AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

சனி, 3 டிசம்பர், 2011

இந்திய உணவுப் புரட்சியை வறட்சியாக மாற்ற மன்மோகன் அரசு சதி?


இந்தியாவில் இந்திரா காந்தியின் தொலை நோக்குப் பார்வையால் 1967-ல் தொடங்கப்பட்ட கோதுமைப் புரட்சி (பின்னர் அதுவே பசுமைப்புரட்சியானது) காரணத்தால், உணவில் தன்னி றைவை நோக்கிய பயணம் தொடங்கப்பட்டு நல்லதோர் அடித்தளம் அமைந்துவிட்டதால், மன்மோகன் சிங் பிழைத்தார். அந்த நன்றி உணர்வு இல்லாமல் அப்படிப்பட்ட உணவுத் தன்னி றைவு அடித்தளத்திலுள்ள கற்களை ஒவ்வொன்றாகக் கன்னக்கோல் போட்டுக் கழற்றும் மன்மோகன், பொருளாதார மண்டலம் என்ற லைசென்சை? வழங்கி நொய்டாவில் மட்டு மல்ல, இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் "விவசாய நில அபகரிப்பை' நிகழ்த்தி வருகிறார்.

இந்திரா காந்தியைப்போல் தொலைநோக்குப் பார்வையுள்ள ஒரு தலைவர் மத்திய கிழக்கு நாடுகளிலும், லத்தீன் அமெரிக்க நாடுகளிலும், ஆப்பிரிக்க நாடுகளி லும் தோன்றி, உண்ணும் உணவில் தன்னிறைவுத் திட்டம் தீட்டாததால், ஊழலுடன் உணவுப் பிரச்னையும் இணைந்து, மக்கள் கிளர்ச்சி செய்து, அரசியல் மாற்றமே நிகழ்ந்து வருகிறது.

உணவு விலையேற்றம், வேலை யில்லாத் திண்டாட்டம், நிதி நெருக்கடி, கல்வியில் குறைந்த முதலீடு, உணவுப் பற்றாக்குறை என்று பல பிரச்சனைகளால் பொருளாதாரம் இன்று ஆட்டம் கண்டு வருகிறது.

உலகப் பொருளாதாரத்தை ஆட்டிப் படைக்கும் உலக ஏகபோக உணவு வர்த்தகர்கள் வேண்டு மென்றே உணவு நெருக்கடியை ஏற்படுத்தித் தந்திரத்தில் நரிகளாகவும் தன்னலத்தில் புலிகளாகவும் உள்ளதை எகிப்து நிகழ்ச்சி வெளிப்படுத்தக் கூடியது. எகிப்தின் உணவுப் பற்றாக்குறை ரஷிய இறக்குமதியால் ஈடு செய்யப்படுகிறது.

கடந்த முறை ரஷியாவில் போதிய உபரி இருந்த நிலையில் கிளன்கோர் ரஷியாவிலிருந்து எகிப்துக்கு கோதுமை ஏற்று மதியைத் தடைசெய்ய ரஷிய அரசை வற்புறுத்தியுள்ளது. ரஷியாவும் அவ்வாறு தடை செய்யக் காரணம் சுவிட்சர்லாந்து நிறுவனமான கிளன்கோர் ரஷிய உணவு வர்த்தகத்தில் பெரும் பங்கு வகித்து வருகிறது.

ஒரு குளம் வற்றும்போது மீன்கள் பிழைத்து இனப்பெருக்கம் செய்ய ஆற்றுநீரைத் திருப்பிவிடாமல் வற்றிய குளத்தில் மீன்பிடிக்கும் உலக வர்த்தகர்கள் ஒன்றுகூடி உலக விவசாயத்தை உயர்த்தும் தொலைநோக்குத் திட்டம் ஒன்றை தாவோஸ் நகரில் அமெரிக்க ஆசியுடன் வழங்கியுள்ளனர். உலகத்தில் உணவு உற்பத்தி குறைந்து வருவதால் ஆண்டுக்கு 2 சதவீதம் உணவு உற்பத்தி பெருகவும், 2 சதவீதம் பசுமையக விளைவைக் குறைக்கவும், 2 சதவீதம் வறுமையைப் போக்கவும் திட்டம் தயாராகிவிட்டது.

உலகின் மாபெரும் உணவு அரக்கர்களான 17 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன யார் அவர்கள்? என்று கேட்டால், கார்கில், கோகோ கோலா, டூபாண்ட், ஜெனரல் மில்ஸ், பெப்சி, கிராஃப்ட்ஃபுட், சேப் மில்லர், ஆர்ச்சர் டேனியல்ஸ், மிட்லாண்ட், பி.ஏ.எஸ்.எஃப், மெட்ரோ ஏ.ஜி, யூனிலிவர், சைன்ஜெண்டா, வால்மார்ட், யாரா இண்டர்நேஷனல், பஞ்சி லிமிடட். யு.எஸ். எய்டின் கைங்கர்யம் இது.

உலக விவசாயம் முற்றிலுமாகத் தொழில் நிறுவனக் கைப்பற்றாக மாற்றும் திட்டம் அமெரிக்க எய்ட் என்று கூறப்படும் யு.எஸ். ஏஜன்சி ஃபார் இண்டர்நேஷனல் டெவலப்மெண்ட் தயாரித்துள்ள சதித் திட்டம் யு.எஸ். எய்டின், நிர்வாக இயக்குநர் ராஜீவ் ஷா, "உணவில் பொதுத்துறையுடன் தனியார் கூட்டுறவு வளர்ந்து உற்பத்தி உயர வளரும் நாடுகள் முதலீடு செய்ய வேண்டும்'' என்று தாவோஸில் கூறியுள்ளார்.

