பல நாடுகளில் சமூகப் புரட்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் முகநூல், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் இந்தியாவில் சமூக பிணைப்புகளை ஏற்படுத்தவில்லை, அது வெறும் அரட்டையடிப்பதற்கான இணைய வசதி மட்டும் தான் என்ற சந்தேகம் இருந்தது, ஆனால் மத்திய அரசாங்கம் முன்னெச்சரிக்கையாக அதன் செயல்பாடுகளில் தலையிடுவதற்கும், தேசிய நலத்திற்கு எதிரான செயல்களை கண்காணித்து தணிக்கை செய்வதற்குமான முயற்சியில் சட்ட வரைவுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.
ஆனால் எனது தமிழ் முகநூல் facebook நண்பர்களிடம் கடந்த இரண்டு நாட்களாக ஒரு குறிப்பிட்ட விடயத்தை பற்றிய தீவிர விமர்சனங்கள், பற்றி எரிந்துக் கொண்டிருக்கிறது. அது போன்ற கடுமையான பின்னோட்டங்கள் comments கள் , அணுமின் எதிர்ப்புகளுக்கோ அல்லது மூவர் தூக்கு தண்டனை எதிர்ப்பிற்கோ, முல்லை பெரியாறு அணை விவகாரத்திற்கோ கூட எழுந்தது இல்லை.
அது இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளால் கடையநல்லூரில் வாழும் “இஸ்லாமிய நாத்திகர்” ஒருவரின் வாழ்க்கை பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. அவரை காப்பாற்ற உடனடியாக உதவி தேவை என்றொரு அவசர செய்தியை நண்பர் தனது முகநூலில் வெளியிட்டது தான் தாமதம்… கொட்டி தீர்த்துவிட்டனர்..
இஸ்லாமியர்கள் மதவாதிகள், அவர்கள் தாலிபான்கள், காட்டுமிராண்டிகள், கருத்து சுதந்திரத்திற்கும், பெண் சுதந்திரத்திற்கும் எதிரானவர்கள், அவர்கள் வாழ வேண்டியது ஆஃப்கானிஸ்தானிலோ, பாகிஸ்தானிலோதான் இந்தியாவில் இல்லை…. இன்னும் ஏராளமான கமெண்ட்கள்…
இதுவரை இந்துத்துவவாதிகளால் மட்டுமே உபயோகப்படுத்தப்பட்ட சொல்லாடல்கள் பெரியாரியவாதிகள் என்று சொல்லிக் கொள்பவர்களிடம் இருந்தும் பெண்ணியவாதிகளிடமிருந்தும், பொதுவுடமை பேசுபவர்கள் என்ற பெயர்களில் வெறுப்பு வார்த்தைகள் முக நூலில் கொட்டப்பட்டுள்ளது…….
ஆழ் மனதிலிருந்து தெரித்துவிழுந்த வெறுப்புணர்வு….. இஸ்லாமியர்கள் பொதுவெளியில் என்னதான் நட்புடனும் சகோதரத்துடனும் பழகினாலும் .. நெருக்கடி நிலையில் அவர்கள் தனிமை படுத்தப்படுவார்கள், குஜராத்தில் மோடியின் நரவேட்டையிலும் அப்படித்தானே நடந்திருக்கும், பக்கத்துவீட்டு காரர், நெருங்கி பழகிய நண்பர்கள், மதச்சார்பற்ற அமைப்புகள், நெருக்கடி நேரம் என்று வரும் பொழுது அவன் முஸ்லிம்..
அடிப்படை மதவாதம், மதத் தீவிரவாதம்,மத பிற்போக்குவாதம் என்பதெல்லாம் பொதுவாக இஸ்லாம் என்ற மதத்தை குறிப்பிடும் சொல்லாடல்களாக ஊடகங்கள் மூலமாகவும், ஆளும் வர்க்கத்தினர் மூலமாகவும் அடையாளமாக்கப் பட்டுள்ளது.
கடையநல்லூரில் திரேப்ஷா என்ற சகோதரர் தீவிர நாத்திக கருத்துக்களில் நம்பிக்கையுடையவர். அவர் தான் சார்ந்திருக்கும் இஸ்லாமிய மார்க்கத்தின் மீது நம்பிக்கையற்றவராகவும் அதற்கு எதிரான பிரச்சாரங்களை செய்துவருபவராகவும் அறியப்படுகிறார் அவரின் தீவிரமான இஸ்லாமிய அவதூறு பிரச்சாரத்திற்காக, அந்த ஊர் ஜமாத்தினர் அவரை மதவிலக்கம் செய்வதாக ஃப்த்வா கொடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியது. அதனை தொடர்ந்து அவருக்கு ஆதரவாக பல முகநூல் நண்பர்கள் களத்தில் குதித்துள்ளனர்.
இஸ்லாமிய அடிப்படைவாதிகள் காலம் காலமாக தொடர்ந்து தஸ்லீமா நஸ்ரின் முதல் சல்மான் ருஸ்டி வரை அவர்களின் கருத்து சுதந்திரத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறார்களே என்பதுதான் நடுநிலையாளர்களின் வேதனையாக உள்ளது. அதே போலத்தான் இன்று கடைய நல்லூர் திரேப்ஷாவிற்கும் அடிப்படைவாதிகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று அறிவுஜீவிகள் நம்புகின்றனர். இஸ்லாம் என்ற மதம் பொதுவெளி மக்களுடன் இரும்பு திரை கொண்டு மூடி இருப்பதாகவும், மதத்தை பற்றிய அறிதலுக்கும், கருத்து புரிதலுக்கும் எதிராக உள்ளதாக கூறுகின்றனர்.
பொதுவாக தனி மனிதனின் கருத்துச் சுதந்திரத்தினை தடுப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை. அதில் யாருக்கும் மாறுபட்ட கருத்தும் இல்லை. இஸ்லாத்தை பற்றிய விமர்சனத்திற்கோ அல்லது எதிர் கேள்விகள் கேட்பதற்கோ இஸ்லாம் எதிராக உள்ளதா என்றால் அப்படி எங்குமே இல்லை. இறைவனின் அருளிய திருக்குரானில் “இது உலகத்தார் அனைவருக்குமான திருமறை, இதில் நிர்பந்தங்கள் எதுவும் இல்லை” என்பதை எல்லா இடங்களிலும் வற்புறுத்துகிறது.
