AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

ஞாயிறு, 29 ஜனவரி, 2012

மனிதனின் ஞாபக சக்தியும்!! அதன் எண்ணற்ற சிறப்பு அம்சங்களும்


மனிதனுக்கு உள்ள சிறப்பம்சங்களில் ஒன்று, அவனது நீளமான, ஆழமான ஞாபகத் திறன்.
ஆனால் ஓர் உண்மை தெரியுமா?
மனித மூளையின் செல்களில் 96 சதவிகிதம், ஞாபக சக்தி தொடர்பான பணிகளில் ஈடுபடுவதில்லை. மனிதன் தனக்குள்ள மொத்த நினைவாற்றல் திறனில் 4 சதவிகிதத்தைத்தான் பயன்படுத்துகிறான். உலக மக்களில் ஒரு சதவிகிதத்தினரே தங்களின் ஞாபகசக்தியைத் திறமையுடன் பயன்படுத்துகின்றனர் என்று தெரியவந்திருக்கிறது.
அபார ஞாபகத்திறன் கொண்டவர்களும் உள்ளனர். அளப்பரிய உண்மைகளையும், எண்ணிக்கைகளையும் அவர்களால் நினைவில் வைத்திருக்க முடிகிறது.
அதேபோல, கால்குலேட்டர் போல விரைவாகக் கணக்குகளைச் செய்து முடிக்கும் நபர்களும் உள்ளனர். அத்தகையவர்கள் தங்களின் நினைவாற்றல் திறனில் ஏறக்குறைய 50- 60 சதவிகிதத்தையே பயன்படுத்துகின்றனர்.
புலன் அறிவு
பல்வேறு வழிகளில், பல்வேறு புலன்களின் மூலம் நாம் பலவற்றை அறிகிறோம். பார்வை, கேள்வி, சுவை, தொடுபுலன், செயல் ஆகிய பல உணர்வுகளின் மூலம் நமக்கு நினைவு பெறப்படுகிறது. பல்வேறு புலன்களின் மூலம் நமது நினைவுக்குப் பல்வேறு விஷயங்கள் கொண்டு வரப்படுகின்றன.
சாதாரணமாக, ஒன்றுக்கு மேற்பட்ட புலன்களின் மூலமாகவே நினைவு ஏற்படுகிறது. பெருமளவுச் செய்திகள் பார்வையின் மூலமாகவே பெறப்படுகின்றன.
இதைச் சரிவரப் பயன்படுத்த வேண்டும். எனினும், பிற புலன்களையும் நன்கு தூண்டிவிடுவது அவசியமாகும். பல்வேறு புலன்களின் மூலம் பெறப்படும் விவரங்களைத்தான் மனிதனால் நன்கு நினைவு வைத்துக்கொள்ள முடிகிறது. ஒரு முக்கியமான வாசகத்தைப் படித்துப் புரிந்துகொண்ட பின், அதை உரக்க மீண்டும் சொல்வது பயனளிக்கும். அதன்மூலம் கேள்விப் புலனும், செயல் பதிவும் நன்கு வலுப்பெறும்.
பிம்ப நினைவு
கிடைத்த விவரங்களை நினைவில் கொண்டிருப்பதை `பிம்ப நினைவு’ என்று கூறலாம். அந்த விவரங்கள் அனைத்தையும் பகுத்து ஆராய்ந்து, பழையவற்றுக்கும், புதியவற்றுக்கும் தொடர்புகளை நிறுவுவது `தர்க்க நினைவு’ ஆகும்.
அதனால்தான் நாம் சரிவர அறிந்திராதவற்றை விட, நன்கு அறிந்துள்ளவற்றை நினைவில் வைத்திருப்பது எளிதாக உள்ளது. பொருள் புரியும் வார்த்தைகளை நினைவில் கொள்வது, பொருளற்ற சொற்குவியலை நினைவில் வைத்திருப்பதை விட எளிதல்லவா?
உணர்ச்சி நினைவுகள்
உணர்ச்சி நினைவும் மக்களுக்கு உண்டு. அறிவு அல்லது தர்க்க நினைவைக் காட்டிலும் உணர்ச்சி நினைவு வலுவானது. அதனால்தான் சுவையான புத்தகங்களை வாசிப்பது, திரைப்படங்களையும், நாடகங் களையும் காண்பது போன்றவை நம் நினைவை விட்டு அகலாதிருக்கின்றன.
ஆகவே நாம் கற்றுக்கொள்ள வேண்டியவற்றில் சில சுவையான அம்சங்களைக் கண்டுபிடித்தால் அவற்றை எளிதாகக் கற்றுக்கொள்ள முடியும்.

தமுமுக-மமக மாநில பொதுக்குழுவில்


இன்று நடைபெற்ற தமுமுக-மமக மாநில பொதுக்குழுவில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு......
தமுமுக மற்றும் மமக மாநில தலைவராக
மௌலவி JS. ரிபாயி
JS Rifaai

தமுமுக மாநில பொதுச்செயலாளராக
P. அப்துல் சமது
Abdul samad

தமுமுக மற்றும் மமக மாநில பொருளாளராக
O.U. ரஹ்மத்துல்லாஹ்
OU Rahmathullah

மமக மாநில பொதுச்செயலாளராக
M. தமிமுன் அன்சாரி


Thamimun Ansari

ஆகியோர் ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

விரிவான தகவல்கள் விரைவில் வெளியிடப்படும். இன்ஷா அல்லாஹ்.....