உலக வர்த்தக அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள 149 நாடுகளில் 105 நாடுகளின் உணவுத் தேவை இறக்குமதியை நம்பியுள்ளன. வடக்கு நாடுகள் உணவு வழங்கும் நாடுகளாகவும் தெற்கு நாடுகள் உணவுக்காகத் திருவோடு ஏந்தும் நாடுகளாகவும் மாறிவிட்ட சூழ்நிலையில் இந்திய நிலை என்ன? இந்தியா வையும் திருவோடு ஏந்த வைக்கும் ஏற்பாடுகளில். சர்தார்ஜி அலுவாலியா தீவிர மாயுள்ளார்.இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு சிகாகோ வர்த்தகப் பள்ளி நிறுவனத்தின் பொருளாதாரப் பேராசிரியர் ரகுராம் ராஜன் என்பவர் நிதி ஆலோசகராகவும் விளங்கி வருகிறார். "இன்னமும் ஏன் 60 சதவீத மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்வது வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை'' என்றும் விவசாயத்துக்கு 5 சத மக்கள் போதுமானது என்றும் கூறியுள்ளார். ரகுராம் ராஜன் ஓதிய வேதவாக்கை அப்படியே பிரகடனம் செய்யும் மன்மோகன் சிங், "இந்திய விவசாய வளர்ச்சிக்கு விவசாயிகள் முட்டுக்கட்டையாக உள்ளதால் - அரைக்காணி, காக்காணியெல்லாம் வெளியேறி வேறு பணிகளில் ஈடுபட வேண்டும்'' என்று கூறியுள்ளதைக் கேட்டு... "மூட்டையைக் கட்டிக்க... பட்டணந்தான் போகலாமடி'' என்று விவசாயிகள் கிளம்பி விட்டதை மக்கள் தொகைப் புள்ளிவிவரமும் நிரூபிப்பதாயுள் ளது.

2001-லிருந்து 2011-க்கு வரும்போது சுமார் 9 கோடி மக்கள் நகர்ப்புறம் வந்துள்ளதை எடுத்துக்காட்டுகிறது. மொத்த மக்கள்தொகை 2011-ல் 121 கோடி. இதில் 83.3 கோடி மக்கள் கிராமத்தில் உள்ளதாக ஒரு கணக்கு. - அதாவது 70 சதவீதம் இருப்பினும் இவர்களில் சரி பாதி விவசாயம் சாராத பணியில் ஈடுபட்டவர்களாக இருக்க வாய்ப்புண்டு. கிராம மக்கள் அதாவது கிராமத்தில் வசித்தாலும் விவசாயம் செய்வோர் என்று இன்றைய தொழில்மய உலகில் கணக்கிட முடியாது. யு.எஸ். எய்ட் கூறுவதையெல்லாம் மன்மோகன் சிங் நிறைவேற்றிய வண்ணம் உள்ளார். அன்னாரின் நம்பிக்கைக்குப் பாத்திரமான அலுவாலியா அண்மையில் ஓமானி நிறுவனத்துக்கு ஏற்றுமதிக்குரிய விவசாய உற்பத்தியைத் தொடங்க அழைப்பு விடுத்துள்ளார். ஏற்கெனவே நீண்டகாலமாகச் செயல்பட்டுவந்த வேளாண் விளைபொருள் மார்க்கெட் கமிட்டிச் சட்டத்தை அகற்றிய அலுவாலியா, இந்தியத் தொழில் வர்த்தக அமைப்புக் கூட்டணியை இன்பத்தில் ஆழ்த்தியுள்ளார்.

சிறு விவசாயிகளின் நலன் களைக் காப்பாற்றி வரும் மார்க்கெட் கமிட்டிகள் மெல்ல மெல்ல மூடப்பட்டு அந்த இடத்தைப் பன்னாட்டு ஏகபோகங் கள் ஆக்கிரமிக்கும். 2005-ல் மார்க்கெட் கமிட்டி சட்டத்தில் உணவுத்தொழில் நிறுவனம் விரும்பும் உகந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அடுத்த கட்டம், பொதுவிநியோகம். உணவு மானியம் எல்லாம் நிதிநெருக்கடியைக் காரணம்காட்டி உணவு வர்த்தகத்தில் தனியார் நுழைவு படிப்படியாக அனுமதிக் கப்படலாம். ஏனெனில், திட்டக்கமிஷன் பொருளியல் வல்லுநர்கள், விஞ்ஞானிகள், அரசுப் பணித்துறைச் செயலர்கள் போன்றோர் சுதந்திர வணிகம், சில்லறை வணிகத்தில் தொழில் நிறுவன ஆதிக்கம் - உணவுச்சங்கிலி என்று அமெரிக்காவில் காண் பவைகளை இந்தியாவுக்குள் கொண்டுவரத் துடிக்கின்றனர். இப்படிக் கொணர்வதன் மூலமே விவசாயத்தை உயிர்த்துடிப்பாக மாற்றலாம் என்று பேசுகின்றனர்.ஏறத்தாழ இன்றைய இந்தியா விவசாயத்தைக் கார்ப்ப ரேட்டுகளுக்கு வழங்க முன்வந்து விட்டது. விவசாயிகளே சமூகத்துக்கு பாரமாகிவிட்டனர் என்பதால், அரசின் கொள்கையே விவசாயிகளை ""மூட்டையைக் கட்டிக்கோ, பட்டணம்போய் பிழைச் சுக்கோ'' என்று சொல்லாமல் சொல்லிவிட்டது. பாரம்பரியம் என்ற பேச்சே காதில் விழ வேண்டாம். விதை விற்பனையில் மான்செண்டோவின் ஏகபோகம் இந்தியாவில் கொடிகட்டிப் பறக்கிறது.