முதன் முதலாக அருளப்பட்ட திருக்குரானின் வசனமே “ஓதுவீராக” இஸ்லாம் கற்று கொள்வதை வழியுறுத்துகிறது. மூடத்தனத்துடன் மார்க்கத்தை பின்பற்றுவதை தடுக்கிறது, மனிதன் தன் சுய அறிவை பயன்படுத்த சொல்கிறது. கேள்விகள் கேட்கப்பட வேண்டும் என்கிறது, வரிக்கு வரி மனிதர்களுக்கு படிப்பினைகளையும் சாட்சிகளையும் எடுத்துக்கூறி சிந்திக்க சொல்கிறது. அப்படிபட்ட ஒரு மார்கத்தை தனி மனிதர்களாக கட்டி காப்பாற்ற வேண்டும் என்றோ இல்லை தனி மனிதர்களின் தாக்குதல்களில் அழிந்து சிதைந்து விடும் என்றோ இஸ்லாமியர்கள் நினைப்பார்கள் என்றால் அது மிகவும் தவறான பார்வையாகும். ஆனால் இங்கு விமர்சனம் என்பதை தாண்டி அவதூறு என்ற எல்லைகளுக்குள் போகும், இஸ்லாத்தில் இருந்து கொண்டே அதற்கு எதிரான பிரச்சாரங்களை கட்டமைக்கப்படும் போதும் மட்டுமே பிரச்சனைகள் உருவாகிறது.
இஸ்லாமியர்களாக இருந்து கொண்டே ஏன் விமர்சனம் செய்ய கூடாது என்றும் கேட்கலாம், இந்திய சூழலில் இஸ்லாமியர்களிடம் படிந்து கிடக்கும் மூட நம்பிக்கைகளை இன்றளவும் சரியான ஆதாரங்கள் மூலமாகவும், விவாதங்கள் மூலமாகவும் இஸ்லாத்தின் உண்மையான வடிவத்தை உணரும் முயற்சியில் எத்தனையோ இஸ்லாமிய அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்குள் விவாதங்களும், உடன்பாடற்ற நிலைகளும் நடக்கின்றது, ஆனால் அவர்களை யாரும் இஸ்லாமியர்கள் இல்லை என்று மதவிலக்கம் கொடுக்கபடவில்லை.
இதில் ஒன்றை கூர்ந்து கவனித்தால் தெரிவது இங்கு மேற்சொல்லப்பட்ட சல்மான் ருஸ்டி முதல் தஸ்லீமா வரை அனைவரும் “இஸ்லாத்தினை தங்களது மதமாக ஏற்று கொண்டும் அதற்குள் இருந்து கொண்டும் அதன் மீது அவதூறுகளை பரப்புகிறவர்கள், எதிர் பிரச்சாரம் செய்பவர்கள் மட்டுமே. அவர்கள் திரைமறைவு சக்திகளால் இஸ்லாத்திற்கு எதிராக இயக்கப்படுபவர்கள். ருஸ்டியை இன்றளவும் பாதுகாத்துவருவது அமெரிக்க- யூத சியோனிஸ கூட்டங்கள்.
அவர்களுக்கு எதிராக மட்டும் தான் மார்க்க தீர்ப்பு என்று சொல்லப்படுகிற ஃபத்வா கொடுக்கப்படுகிறது. அவர்கள் இஸ்லாமியர்கள் இல்லை என்று அந்த சமூகத்தின் நம்பிக்கைக்கு அப்பாற்பட்டவர்கள். அவர்களை மதவிலக்கம் செய்யப்படுகிறார்கள்.
ஒரு கருத்தாக்கத்திலோ, அமைப்பின் மீதோ நம்பிக்கையற்றவர்களை அந்த கட்சியோ, அமைப்போ வெளியேற்றுவது தான் பொதுவான நடைமுறை.
அல்லது கருத்து உடன்பாடில்லாத ஒரு அமைப்பிலிருந்து அவர்களாகவே வெளியேறிவிடுவது தான் நடைமுறை.
அலுவலகங்களில் கூட விதிமுறைகளை மீறிய தொழிலாளர்களை ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் வேலையிலிருந்து வெளியேற்றுவதும் நடைமுறையில் உள்ளது. அதே போன்று தான் , தனக்கு உடன்பாடில்லாத மதத்தை விட்டு அவராகவே வெளியேறுவதும் அல்லது வெளியேற்றப்படுவதும் பொதுவான நடைமுறையே. அதுவே நாகரீகமான நடைமுறையும் கூட.
எனது நாத்தீக நண்பர் கேட்டார், மதவிலக்கம் என்பது வன்முறைதானே ? பெரியார் முதல் எல்லா நாத்தீகர்களும் இந்து மதத்திற்குள்ளே இருந்து கொண்டு தானே நாத்தீக பிரச்சாரம் செய்கிறார்கள்? ஏன் அப்படி இஸ்லாம் உள்ளிருந்து கொண்டே நாத்தீக பிரச்சாரத்திற்கு அனுமதி கொடுப்பதில்லை என்று கேட்டார்.
இந்து மதத்தின் தன்மையானது தனக்கு எதிர் கருத்துக் கொண்டு சமூக புரட்சி செய்யும் மார்கத்தை முதலில் பலம் கொண்டு எதிர்க்கும் பிறகு அவர்களையும் சேர்த்து இந்து மதம் என்று பரினாமம் காணும். இந்து மதத்தில் பிறப்பின் அடிப்படையிலேயே இந்து மதத்துடனும்,அவன் சார்ந்த சாதி குறியீடுடனும் தான் பிறப்பதாக நம்பபடுகிறது. என்னதான் நாத்தீகம் பேசினாலும் கடைசியில் அவன் இந்து என்ற அடையாளத்துடன் தான் மரணிக்கிறான்.. எந்த மதத்தை எதிர்த்து தன் வாழ் நாள் எல்லாம் பிரச்சாரம் செய்கிறார்களோ அந்த மத அடையாளத்துடனே தானும் தன்னை பின் பற்றியவர்களும் மரணிப்பதில் என்ன புரட்சி இருக்கிறது. அப்படி ஒரு வசதி இஸ்லாத்திலும் எதிர்ப்பார்ப்பது முற்றிலும் முரண் என்பது எப்படி என் நண்பருக்கு தெரியாமல் போனது.
