AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

புதன், 6 ஜூன், 2012

முஸ்லிம் பெண்களுக்குப் 15 வயதில் திருமணம் செய்து கொள்ளலாம்-உயர்நீதிமன்றம் தீர்ப்பு:

டில்லி:_ நாட்டில் பெண்களின் திருமண வயது 18 எனச் சட்டம் இருந்தாலும் இளவயதுத் திருமணங்கள்  நடந்து கொண்டு தான் இருக்கின்றன.

இந்நிலையில் முஸ்லிம்ப் பெண்கள்  பருவமடைந்திருந்தால் தங்களின் விருப்பப்படி 15 வயதிலேயே திருமணம் செய்து கொள்ளலாம் என டில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


முஸ்லிம் தனிச்ச்சட்டப்படி முஸ்லிம் பெண் , பருவமடைந்திருந்தால் தனது பெற்றோரின் ஒப்புதல் இல்லாமல் 18 வயது நிரம்பாமல் இருந்தாலும் திருமணம் செய்து கொள்ள உரிமை உள்ளது என நீதிபதிகள் ரவீந்திர பட் மற்றும் எஸ்பி.கார்க் ஆகியோர் கொண்ட பெஞ்ச் தீர்ப்பளித்துள்ளது..

திங்கள், 4 ஜூன், 2012

எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு முடிவுகள் வெளியீடு: தஞ்சை மாணவர் ஸ்ரீநாத் 500-க்கு 497 மதிப்பெண்கள் பெற்று முதலிடம்

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் 4-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை நடந்தது. பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் தனித் தேர்வர்கள் 11 லட்சத்து 68 ஆயிரம் பேர் தேர்வு எழுதினார்கள். 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பள்ளிகள் மூலம் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதிய மாணவ-மாணவி களின் எண்ணிக்கை 10 லட்சத்து 84 ஆயிரம். பழைய பாடத்திட்டத்தின் கீழ் தனியாக தேர்வு எழுதிய வர்கள் 64 ஆயிரத்து 777 பேர். 19 ஆயிரத்து 574 தனி தேர்வர்கள் நேரடியாக பரீட்சை எழுதினார்கள். 

3 ஆயிரத்து 33 மையங்களில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடந்தது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் இன்று 1.30 மணிக்கு வெளியிடப்பட்டது. 

இதில் தஞ்சை பி.ஆர்.பள்ளி மாணவர் ஸ்ரீநாத் 500-க்கு 497 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றார். மேலும், 496 மதிப்பெண்கள் பெற்று 6 மாணவர்கள் 2-ம் இடமும், 495 மதிப்பெண்கள் பெற்று 11 மாணவர்கள் 3-ம் இடமும் பிடித்தனர். 

தேர்வு எழுதியவர்களில் 86.2 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகளில் 89 சதவீதம் பேரும், மாணவர்களில் 83.4 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

தமிழ் பாடத்தில் 3 பேரும், கணிதத்தில் 1141 பேரும், அறிவியலில் 9237 பேரும், சமூக அறிவியலில் 5305 பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

AL- AMAN NURSERY & PRIMARY SCHOOL KOLLUMEDU


கொள்ளுமேடு அல் அமான் நர்சரி& ப்ரைமரி இஸ்கூல் ஜூன் நான்காம் தேதி திறக்கபடுகிறது






வல்லவனாம் அல்லாவில் நல்லருளால் எங்களது பள்ளி அரசு அங்கீகாரத்துடன் Reg No : 03/165/2012 புது பொலிவுடன் திறக்கபடுகிறது என்பதை பொதுமக்களுக்கு தெரிவித்து கொள்கிறோம். எங்களுது பள்ளியில் ஆங்கில வழி கல்வியும், மார்க்க கல்வியும் மற்றும் கணினி பயிற்சியும் அத்துடன் சுமார்ட் கிளாஸ் திறமையான ஆசிரியர்களை கொண்டு திறன் பட கற்றுத்தரபடுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம். .அருகில் உள்ள ஊர்களுக்கு வாகன வசதியும் செய்து தரபடுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தேரிவித்துகொள்ளிறோம். அட்மிஷன் நடைபெறுகிறது தொடர்புக்கு பள்ளியின் தாளாளர் N. அமானுல்லாவை அணுகவும். அலைபேசி என். 9585363626 அல்லது 04144 - 205635

ஞாயிறு, 3 ஜூன், 2012

11.55 லட்சம் பேர் எழுதியுள்ளனர் நாளை 1.30 மணிக்கு 10ம் வகுப்பு ரிசல்ட்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை பிற்பகல் 1.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. மதிப்பெண் சான்றிதழ் 21&ம் தேதி அந்தந்த பள்ளிகளில் வழங்கப்படும். தமிழகத்தில் 10&ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 4&ம் தேதி தொடங்கி 23&ம் தேதி முடிந்தது. தமிழகம் முழுவதும் 6 லட்சத்து 22 ஆயிரத்து 377 மாணவர்கள், 5 லட்சத்து 32 ஆயிரத்து 810 மாணவிகள் உள்பட மொத்தம் 11 லட்சத்து 55 ஆயிரத்து 187 பேர் தேர்வு எழுதினர். கடந்த கல்வி ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட சமச்சீர் கல்வி முறையின் கீழ் 10&ம் வகுப்பு மாணவர்கள் முதல் முறையாக பொதுத் தேர்வு எழுதினர்.

நாளை பிற்பகல் 1.30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன. பிளஸ் 2 வகுப்பு போல, 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் இந்த ஆண்டு முதல் போட்டோவுடன் கூடிய மதிப்பெண் பட்டியல் வழங்கப்படுகிறது. மதிப்பெண் சான்றிதழ்கள் வரும் 21&ம் தேதி அந்தந்த பள்ளியில் வழங்கப்படும். 
தேர்வெழுதிய அனைத்து பாடங்களுக்கும் மதிப்பெண் மறுகூட்டல் செய்ய விரும்புவோர் விண்ணப்பங்களை 5&ம் தேதி முதல் 7&ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்வு துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.