உலக வர்த்தகத்தில் ஒழுங்கு முறையற்ற ஊக வணிகம் 2002-ல் 0.77 ட்ரில்லியன் (ஒரு ட்ரில்லியனுக்கு 12 பூஜ்ஜியங்கள்) என்ற நிலை இன்று 8 ட்ரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இந்தியா நீங்கலாக உணவு வர்த்தகத்தைக் கைப்பற்றிவிட்ட பன்னாட்டு ஏகபோகங்கள் உணவு இறக்குமதியை நம்பி வாழும் நாடுகளில் உணவு விலையை உயர்த்தி விட்டன. பசியுடன் வேலையின்மையும் சேர்ந்து ஏழை நாடுகளைத் துயரிலாழ்த்திவிட்டதால் மக்கள் கிளர்ந்தெழுந்து அந்தந்த நாட்டுத் தலைவர்களைக் குற்றவாளி யாக்கினாலும் நிஜமான குற்ற வாளி நியூயார்க்கின் வால்தெரு. நிதி விற்பன்னர்களின் இப் பொன்னகரத்திலிருந்து வெளிவரும் விஷவாயுவுடன் எண்ணெய் விலையும் பற்றி எரிவதால் ஏழை நாடுகளின் வயிற்றில் பசித் தீ கொழுந்துவிட்டு எரிகிறது. உணவு உத்தரவாதச் சட்டம் இயற்றப் போகும் மன்மோகன் அரசு, குறைந்தபட்சம் இந்திய விவசாயிகளைக் கார்ப்பரேட்டுகளுக்கு அடிமையாக்காமல் மீண்டும் உணவில் தன்னிறைவை நோக்கித் திட்டமிடுவதன் மூலமே உணவுக்கு உத்தரவாதம் வழங்க முடியும். இல்லாவிட்டால் உலக உணவு வர்த்தகப் புலிகளுக்கு இந்தியா இரையாகிவிடும்.

நரோடா பாட்டியா கூட்டுப் படுகொலை: எஸ்.ஐ.டிக்கு நீதிமன்றம் நோட்டீஸ்


அஹ்மதாபாத்:2002-ஆம் ஆண்டு  குஜராத் முஸ்லிம் இனப் படுகொலையின் போது நிகழ்ந்த நரோடா பாட்டியா கூட்டுப் படுகொலையில் போலீஸ் உயர் அதிகாரிகளின் பங்கினைக் குறித்து மேலும் விசாரிக்கவேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் அளித்த மனு மீதான விசாரணையில் சிறப்பு புலனாய்வு குழுவிற்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
முன்னாள் குஜராத் டி.ஜி.பி பி.சி பாண்டே உள்பட 4 உயர் போலீஸ் அதிகாரிகளை இவ்வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கவேண்டும் என
மனுவில் கூறப்பட்டிருந்தது. நோட்டீஸிற்கான பதிலை இம்மாதம் ஏழாம் தேதிக்குள் அளிக்கவேண்டும் என சிறப்பு நீதிபதி ஜோல்ஸனா யக்னிக் எஸ்.ஐ.டிக்கு உத்தரவிட்டுள்ளார்.
2002-ஆம் ஆண்டு நகர போலீஸ் கட்டுப்பாட்டு அறையின் பொறுப்பை வகித்த மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி ராகுல் சர்மா சேகரித்த தொலைபேசி உரையாடல் ஆவணங்களின் அடிப்படையில் மேலும் விசாரணை நடத்தவேண்டும் என்பது மனுதாரர்களின் கோரிக்கையாகும். இச்சம்பவத்தின் பின்னணியில் உள்ள குற்றகரமான சதித் திட்டத்தையும், கடுமையான கடமை தவறலை குறித்தும் விரிவாக விசாரித்து குற்றவாளிகளை சட்டத்தின் முன்னால் கொண்டுவர வேண்டும். தொலைபேசி உரையாடல்களை விரிவாக ஆராய்ந்தால் நீதிமன்றத்திற்கு இது தெரியவரும்.
உயர் போலீஸ் அதிகாரிகள் குற்றவாளிகளுடன் தொடர்பு கொண்டதும், சில குற்றவாளிகள் பா.ஜ.க தலைவர்களுடன் தொடர்பு கொண்டதும் கூட்டுப் படுகொலைகள் தீவிரமாக நடந்த 2002 பிப்ரவரி 28-ஆம் தேதி கட்டுப்பாட்டு அறை ஆவணங்களில் ஆதாரம் உள்ளன. முன்னால் டி.ஜி.பி பி.சி.பாண்டே, டி.சி.பி பி.பி.கோண்டியா, ஜெ.சி.பி.எம்.கெ.டண்டன், நரோடா போலீஸ் இன்ஸ்பெக்டர் கெ.கெ.மைசூர்வாலா ஆகியோரை குற்றவாளிகளாக சேர்க்கவேண்டும். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் அளித்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளது.

வருகிறது முஸ்லிம் ஃபேஸ்புக்!