சரி ஒரு பேச்சுக்கு, தன்னை ஒருவன் முழு நாத்திகன் என்று கூறிக்கொண்டு சங்கராச்சாரியாரின் பாதங்களில் விழுந்து கும்பிட்டு , தீவிர மத வழிபாடுகள் செய்து திரிபவனை தாய்மை உள்ளத்துடன், சரி நீ நாத்திகனாகவே இருந்துவிட்டு போ என்று கூறுவார்களா பகுத்தறிவுவாதிகள்?.
கமல்ஹாசனை நாத்தீகன் என்று ஏற்றுகொள்வார்களா?. இல்லை பிரபஞ்சன் காஞ்சி சங்கரமடத்தை ஆதரித்து எழுதியதற்கு ஆமோதித்து அவரை நாத்தீகர்தான் என்று ஏற்றுக் கொள்வார்களா?.
தமிழ் தேசியத்தின் நாயகனாக பூஜிக்கும் பிரபாகரனை யாராவது விமர்சனம் செய்தாலே அவர்களை ஒதுக்கிவைக்கும் தமிழ் தேசியவாதிகள் ஏன் தனிமனித கருத்து சுதந்திரத்திற்கு இடம் கொடுப்பது இல்லை?.
மாற்று கருத்துக்களை தாங்கி நிற்கும் இனையதளங்களில் கூட நமது எல்லா கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுவதற்கு இடம் தருவார்களா என்றால் என்றால் இல்லை, அந்த தளத்திற்கு உட்பட்ட கருத்து ஒற்றுமை இருந்தால் மட்டும் தான் இணையதளங்களிலும் பகிர்ந்து கொள்ளமுடிகிறது. அது போலத்தான் இஸ்லாமிய வாழ்வியல் என்பது முழுவதும் ஒரு புரிதலுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம், அந்த ஒப்பந்தங்கள் முறியும் போது தனக்கு பிடித்த மார்க்கத்தை நோக்கி சென்றுவிடலாம். இங்கு நிர்பந்தம் இல்லை.
“உங்கள் மார்க்கம் உங்களுக்கு,எங்கள் மார்க்கம் எங்களுக்கு”
உடன்பாடு இல்லாவிட்டாலும் கடைசிவரையிலும் முஸ்லீமாகவே மரணிக்கவேண்டும் என்ற நிர்பந்தம் இங்கு இல்லை.
இங்கு ஊர்விலக்கம் வேறு, மதவிலக்கம் வேறு.. ஊர் விலக்கம் என்பது எல்லா சமூக மக்களிடம் இருந்து விலக்களிப்பது அது அவர்களின் வாழ்வுரிமைக்கு எதிரான செயல்.. அப்படி யாராவது செய்திருப்பார்கள் என்றால் நிச்சயமாக தடுக்கப்பட வேண்டியது தான். பல சமூக மக்கள் வாழும் ஒரு ஊரில் மதக் காரணங்களுக்காக ஊர்விலக்கு எந்த ஜமாத்துகளினாலும் செய்யமுடியாது.
கடையநல்லூர் ஜமாத் மதவிலக்கம் செய்திருந்தால் அது வரவேற்கதக்கது தானே இதில் தவறு எங்கே இருக்கிறது? ஒருவேளை உடல்ரீதியான தண்டனை எதுவும் கொடுக்கப்பட்டதா என்று பார்த்தாலும் அப்படி எதுவும் நடந்ததாக தெரியவில்லை. உணர்ச்சிவசப்பட்ட இளைஞர்களால் எந்த அசம்பாவிதங்களும் நடந்துவிடக்கூடாது என்ற பொறுப்புணர்சியுடன் திரேப்ஷாவினை பள்ளிக்குள் பாதுகாத்து காவல்துறையினரின் பாதுகாப்பில் விட்ட கடையநல்லூர் ஜமாத்தினை பாராட்டியே ஆகவேண்டும்.
ஆனால் இணையதள செய்திகளில் பரப்புரை செய்து தேவையில்லாத பதட்டத்தையும் மத வெறுப்புகளையும் விதைத்துள்ளனர்.
இஸ்லாத்திற்கு வெளியிலிருந்து தொடர் கருத்து தாக்குதல்களும், விமர்சனங்களும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. நாகரீகமான முறையில் கருத்து விவாதங்களையும், கருத்தரங்களையும் இன்றளவும் இந்தியாவில் இஸ்லாமிய அமைப்பினர்கள் நடத்திக் கொண்டும் மாற்று தளத்தில் உள்ளவர்களிடம் ஒரு புரிதல்களை ஏற்படுத்திக் கொண்டும் உள்ளனர்.
இஸ்லாமியர்களை குறிவைத்து மிகவும் கேவலமான வார்த்தைகளால் கொச்சைப் படுத்தும் இந்து தீவிரவாதிகளுக்கே எதிர்வினை செய்யாத இந்திய இஸ்லாமியர்களை காட்டுமிராண்டிகள் போல வர்ணிப்பது துவேசத்தின் உச்சம்.
கற்பு கெட்டவர்களில் சிறந்தவர் யார் கதிஜாவா, மேரியா, மணியம்மையா என்று பட்டிமன்றம் வைத்து தகாத வார்த்தைகளால் கொட்டியபோதும், “துலுக்கனை வெட்டு துலுக்கச்சியை கட்டு” என்றபோதும்,
“துலுக்கச்சி கற்ப பையில் இந்துவின் விந்துவை செலுத்து” என்று தமிழ் நாட்டில் இந்து தீவிரவாதி இராமகோபாலன் பேசாத பேச்சுகளா?… “இந்துக்கள் முஸ்லிம் கடைகளில் பொருள் வாங்காதீர்கள்” என்று பகிரங்க அறிவிப்பு செய்யும் அமைப்புகளும் இன்றும் இயங்கி கொண்டுதானே இருக்கின்றது.
