AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

வியாழன், 3 நவம்பர், 2011

மழை காலத்தின் உணவு முறைகள் பின்பற்றலாமா?


மழைக் காலங்களில் பழங்களைச் சாப்பிடும் எண்ணம் அவ்வளவாக ஏற்படாது. ஆனாலும் பழத்தை அப்படியே துண்டுகளாக வெட்டிச் சாப்பிட விருப்பமுள்ளவர்கள் சாப்பிடலாம்.
எல்லா சீசனுக்கும் பொருத்தமானது வாழைப்பழம். அதற்காக வாழைப் பழத்தை மட்டுமே சாப்பிடுவதற்கு பதிலாக மற்ற பழங்களையும் சேர்த்து சாப்பிடலாம்.
1. மழை நேர வைரஸ் காய்ச்சலுக்கு உடனடியாக கொடுக்க நிலவேம்பு கஷாயம் பெஸ்ட். நம் வீட்டிலேயே நிலவேம்பு பொடியை வாங்கி வைத்துக் கொண்டால் நல்லது.
இந்த நிலவேம்பு பொடியுடன் தண்ணீர் சேர்த்து காய்ச்சி, பனங்கற்கண்டு சேர்த்து, கொதிக்க வைத்து, வடிகட்டி, வைரஸ் காய்ச்சல் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம். உடனடியாக காய்ச்சல் பறந்தோடி விடும்.
2. மழைக் காலத்தில் நாம் சாப்பிடும் உணவில் இனிப்பு அதிகம் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.
3. பால் மற்றும் பால் சார்ந்த தயிர், வெண்ணெய், நெய் போன்றவற்றையும் அதிகம் சாப்பிடக் கூடாது, ஆனால் மோர் சாப்பிடலாம். உடலுக்கு நல்லது.
4. நம் உணவில் காரம், கசப்பு, துவர்ப்பு சுவையுள்ள உணவுகளை மழைக்காலத்தில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.
5. மதிய உணவின் போது தூதுவளை ரசம் வைத்து சாப்பிடலாம்.
6. இரவு தூங்குவதற்கு முன் பாலில் மஞ்சள் தூள், மிளகுத்தூள், பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிடுவது நல்லது.
7. நீர்ச் சத்துக்கள் நிறைந்த சுரைக்காய், பூசணி, புடலை, பீர்க்கன், வெள்ளரி போன்ற காய்கறிகளை மழை சீசனில் உணவில் சேர்த்துக் கொள்வதை தவிருங்கள்.
8. கண்டிப்பாக மழைக் காலத்தில் நம் உணவுப் பதார்த்தங்களில் மிளகு பொடியைச் சேர்த்துச் சமைத்துச் சாப்பிடுவது நல்லது.
9. இரவு உணவில் பச்சைப் பயறு, கேழ்வரகு, கீரை ஆகியவற்றைச் சேர்க்காதிருத்தல் நல்லது.
10. மழை சீசனில் பிஸ்கட் சீக்கிரம் நமத்துப் போகாமல் இருக்க பிஸ்கட் வைக்கும் டப்பாவில் சிறிது சர்க்கரைத் துகள்களை போட்டு வைக்கவும்.
11. சிலருக்கு சளி, இருமல் இருந்தாலும் விட்டமின் சி சத்து ஒத்துப் போகும். சிலருக்கு மழைக்காலம் வந்து விட்டாலே ஒத்துக் கொள்ளாது. எலுமிச்சம், ஆரஞ்சு ஜூஸ் சாப்பிட்டாலும் ஒன்றும் செய்யாது.
ஆனால் ஒத்துக் கொள்ளாதவர்கள் கண்டிப்பாக சாப்பிடாமல் இருப்பது நல்லது. சாப்பிடும் உணவுகள், லேசான சூட்டில் இருக்கும் படி பார்த்துக் கொண்டால் நல்லது.
12. மழை சீசனில் கீரைகள் அதிகம் சாப்பிடா விட்டாலும் பரவாயில்லை என்றே சொல்லலாம். ஏனென்றால் கீரைகளை நன்றாக தண்ணீரில் கழுவி பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் கீரைகளால் புதுசாக நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
13. மழை சீசனில் எல்லா காய்கறிகளையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். சிலருக்கு தண்ணீர் சத்து அதிகமுள்ள காய்கறிகள் ஒத்துக் கொள்ளாது. அத்தகையவர்கள் அவர்களுக்கு ஏற்ற காய்கறிகளை சமைத்துச் சாப்பிடலாம்.
14. அசைவ உணவாக, மீன், முட்டை, கறி, சிக்கன் என்று சாப்பிடலாம், ஆனால் அவை பிரஷ்ஷாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் மழைக் காலங்களில் கடைகளுக்குப் போய் வாங்குபவர்கள் குறைவு. அதனால் மீன் போன்றவை பழைய ஸ்டாக் இருக்க வாய்ப்பு உண்டு.