இஸ்தான்புல்:ஃபேஸ்புக்கின் மாதிரியில் முஸ்லிம் இளைஞர்களுக்காக சமூக இணையதளம் ஒன்று துவங்கவிருக்கிறது.
ஸலாம்வேர்ல்ட்.காம் என்ற பெயரிலான இணையதளம் அடுத்த வருடம் துவங்கும். முஸ்லிம் தொழிலதிபர்கள் சிலர் இத்திட்டத்தை துவக்க உள்ளனர். இளைஞர்களிடையே பொதுவான பார்வை மற்றும் இஸ்லாத்தின் விழுமியங்களை பரப்புரை செய்வதற்கு இந்த இணையதளத்தை துவங்க உள்ளதாக இதன் நிறுவனர்களில் ஒருவரான அஹ்மத் அஸிமோவ் தெரிவித்துள்ளார்.
இஸ்தான்புல்லை தலைமையிடமாக கொண்ட இந்த இணையளத்திற்கு மாஸ்கோவிலும், கெய்ரோவிலும் அலுவலகங்கள் செயல்படும். 30 நாடுகளில் ஒருங்கிணைப்பாளர்கள் செயல்படுவர். மூன்று வருடங்களுக்குள் 50 மில்லியன்(5 கோடி) பயனீட்டாளர்களை ஈர்க்க இயலும் என நம்புவதாக அஸிமோவ் கூறினார்.

வெள்ளி, 2 டிசம்பர், 2011

லால்பேட்டையில் மாணவர்கள் எய்ட்ஸ் விழிப்புணர்வு ஊர்வலம்



உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு  லால்பேட்டை  இமாம் கஸ்ஸாலி மெட்ரிக் மேல்நிலைப்  பள்ளி மாணவர்கள் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
லால்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் ஏ.ஆர்.சபியுல்லாஹ்  தலைமை தாங்கினார், முஸ்லிம் பட்டதாரிகள் கல்விச் சங்க தலைவர் நஜீர் அஹமது  சிறப்புரை ஆற்றினார்.
அஹமது அலி,முஹம்மது ஹஸன்,அஹமதுல்லா, ஹாரிஸ் அஹமது ஆகியோர் முன்னிலை வகித்தார்.
சட்டமன்ற உறுப்பினர் முருகுமாரன் பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
பேரணி பள்ளியில் புறப்பட்டு முக்கியா வீதி வழியாக சென்ற பேரணி மீண்டும் பள்ளியை சென்றடைந்தது.     thanks   lalpet net

முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாதிகளாக சித்தரித்த ஊடகங்கள்


பாட்னா:பீகார் மாநிலம் மதுபானி மாவட்டதில் கடந்த 24ஆம் தேதி ஜமாலி மற்றும் முஹம்மது அஜ்மல் ஆகிய இரு இளைஞர்களை டெல்லி காவல்துறையினர் அப்பகுதி காவல்துறையினரின் உதவியோடு  கைது செய்தனர். அவர்கள் மீது என்ன குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது? அவர்கள் எதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்பதை டெல்லி காவல்துறையினர் இதுவரை வெளியிடவில்லை. ஆனால் சில பத்திரிக்கைகள் எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் தீவிரவாதத்தோடு தொடர்புபடுத்தி செய்தி வெளியிட்டுள்ளனர்.

பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாத இயக்கத்தோடு தொடர்புடையவர்கள் என்று ஒரு சில பத்திரிக்கைகளும், டெல்லி, ஜும்மா மஸ்ஜித் மற்றும் பெங்களூர் கிருஷ்ண சாமி மைதானத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பிற்கு காரணமானவர்கள்  என்று சில பத்திரிக்கைகளும் செய்திகளை வெளியிட்டுள்ளது. மதுபானி மாவட்ட காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் ஜமாலி என்ற இளைஞர் வைக்கப்பட்டுள்ளார். இவர் மதரஸா பயிலும் மாணவர். பக்ரீத் பண்டிகயை கொண்டாடுவதற்காக தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். இவரது தந்தை நஸருல் ஜமால் ஒரு ஹோமியோபதி மருத்துவராவார். ஜமாலி தனது வீட்டில் இருக்கும் போது கைது செய்யப்பட்டுள்ளார்.
முஹம்மது அஜ்மல் என்ற இளைஞர் சிங்கானிய சவுக் என்ற ஊரில் மதுபானி காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளார்.
டாக்டர் நஸருல் ஜமால் தன் மகன் ஜமாலி மீது சுமத்தப்பட்டிருக்கும் அனைத்து குற்றச்சாட்டுக்களையும் மறுக்கிறார். “என் மகன் மீது அபாண்டமாக பொய் குற்றச்சாட்டுகளை கூறுகின்றனர். இவை அனைத்தும் ஆதாரமற்றது. அவனுக்கு வயது 24 தான் ஆகிறது. தர்பங்காவிலுள்ள ஒரு மதரஸாவில் படித்துக்கொண்டிருக்கிறான். என் மகன் சிறந்த மார்க்க பேச்சாளர். அருகிலுள்ள சிறு கிராமங்களுக்குச் சென்று நிறைய மார்க்க சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளான். அரபியிலிருந்து உருதுவிற்கு மொழி மாற்றம் செய்வதில் திறமை வாய்ந்தவன். அவன் ஒரு போதும் தேசவிரோத செயல்களில் ஈடுபட்டதில்லை. அவனது வாழ்க்கையில் பீகார் மாநிலத்தை விட்டு மும்பையை தவிற  வெளியூர் சென்றதே இல்லை. அதற்கும் தனது சொந்தக்காரர்களை பார்ப்பதற்காக கடந்த 2009 ஆம் ஆண்டு தான் மும்பை சென்றிருந்தான்.” என்று ஜமாலியின் தந்தை கூறுகிறார்.
காவல்துறையினர் எனது மகனை கைது செய்ய வந்த போது ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் எனது மகன் பெயரில் பாஸ்போர்ட் கண்டெடுக்கப்பட்டதாக் கூறினர். ஆனால் எனது மகனிற்கு பாஸ்போர்டே கிடையாது. சமீபத்தில் அவன் மதரஸாவிற்கு பேருந்தில் சென்ற போது அவனது பை தொலைந்துவிட்டது. அதில் அவனுடைய பேன் கார்டு, புகைப்படங்கள், முகவரி ஆதாரங்கள் மற்றும் செல்ஃபோன் ஆகியவை தொலைந்து போனது.
அவனை கைது செய்வதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு காவல்துறையினர் ஃபோன் செய்து உனது மகனை இந்த வழக்கிற்காக தேடுகிறோம் என்று கூறினர். நான் உடனே எனது மகனை சிறிது காலம் தலைமறைவாக இருக்கும் படி சொன்னேன். அதற்கு அவனோ “நான் எந்த தவறும் செய்யவில்லை, எதற்காக காவல்துறையினர் என்னை கைது செய்யவேண்டும்” என்று கேட்டுவிட்டு மறுத்துவிட்டான்.
ஒரு நாள் எனது மகன் குளித்துக்கொண்டிருந்த சமயம் ஒரு நபர் வீட்டிற்கு வந்து உங்களது மகனின் பாஸ்போர்ட் தொலைந்துவிட்டதா? என்று கேட்டார். பின்னர் தான் தெரிந்தது வந்தவர் காவல்துறை அதிகாரின் என்று. இவ்வாறு ஜமாலியின் தந்தை நஸருல் ஜமால் கூறினார்.
கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களும் டெல்லி கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் காவல்துறை அவர்களை எதற்காக கைது செய்துள்ளது என்பதை பத்திரிக்கைகளுக்கு தெரிவிக்கவில்லை. அப்பகுதி காவல்துறையினர் கூறும்போது போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
தர்பங்கா மண்டல காவல்துறை அதிகாரி ஆர்.கே மிஸ்ரா கூறும் போது கைது செய்யப்பட்ட இருவர்களுக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு உண்டு என்பதை உறுதியாக கூறமுடியாது. எதுவாயினும் விசாரணைக்கு பின்பே தெரியவரும் என்று கூறினார்.
தர்பங்கா மண்டல டி.ஐ.ஜியும் சுதன்சுவும் இதனையே கூறியுள்ளார். டெல்லி காவல்துறையினர் எங்களுடைய உதவியை நாடினர். அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து இருவரையும் கைது செய்ய உதவிசெய்தோம். ஆனால் எதற்காக கைது செய்யப்படுகிறார்கள் என்பதை டெல்லி காவல்துறையினர் வெளியிடவில்லை என்று சுதன்சு கூறினார்.
பீஹார் மாநில உள்துறை அதிகர் அமீர் சுபுஹானி கூறும் போது தர்பங்கா காவல் நிலையத்தில் அவர்கள் மீதான எந்த ஒரு எஃப்.ஐ.ஆர் (தகவல் முன் அறிக்கை) எதுவும் பதிவு செய்யப்படவில்லை. போலி பாஸ்போர்டு விவகாரத்தில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதேபோன்று பீகார் டி.ஜி.பி அபயானந்தாவும் கைது செய்யப்பட்டவர்களை தீவிரவாதிகளாக கூறவில்லை. டெல்லி காவல்துறையினர் கொடுத்த தகவலில் பேரிலேயே அவர்களை கைது செய்தோம் என்று கூறினார்.
இப்படி காவல்துறையினரும் கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தார்களும் அவர்கள் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதே இல்லை என்று கூற ஊடகங்கள் மட்டும் அந்த இரு இளைஞர்களை தீவிரவாத சக்திகளோடு தொடர்பு படுத்தி செய்தி வெளியிட்டதோடு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த பீகார் மாநிலத்திற்கே தீவிரவாத அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று செய்தி வெளியிட்டுள்ளது.
போலி பாஸ்போர்ட் விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டிருக்க ஊடகங்கள் அவர்களை தீவிரவாதிகளோடு தொடர்பு படுத்துகின்றன. ஆங்கில முன்னோடி நாளிதழான “டைம்ஸ் ஆஃப் இந்தியா” தனது தலைப்பில் கூறும்போது “தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக 2 இளைஞர்கள் கைது” என்று செய்தி வெளியிட்டுள்ளது. இதே போன்ற செய்திகளை ஹிந்துஸ்தான் டைம்ஸ் மற்றும் பாட்னாவில் வெளிவரும் டெய்லி டெலிகிராஃப் போன்ற நாளிதழ்களும் வெளியிட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களும் குற்றவாளிகளா? இல்லையா? என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. அவர்கள் குற்றத்தில் ஈடுபட்டிருக்கலாம் அல்லது எத்தனையோ அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் இன்று கைது செய்யப்படுவதுபோல் அவர்களும் கைது செய்யப்பட்டிருக்கலாம். எதுவாயினும் அவற்றை முடிவு செய்யும் அதிகாரம் நீதிமன்றங்களில் கைகளில் உள்ளது.
ஆனால் இந்த ஊடகங்கள் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதில் தங்களுக்குள் போட்டி போட்டுக்கொள்கின்றனர். இவர்கள் வெளியிடும் இத்தகைய தவறான செய்திகளால் பல அப்பாவி இளைஞர்களில் வாழ்க்கை சீரழிந்து கொண்டிருக்கிறது.
கைது செய்யப்பட்டவர்கள் குற்றவாளிகள் இல்லை என்று நீதிமன்றங்கள் தெரிவித்தாலும் பெரும்பாலான பத்திரிக்கைகள் அதனை வெளியிடுவதில்லை. அப்படியே வெளியிடும் சில பத்திரிக்கைகள் மறுப்பு என்ற பெயரில் ஓரிரு வரிகளில் முடித்துவிடுவர். ஆனால் அவர்கள் வெளியிட்ட பொய்யான செய்தியால அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை இவர்களால் நிவர்த்தி செய்ய முடியுமா?

