வாஷிங்டன்:குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை நிகழ்ந்து 10-வது ஆண்டு நிறைவுறும் வேளையில் அமெரிக்காவில் வாழும் இந்திய சமூகத்தின் தலைமையில் நரேந்திர மோடியை எதிர்த்து கண்டன போராட்டம் நடைபெற்றது.
40-க்கும் மேற்பட்ட அமைப்புகளின் சார்பாக நடந்த போராட்டத்தில் மோடிக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. நூற்றுக்கணக்கானோர் இப்போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
மன்ஹாட்டனில் காந்தி சிலைக்கு அருகே திரண்ட இந்தியர்கள் குஜராத் இனப்படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என்றும், குற்றவாளிகள் சட்டத்தின் முன்னால் நிறுத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
போராட்டத்தில் கலந்துகொண்டோர் இனப்படுகொலையில் கொலை செய்யப்பட்டவர்களுக்காக பிரார்த்தனை நடத்தினர்.
இப்போராட்டத்தில் கலந்துகொண்ட சவுத் ஏசியா சோலிடாரிட்டி மூவ்மெண்டின் பிரதிநிதி ஸ்வாதி ஷா கூறியதாவது: ‘குஜராத்தில் என்ன நடந்தது என்பதை மக்களிடம் கூறும் பொறுப்பு இந்திய அரசுக்கு உண்டு. பிரதமர் பதவிக்கு மோடியை முன்னிறுத்துவது குறித்து அமெரிக்க இந்திய சமூகம் கவலை கொள்கிறது என்று தெரிவித்தார்.
இந்திய அமெரிக்க முஸ்லிம் கவுன்சிலின் தலைமையில் இந்த கண்டன போராட்டம் நடைபெற்றது. நேற்று முன்தினம் அமெரிக்க காங்கிரஸ் மோடியை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியிருந்தது.
திங்கள், 5 மார்ச், 2012
மோடிக்கு எதிராக அமெரிக்க இந்திய சமூகம்!
லேபிள்கள்:
kollumedutimes.com
ஞாயிறு, 4 மார்ச், 2012
புனித ஹஜ் பயணம் செல்ல ஏப்ரல் 16-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
தமிழ் நாட்டிலுள்ள இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த மக்களிடமிருந்து, இந்த ஆண்டு ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வதற்கான விண்ணப்பங்களை மும்பை, இந்திய ஹஜ் குழு சார்பாக தமிழ் நாடு மாநில ஹஜ் குழு பெற்றுக் கொள்ள விருக்கிறது.
இதற்கான விண்ணப்பப் படிவங்களை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, ரோஸி டவர், மூன்றாம் தளத்தில் இயங்கி வரும் தமிழ் நாடு மாநில ஹஜ் குழுவின் நிர்வாக அலுவலரிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம் அல்லது இவ்விண்ணப்பங்களை WWW.hajcommittee.com என்ற இணைய தளம் மூலமாகவும் மற்றும் விண்ணப்பப் படிவத்தை நகல்கள் எடுத்தும், உபயோகப்படுத்தலாம்.
பாஸ்போர்ட்டில் மட்டுமே ஹஜ் பயணத்திற்கான விசா வழங்கப்படும் என சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளதால், பன்னாட்டு பாஸ் போர்ட்டுகளை வைத்திருப்பவர்கள் மட்டுமே ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவர்.
மனுதாரர்களின் பாஸ்போர்ட்டுகள் 31.3.2013 வரையில் செல்லத்தக்கதாக இருக்கவேண்டும். ஹஜ் பயணம் தொடர்பான முழுமையான விவரங்களுக்கு வழிமுறைகள் மற்றும் கையேட்டைப் படித்தும் அல்லது இந்திய ஹஜ் குழுவின் இணையதளம் மூலமாக தெரிந்துக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, பயணி ஒருவருக்கு ரூ.200-ஐ திருப்பித் தரப்படாத பரிசீலனைக் கட்டணமாக பாரத ஸ்டேட் வங்கியில், மத்திய ஹஜ் குழு விற்கான நடப்புக்கணக்கு எண். 32175017712-ல் செலுத்தி அதற்கான வங்கி ரசீதின் நகல் மற்றும் சுய கையொப்பமிட்ட பாஸ்போர்ட் நகலினை இணைத்து தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிற்கு 16-04-2012-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இதற்கான விண்ணப்பப் படிவங்களை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, ரோஸி டவர், மூன்றாம் தளத்தில் இயங்கி வரும் தமிழ் நாடு மாநில ஹஜ் குழுவின் நிர்வாக அலுவலரிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம் அல்லது இவ்விண்ணப்பங்களை WWW.hajcommittee.com என்ற இணைய தளம் மூலமாகவும் மற்றும் விண்ணப்பப் படிவத்தை நகல்கள் எடுத்தும், உபயோகப்படுத்தலாம்.