ஒரே முகநூல் செய்தியால் பிரபலமான திரேப்ஷா தமிழகத்தின் சல்மான் ருஸ்டியாக மாறிவிட்டார், இனி அவரை பல திரைமறைவு சக்திகள் இயக்க ஆரம்பித்துவிடும்.. சிறுபான்மையினர் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் மீது நீங்கள் விதைக்கும் கருத்துகளின் பலனை இந்துத்துவ ஃபாசிச சக்திகள் அறுவடை செய்வார்கள்..
சிந்தனையாளர்களே! நடுநிலையாளர்களே… நீங்கள் தனிமனித சுதந்திரம் காக்கப்பட வேண்டும் என்ற பெயரில் உண்டாக்கும் சிறு சலசலப்பினால் ஏற்கனவே அச்சத்துடன் வாழும் சிறுபான்மை, ஒடுக்கப்பட்ட மக்களின் சமூகம் பாதுகாப்பற்றதாகி விடும் என்பதை மறந்து விடாதீர்கள்.
பெரியார் கடைபிடித்த இஸ்லாமிய நல்லுறவை, அவரின் வழி நடக்கும் நாத்தீகர்களும் கடைபிடிக்க வேண்டும். அது என்ன காரணம் என்று தெரியவில்லை பெரியார் அவர்கள் இஸ்லாத்தை பற்றி கூறிய பக்கங்களை மட்டும் யாரும் புரட்டுவதற்கு கூட தயாராக இல்லை.
பெரும்பான்மையான மக்கள் சமுகத்தின் மத்தியில் சிறுபான்மை மக்கள் சமுகத்தை பாதுகாக்கும் பொறுப்பும், ஆதிக்க சக்திகளின் அடக்குமுறைகளுக்கு எதிராக அடக்கப்படும் சமூகத்திற்காக ஆதரவாக நிற்பதுமே சிறந்த மனித நேயப்பண்பாகும்.
வியாழன், 9 பிப்ரவரி, 2012
சமூக வலைத்தளங்களும் – இஸ்லாமிய அடிப்படை வாதங்களும்
லேபிள்கள்:
kollumedutimes.com
இடஒதுக்கீடு:முஸ்லிம்களை பிரிக்க காங்.முயற்சி – மாயாவதி
காஜிபூர்:இடஒதுக்கீடு வழங்குவதாகக் கூறி முஸ்லிம் சமூகத்தைப் பிரிப்பதற்கு காங்கிரஸ் முயற்சிப்பதாக உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதி குற்றஞ்சாட்டினார்.
சட்டப் பேரவைத் தேர்தலுக்காக மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் மாயாவதி, காஜிபூரில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசினார்.
“முஸ்லிம்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் ஒருபோதும் விரும்பியது கிடையாது. இடஒதுக்கீடு என்ற பெயரில் அவர்களைத் தூண்டிவிட்டு, தவறாக வழி நடத்த முயற்சிக்கிறது. உண்மையில் முஸ்லிம்களை வாங்கு வங்கியாக மட்டுமே அந்தக் கட்சி பார்க்கிறது. பிரித்தாள்வதே அதன் கொள்கை” என்றார் மாயாவதி.
பொருளாதார நிலையின் அடிப்படையில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுவதை பகுஜன் சமாஜ் கட்சி ஆதரிக்கிறது. முஸ்லிம்களின் முன்னேற்றத்துக்காக பல்வேறு நலத்திட்டங்களை ஏற்கெனவே அரசு தொடங்கியிருக்கிறது. அதேபோல் உயர் ஜாதி ஏழைகளுக்கும் திட்டங்களை வகுத்திருக்கிறோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
லேபிள்கள்:
kollumedutimes
எகிப்து பாராளுமன்றத்தில் ‘அதான்’ அழைப்பை விடுத்த எம்.பி
கெய்ரோ:எகிப்து பாராளுமன்ற கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போது எம்.பி ஒருவர் பாங்கு(தொழுகைக்கான அழைப்பு) கூறியது சர்ச்சையானது. கடந்த செவ்வாய்க்கிழமை அஸர்(மாலைநேர) தொழுகை வேளையில் ஸலஃபி கட்சியான அந்நூரை சார்ந்த எம்.பி மம்தூஹ் இஸ்மாயீல் எழுந்து அதான் கூற துவங்கினார். உடனே சபாநாயகர் ஸஅத் அல் கதாதனி அமைதியாக அமருமாறு கூறினார். ஆனால் இஸ்மாயீல் அதனை பொருட்படுத்தாமல் தனது அதானை பூர்த்தி செய்தார்.
‘நீங்கள் வேண்டுமானால் வெளியே மஸ்ஜிதுக்கு சென்று அதான் கூறி தொழுகை நடத்துங்கள். இது விவாதம் நடைபெறும் இடம்’ என சபாநாயகர் கூறினார். ஊடகங்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு வேறு வழிகளை தேடலாம் என கூறிய சபாநாயகர் நடப்பு கூட்டத்தில் பேசக்கூடாது என எச்சரிக்கை விடுத்தார்.
பாராளுமன்ற கூட்டத்தின்போது எம்.பிக்களுக்கு தொழுகை நஷ்டப்படுவதாகவும், இது குறித்து தீர்வு காணலாம் என கூறிய சபாநாயகர் தனது வாக்குறுதியை பேணவில்லை என்றும் இஸ்மாயீல் குற்றம் சாட்டினார். அதேவேளையில் கால்பந்து விளையாட்டு இஸ்லாத்திற்கு எதிரானது என ஸலஃபி மார்க்க அறிஞர் ஷேக் அப்துல் முனீம் அல் ஷாஹத் ஃபத்வா(மார்க்க தீர்ப்பு) வழங்கினார். பின்னர் அவரது தீர்ப்பு சர்ச்சையை கிளப்பியதை தொடர்ந்து தனது தீர்ப்பை திருத்தி வெளியிட்டார். வர்த்தகம் அடிப்படையிலான கால்பந்து விளையாட்டை இஸ்லாம் தடுத்துள்ளது என அவர் விளக்கம் அளித்தார்.
