாமதம். 
*கட்டுமான பணிகளில் ஏற்படும் தாமதம். மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரத்தை கொண்டு வருவதிலும், விநியோகி ப்பதிலும் ஏற்படும் சிக்கல்கள்.
*மொத்தத்தில் திட்டங்களை செயல்படுத்த வசதி செய்வதற்கு 2 ஆண்டுகளும், திட்டங்களை உருவாக்க 5 ஆண்டுகளும் என்று மொத்தம் 7 ஆண்டுகள் தேவைப்படுகிறது . 
*பொதுமக்கள் புரிந்துகொண்டு ஒத்துழைக்க வேண்டும் . 
*மலிவான விலையில் தரமான, தடையில்லா மின்சாரம் வழங்குவதே எங்கள் லட்சியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் வாரியம் திடீரென இப்படியொரு விளக்கத்தை அளித்துள்ளது பொது மக்களை கவலை அடைய செய்துள்ளது.

வெள்ளி, 5 அக்டோபர், 2012

மனித உடலைப் பற்றி அறிவோம்!

மனித உடலில் பல்வேறு ஆச்சரியப்படத்தக்க செய்திகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை காணலாம்.

1. மனித உடலில் காணப்படும் தசைகளின் எண்ணிக்கை 639.
...
2. மனித மூளையின் மொத்தம் 1200 கோடி நரம்பு செல்கள் உள்ளன.
3. மனிதன் இறந்த மூன்று நிமிடம் கழித்து மூளையின் இரத்த ஓட்டம் நின்று விடுகின்றது.
4.மூளையில் உள்ள நியுரான்க்ளின் எண்ணிக்கை 1400.
5. மனிதனின் முதுகுத்தண்டின் எலும்புகள் 33.
6.மனித மூளையின் எடை 1.4 கிலோ.
7. உடலின் சாதாரண வெப்ப நிலை 98.4 டிகிரி செல்சியஸ்.
8.மனித உடலில் உள்ள ரத்தத்தின் சராசரி அளவு 5 லீட்டர்.
9. உடலின் மெல்லிய சருமம் கண் இமை.

மனித உடலில் இள்ள குரோம்சோம்களின் எண்ணிக்கை 23 ஜோடி.
ஒரு மனித உடலில் கிடைக்கும் கொழுப்பில் இருந்து 10 சோப்புக்கட்டிகள் தயாரிக்கலாம்.

மனிதனின் கண் நிமிடத்திற்கு25 முறை மூடித்திறக்கிறது.
நாம் ஒருவார்த்தை பேசும் போது நம் முகத்தில் 72 தசைகள் அசைகின்றன.

மனித நாக்கின் நீளம் 10 செ. மீ.

ஒருமனிதன் தன் வாழ்நாளில் சராசரியாக குடிக்கும் தண்ணீரின் அளவு 60,000 லீட்டர்.

மனித உடலில் கெட்டியான பகுதி பற்களிலுள்ள இனாமல்.

நமது கால் பாதங்களில் 2,50,000 வியர்வை சுரப்பிகள் உள்ளன.

நாம் வாழ்நாளில் சராசரியாக சாப்பிடும் உணவின் மொத்த அளவு 30,000 கிலோ.

நம் உடல் எடையில் 9 சதவிகிதம் இரத்தத்தினால் ஆனது. இந்த ரத்தத்தில் 91 சதவிகிதம் நீர்தான்.

நம் உடல் முழுவதும் ரத்தம் ஒரு முறை சுற்ற 64 வினாடிகள் ஆகின்றன.
நாம் குள்ளமாக இருப்பதற்கு காரணம் பிட்யூட்டரி சுரப்பி குறைவாக இருப்பது.

நம் தசைகள் உண்டாக்கும் வெப்பம் ஒரு லிட்டர் நீரை ஒரு மணி நேரம் கொதிக்க வைக்கப் போதுமானது.

நாம் வெளியேற்றும் சிறுநீரில் நீரின் அளவு 96 சதவிகிதமும், யூரியா 2 சதவிகிதமும், கழிவுப் பொருட்கள் 2 சதவிகிதமும் உள்ளன.