பாஸ்போர்ட்டில் மட்டுமே ஹஜ் பயணத்திற்கான விசா வழங்கப்படும் என சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளதால், பன்னாட்டு பாஸ் போர்ட்டுகளை வைத்திருப்பவர்கள் மட்டுமே ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவர்.
மனுதாரர்களின் பாஸ்போர்ட்டுகள் 31.3.2013 வரையில் செல்லத்தக்கதாக இருக்கவேண்டும். ஹஜ் பயணம் தொடர்பான முழுமையான விவரங்களுக்கு வழிமுறைகள் மற்றும் கையேட்டைப் படித்தும் அல்லது இந்திய ஹஜ் குழுவின் இணையதளம் மூலமாக தெரிந்துக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, பயணி ஒருவருக்கு ரூ.200-ஐ திருப்பித் தரப்படாத பரிசீலனைக் கட்டணமாக பாரத ஸ்டேட் வங்கியில், மத்திய ஹஜ் குழு விற்கான நடப்புக்கணக்கு எண். 32175017712-ல் செலுத்தி அதற்கான வங்கி ரசீதின் நகல் மற்றும் சுய கையொப்பமிட்ட பாஸ்போர்ட் நகலினை இணைத்து தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிற்கு 16-04-2012-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
லேபிள்கள்:
kollumedutimes.com
குஜராத் இனப்படுகொலை: பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் பரிதாப நிலை!
அஹ்மதாபாத்:குஜராத் முஸ்லிம் இனப் படுகொலைக்கு பிறகு நிவாரண நடவடிக்கைகளில் மோடி அரசு காட்டிய அலட்சியத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பொருளாதார ரீதியாக நசிந்து போனதாக ஆய்வறிக்கை கூறுகிறது.
அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத, நகரங்களில் இருந்து மிக தொலைவில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில்தான் பெரும்பாலான மக்களுக்கான மறுவாழ்வு நடவடிக்கைகள் ஒதுங்கிவிட்டதாக குஜராத்தின் தன்னார்வ தொண்டு நிறுவனமான ஜன்விகாஸின் சர்வே கூறுகிறது.
எட்டு மாவட்டங்களில் 83 மறுவாழ்வு காலனிகள் வசிக்கும் 16,087 இனப் படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களிடம் நடத்திய சர்வேயில் அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் 2002- ஆம் ஆண்டு இனப் படுகொலைக்கு முன்பு அவர்கள் வசித்த பகுதிகளுக்கு திரும்பவில்லை. அண்டை வீடுகளில் வசிக்கும் மக்களின் மிரட்டல் உள்ளிட்ட காரணங்களால் அவர்கள் தங்கள் வசிப்பிடங்களுக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இனப் படுகொலையின் போது வீடும், வியாபார நிறுவனங்களும் இழந்த முஸ்லிம்களுக்கு புதிய இடங்களில் வியாபாரம் துவங்க மூலதனம் இல்லை. எப்பாடு பட்டேனும் ஏதாவது வியாபாரத்தை துவக்கினாலும் வியாபாரம் குறைந்ததால் எவ்வித முன்னேற்றமும் இல்லை.
காலனிகள் நகரங்களில் இருந்து மிகவும் தொலைவில் உள்ளன. இதனால் வியாபாரம் குறைந்துள்ளது. இதனால் வருமானத்தில் 25 சதவீதம் முதல் 30 சதவீதம் வரையிலான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
குஜராத் இனப்படுகொலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசோ அல்லது அரசு சாரா நிறுவனங்களோ ஒரு வீடு கூட கட்டிக் கொடுக்கவில்லை. முஸ்லிம் அறக்கட்டளை நிறுவனங்கள்தாம் வீடுகளை கட்டியுள்ளன. ஆனால், காலனிகளில் முஸ்லிம்களுக்கு ஆவணங்கள் மூலம் உரிமையாளர்களுக்கான சான்றிதழ் வழங்கப்படவில்லை.