புதன், 2 நவம்பர், 2011

சிறுபான்மையினருக்காக அரசு வழங்கும் இலவச தொழில் பயிற்சி வகுப்புகள்!


MSME DEVELOPMENT INSTITUTE எனப்படும் இந்திய அரசின், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகம் (Govt. of India, Ministry of Micro, Small and Medium Enterprises) நடத்தும் பயிற்சி வகுப்புகள் பலரின் வாழ்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது!
இப்பயிற்சியின் மூலம் இவர்கள் சொந்த தொழில் செய்து  நல்ல வருமானமும் ஈட்ட முடியும்.
தையில் பயிற்சி, செல் போன் சர்வீஸ் பயிற்சி, அழகுக்கலை பயிற்சி போன்ற பல பயனுள்ள பயிற்சிகளை அளித்து வருகிறது! இது போன்ற பயிற்சி வகுப்புகளுக்கான கட்டணங்களை அரசே, பொருளாதாரத்தில் பின்தங்கிய சிறுபான்மை சமுதாய மக்களுக்கு மானியமாக வழங்குகிறது!
பதிவு செய்வதற்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ளதால் சீக்கிரமாக முயற்சி செய்து பயன் பெறவும். பொருளாதாரத்தில் பின் தங்கிய உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கும் இந்த இலவச பயிற்சியை சொல்லி பயன் அடைய செய்யவும்.
பயிற்சி விவரங்கள்:
Sl. NoCoursesDurationQualification
1Advance Automobile Technology3 Months10th Pass
2Air Conditioning & Refrigerator1 Month10th Pass
3Beautician Skills1 Month10th Pass
4Electrical Course3 Month10th Pass
5Industrial Control Automation2 MonthEngineering/Diploma
6Software Testing10 DaysEngineering/Diploma
மேலே கூறிய இலவச பயிற்சி வகுப்புகளுக்கு நேர்முகத் தேர்வு மூலம் உரிய நபருக்கு வாய்ப்பளிக்கப்படும்.
நேர்முக தேர்வு வருகிற நவம்பர் 4 மற்றும் 5 தேதிகளில் நடக்கவிருக்கிறது
இந்த சலுகை பெற பின் வரும் தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்
1. சிறுபான்மையினராக இருக்க வேண்டும்.
2. குடும்ப ஆண்டு வருமானம் 1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
3. தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
4. 18 முதல் 40 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
நேர்முகத்தின் போது கொண்டு வர வேண்டியவை:
2 Pass Port Size போட்டோ, வருமானச் சான்றிதழ், சாதி சான்றிதழ், கல்வி தகுதிச் சான்றிதழ்.
குறிப்பு: வருமானச் சான்றிதழ் நேர்முகத்தின் போது கொண்டு வர முடியமால் போனால்! கால அவகாசம் கேட்டு பின்னர் அவற்றை சமர்ப்பிக்கலாம்.
தொடர்ப்பு கொள்ள:
Sathish Kumar,
MSME Devlopement Institute,
Govt. of India, Ministry of MSME,
65/1, G.S.T. Road, Guindy,
Chennai-600 032.
Room No: 37, MSME DI
Phone Number : 044-22501011        thanks கல்வி களஞ்சியம் 

தாய்லாந்து வெள்ளத்தால், ஹார்டு டிஸ்க் விலை எகிறியது...