நாம் பிறக்கும்போது சுமார் 300 எலும்புகளுடன் பிறந்து முழுவளார்ச்சியடைந்த பின் 206 எலும்புகளே இருக்கும். நாளடைவில் ஒன்றோடொன்று இணைவதால் சுமார் 94 எலும்புகள் குறைகின்றன.

நமக்கு நாள்தோறும் 16 கிலோ காற்று சுவாசிக்கத் தேவைப்படுகிறது.
உடலின் மிகப் பெரிய பகுதியாக விளங்குவது தோல் பகுதியாகும்.

வளர்ந்த ஒரு மனித உடலில் சுமார் 2 சதுர மீட்டர் பரப்புள்ள தோல் பகுதி, உடலை நீரிலிலிருந்தும் வெப்பத்திலிருந்தும் பாதுகாக்கும் போர்வையாக விளங்குகிறது.

நமது உடலில் உள்ள ஈரல் (liver) 500 வகையான வேலைகளை செய்கிறது. மிகவும் சிக்கல் நிறைந்த, பெருமளவு செயல்களைச் செய்யும் உறுப்பாக மனித உடலில் விளங்குவது ஈரல் (liver) ஆகும். ஈரல் தசைகளில் உள்ள செல்கள் பாதிக்கப்பட்டு அவை சிதைவடைவதாலும் தாறுமாறான வளர்ச்சியாலும் ஈரல் புற்றுநோய் ஏற்படுகிறது.

புகை பிடிப்பதானது உடல்நலத்துக்குப் பெரிதும் தீங்குவிளைவிக்கும் செயலாகும். நுரை ஈரல் புற்று நோய், இதய நோய் உள்ளிட்ட பல நோய்களுக்கு இது ஊற்று மூலமாகும். தற்போது உலகில் சுமார் 110 கோடி பேர் புகைபிடிக்கின்றனர். இதன் விளைவாக, ஆண்டுதோறும், 35 லட்சம் பேர் மரணமடைகின்றனர்.

மனித உடலில் உள்ள மிகப் பெரிய சுரப்பி கல்லீரல்தான்.
மனித நுரையீரலில் உள்ள நுண் காற்றுப் பைகளின் எண்ணிக்கை 300 மில்லியன். ஒவ்வொரு நுண் காற்றுப்பையும் 0.2 மில்லி மீட்டர் விட்ட அளவு கொண்டது.

ம‌னித உட‌லி‌ல் சதை அழு‌த்த‌ம் அ‌திக‌‌ம் உ‌ள்ள பகு‌தி நா‌க்கு.
ஒவ்வொரு மனிதனும் வாழ்நாளில் நடக்கும் கணக்கை பார்த்தால் அவன் பூமியை இரண்டு முறை சுற்றி வந்ததிற்கு சமம்.

நாம் தும்மும் போது நமது மூக்கின் வழியாக செல்லும் காற்றின் வேகம் சுமார் 150 கிலோமிட்டர்கள். அதுபோல தும்மும் போது கண்டிப்பாக கண்களை மூடிவிடுவோம்.

900 பெ‌‌ன்சில்களை தயாரிக்கும் அளவிற்கு ம‌னித உட‌லி‌ல் கார்பன் சத்து இருக்கிறது.

க‌ண் தான‌த்‌தி‌ல் கண்களில் விழித்திரை விழித்திரை நோயால் பார்வையிழந்த இரு நபர்களுக்கு பொரு‌த்த‌ப்படு‌கி‌ன்றன.

மனித உடலில் மிகவும் பலமானது விரல் நகங்களே. அதில் கெராடின் சத்து உள்ளது, இது காண்டாமிருகத்தின் கொம்புகளில் காணப்படுவது, மரணத்திற்குப்பிறகும் கூட நகம் ஒன்றுமே ஆகாது.

பள்ளிகளில் 6 மாதத்திற்குள் குடிநீர், கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தி தர உச்சநீதிமன்றம் உத்தரவு!