மன அழுத்தத்தை (Mental Stress) கட்டுப்படுத்தி நோயை தவிர்திடுக!


வெள்ளம் வரும் முன் அணை போட்டு தடுக்க வேண்டும் நோய் வரும் முன் காக்க வேண்டும்” என்பது முன்னோர்கள் கருத்து. இது மன அழுத்தத்தை கட்டுப்படுத்துவதற்கும் பொருந்தும். சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரையும் பாதிக்கிறது மனஅழுத்தம்.
கண்ணுக்குத் தெரியாமல் தொடங்கும் இந்த மன அழுத்தத்தினால் ஒற்றைத்தலைவலி முதல் மாரடைப்பு வரையிலான நோய்கள் மனிதர்களை தாக்குகின்றன. மன அழுத்தத்தை போக்கி கட்டுப்படுத்தவே பல்வேறு நிறுவனங்கள் உளவியல் வல்லுநர்களின் உதவியோடு மன அழுத்த மேலாண்மையை உருவாக்கியுள்ளனர்.
இன்றைய சூழலில் அனைத்துத் துறைகளிலும் எல்லா பணி நிலைகளிலும் அனைவரும் ஒருவிதமான மன இறுக்கத்துடனேயே உழன்று கொண்டிருக்கிறார்கள். இதுவே மன அழுத்தத்தைக் கையாள்வதன் தேவையை நமக்கு எடுத்துக் கூறுகிறது. அனைவரையும் பாதிக்கும் மன அழுத்தத்திற்கான காரணத்தைக் கண்டறிந்து அதனை ஆரம்பத்திலேயே தீர்க்க வேண்டும். அதற்கான தீர்வு நம்மிடம்தான் இருக்கிறது.
மன அழுத்தமானது உடலையும், உள்ளத்தையும் பாதிக்கின்றது. மனிதனுக்கு வரும் நோய்களில் 75 சதவிகிதம் முதல் 90 சதவிகிதம் வரை நோய்கள் அழுத்தமான சூழல் காரணமாக வருபவையே என சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று அதிர்ச்சித் தகவல் சொல்லியிருக்கிறது.
எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்
எதிர்பார்ப்புகள் அதிகமாகி அவை நிறைவேறாத போதும், எதிர்பாராத சூழலுக்கு தள்ளப்படும் போதும் மனிதர்கள் அதிக மன அழுத்தத்துக்கு உள்ளாகின்றனர் என்கின்றனர் மருத்துவர்கள். எதிர்பார்ப்புகளைக் குறைக்கும் போது மன அழுத்தம் பெருமளவில் குறைந்து போவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஏமாற்றம், பயம், நிராகரிப்பு, எரிச்சல், அதிக வேலை, அதிக சிரத்தை, குழப்பம் இவையெல்லாம் மன அழுத்தத்தைத் தோற்றுவிக்கும் சில காரணிகள். சிலருக்கு அதிக வெளிச்சம், அதிக சத்தம் இவை கூட மன அழுத்தத்தை அதிகரிக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். விவாக ரத்துகள், நோய்கள், பதவி இழப்பு, கடன், வறுமை, தேர்வு, போக்குவரத்து நெரிசல், வேலை அழுத்தம், கோபம், நட்பு முறிவு, உறவு விரிசல், என நம்மைச் சுற்றி நிகழும் எல்லா விதமான காரணிகளும் மன அழுத்தத்திற்குள் நம்மை இட்டுச் செல்ல முடியும்.
பண அழுத்தம்
பணமானது மன அழுத்தத்தை உருவாக்கும் முழு முதற் காரணியாக உள்ளது. அனைத்து சூழ்நிலைகளிலும் பணமானது முக்கிய பங்கு வகிக்கிறது. தேவையான நேரத்தில் தேவையான அளவு பணம் கிடைக்காத பொழுது ஒருவித அழுத்தம் ஏற்படுகிறது. எனவே பண அழுத்தமானது மன அழுத்தத்தை உருவாக்கும் காரணிகளில் முதன்மையிடத்தை வகிக்கிறது.
பணிச்சூழல் மன அழுத்தத்திற்கு மற்றொரு முக்கிய காரணியாக உள்ளது. சில நேரங்களில் உறவுகளும், வாழ்க்கைத்துணையும், குழந்தைகளுமே மன அழுத்தத்தை தோற்றுவிப்பவர்களாக உள்ளனர்.
மது போதை பழக்கம்
புகை பிடித்தல், சரியான உணவுப் பழக்கம் இல்லாமை, போதை மருத்து பழக்கம், குடிப்பழக்கம், சரியான தூக்கம் இல்லாமை இவையெல்லாம் மன அழுத்தத்தை நாம் விலை கொடுத்து வாங்கும் செயல்கள். புகை பிடிக்கும்போது உடலில் கலக்கும் நிக்கோட்டினுக்கு மன அழுத்தத்தை அதிகரிக்கும் சக்தி இருப்பதாக ஆராய்ச்சிகள் நிரூபித்திருக்கின்றன.