33 சதவீத காலனிகளில் போதுமான அளவு சுத்தமான குடிநீர் வசதி இல்லை. 81 சதவீதம் பேருக்கு சாக்கடை நீர் செல்வதற்கான வசதி இல்லை. 86 சதவீதம் காலனிகளிலும் சாலைகள் இல்லை. தொலைதூரத்தில் உள்ள கிராமங்களில் 34 காலனிகளில் வெறும் 5 இல் மட்டுமே தேசிய கிராமீய சுகாதார திட்டத்தின் மூலமாக இன்சூரன்ஸ் கார்டு கிடைத்துள்ளது. 55 சதவீத காலனிகளுக்கு அருகில் அங்கன்வாடிகள் கிடையாது.
வேகமான நடவடிக்கைகள் மூலம் குஜராத் இனப் படுகொலையில் பாதிக்கப்பட்ட மக்களை மீண்டும் அவர்களின் சொந்த இடங்களில் வசிக்க செய்ய நடவடிக்கை எடுப்போம் என்று மோடி அரசு அடிக்கடி அறிவித்தபோதிலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாநில அரசு தங்களது நிலைமையை மாற்ற எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என்று இனப் படுகொலையில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
லேபிள்கள்:
kollumedutimes.com
ரமலான் இரவுகளை பக்தி பரவசபடுத்தும் குரல் ராம்லீலாவிலும் ஒலித்தது!
புதுடெல்லி:மக்காவில் உள்ள புனித மஸ்ஜிதுல் ஹரமில் ரமலான் இரவுகளில் தராவீஹ் தொழுகைகளில் திருக்குர்ஆன் வசனங்களை ஓதும் போதும், பிரார்த்தனைகளின் போதும் மக்களின் உள்ளங்களை நெகிழச்செய்து கண்ணீரை வரவழைக்கும் குரல் ராம்லீலாவில் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையில் கலந்துகொண்டவர்களையும் பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது.
ஜம்மியத்துல் அஹ்லே ஹதீஸின் 2 தின மாநாடு நேற்று(வெள்ளிக்கிழமை) ராம்லீலா மைதானத்தில் துவங்கியது. வெள்ளிக்கிழமை ஜும்ஆ சிறப்பு தொழுகைக்கு புனித மக்கா ஹரம் ஷெரீஃபில் ரமலானில் தராவீஹ் தொழுகைகளுக்கு தலைமை வகிப்பவர்களில் ஒருவரான இமாம் டாக்டர்.ஷேக் ஸஊத் அஷ்ஷுரைம் தலைமை வகித்தார்.
ராம் லீலாவில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஸஃபுகளில்(அணிவரிசையில்) மக்கள் கூட்டம் காணப்பட்டது. 1991-ஆம் ஆண்டு முதல் ஹரமில் தராவீஹ் தொழுகைக்கு தலைமை வகித்து வரும் அறிஞர் அஷ்ஷுரைம் சவூதி அரேபியாவில் நீதிபதியாகவும் பணியாற்றுகிறார்.
ஜும்ஆவின் முன்னோடியாக நிகழ்த்திய உரையில் இமாம், ஐக்கியத்தையும், நல்லிணக்கத்தையும் நிலைநாட்டிட இந்திய முஸ்லிம்களுக்கு அழைப்பு விடுத்தார். நபி(ஸல்…) அவர்களின் தோழர்களிடமிருந்து கேட்ட இந்தியாவை குறித்த செய்திகளை வரலாறு பதிவுச்செய்துள்ளது.
உலகம் முழுவதும் மனிதர்கள் தங்களது பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல் மிகவும் மனோரீதியான நெருக்கடியை அனுபவித்து வருகின்றார்கள். உலகம் முழுவதும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கான மிகச்சிறந்த வாழ்க்கை திட்டம்தான் இஸ்லாம். இஸ்லாத்தை அனைத்து அனாச்சாரங்களில் இருந்து விடுவிக்க பாடுபட வேண்டும்.
ஒவ்வொரு முஸ்லிமும் இஸ்லாத்தை தனது வாழ்க்கையிலும் செயல்படுத்த முனையும்பொழுதே சமூகத்தில் அமைதியும், நல்லிணைக்கவும் நிலவும். இவ்வாறு இமாம் அஷ்ஷுரைம் உரையாற்றினார்.