தமுமுக-மமக வின் மாநில பொதுக்குழு

 பொதுக்குழு புகைப்படங்கள்:









 பொதுக்குழு புகைப்படங்கள்:









தமுமுக-மமக வின் மாநில செயற்குழு நேற்று நடைபெற்று முடிந்ததை அடுத்து, இன்று காலை தாம்பரம் அருகே உள்ள மேடவாக்கம் காயிதே மில்லத் கல்லூரியில் தொடங்கியதமுமுக- மமக வின் பொதுக்குழு பேரா. டாக்டர் M.H. ஜவாஹிருல்லாஹ் அவர்களின் அறிமுக உரையை தொடர்ந்து, தமுமுகவின் பொதுசெயலாளர், சகோ. செ. ஹைதர் அலி அவர்களின் உரையோடு நடைபெற்றது.

வெள்ளி, 27 ஜனவரி, 2012

10 மற்றும் 12ஆம் படிக்கும் மாணவர்களுக்கு போட்டோவுடன் (Photo) மதிப்பெண் சான்றிதழ் தயாராகிறது!


பிளஸ் 2 மாணவர்களுக்கு போட்டோவுடன் கூடிய மதிப்பெண் சான்று தயாராகி வருகிறது. இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வில், 7.5 லட்சம் பேரும், பத்தாம் வகுப்பு தேர்வில் 11 லட்சம் பேரும் பங்கேற்க உள்ளனர்.
பிளஸ் 2 மாணவர்களுக்கு பிப்ரவரி 2ம் வாரத்தில் பிராக்டிக்கல் தேர்வு நடக்க உள்ளதால், அவர்களுக்கு பதிவு எண்கள் விரைவில் வழங்கப்பட உள்ளது. இம்மாத இறுதியில் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலம் பள்ளிகளுக்கு பதிவெண்கள் வழங்கப்படும்.
இந்த ஆண்டு போட்டோவுடன் கூடிய மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. இதனால், மாணவர்களின் போட்டோ, சான்றிதழில் பதிவு செய்யப்பட்டு, பதிவெண்கள் பதிவு செய்யும் பணிகள் இரவு பகலாக நடக்கிறது.
கிண்டியில் உள்ள டேட்டா சென்டரில் தினமும் ரூ.200 சம்பளத்தில் 30க்கும் மேற்பட்ட ஊழியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். சமச்சீர் கல்வி அமலாக்கப்பட்ட நிலையில், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் இந்த ஆண்டு, அறிவியல் பாடத்திற்கு பிராக்டிக்கல் தேர்வு நடக்க உள்ளது. இதை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளே நடத்திக் கொள்ள அதிகாரமளித்துள்ளனர்.

இன்று கூடியது மாநில செயற்குழு


தமுமுக- மமக வின் மாநில நிர்வாகக்குழு இன்று காலை 10 மணிக்கு தாம்பரத்தில் நடைபெற்றது. தொடர்ந்து 11 மணி அளவில் தலைமை செயற்குழு தொடங்கியது. இந்த செயற்குழுவில் தமிழகம் முழுவதும் உள்ள தமுமுக - மமக மாவட்ட நிர்வாகிகளும், மாநில செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இதன் தொடர்ச்சியாக, நாளை மேடவாக்கத்தில் தமுமுக-மமக வின் மாநில பொதுக்குழு நடைபெற உள்ளது (இன்ஷா அல்லாஹ்).


செயற்குழு புகைப்பட காட்சிகள்
மாநில செயற்குழு










62 வது குடியரசு தினத்தை முன்னிட்டு 8 பகுதிகளில் மருத்துவ மற்றும் இரத்த தான முகாம்


62 வது குடியரசு தினத்தை முன்னிட்டு வட சென்னை சார்பாக 8 பகுதிகளில் மருத்துவ மற்றும் இரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் மாநில பொதுசெயலாளர் செ. ஹைதர் அலி, மாநில செயலாளர் P.S. ஹமீது மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


R.K. நகர தமுமுக சார்பாக நடைபெற்ற இரத்ததான முகாம்




இராயபுரம் பகுதியில் நடைபெற்ற இரத்ததான முகாம்



துறைமுகம் பகுதியில் நடைபெற்ற கண் சிகிச்சை மற்றும் தைராய்டு முகாம்.



பெரம்பூர் பகுதியில் நடைபெற்ற இரத்ததான முகாம்




குளத்தூர் பகுதியில் நடைபெற்ற மகளிர் பொது மருத்துவ முகாம்.




திருவிக நகர் பகுதியில் நடைபெற்ற கண் சிகிச்சை முகாம்.



எழும்பூர் பகுதியில் நடைபெற்ற கண் சிகிச்சை முகாம்



வில்லிவாக்கம் பகுதியில் நடைபெற்ற கண் சிகிச்சை முகாம்