கடந்த வாரம் எகிப்தில் கால்பந்து போட்டி நடக்கும் போது ஏற்பட்ட கலவரத்தில் 74 பேர் மரணமடைந்தனர். இதனைத் தொடர்ந்து ஷேக் அப்துல் முனீம் இந்த ஃபத்வாவை வழங்கினார்.
லேபிள்கள்:
kollumedutimes
முன்னெச்சரிக்கை நடவடிக்கை: தமிழக சட்டசபையில் செல்ஃபோனுக்கு தடை

சென்னை:பாரதீய பண்பாட்டை வாய்கிழிய பேசும் பா.ஜ.கவின் கர்நாடகா மாநில அமைச்சர்களின் ஒழுக்கச்சீரழிவு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில் தமிழ சட்ட சபையில் மொபைல் ஃபோனுக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த முடிவு, புதன்கிழமை நடைபெற்ற அவைக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
எம்.எல்.ஏ.க்கள் அவசரமாக தொலைபேசி பேச வேண்டுமென்றால், பேரவை ‘லாபி’யில் பொதுத் தொலைபேசிகளை வைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
கர்நாடக சட்டப் பேரவையில் செல்போனில் ஆபாச படம் பார்த்ததாகக் கூறப்படும் சம்பவத்தின் காரணமாக, மாநிலத்தின் பா.ஜ.க அமைச்சர்கள் 3 பேர் ராஜினாமா செய்துள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் தமிழக சட்டப் பேரவையில் நடைபெறாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
சட்டப் பேரவை சார்பில் விதிகள் மற்றும் நடவடிக்கைகளை எடுக்க தனித்தனியாக குழுக்கள் உள்ளன. அதில் மிக முக்கியமானது அவைக்குழு. அவையில் எம்.எல்.ஏ.க்களுக்கு என்னென்ன தேவைகள், அவற்றை எப்படி நிறைவேற்றுவது என்பன தொடர்பாக இந்தக் குழு முடிவெடுக்கும்.
இந்த நிலையில், அவைக்குழு புதன்கிழமை காலை கூடியது. தமிழக சட்டப் பேரவைக்குள் செல்போன் கொண்டு வர தடை விதிப்பது என முடிவு செய்யப்பட்டது. எம்.எல்.ஏ.க்கள் அவசரமாக யாருடனாவது பேச வேண்டும் என்று நினைத்தால், லாபியில் 10-க்கும் மேற்பட்ட பொதுத் தொலைபேசிகளை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக சட்டப் பேரவையில் ஏறக்குறைய சரிபாதி உறுப்பினர்கள் புதியவர்களாக உள்ளனர். அவர்கள் பேரவைக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட செல்போன்களையும் கூட எடுத்து வருகின்றனர். பேரவை நடைபெறும் நேரங்களில் அவை ஒலிப்பதும் உண்டு. இது குறித்து, பேரவைத் தலைவர் டி.ஜெயகுமார் பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளார். முதல்வர் ஜெயலலிதாவும் அறிவுறுத்தியுள்ளார்.
அவையின் மூத்த உறுப்பினர்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் தங்களது உதவியாளர்கள் அல்லது வாகன ஓட்டுநர்களிடம் செல்போன்களை கொடுத்து விட்டுத்தான் பேரவைக்குள் வருகிறார்கள். ஆனால், புதிய உறுப்பினர்கள் மட்டுமே அவற்றை உள்ளே எடுத்துச் செல்கின்றனர். பேரவை நடவடிக்கைகளை செல்போனில் படம் எடுத்ததாக திமுக எம்.எல்.ஏ. டி.ஆர்.பி.ராஜா, பேரவை நடவடிக்கைகளில் 10 நாள்கள் கலந்து கொள்ள முடியாதபடி ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ளார்.
இதுபோன்ற நிகழ்வுகளும், கர்நாடகப் பேரவையில் நடந்த சம்பவங்கள் போன்றும் நடைபெறாமல் தடுப்பதற்குப் பேரவைக்குள் செல்போனுக்குத் தடை விதிக்க அவைக்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத் தொடரில் இதற்கான அறிவிப்பை பேரவைத் தலைவர் டி.ஜெயகுமார் வெளியிடுவார் எனவும், அந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வரும் எனவும் தலைமைச் செயலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
லேபிள்கள்:
kollumedutimes
பிரதமரை அதிரவைத்த கருணாநிதியின் குடும்ப சொத்து பட்டியல்!
டெல்லி: முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்துக்கள் என 60-க்கும் மேற்பட்ட, பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது டெல்லியிலிருந்து வெளியாகும் தி அதர் சைட் பத்திரிகை.
இந்தப் பத்திரிகையின் ஆசிரியர் ஜார்ஜ் பெர்ணான்டஸ். கருணாநிதியின் நீண்ட கால நண்பரும் கூட.
இந்தப் பத்திரிகையில் வெளியாகியுள்ள விவரங்களைப் பார்த்து பிரதமர் உள்ளிட்ட டெல்லி தலைவர்கள் ஆடிப் போய்விட்டதாக பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள்.
அந்த பத்திரிகை வெளியிட்டு உள்ள பட்டியல்:
1. 6,124 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட கருணாநிதியின் கோபாலபுரத்து வீடு - மதிப்பு 5 கோடி.
2. முரசொலி மாறனின் கோபாலபுரத்து வீடு - மதிப்பு 5 கோடி.
3. 1,200 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட முரசொலி செல்வத்தின் கோபாலபுரத்து வீடு - மதிப்பு 2 கோடி.
4. கோபாலபுரத்தில் சொர்ணத்தின் வீடு - மதிப்பு 4 கோடி.
5. கோபாலபுரத்தில் மு.க.முத்துவின் வீடு - மதிப்பு 2 கோடி.
6. கோபாலபுரம் அமிர்தத்தின் வீடு - மதிப்பு 5 கோடி.
7. மகள் செல்வி, எழிலரசியின் கோபாலபுரம் வீடு - மதிப்பு 2 கோடி.
8. சி.ஐ.டி காலனியில் 9,494 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட இடத்தில் 3,500 சதுர அடிகளுக்கு கட்டப்பட்டு இருக்கும் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளின் வீட்டு மதிப்பு - 12 கோடி.