ஜம்மியத்துல் அஹ்லே ஹதீஸ் ஹிந்தின் அமீர் ஹாஃபிஸ் முஹம்மது யஹ்யா தஹ்லவி மாநாட்டின் நோக்கங்கள் குறித்து விவரித்தார். ஜம்மியத்து அஹ்லே ஹதீஸின் பொதுச்செயலாளர் மவ்லானா அஸ்கர் அலி இமாம் அலி மஹ்தி ஸலஃபி, மவ்லானா அப்துற்றஹ்மான் அப்துல்லாஹ் ரஹ்மானி முபாரக்பூரி ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
மாநாட்டின் இறுதி நாளான இன்று(சனிக்கிழமை) இரவு இஷா தொழுகைக்கு இமாம் அஷ்ஷுரைம் தலைமை வகிப்பார்.
லேபிள்கள்:
kollumedutimes.com
சிரியா:போராளிகளுக்கு ஆயுதங்களை வழங்க குவைத் பாராளுமன்றத்தில் தீர்மானம்!
குவைத்சிட்டி:சிரியாவில் அப்பாவி மக்கள் மீது அடக்குமுறையை தொடரும் சர்வாதிகாரி பஸ்ஸாருல் ஆஸாதின் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திவரும் ஃப்ரீ சிரியன் ஆர்மிக்கு ஆயுதங்கள் உள்ளிட்ட உதவிகளை வழங்க குவைத் அரசு முயற்சி மேற்கொள்ளவேண்டும் என்று அந்நாட்டின் பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சிரியா அரசு மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க கோரிய பாராளுமன்றம், பஸ்ஸார் அரசுடன் எல்லாவிதமான உறவுகளையும் குவைத் துண்டிக்க வேண்டும் என்று தீர்மானத்தில் கோரிக்கை விடுத்துள்ளது.
போராளிகளுக்காக நிதி திரட்டவேண்டும், குவைத்தில் வசிக்கும் சிரியாவாசிகளுக்கு அவர்களுடைய உறவினர்களை சிரியாவில் இருந்து குவைத் அழைத்து வர வசதிகளை ஏற்பாடுச் செய்தல் ஆகியன தீர்மானத்தில் கோரப்பட்டுள்ளன.
தொடர்ச்சியாக 2-வது தினமாக சிரியா விவாகாரம் குறித்து குவைத் பாராளுமன்றம் விவாதித்துள்ளது. சிரியா நேசனல் கவுன்சிலை நாட்டின் மக்கள் பிரதிநிதிகளாக அங்கீகரிக்க வேண்டும் என்று குவைத் அரசுக்கு கோரிக்கை விடுக்கும் தீர்மானம் கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
லேபிள்கள்:
kollumedutimes.com
வியாழன், 1 மார்ச், 2012
மிரட்டும் மின்வெட்டு
போர்க்கால அடிப்படையில் களமிறங்க வேண்டும்..

மின்வெட்டு தற்போது தமிழகத்தை மிரட்டும் அம்சமாக மாறிவிட்டது. தலைநகர் சென்னை தொடங்கி, பட்டிதொட்டியெங்கும் எப்போது மின்வெட்டு நிகழுமோ என்ற பீதியில் உறைவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது.
மின்வெட்டினால் தொழில்கள் பாதிக்கப்படுகின்றன. உற்பத்திகள் குறைகின்றன. தொழிலாளர்கள் வேலை இழக்கின்றனர். விவசாயிகள் மின்வெட்டினால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். விளை பயிர்களுக்கு சரியான நேரத்திற்கு தண்ணீர் பாய்ச்ச மின்சாரத் தேவையின்றி வரும்காலங்களில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சத்தையும் புறக்கணிப்பதற்கில்லை. மின்வெட்டினால் போதுமான அளவிற்கு குளிரூட்டப்படும் வாய்ப்பின்மையால் மீன்களும், காய்கறிகளும், கனிவர்க்கங்களும் பதம்கெட்டு வீணாகும் வாய்ப்பு அதிகம் என்பதையும் யாராலும் மறுக்க முடியாது. மருத்துவமனைகள், கல்விக்கூடங்கள் போன்றவை இந்த மின்வெட்டுகளால் படும் சிரமங்களை சொல்லில் வடிக்க இயலாது.