பாங்காக் : உலக அளவில் ஹார்டுவேர் சப்ளையில் தாய்லாந்து 70 சதவீத பங்கு வகிக்கிறது. ஏராளமான ஹார்டுவேர் தயாரிப்பு நிறுவனங்கள் பாங்காக் மற்றும் புறநகர்களில் செயல்படுகின்றன. தாய்லாந்து வெள்ளத்தில் பாங்காக் நகரமே மிதக்கிறது. அங்குள்ள சீகேட் உட்பட கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க் டிரைவ் தயாரிப்பு நிறுவனங்களில் உற்பத்தி முடங்கியது. உதிரிபாக தொழிற்சாலைகள் வெள்ளம் சூழ்ந்து பொருட்கள் நாசமாகின. இதனால், சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்தியா உட்பட பல நாடுகளில் ஹார்டு டிஸ்க் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது. சென்னையில் கம்ப்யூட்டர் ஹார்டுவேர் மற்றும் உதிரி பாகங்கள் மொத்த விலையில் கிடைக்கும் ரிச்சி தெருவில் கடந்த வாரம் ரூ.2,300க்கு விற்ற சீகேட் ஹார்டு டிஸ்க், இப்போது ரூ.4,600 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளிலும் விலை எகிறியுள்ளது. வெள்ள பாதிப்பால் ஹார்டு டிஸ்க் தயாரிப்பு நிறுவனங்கள் இந்த நிதி ஆண்டில் கடும் நஷ்டத்தை சந்திக்கும்.

அண்ணா நூற்றாண்டு நூலகம் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவமனையாக மாற்றம் !