சனி, 2 ஜூன், 2012

அல் அய்ன் மண்டல தமுமுகவின் மார்க்க விளக்க பொதுக்கூட்​டம்


அல் அய்ன் மண்டல தமுமுக சார்பில் மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம் 01-06-2012 வெள்ளிக்கிழமை மக்ரிப் தொழுகைக்குப் பின் கத்தாரா மர்கசில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கத்தாரா பகுதி தலைவர் காட்டுமன்னார்குடி அஸ்கர் அலி தலைமை தாங்கினார்.மாணவி தஞ்சை ஹீரியா சாதிக் அலி திருக்குர்ஆன் வசனங்களை ஓதி நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார்.
மண்டல முன்னாள் தலைவர் கொள்ளுமேடு முஹம்மது ரிஃபாயி தொடக்க உரையாற்றினார்.அவர் தனது உரையில் தமுமுக தமிழகத்தில் செய்து வரும் பணிகளை விவரித்தார்.கோவை சிறைவாசிகளின் விடுதலைக்காக சமுதாயக் களத்திலும்,சட்டமன்றத்திலும் தமுமுக/மமக ஆற்றிவரும் பணிகளை குறிப்பிட்டார்.அமீரக தமுமுக துணைச்செயலாளர் டாக்டர் அப்துல் காதர்,நபிகளார் பாதையே வெற்றிப் பாதை என்பதை விளக்கி “இஸ்லாத்தின் பார்வையில் வெற்றி” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
மண்டல மருத்துவ அணி செயலாளரும்,வட்டியில்லாக் கடனுதவி திட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுவின் உறுப்பினருமான கீழை முஹம்மது இபுனு வட்டியில்லாக் கடனுதவி திட்டம் குறித்த சில அறிவிப்புகளை செய்தார்.இறுதியாக கிராஅத் ஓதிய மாணவி ஹீரியா சாதிக் அலிக்கு பொறியாளர் கீழை அமீனுல் ஹுசைன் நினைவுப் பரிசு வழங்கினார்.
மண்டல நிர்வாகி களப்பால் சையது யூசுப் நன்றியுரை, துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.

கொள்ளுமேட்டில் சிராஜுல் மில்லத் தெருவில் இருந்து ஏரிக்கரை இறக்கம் வரை சாலை அமைக்கும் பணி


இன்று கொள்ளுமேட்டில் சிராஜுல் மில்லத் தெருவில் இருந்து ஏரிக்கரை இறக்கம் வரை சாலை அமைக்கும் பணி துவங்கியது, கவுன்சிலர் வடிவேலு அவர்கள் சாலை பணியினை விரைவில் முடிப்பேன் எனக் கூறி உள்ளார்.பணி சிரக்க வாழ்த்துகிறோம்.
 

வெள்ளி, 1 ஜூன், 2012

உடல் எடையைக் குறைப்பதற்கு மிக சுலபமான வழிமுறை


குறைந்த கலோரி மற்றும் நிறைய புரதச்சத்து இருக்கிற காய்கறி மற்றும் பழங்களை சாப்பிட்டு வந்தாலே உடல் எடை குறைவதோடு உடல் ஆரோக்கியமாகவும்இருக்கும் என
தெரியவந்துள்ளது.
ஏனென்றால் டயட்டில் இருக்கும் போது நிறைய காய்கறிமற்றும் பழங்களை சாப்பிட்டால் எடை குறைவதோடு , புற்றுநோய் , சிறுநீரகக்கல் , இதய நோய் , நீரிழிவு போன்ற நோய்கள் வராமல் உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
சுரைக்காய் ஜூஸ்: இதில் இரும்பு மற்றம் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. இதை தினமும் காலையில் ஒரு டம்ளர் குடித்தால் எடை குறைவதோடு , உடலுக்கு பளபளப்பைத் தரும்.
தர்பூசணி ஜூஸ்: இதில் அதிக வைட்டமின்கள் உள்ளன. இது குடிப்பதால் உடல் எடை குறைவது மட்டுமல்லாமல் , இதய நோய்க்கும் மிகச் சிறந்தது.
ஆரஞ்சு ஜூஸ்: இதில் அதிக புரதச்சத்தும் , குறைந்த கலோரியும் இருப்பதால் உடல் எடை குறைவதற்கு மிகச் சிறந்த பானம். இதிலுள்ள வைட்டமின் சி உடலுக்கு நிறமும் தருகிறது.
மேலும் இதைக் குடிப்பதால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்து உடல்பிட் ஆகும்.
கேரட் ஜூஸ்: இந்த ஜூஸ் குடிப்பதால் கண்களுக்கு நல்லது. மேலும் இதை தினமும் குடித்தால் உடலுக்கு நிறத்தை தருவதோடு , உடல் எடையும் குறையும்.
திராட்சை ஜூஸ்: இது ஒரு சுவையான பழச்சாறு. இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட் இருப்பதால் உடலில் உள்ள கொழுப்புக்கள் எளிதாக குறைந்து உடல் எடை குறைந்துவிடும். மேலும் இது சிறுநீரகக் கோளாறு , இதய நோய் , ஆஸ்துமா , செரிமானக் கோளாறு போன்ற பிரச்சனைகளை
போக்குகிறது.
ஆகவே கஷ்டப்பட்டு எடை குறைக்காமல் , ஈஸியாக இந்த இயற்கை பானங்களை அருந்தி எடையை குறையுங்கள்.