வருங்கால தமிழகத்தைக் கட்டமைக்க காத்திருக்கும் மாணவ சமுதாயம் மின்வெட்டினால் மிகப்பெரும் ஏக்கத்திலும் விரக்தியிலும் ஆழந்துள்ளது. வாழ்க்கைப் பருவத்தின் திருப்புமுனையாம் பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளின் இறுதித் தேர்வின் மதிப்பெண்களை வைத்து எதிர்காலத்தை நிர்ணயிக்க வேண்டிய சூழலில் பல மணிநேரங்கள் மின்சாரம் இல்லையென்றால் இளையதலைமுறையின் எதிர்காலம் ஒளிமயமாக இருக்கும் என எப்படி எதிர்பார்க்க முடியும்?
அதற்கு நம் மத்திய மாநில அரசுகள் என்ன திட்டங்களை முன்வைத்துள்ளன. மின் ஆளுமை, மின்மிகை மாநிலம் என்று பெருமையுடன் பேசப்பட்ட தமிழகம் இந்நிலையை அடைந்தது ஏன்? என்பதை சுயபரிசோதனை செய்யவேண்டிய வேளை இது. பன்னாட்டு பகாசுரக் கம்பெனிகளுக்கு அள்ளிஅள்ளி வழங்கப்படும் மின்சார வளம் சாமான்ய மக்களுக்கு தடையின்றி வழங்க அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டணிக் கட்சி ஆளாத மாநிலம் என்றால் ஓரவஞ்சனைப் பார்வை பார்க்கும் மத்திய அரசின் செயல் மெச்சும்படியாக இல்லை.
குறைந்தபட்சம் 2000 மெகாவாட் மின்சாரத்தை மத்திய அரசு தனது தொகுப்பில் இருந்து வழங்க வேண்டும். நிலைமை இவ்வளவு நெருக்கடியில் இருக்க, கூடங்குளம் உலை செயல்படுத்தப்பட்டால் மின்தட்டுப்பாடு நீங்கும் என்ற பித்தலாட்டமான பரப்புரை சிலரால் திட்டமிட்டு பரப்பப்படுகிறது. கூடங்குளம் உலை செயல்பட்டால் கூட 15 நிமிடத்திலிருந்து 20 நிமிடம் வரை தான் மின்வெட்டை நீக்கமுடியும். மொத்த உலைகளின் செயல்பாட்டின் மூலமே வெறும் 4 சதவீதம் கூட மின்வளத்தை உருவாக்க முடியாத நிலையில் கூடங்குளம் உலை தனது உற்பத்தியைத் தொடங்கினால் மின்சார வளம் பெருகும் என எதிர்பார்ப்பது பேதமையன்றோ. மின் ஆளுமையை சரிவர செயல்படுத்தி மின்வெட்டில்லா மாநிலமாக தமிழகத்தை மாற்ற ஆள்வோர் போர்க்கால அடிப்படையில் களமிறங்க வேண்டும்.
லேபிள்கள்:
kollumedutimes.com
பாப்ரி மஸ்ஜித்:அகழ்வாராய்ச்சித்துறை அறிக்கையை வெளியிட சி.ஐ.சி உத்தரவு!