சென்னை : கோட்டூர்புரத்தில் பல கோடி ரூபாய் மதிப்பில் சர்வதேச தரத்தில் கட்டப்பட்டு செயல்பட்டு வரும் அண்ணா நூற்றாண்டு நூலகம், குழந்தைகள் நல உயர் சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட உள்ளதாக முதல்வர் ஜெயலலிதா இன்று அறிவித்தார். அண்ணா நூற்றாண்டு நூலகம், கல்லூரி சாலையில் உள்ள டிபிஐ வளாகத்துக்கு மாறுகிறது. அங்கு ஒருங்கிணைந்த அறிவுசார் பூங்கா அமைக்கப்படும் எனவும் ஜெயலலிதா கூறியுள்ளார்.
கடந்த திமுக ஆட்சியில் அண்ணா நூற்றாண்டையொட்டி சர்வதேச தரத்திலான நூலகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி சென்னை கோட்டூர்புரத்தில் பல கோடி ரூபாய் மதிப்பில் 6 மாடிகளை கொண்ட பிரமாண்ட நூலகம் கட்டப்பட்டது. அதை கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி அண்ணா பிறந்தநாளன்று அப்போதைய முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார். மாணவ, மாணவிகளும் பொதுமக்களும் இந்த நூலகத்தை பயன்படுத்தி வருகின்றனர். அங்கு குழந்தைகளுக்கான தனி பிரிவும் செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த நூலகத்தை குழந்தைகள் நல மருத்துவமனையாக மாற்ற உள்ளதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
2011-12ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், சென்னை டிபிஐ வளாகத்தில் ஒருங்கிணைந்த அறிவுசார் பூங்கா அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையிலான முடிவுகள் நேற்று (1-ம் தேதி) நடந்த அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டன.
இதன்படி, பள்ளி கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து இயக்ககங்கள், பயிற்சி மையம், கூட்டரங்குகள், பள்ளி குழந்தைகளுக்கான அறிவுசார் பட்டறைகள், விளையாட்டு வளாகம், கல்வி தொலைக்காட்சி படப்பதிவு நிலையம், இன்குபேஷன் சென்டர் மற்றும் நவீன மைய நூலகம் ஆகியவை இந்த ஒருங்கிணைந்த அறிவுசார் பூங்கா வளாகத்தில் அமைக்கப்படும்.
ஒருங்கிணைந்த அறிவுசார் பூங்கா அமையவிருக்கும் டிபிஐ வளாகம், கன்னிமாரா மைய நூலகம் மற்றும் தேசிய வைப்பு நூலகத்துக்கு மிக அருகில் உள்ளதால் நவீன மைய நூலகத்தை அறிவுசார் பூங்காவிலேயே அமைப்பது பொருத்தமாகவும், சிறந்ததாகவும் அமையும் என அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
எனவே, சென்னை கோட்டூர்புரத்தில் அமைக்கப்பட்டுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம், புதிதாக டிபிஐ வளாகத்தில் அமைக்கப்படவுள்ள நவீன மைய நூலக கட்டிடத்துக்கு மாற்றம் செய்யப்படும். அதன்பிறகு கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிடம், உயர் சிறப்பு குழந்தைகள் நல மருத்துவமனையாக மாற்றி அமைக்கப்படும்.
குழந்தைகளுக்கான இதுபோன்ற அரசு மருத்துவமனை இந்தியாவிலேயே இதுவரை நிறுவப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தைகள் நலனுக்கென இதுபோன்ற உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படுவதன் மூலம், குழந்தைகள் நலனை பேணிப் பாதுகாப்பதில் முதன்மை மாநிலமாக தமிழகம் திகழும் என்பது உறுதி.
இவ்வாறு அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.
கடந்த திமுக ஆட்சியின்போது சுமார் ரூ.1000 கோடியில் அண்ணா சாலையில் மிக பிரமாண்டமான புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டசபை வளாகம் கட்டப்பட்டது. அதிமுக ஆட்சிக்கு வந்ததும், செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலேயே தலைமைச் செயலகம் இயங்கும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். மேலும் புதிதாக கட்டப்பட்ட தலைமைச் செயலகத்தில் ‘மல்டி ஸ்பெஷாலிட்டி அரசு மருத்துவமனை’ அமைக்கப்படும் என்று சில மாதங்களுக்கு முன்பு ஜெயலலிதா அறிவித்தார்.
இப்போது, திமுக ஆட்சியில் கட்டப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகம், டிபிஐ வளாகத்துக்கு மாற்றப்படும் என்றும், அந்த இடத்தில் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

மமக கோரிக்கையை ஏற்றுTNPSC விடைப்பட்டியல் வெளியீடு


தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி)யால் நடத்தப்படும் தேர்வுகளுக்கான விடைப் பட்டியலை  (Key answer)தேர்வு முடிந்தவுடன் விரைவில் வெளியிட வேண்டும் என மமக தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பின ருமான பேரா.எம்.ஹெச்.ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்தார்.
கடந்த 14.09.2011 அன்று தமிழக சட்டப்பேரவையில் ஆற்றிய உரையில்  " Tamil nadu public service commission"   நடத்தக்கூடிய தேர்வுகளைப் பற்றியும் ஒரு கருத்தை இங்கே தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தமிழ்நாடு தேர்வாணையத்தினுடைய தேர்வுகள் எழுதக்கூடிய மாணவர்களுக்கு ஒரு transparent  ஆக ஒரு வெளிப்படையாக நாம் என்ன தேர்வு எழுதினோமோ அதற்கேற்ற மாதிரியான மதிப்பெண்களை பெற்றிருக்கின்றோம், அதன் காரணமாக நாம் வெற்றிபெற்றிருக்கின்றோம் அல்லது வாய்ப்பை நாம் இழந்திருக்கின்றோம் என்பதில் அவர்களுடைய மனசும் திருப்தி அடையக்கூடிய அளவிற்கு இருக்க வேண்டும். அதற்காக வேண்டி நான் இரண்டு ஆலோசனைகளை முன்வைக்க விரும்புகிறேன் முதலாவதாக அந்தத் தேர்வினுடைய விடைகளை தேர்வு முடிந்த பிறகு, அந்தந்த கேள்விகளுக்கான விடைப்பட்டியலை தேர்வாணையம் வெளியிட வேண்டும். தேர்வு முடிந்த பிறகு வெளியிடும்போது அந்த மாணவர்கள் நாம் சரியாக எழுதினோமா அல்லது தவறாக எழுதினோமா என்பதை அறிவதற்கான வாய்ப்பு இருக்கிறது" என்று கூறியிருந்தார்.