9. மண்ணிவாக்கம் கிராமத்தில் ராஜாத்தி அம்மாளுக்கும், கனிமொழிக்கும் இருக்கும் 300 ஏக்கரின் மதிப்பு 4.5 கோடி.
10. ராயல் ஃபர்னிச்சர் என்ற பெயரில் இருக்கும் ராஜாத்தி அம்மாளின் ஷாப்பிங் நிறுவனத்தின் மதிப்பு - 10 கோடி.
11. 2,687 சதுர அடிகள்கொண்ட நிலப்பரப்பில் 2,917 சதுர அடியில் கட்டப்பட்டு இருக்கும் மு.க.ஸ்டாலின் வேளச்சேரி வீட்டு மதிப்பு - 2 கோடி.
12. நுங்கம்பாக்கத்தில் இருக்கும் உதயநிதி ஸ்டாலினின் ஸ்னோ ஃபவுலிங் சென்டரின் சொத்து மதிப்பு - 2 கோடி.
13. சென்னை போட் கிளப்பில் இருக்கும் கலாநிதி மாறனின் 16 கிரவுண்ட் மாளிகையின் நில மதிப்பு மட்டும் - 100 கோடி.
14. கொட்டிவாக்கத்தில் இருக்கும் மாறன் சகோதரர்களின் பண்ணை வீட்டின் மதிப்பு - 10 கோடி.
15. போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் எம்.எம் இண்டஸ்ட்ரீஸின் மதிப்பு - 2 கோடி.
16. 6 கிரவுண்ட் பட்டா நிலத்திலும், 1,472 சதுர அடி புறம்போக்கு நிலத்திலும் அமைந்து இருக்கும் கோடம்பாக்கம் 'முரசொலி’ அலுவலகக் கட்டடத்தின் மதிப்பு - 20 கோடி.
17. மகாலிங்கபுரத்தில் 2 கிரவுண்ட் நிலத்தில், சன் கேபிள் விஷன் சொத்து மற்றும் தொலைக்காட்சி உபகரணங்களின் மதிப்பு - 5 கோடி.
18. சன் டி.வி-க்கு எம்.ஆர்.சி. நகரில் இருக்கும் 32 கிரவுண்டின் மதிப்பு - 100 கோடி.
19. கோரமண்டல் சிமென்ட் கம்பெனியில் இருக்கும் 11 சதவிகித பங்குகளின் மதிப்பு - 50 கோடி.
20. பெங்களூருவில் இருக்கும் செல்வத்தின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு - 4 கோடி.
21. பெங்களூரு - மைசூர் நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் செல்வியின் ஒரு ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு - 80 கோடி.
22. மாறன் சகோதரர்களின் 1.84 ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு - 120 கோடி.
23. பெங்களூருவில் 10 கிரவுண்டில் அமைந்திருக்கும் உதயா டி.வி. சேனலின் நில மதிப்பு - 108 கோடி.
24. பீட்டர்ஸ் ரோட்டில் இருக்கும் மு.க.தமிழரசுவின் 'ரெயின்போ இண்டஸ்ட்ரீஸின்’ மதிப்பு - 48 கோடி.
25. அந்தியூரில் இருக்கும் மு.க.தமிழரசுவின் 13 கிரவுண்ட் பண்ணை வீட்டின் மதிப்பு 30 லட்சம்.
26. புது டெல்லியில் இருக்கும் சன் டி.வி. அலுவலகத்தின் மதிப்பு - 50 கோடி.
27. எக்ஸ்பிரஸ் எஸ்டேட்டில் இருக்கும் பங்குகளின் மதிப்பு - தெரியவில்லை.
28. தினகரன் பப்ளிகேஷன்ஸ் - மதிப்பு தெரியவில்லை.
29. சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் - மதிப்பு தெரியவில்லை
30. முரசொலி அறக்கட்டளை - மதிப்பு தெரியவில்லை
31. ஒரு ஷேர் 48 என்ற கணக்கில் ஸ்பைஸ் ஜெட் ஏர்வேஸில் 37 சதவிகிதப் பங்குகளை கன்ஸாகரா நிறுவனத்திடம் இருந்து அமெரிக்காவின் 'வில்பர் ராஸ் அண்ட் ராயல் ஹோல்டிங்குஸ் சர்வீஸர்’ மூலமாக வாங்கப்பட்டது. இதை வாங்கிய சமயத்தில் 13,384 கோடிக்கு வாங்கியதாக கலாநிதி மாறனே பிரகடனம் செய்திருந்தார்.
32. மதுரை, மாடக்குளம் கிராமத்தில் தயாளு அம்மாள் அறக்கட்டளைக்கு இருக்கும் நிலத்தின் மதிப்பு - தெரியவில்லை.
33. தஞ்சாவூர் மாவட்டம் அகரத்திருநல்லூர் கிராமத்தில் கருணாநிதிக்கு இருக்கும் 21.30 ஏக்கரின் மதிப்பு - தெரியவில்லை.
34. திருவள்ளூர் மாவட்டத்தில் தயாளு அம்மாளுக்கு இருக்கும் 3.84 ஏக்கரின் மதிப்பு - 1 கோடி.
35. துர்கா ஸ்டாலினுக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் 3,680 சதுர அடி நிலத்தின் மதிப்பு - 60 லட்சம்
36. மதுரை வடக்கு தாலுக்கா - உத்தன்குடி கிராமத்தில் இருக்கும் அழகிரியின் 2.56 ஏக்கர் நிலத்தின் மதிப்பு 2 கோடி.
37. மதுரை வடக்கு தாலுக்கா காலாத்திரி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 7.53 ஏக்கரின் மதிப்பு - 2 கோடி.
38. மதுரை தல்லாகுளத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.5 ஏக்கரின் மதிப்பு - 5 கோடி.
39. மதுரை வடக்கு தாலுக்காவில் சின்னப்பட்டி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.54 ஏக்கரின் மதிப்பு - 40 லட்சம்.
40. மதுரை திருப்பரங்குன்றத்தில் அழகிரிக்கு இருக்கும் 12 சென்ட் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.