புதுடெல்லி:அயோத்தியில் பாபர் மசூதி உரிமையியல் வழக்கில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சி பற்றிய அறிக்கையை வெளியிட வேண்டும் என்று இந்திய அகழ்வாராய்ச்சி அமைப்புக்கு (ஏ.எஸ்.ஐ.) மத்திய தகவல் உரிமை கமிஷன்(சி.ஐ.சி) உத்தரவிட்டுள்ளது.எனினும், இந்த அறிக்கையை வெளியிடுவதற்கு, உயர் நீதிமன்றத்தின் தடை இருக்கும் பட்சத்தில், அந்த உத்தரவின் நகலை மனுதாரரான சுபாஷ் அகர்வாலுக்கு அளிக்க வேண்டும் என்று தலைமைத் தகவல் கமிஷனர் சத்யானந்த மிஸ்ரா கூறியுள்ளார். அலாகாபாத் நீதிமன்ற உத்தரவுப்படி, அயோத்தியில் பாப்ரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த இடத்தில் இந்திய அகழ்வாராய்ச்சி அமைப்பு ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்தது.இந்த அறிக்கையின் நகலைக் கோரி தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி ஏ.எஸ்.ஐ.க்கு சுபாஷ் அகர்வால் விண்ணப்பித்திருந்தார். ஆனால், இது உயர் நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு மட்டுமான அறிக்கை என்று கூறி, அதை அளிப்பதற்கு ஏ.எஸ்.ஐ. மறுத்துவிட்டது.இந்த விவகாரம் ட்ரான்ஸ்ஃபரன்ஸி தீர்ப்பாயத்தில் கொண்டு செல்லப்பட்டபோதும் அகழ்வாராய்ச்சித்துறை தனது முடிவில் உறுதியாக இருந்தது.இதனை தொடர்ந்து அகர்வால் தகவல் உரிமை கமிஷனை நாடினார். அறிக்கையை வெளியிடுவதற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தால், அந்த உத்தரவின் நகலை தமக்கு வழங்க வேண்டும் என்று அகர்வால் தகவல் உரிமை கமிஷனிடம் தெரிவித்தார். இதையடுத்து மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
லேபிள்கள்:
kollumedutimes.com
நோன்பு இருந்தால் மூளைக்கு பாதிப்பில்லை – ஆய்வில் தகவல்
லண்டன்:நோன்பு அல்லது விரதம் இருப்பதால் உடலில் சர்க்கரை குறைந்துவிடும், வயிற்றில் அமிலம் சுரந்து அல்சர்(குடல் புண்) வந்துவிடும் என்று பலருக்கு சந்தேகம் ஏற்படுவதுண்டு. ஆனால், முஸ்லிம்கள் 14 நூற்றாண்டுகளுக்கும் மேலாக தங்களது மார்க்கத்தின் அடிப்படை கடமைகளில் ஒன்றாக நோன்பை வருடந்தோறும் ரமலான் மாதத்தில் கடைப்பிடித்து வருகின்றனர். அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் வருவதில்லை. மேலும் மாதந்தோறும் 3 நோன்புகள், திங்கள், வியாழன் கிழமைகளில் நோன்புகள், வருடத்தில் சில குறிப்பிட்ட தினங்களில் நோன்புகள் ஆகிய உபரியான(கட்டாயக் கடமை அல்ல) குறித்து இஸ்லாத்தின் இறுதித் தூதர் முஹம்மது நபி(ஸல்…)அவர்களுடைய நடைமுறையிலிருந்து புரிந்து கொள்ளலாம்.நோன்பை முஸ்லிம்கள் கடைப்பிடிப்பதற்கான காரணம் ஆன்மீக வாழ்வில் இறைவன் மீதான அச்சம் ஏற்படுவதற்காகும். இதன் காரணமாக ஒரு மனிதனின் ஆன்மீக வாழ்வு பரிசுத்தமடைகிறது.இந்நிலையில் லண்டனில் நடந்த மருத்துவ ஆய்வில் நோன்பின் மகிமையை குறித்து தெரியவந்துள்ளது. அல்சமீர், பார்க்கின்சன் நோய்கள் முதியோருக்கு வருவதை தடுப்பது எப்படி? என்ற ஆராய்ச்சின்போதுதான் நோன்பின் மகிமை மருத்துவ ஆராய்ச்சியாளர்களுக்கு தெரியவந்துள்ளது.வாரத்தில் ஒரு நாளோ அல்லது இரு நாளோ உண்ணாவிரதம் இருப்பவர்களுக்கு மூளையில் பாதிப்பு ஏற்படுவது இல்லை என்று தெரியவந்துள்ளது. சாப்பாடு அதிகம் இருந்தால் ஏராளமான கலோரி உடலுக்குள் செல்கிறது. அதை ஜீரணிக்க செரிமான உறுப்புகள்தான் உதவுகின்றன, மூளையை அது எப்படி வலுப்படுத்தும் என்று நீங்கள் கேட்கலாம்.சாப்பிடாமல் இருக்கும்போது மூளையில் சுரக்கும் ஒரு திரவம் மூளையின் செயல்திறனைக் கூட்டுகிறதாம். இதனால் மூளைக்கு எந்தக் கேடும் வருவதில்லையாம். இதை முதலில் எலிகளிடத்திலிருந்து அறிந்தார்கள். பிறகு சில முதியவர்களிடமும் சோதித்ததில் உறுதி செய்துகொண்டார்கள்.நோன்பு ஆன்மீக பயிற்சியுடன் மூளையின் திறனையும் வலுப்படுத்துகிறது.
லேபிள்கள்:
kollumedutimes.com
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)