இந்த கோரிக்கையின் அடிப்படையில் Tamil nadu public service commission கடந்த 25.09.2011 அன்று நடைப்பெற்ற labour Officer  மற்றும் 16.10.2011 அன்று நடைப்பெற்ற General Foreman/Technical Assistant in the Tamil Nadu Motor Vehicles Maintenance Sub. Service தேர்வுகளுக்கான Tentative Answer வெளியிடப்பட்டுள்ளது.

2 ஆண்டுகளில் 14-வது முறையாக பெட்ரோல் விலை உயருகிறது


பெட்ரோல் விலையை நிர்ணயம் செய்யும் உரிமையை எண்ணை நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. இதையடுத்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை உயர்வுக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் விலையை எண்ணை நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன.
 
தற்போது டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.48-ல் இருந்து ரூ.49 ஆக வீழ்ச்சி அடைந்து இருப்பதால் கச்சா எண்ணை இறக்குமதி செலவு அதிகரித்துள்ளது. இதனால் பெட்ரோல் விற்பனையில் எண்ணை நிறுவனங்களுக்கு ரூ.1.50 நஷ்டம் ஏற்படுகிறது. எனவே நஷ்டத்தை சரிக்கட்ட உள்ளூர் வரியையும் சேர்த்து லிட்டருக்கு ரூ.1.82 உயர்த்த எண்ணை நிறுவனங்கள் ஆலோசித்து வருகின்றன.
 
இன்னும் 2 வாரங்களில் பெட்ரோல் விலை உயர்த்தப்படும் என்று தெரிகிறது.   கடந்த 2010-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ந்தேதியில் இருந்து 2 வருடத்தில் 14-வது முறையாக பெட்ரோல் விலை உயர்த்தப்பட உள்ளது.
 
2010 ஏப்ரல் 1-ந்தேதி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.47.93 (டெல்லி விலை) ஆக இருந்தது. கடைசியாக இந்த ஆண்டு செப்டம்பர் 16-ந்தேதி பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டது. தற்போது பெட்ரோல் விலை லிட்டர் ரூ.66.84 ஆக உள்ளது. ரூ.1.82 உயரும் பட்சத்தில் பெட்ரோல் விலை டெல்லியில் லிட்டர் ரூ.68.66 ஆக அதிகரிக்கும்.
 
சென்னையில் தற்போது பெட்ரோல் லிட்டர் ரூ.70.82 ஆக உள்ளது. இனி அது 72.64 ஆக உயரும். டெல்லியில் கடந்த 2 ஆண்டில் உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலை நிலவரம் வருமாறு:-
 
2010 ஏப்ரல்- ரூ.47.93 ஜூன்- ரூ.51.43 செப்- ரூ.51.56 செப்- ரூ.51.83 அக்- ரூ.52.59 நவ- ரூ.52.59 நவ- ரூ.52.91 டிச- ரூ.55.87 2011 ஜன- ரூ.58.37 மார்ச்- ரூ.58.37 மே.- ரூ.63.37 ஜூலை- ரூ.63.70 செப்- ரூ.66.84.