டெல்லி: பள்ளிகளில் பாடம் கற்றுக் கொடுப்பது மட்டும் கடமையல்ல மாணவர்களுக்குத் தேவையான  குடிநீர், கழிப்பிட வசதிகளையும் ஏற்படுத்தித் தரவேண்டியது பள்ளி நிர்வாகத்தினரின்  கடமை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இவ்வசதிகளை 6 மாதத்திற்குள் ஏற்படுத்தி தரவேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
நாட்டில் பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்களுக்கு சரியான முறையில் குடிநீர், கழிப்பிட  வசதியின்றி உள்ளது. இதனால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் மாணவிகளின் நிலைமை கடும் திண்டாட்டம்தான். இதனைக் கருத்தில் கொண்டு
பள்ளிகளில் அடிப்படை வசதி கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
உச்சநீதிமன்றத்தின் நீதிபதி ராதாகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் இதனை விசாரித்து தீர்ப்பளித்தனர்.
“நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப,  ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும். மாணவர்களுக்குத் தேவையான குடிநீர்,  கழிப்பிட வசதிகளை ஏற்படுத்தி தர மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த உத்தரவினை தனியார் பள்ளிகளும், சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளும் கடைபிடிக்க  வேண்டும்.
இவை அனைத்தையும் இன்னும் 6 மாதத்திற்குள் மாநில அரசுகளும், பள்ளிகளும் நிறைவேற்ற  வேண்டும். இந்த உத்தரவை மீறி 6 மாதத்திற்கு பிறகும் தீர்ப்பை  நடைமுறைப்படுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மனுதாரர்கள் உச்சநீதிமன்றத்தை  நாடலாம்.” என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

மதவாத சக்திகளுக்கு என்றும் இடம் தரமாட்டோம் மணிச்சுடர் வெள்ளி விழாவில் கருணாநிதி பேச்சு


சென்னை, அக்.5-
மதவாத சக்திகளுக்கு என்றும் இடம் தரமாட்டோம் என்று கருணாநிதி பேசினார்.
வெள்ளி விழா
மணிச்சுடர் நாளிதழின் 25-ம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பு மலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு இந்திய ïனியன் முஸ்லிம் லீக் மாநிலத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் முகமது அபூபக்கர் வரவேற்று பேசினார். எம்.அப்துல் ரகுமான் எம்.பி. அறிமுக உரையாற்றினார்.
மத்திய இணை மந்திரி அகமது சாஹிப், தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் தலைவர் கி.வீரமணி, முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.
விழாவில் தி.மு.க. தலைவர் கருணாநிதி கலந்து கொண்டு மணிச்சுடர் வெள்ளி விழா சிறப்பு மலரை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கறுப்புச் சட்டைக்கு வேலை இருக்கிறது
1945-ல் ஈரோடு குருகுலத்தில் பெரியார் தொடங்கிய கறுப்புச் சட்டை படையில் நான் சேர்ந்தேன். 1945-ல் கறுப்புச் சட்டைக்கு வேலை இருந்தது. இப்போதும் கறுப்புச் சட்டைக்கு வேலை இருக்கிறது என்பதால் கறுப்புச் சட்டை அணிந்திருக்கிறேன். இனி, தினந்தோறும், ஒவ்வொரு நாளும், கறுப்புச் சட்டையை கடைசிவரை அணிவேன். தமிழகத்தின் இழிவு துடைக்கப்படும் வரை, கறுப்புச் சட்டையை அணிவேன்.
மதவாத சக்திக்கு தி.மு.க. இடம் தராது
முஸ்லிம்களை பொறுத்தவரை அவர்கள் மைனாரிட்டிகள். ஜெயலலிதா கூறுவதுபோல் தி.மு.க.வும் மைனாரிட்டிதான். தி.மு.க. மைனாரிட்டி மக்களுக்காக நடக்கும் ஆட்சி என்று சட்டமன்றத்தில் கூறினேன். ஆந்திரா போன்ற மாநிலங்களில் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு கொடுத்தபோது அதை அறிக்கை விட்டு எதிர்த்தவர்கள் யார்?
தமிழகத்தில் இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவீதம் ஒதுக்கீடு என்று நான் சொன்னேன். அதை எதிர்த்தவர்கள் யார், யார்? என்று தெரியும். அதை மறந்திருக்க மாட்டார்கள்.
என்றைக்கும் நாம் மதவாதத்துக்கு இடம் தரக்கூடாது. தி.மு.க. என்றும் மதவாதத்துக்கு இடம்தராது. பா.ஜ.க.வில் இருக்கும்போது மதவாத சக்திக்கு இடம் தரும் சூழல் ஏற்பட்டபோது உறவை அறுத்துக் கொண்டு வந்த இயக்கம்தான் தி.மு.க. இந்தியாவில், தமிழகத்தில் மதவாத சக்திகளுக்கு என்றும் இடம் தரமாட்டேன்.
இவ்வாறு தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறினார்.
விழாவில், மாநிலச் செயலாளர்கள் கே.எம்.நிஜாமுதீன், கமுதி பஷிர், மில்லத் இஸ்மாயில், சிறுபான்மை சமூகத் தலைவர் லியாக்கத் அலிகான், எம்.பி.க்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், வசந்தி ஸ்டான்லி, கவிஞர் காசிமுத்துமாணிக்கம், முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியம், மேலை நாசர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