41. மதுரை தெற்கு தாலுக்காவில் மாடக்குளம் கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 36 சென்ட் நிலத்தின் மதிப்பு - 1 கோடி.
42. மதுரை தெற்கு பொன்மேனி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 18,535 சதுர அடி நிலத்தின் மதிப்பு - 2 கோடி.
43. மதுரை சத்திய சாய் நகரில் 21 சென்டில் உள்ள அழகிரி வீட்டின் மதிப்பு - 2 கோடி.
44. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுக்காவில் தொகரை கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 21.6 சென்ட் நிலத்தின் மதிப்பு - 60 லட்சம்.
45. மதுரை மாவட்டம் (நாகமலைப் புதுக்கோட்டை) உலியம்குளம் கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 5.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 20 லட்சம்.
46. மதுரை மாவட்டம் மேலமாத்தூர் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 12.01 ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.
47. மதுரை, திருமங்கலம் டி.புதுப்பட்டி கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 21.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.
48. கொடைக்கானல் மலையில் 82.3 சென்ட் சூழ இருக்கும் காந்தி அழகிரியின் பண்ணை வீட்டு மதிப்பு - 5 கோடி.
49. மாடக்குளம் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 18.5 சென்ட் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.
50. சென்னைக்கு அருகில் சோழிங்கநல்லூரில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 4,200 சதுர அடியின் மதிப்பு - 2.5 கோடி.
51. சென்னை திருவான்மியூரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 3,912 சதுர அடி நிலத்தின் மதிப்பு - ரூ 3 கோடி.
52. மதுரை சத்ய சாய்நகரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 4,378 சதுர அடிகொண்ட கல்யாண மண்டபத்தின் மதிப்பு - 3 கோடி.
53. சென்னை, மாதவரம் பால் பண்ணைக்கு அருகில் உள்ள ஆர்.சி.மேத்தா நகரில் இருக்கும் தயாநிதி அழகிரியின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு - 1 கோடி.
54. சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் இருக்கும் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 50 சென்ட் நிலத்தின் மதிப்பு - 2 கோடி.
55. மதுரை சிவரக்கோட்டையில் இருக்கும் அழகிரிக்கு சொந்தமான தயா இன்ஜினீயரிங் காலேஜ் மதிப்பு - தெரியவில்லை.
56. மதுரையில் 5 கிரவுண்டில் இருக்கும் தயாநிதி அழகிரியின் 8 மாடிகள்கொண்ட 'தயா சைபர் பார்க்’ மதிப்பு - தெரியவில்லை.
57. மதுரை பேருந்து நிலையத்துக்கு அருகில் இருக்கும் 'தயா டெக்னாலஜிஸ்’ என்ற நகர்ப்புற சொத்தின் மதிப்பு - 1 கோடி.
58. சென்னை அண்ணா சாலையில் இருக்கும் வணிக வளாகம் (கதவு இலக்க எண்: 271-ஏ) மதிப்பு - 5 கோடி. இது கனிமொழிக்குச் சொந்தமானது.
59. 'வெஸ்ட் கேட் லாஜிஸ்ட்டிக்ஸ்’ என்ற கம்பெனியில் கனிமொழிக்கு இருக்கும் பங்கின் மதிப்பு - 20 கோடி.
60. கலைஞர் டி.வி-யில் கனிமொழிக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு - 30 கோடி.
61. ஊட்டியில், வின்ட்ஸர் எஸ்டேட்டில் இருக்கும் 525 ஏக்கர் தேயிலை தோட்டத்தின் மதிப்பு - 50 கோடி. இது கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது.
62. கலைஞர் டி.வி-யில் தயாளு அம்மாளுக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு - 90 கோடி.
63. அந்தமான் தீவுகளில் இருக்கும் 400 ஏக்கர் கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது - மதிப்பு தெரியவில்லை
64. கூர்க் (குடகு மலை) காபி தோட்டம், கலைஞர் குடும்பத்துக்குச் சொந்தமானது - மதிப்பு தெரியவில்லை.
65. தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பெரிய நகரத்திலும் மல்டிப்ளெக்ஸ் கட்ட கலைஞர் குடும்பத்துக்குத் திட்டம் உள்ளது.
66. எஸ்.டி. கூரியர் என்ற கம்பெனிக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் மாறன் சகோதரர்களுடையதே.
67. தமிழ்நாடு ஹாஸ்பிடல்ஸுக்குப் பின்னால் இருக்கும் 'சன் மெடிக்கல் காலேஜ் மற்றும் மருத்துவமனை’ - மாறனின் மகள் அன்புக்கரசிக்கு சொந்தமானது.
68. சாய்பாபாவுக்கும் கருணாநிதியின் குடும்பத்துக்கும் ஏற்பட்ட ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை அடுத்து, ஆபட்ஸ்பரி வளாகத்தில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தை மாறன் சகோதரர்கள் கட்ட இருக்கும் மருத்துவமனைக்காக ஒப்படைக்க உள்ளார்கள்.
69. கோவை (புரூக் பாண்ட் சாலையில் இருக்கும் புரூக் ஃபில்ட்ஸ் வளாகத்தின் ஒரு பகுதியை) ஆர்.எம்.கே.வி. கடை அமைந்திருக்கும் ஒரு சொத்து கனிமொழிக்கு சொந்தமானது என்று பொதுமக்கள் நம்புகிறார்கள்.
- இவ்வாறு அந்தப் பத்திரிகை பட்டியல் இட்டுள்ளது.

தமுமுக மாநில பொதுசெயலாளர் ப. அப்துல் சமது வெளியிடும் பத்திரிகை அறிக்கை
சங்கரன்கோவில் பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும்!
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் 7.2.2012 அன்று இரவு நடந்த விரும்பத்தகாத சம்பவம் வருத்தமளிக்கிறது. ஊர்வலத்தில் வந்தவர்கள் நடத்திய தாக்குதலில் பள்ளிவாசலின் கண்ணாடிகள் நொறுங்கியுள்ளன. மேலும் முஸ்லிம்களுக்கு சொந்தமான வீடுகள், கடைகள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.. இதனால் பெரும் சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இத்தாக்குதலில் ஈடுபட்ட உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும். தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் என்று தமிழக அரசை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் கேட்டு கொள்கிறது.