கர்நாடகா நிலபேர ஊழல்:பெரும் பகுதி ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு

yaddy_1
புதுடெல்லி:ஊழலுக்கு எதிராக அன்னா ஹஸாரே, பாபா ராம்தேவ், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஆகியோரை முன்னிறுத்தி ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத அமைப்பு போராட்டம் நடத்தும் வேளையில் கர்நாடகா முதல்வராக பதவி வகித்த எடியூரப்பா புரிந்த நிலபேர ஊழலில் பெரும் பகுதி ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு சென்றுள்ளது.
கர்நாடகாவில் ஆறு ஆர்.எஸ்.எஸ்ஸின் முன்னணி அமைப்புகளுக்கும், ஏழு ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுக்கோ அவர்களுடைய உறவினர்களுக்கோ எடியூரப்பா அரசு 50 கோடி மதிப்பிலான அரசு நிலங்களையும் குறைந்தவிலைக்கும், இலவசமாகவும் வழங்கியுள்ளது.
3 லட்சத்து 50 ஆயிரம் பேர் நிலத்திற்கு மனு அளித்து காத்திருக்கும் வேளையில் ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு மோசடியாக அரசு நிலங்களை எடியூரப்பா அரசு வழங்கியுள்ளது. இவ்வழக்கில் முதல்வர் பதவியை இழந்த எடியூரப்பா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ்ஸின் ராஷ்ட்ரோத்தனா பரிஷத்,ஜனசேவா வித்யா கேந்த்ரா, ஸம்ஸ்கார பாரதி, ஹிந்து ஜாக்ரன் வேதிகெ, மஹிளா தக்‌ஷத ஸமிதி, அனந்த சிஷு நிவாஸ் ஆகிய அமைப்புகள் நிலத்தை மோசடியாக சொந்தமாக்கியுள்ளன.
ஆர்.எஸ்.எஸ்ஸின் தொழிலாளர்கள் அமைப்பான பாரதீய மஸ்தூர் சங்கின்(பி.எம்.எஸ்) துணைத்தலைவர் எஸ்.கெ.சதாசிவ, ஆர்.எஸ்.எஸ்ஸின் பிரச்சாரக் பிரசாத் பாரதியின் மனைவியும் எம்.எல்.ஏவுமான மல்லிகா பிரசாத், பெங்களூரில் ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைவர் ஸ்ரீதர் பட்லா ஆகியோர் அரசு நிலத்தை மோசடியாக சொந்தமாக்கிய ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்களில் முக்கியமானவர்களாவர்.
ஜனசேவா வித்யா கேந்த்ரா நடத்தும் பள்ளிக்கூடத்திற்காக 10 கோடி சந்தை மதிப்பிலான 10 ஏக்கர் நிலத்தை எடியூரப்பா வழங்கியுள்ளார். வீடுகளை கட்டுவதற்காக விவசாயிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட நிலமாகும் இது. ராஷ்ட்ரோத்தனா பரிஷத் அமைப்பிற்கு  13 கோடி ரூபாய் மதிப்பிலான 906 சதுர மீட்டர் நிலம் வழங்கப்பட்டுள்ளது.
ஸம்ஸ்கார பாரதிக்கு அளித்தது 2000 சதுர அடி நிலமாகும்.இந்நிலத்திற்கு சந்தை மதிப்பு 2.5 கோடி ரூபாயாகும்.மஹிளா தக்‌ஷத சமிதிக்கு 2.5 கோடி ரூபாய் மதிப்பிலான 396 சதுர மீட்டர் நிலம் வழங்கப்பட்டுள்ளது. அனந்த சிஷு நிவாஸிற்கு 2.5 கோடி ரூபாய் மதிப்பிலான 3,585 சதுர மீட்டர் நிலத்தை எடியூரப்பா வழங்கியுள்ளார்.