முதுமை நிலையை அடைபவர்களிடமும், மாதவிடாய் காலத்தில் பெண்களிடமும் இந்த மன அழுத்தம் அதிகமாய் இருக்கும் என்றும் அத்தகையவர்களிடம் அன்புடன் உரையாடி மன இறுக்கத்தைத் தணிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
சுகமான சுமைகள்
மன அழுத்தம் நல்ல செயல்களில் கூட வரும் என்கிறது ஒரு ஆய்வு. திருமணம் போன்ற நிகழ்வுகள், பதவி உயர்வு, இவையெல்லாம் ஒருவகையில் மன அழுத்தத்தை அதிகரிக்கும் என்றும் அதை சரியான விதத்தில் கையாள்வதில் நம்முடைய கவனத்தைச் செலுத்தவேண்டும் என்கிறது அதே ஆய்வறிக்கை.
மன அழுத்தத்தினால் உடல்நலமானது அதிக அளவில் பாதிக்கப்படுகிறது. இதயநோய்கள், ஹைபர்டென்சன், கண்நோய்கள் போன்ற மிகப்பெரிய நோய்களும் மனிதர்களுக்கு ஏற்படுகின்றன. மன அழுத்தத்தை கட்டுப்படுத்தினால் நோய்களை தவிர்க்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள். மனஅழுத்தத்தை தவிர்க்க சில ஆலோசனைகளையும் அவர்கள் கூறியுள்ளனர்.
உற்சாக ரசாயனம்
உடற்பயிற்சி என்பது மன அழுத்தத்தை போக்கும் மிக முக்கிய வழிமுறையாகும். தினசரி அரைமணிநேரம் உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்கள் சுரப்பது குறைகிறது. உடலும் உள்ளமும் புத்துணர்ச்சியடைகிறது.
எண்டோர்பின்ஸ் உள்ளிட்ட நல்ல ரசாயனங்கள் உடலில் சுரக்கின்றன. பாக்ஸிங் எனப்படும் விளையாட்டுகளில் ஈடுபடுபவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவது குறைவு என்கின்றனர் மருத்துவர்கள்.
மனசே ரிலாக்ஸ்
தினமும் ரிலாக்ஸ் செய்ய சில மணிநேரம் ஒதுக்கவேண்டும். ஏனெனில் அரக்க பரக்க அலுவலகம் சென்று பணிச்சூழலில் உழன்று திரியும் உள்ளம் அமைதியை எதிர்பார்ப்பது இயற்கை. ஆவேசம், கோபம் இவை மன அழுத்தத்தின் வெளிப்பாடுகள், தெளிவான அமைதியான மனம், ஞானம் இவற்றைக் கொண்டு அவற்றை அடக்க வேண்டும்.
தியானம், யோகா போன்றவற்றில் மனதை ஈடுபடுத்துவதும், ஆழமாக மூச்சை இழுத்து விடும் மூச்சுப் பயிற்சியைச் செய்வதும் மன அழுத்தத்தைக் குறைக்கும் வழிமுறைகளில் சில என்கின்றனர் பயிற்சியாளர்கள். மனதை ஒருமுகப் படுத்தும் பயிற்சிகளும் நல்ல பலனைத் தருகின்றன.
அமைதியே வழி
கட்டுப்பாடான உணவுப்பழக்கம் மன அழுத்தத்தை மாற்றும் என்கின்றனர் மருத்துவர்கள். பழங்கள், காய்கறிகள், அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் மன அழுத்தத்திற்கு எதிரான சூழலை மாற்றி ஆரோக்கிய வாழ்க்கைக்கு அடிகோலுகிறது.
தேவையற்ற வீண் விவாதங்களை தவிர்க்கவேண்டும். இதுவே மன அழுத்தத்தை தவிர்ப்பதற்கான வழிமுறை. எத்தகைய சூழ்நிலையிலும் அமைதியை கடைபிடிப்பதே மன அழுத்தம் நேராமல் தடுக்கும் என்பது அவர்களின் அறிவுரை.
ஆழ்ந்த உறக்கம் அவசியம்
தினமும் 7 முதல் 8 மணி நேரம் நன்றாக உறங்கவேண்டும். எந்த வித இடைஞ்சலும் ஏற்படாத வகையில் தூங்குவதன் மூலம் மூளை அமைதியடையும் என்கின்றனர் மருத்துவர்கள். உறங்குவதில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படும் பட்சத்தில் நல்ல புத்தகங்களை படித்து ரிலாக்ஸ் செய்துகொள்ளவேண்டும். இனிய இசையை கேட்கலாம் என்றும் மருத்துவர்கள் ஆலேசனையில் தங்கள் கூறியுள்ளனர்.
இயல்பான வாழ்க்கையைப் பறித்து நிம்மதியற்ற பொழுதுகளையும், நோய்களையும் தந்து செல்லும் மன அழுத்தம் மிகவும் கொடுமையானது. மருத்துவர்கள் மற்றும் உளவியல் வல்லுநர்கள் கூறியுள்ள ஆலோசனைகளை பின்பற்றி மன அழுத்தத்தை களைய வேண்டும்.