புதன், 3 அக்டோபர், 2012

சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 423 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது


ஆலந்தூர், அக்.3-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 423 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது.
ஹஜ் பயணம்
முஸ்லிம்கள் தங்கள் 5 கடமைகளில் ஒன்றான புனித ஹஜ் பயணத்தை துல்ஹஜ் மாதத்தில் நிறைவேற்றுவார்கள். இதற்காக சவுதி அரேபியாவில் உள்ள மக்கா நகருக்கு புனித பயணம் செல்வார்கள்.
இந்த ஆண்டு தமிழ்நாடு ஹஜ் கமிட்டி சார்பில் 3,670 பேரும், புதுச்சேரியில் இருந்து 72 பேரும், அந்தமான்-நிக்கோபர் தீவுகளில் இருந்து 61 பேரும் ஆக மொத்தம் 3,803 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
முதல் விமானம் புறப்பட்டது
இந்த புனித ஹஜ் பயணத்திற்கான முதல் விமானம் நேற்று காலை 10.20 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் 218 ஆண்களும், 201 பெண்களும் 4 குழந்தைகளும் என 423 பேர் சென்றனர்.
அவர்களை தமிழக அமைச்சர் முகமது ஜான், இந்திய ஹஜ் கமிட்டி துணை தலைவரும், தமிழக ஹஜ் கமிட்டி தலைவருமான பிரசிடெண்ட் அபுபக்கர், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் தமிழ்மகன் உசேன், தமிழக அரசு செயலாளர்கள் அலாவுதீன், தங்க.கலியபெருமாள் ஆகியோர் வாழ்த்தி அனுப்பி வைத்தனர். ஹஜ் பயணத்திற்காக வருகிற 10-ந் தேதி வரை 9 சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகிறது.
முதல்வர் உத்தரவு
பின்னர் அமைச்சர் முகமது ஜான் நிருபர்களிடம் கூறுகையில், “தமிழகத்தில் புனித ஹஜ் பயணம் செல்பவர்களுக்கு முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன” என்றார்.
இந்திய ஹஜ் கமிட்டி துணை தலைவர் பிரசிடெண்ட் அபுபக்கர் கூறும்போது, `ஹஜ் பயணிகள் எந்த வித சிரமுமின்றி புனித பயணத்தை நிறைவேற்ற தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. சென்னையில் இருந்து புனித பயணம் செல்பவர்கள் ஜித்தா நகருக்கு சென்று, அங்கிருந்து புனித நகருக்கு வாகனங்களில் அழைத்துச் செல்லப்படுவார்கள் என நம்புகிறோம்’ என்றார்.
புனித ஹஜ் பயணத்திற்காக விமான நிலையத்தில் சிறப்பு கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

செவ்வாய், 2 அக்டோபர், 2012

S.A.சைபுல்லாஹ் - முபீனா பேகம் திருமணம்



பாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர்{அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும் மேலும் உங்கள் மீது அபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்றிணைத்து வைக்கட்டும்}  வாழ்த்துக்களுடன்.. V.அஹமது B.com.,  M.Z.சல்மான் பாரிஸ் B.sc., M.I.முஹம்மது தௌபீக்.,M.C.A கொள்ளுமேடுடைம்ஸ் இணையதளம்