லேபிள்கள்:
kollumedutimes
புதன், 8 பிப்ரவரி, 2012
தமிழகம் முழுவதும் வரலாறு காணாத மின்வெட்டு... வெறுப்பின் உச்சத்தில் மக்கள்!
சென்னை: தலைநகர் சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற பகுதிகளில் வரலாறு காணாத மின்வெட்டு நிலவுகிறது.
கோவை, ஈரோடு, காஞ்சிபுரம் போன்ற தொழில்வளம் மிக்க மாவட்டங்கள் இந்த மின்வெட்டு காரணமாக கடும்பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
திமுக ஆட்சியின் இறுதிக் கட்டத்தில் சென்னையில் 1 மணி நேரமும், ஊரகப் பகுதிகளில் 3 மணி நேரமும் மின்வெட்டு நிலவியது. ஆட்சி மாற்றத்துக்கு பிரதான காரணமாக அமைந்ததே இந்த மின்வெட்டுதான்.
ஆட்சிக்கு வந்தால் அடுத்த 6 மாதங்களுக்குள் மின்வெட்டை சீராக்கிவிடுவோம் என அதிமுக உறுதியளித்தது. ஆட்சியில் அமர்ந்த பிறகு, மின்வெட்டுக்கான காரணங்களை மட்டுமே அடுக்கினார்களே தவிர, அதைத் தீர்ப்பதற்கு உருப்படியான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. அதிமுக ஆட்சி அமைந்து 8 மாதங்களாகியுள்ள நிலையில் மாநிலம் முழுவதும் மின்வெட்டு தாறுமாறாக உள்ளது.
சென்னையில் 1 மணி நேரம் மின்வெட்டு என்று சொன்னாலும், அறிவிக்கப்படாமல் கூடுதலாக அரை மணி அல்லது 1 மணிநேரத்துக்கு மின் வெட்டு நிலவுகிறது. எப்போது கேட்டாலும் பராமரிப்பு என காரணம் கூறுகிறார்கள் மின்வாரிய ஊழியர்கள்.
8 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை...
கிராமப் புறங்களின் நிலைமைதான் சொல்லத் தரமற்றுப் போயுள்ளது. சில பகுதிகளில் 6 மணி நேரம், சில மாவடங்களில் 8 மணி நேரம், வேலூர் போன்ற வட மாவட்டங்களில் சில நாட்களில் 12 மணி நேரம் கூட மின்வெட்டு நிலவுகிறது.
பொங்கல் பண்டிகை சமயத்தில் வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் 8 மணி நேரம் மின்சாரமின்றி மக்கள் அவதிப்பட்டதை நேரில் பார்க்க முடிந்தது.
முன்பெல்லாம் என்னதான் மின் தட்டுப்பாடு இருந்தாலும், மழைக்காலத்தில் மின்வெட்டு என்பதே இருக்காது. கடந்த திமுக ஆட்சி முழுவதுமே, மழைக் காலங்களில் மின்வெட்டு இல்லாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்த ஆண்டோ, 'மழையாவது வெயிலாவது... கட் பண்ணு கரண்டை' என்கிற ரீதியில் நிலைமை உள்ளது. மழை வெளுத்தெடுத்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் கூட சென்னையில் 2 மணி நேரமும், பிற பகுதிகளில் 6 மணி நேரமும் மின்வெட்டு நிலவியது.
குறிப்பாக மாணவர்களின் ஆண்டு இறுதித் தேர்வுகள் நடக்கும் இந்தத் தருணத்தில் மின்சாரம் அடியோடு இல்லாமல், மக்கள் லாந்தர்கள், மெழுகுவர்த்திகள், சிம்னி விளக்குகளுக்கு மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, இன்றிலிருந்து அதிகாரப்பூர்வமாகவே 8 மணி நேர மின்வெட்டை சென்னை தவிர்த்த பிற பகுதிகளில் அமல்படுத்த மின்வாரியம் முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நகரம், கிராமம் என்ற பேதமின்றி இந்த 8 மணி நேர மின்வெட்டு இருக்கும்.
மின்வெட்டு நேரங்கள்:
காலை, 6 முதல், 9 மணி வரை, 3 மணி நேரமும்; பகல், 12 முதல், மாலை, 3 மணி வரை, 3 மணி நேரமும்; மாலை, 6 முதல், இரவு, 7 மணி வரை மற்றும் 8 முதல், 9 வரை, தலா 1 மணி நேரம் என, மொத்தம், 8 மணி நேரமும் மின்வெட்டு இருக்கும்.
சில பகுதிகளில் காலை, 9 மணி முதல், 12; மாலை, 3 முதல் 6; இரவு, 7 முதல், 8 மற்றும் 9 முதல், 10 என, 8 மணி நேரம்.
சென்னையில் மட்டும் 2 மணி நேரம் கூடுதலாக மின்வெட்டு நீடிக்கும் எனத் தெரிகிறது.
தொழில்துறை முடங்கும் நிலை
இந்த மின் வெட்டு காரணமாக தொழில்துறை அடியோடு முடங்கும் சூழல் உருவாகியுள்ளது. ஏற்கெனவே கோவையில் 40000 தொழிற்சாலைகளில் 80 சதவீத உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர் மாவட்டங்களில் சிறு தொழில்கள், விசைத் தறிகள் இயக்கம் முடங்கியுள்ளது. ஈரோட்டிலும் நிலைமை மோசமாகியுள்ளது.
அதேநேரம் பெரும் தொழில் நிறுவனங்கள் தடையின்றி மின்சாரத்தை தனி வழியில் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது!
திமுக ஆட்சிக் காலத்தில் போடப்பட்டுள்ள 4 புதிய மின் திட்டங்களும் செயல்பாட்டுக்கு வர 2013 அல்லது 2014 ஆகலாம். அந்தத் திட்டங்கள் வந்தால் மட்டுமே தமிழக மக்களின் இருட்டுக்கு ஓரளவு விடிவு பிறக்கும். அதுவரை?

துபை அல் மனார் சென்டரில் கோவை அய்யூப்
லேபிள்கள்:
kollumedutimes
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)