இராமநாதபுரம் தொகுதிச் செய்திகள்


ராமேசுவரம்
ராமேசுவரம் புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் உலக சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தினவிழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ராமநாதபுரம் எம்எல்ஏ. ஜவாஹிருல்லா தலைமை வகித்தார். ராமேசுவரம் நகராட்சித் தலைவர் அர்ச்சுணன், பள்ளித் தாளாளர் மைக்கேல்ராஜ் ஆகியோர்  முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் சேவியர் ராஜப்பா வரவேற்றார்.


சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்க, வீடுகள்தோறும் மரம் வளர்த்து பசுமைப் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி பள்ளியின் இலக்கிய மன்றம், சாரணர் இயக்கம், நுகர்வோர் மாணவர் மன்றம், சாலைப் பாதுகாப்பு இயக்கம், ஜூனியர் ரெட் கிராஸ் இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. கடந்த ஆண்டு பொதுத்தேர்வுகளில் நூறு சதவீத மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர், வழிகாட்டிய ஆசிரியர்களுக்கு எம்எல்ஏ பரிசுகளை வழங்கினார்.

உதவி தலைமை ஆசிரியர் சூசை ரத்தினம், பள்ளியின் கிராம கல்விக் குழு தலைவர்  அந்தோணிராஜ், கவுன்சிலர்கள் பூபதி, சீனி முகம்மது, த முமுக தலைவர் சலிமுல்லாஹ் கான் மற்றும்  ஆசிரியர்கள் செந்தமிழ்நாதன், ஜேம்ஸ் பிரிசில்லா, உடற்கல்வி ஆசிரியர் ஜெரோம் வில்லியம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தங்கச்சிமடம்

பாம்பன் பகுதி தங்கச்சிமடம் ஊராட்சியில் கடந்த 22.11.2011 அன்று மக்கள் குறைதீர்ப்பு முகாம் சட்டமன்ற உறுப்பினர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட சுமார் 200 புகார் மற்றும் கோரிக்கை மனுக்களை உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் நடவடிக்கைக்காக வழங்கப்பட்டது. இதில் இராமநாதபுரம் மாவட்ட டி.எஸ்.பி முனியப்பன் தமுமுக&மமக மாவட்ட, கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
-----------------

இராமேஸ்வரம் நகரத்தில் குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருவதாக வந்த புகாரின் அடிப்படையில் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லா கடந்த 24.11.2011 அன்று திடீர் ஆய்வு செய்தார். முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் வீட்டின் அருகில் உள்ள கால்வாயை ஆய்வு செய்து, உடனடியாக நகராட்சி அலுவலர்களை அழைத்து, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார்.

இவ்வாய்வின் போது நகர்மன்றத் தலைவர் அர்ஜுனன், நகராட்சி அதிகாரிகள், மமக நகர்மன்ற உறுப்பினர் சீனி முஹம்மது, மமக மாவட்ட தலைவர் சலிமுல்லாகான் உட்பட தமுமுக மமகவினர் பலர் உடனிருந்தனர்.
-----------------

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் கடந்த 24.11.2011 அன்று மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்ற இம்முகாமில் இராமேஸ்வரம் நகர்மன்றத் தலைவர் அர்ஜுனன், துணைத் தலைவர் குணசேகரன், மமக நகர்மன்ற உறுப்பினர் சீனி முஹம்மது உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இம்முகாமில் சுகாதாரச் சீர்கேடு, குடிநீர் பிரச்சனை, கால்வாய் அடைப்பு, ரேசன் கார்டு, சாலைவசதி என பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட ஏராளமான புகார் மனுக்களை சட்டமன்ற உறுப்பினர் பெற்று உடனே முகாமில் கலந்துகொண்ட  அரசு அதிகாரிகளின் பார்வைக்கும் நடவடிக்கைக்கும் நேரடியாக வழங்கினார்.

அடிப்படை வசதிகள், முதியோர், விதவை, ஊனமுற்றோர்களுக்கான உதவித்தொகை விண்ணப்பங்களை உடனடியாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
-----------------

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புலாணி ஒன்றியத்தில் கடந்த 23.11.2011 அன்று மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்ற இம்முகாமில் திருப்புலாணி வட்டார வளர்ச்சி அதிகாரி மணிமேகலை, யூனியன் சேர்மன் ராஜேஸ்வரி மற்றும் அதிமுக ஒன்றிய செயலாளரும் தினைக்குளம் பஞ்சாயத்து தலைவருமான முனியாண்டி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இம்முகாமில் பெறப்பட்ட ஏராளமான புகார் மனுக்களை முகாமில் கலந்துகொண்ட அரசு அதிகாரிகளின் பார்வைக்கும் நடவடிக்கைக்கும் நேரடியாக வழங்கினார். அடிப்படை வசதிகள், முதியோர், விதவை ஊனமுற்றோர்களுக்கான உதவித்தொகை விண்ணப்பங்களை உடனடியாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும்படி அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.


-----------------
கீழக்கரை நகரில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றுவது தொடர்பாக கடந்த 25.11.2011 அன்று இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லா தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் கீழக்கரை நகராட்சி சேர்மன் ரபியதுல் ஃபசரியா நகராட்சி ஆணையர் முஜிபுர் ரஹ்மான், தில்லையேந்தல் ஊராட்சி தலைவர் செல்வ குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கொள்ளுமேடில் த.மு.மு.க பொதுக்குழு





அஸ்ஸலாமு அலைக்கும் 1/12/2011 வியாழக்கிழமை மாலை மஃக்ரிப் தொழுகைக்குப்பிறகு டிசம்பர் 6-ஐ பற்றீ பேசுவதற்க்கு பொதுக்குழு கூட்டப்பட்டது . இதில் மாவட்ட நிர்வாகி N .அமானுல்லா த.மு.மு.க மாவட்ட செயலாளர் [ம] தலைவர்,செயலாளர் பொறூளாலர்,முத்தவல்லி,ஜமாதார்கள்,நிர்வாகிகள்,மாணவரனி உறுப்பினர்கள் அனைவரும் கலந்துக்கொண்டனர்.
                                          
                                           இதில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது . 

                                 * ஐ வேலை தொழுகை அனைவரும் கடைபிடிக்கவேண்டும் 
                                 * இன்ஷா அல்லா நமது ஊரில் இருந்து குறைந்த பட்சம் 5 வேன் போகவேண்டும்
                                 * நமது ஊர் சிராஜுல் மில்லத் தெருவில் இருக்கும் முகம்மது இஸ்மாயில் மகள் மருத்துவ உதவிக்காக  
                                   த.மு.மு.க சார்பில் ருபாய் 2000 வழங்கப்பட்டது.