டி.கே.சதாசிவ வெல்கரா ஹாலில் 10 லட்சம் ரூபாய்க்கு 2400 சதுர அடி நிலத்தை சொந்தமாக்கியபொழுது அதன் சந்தை விலையோ ஒரு கோடி ரூபாயாகும்.மல்லிகா பிரசாத்திற்கு ஜெ.பி நகரில் 4 ஆயிரம் சதுர அடி நிலம் வழங்கப்பட்டுள்ளது.நான்கு கோடி சந்தை மதிப்பிலான ப்ளாட் குறைந்த விலைக்கு வழங்கப்பட்டுள்ளது.
ராஷ்ட்ரோத்தனா பரிஷத் வெளியிடும் பத்திரிகையின் கட்டுரையாளர் பி.மலாத்திக்கு 1200 சதுர அடி நிலம் குறைந்த விலைக்கு அளிக்கப்பட்டுள்ளது.ஆனால் அதன் சந்தை மதிப்போ 1.2 கோடி ரூபாயாகும். பா.ஜ.க தலைவரான ஆர்.கே.மல்லிகாபாய்க்கு 4 ஆயிரம் சதுர அடி நிலம் வழங்கப்பட்டுள்ளது.இதன் சந்தை மதிப்பு நான்கு கோடி ரூபாயாகும். ஆர்.எஸ்.எஸ் கேடரான விஜய் சங்கரமாதவாவுக்கு பெங்களூரில் 2400 சதுர அடி நிலம் வழங்கப்பட்டுள்ளது.
ஆர்.எஸ்.எஸ் கேடரான பா.ஜ.கவின் எம்.எல்.ஏ ஷைலஜா ஸ்ரீநாத்திற்கும் 2400 சதுர அடி நிலம் வழங்கப்பட்டுள்ளது. ராஷ்ட்ரோத்தனா பரிஷத்துதான் எடியூரப்பாவின் சங்க் மீதான அன்பிற்கு மிகவும் பாத்திரமாகி அதிகமான நிலத்தை மோசடியாக பெற்றுள்ளார்கள். நகரத்திலேயே 906 சதுர மீட்டர் நிலம் இவர்களுக்கு கிடைத்துள்ளது. சாதாரணமாக இத்தகைய நிலங்களை வழங்கும்பொழுது 10லிருந்து 30 வருடத்திற்கான குத்தகைக்கு அளிக்கப்படும்.குத்தகை கால வரம்பு முடிந்துவிட்டால் அவை மீண்டும் அரசுக்கு சொந்தமாகும். ஆனால இங்கு இந்த நிபந்தனை கூட கடைப்பிடிக்கப்படவில்லை.

எடியூரப்பாவின் நிலபேர ஊழலில் பெரும்பகுதியை விழுங்கியுள்ள ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.கவினர் அவர் மீது ஆரம்பத்திலேயே நடவடிக்கை எடுக்க தயங்கியதற்கு காரணம் தங்களுடைய பெயரை அவர் வெளியிட்டுவிடுவாரோ என்ற அச்சமே.

பாதுகாப்பு கருதி வீராணத்தில் தண்ணீர் வெளியேற்றம்


சிதம்பரம்:தொடர் மழையால் வீராணத்திற்கு நீர்வரத்து அதிகரித்திருப்பதால் பாதுகாப்பு கருதி தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.வட கிழக்கு பருவ மழை தொடர்வதால் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில், லால்பேட்டை வீராணம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. வடவாறு வழியாக வரும் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.
ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் உள்ளிட்ட அரியலூர் மாவட்டத்தில் பெய்யும் மழையால் வீராணத்திற்கு செங்கால் ஓடை வழியாக 400 கன அடி, பாளையங்கோட்டை ஓடை வழியாக 100, பாப்பாக்குடி ஓடை வழியாக 50 உட்பட 600 கன அடி தண்ணீர் வருகிறது.
ஏரியின் பாதுகாப்பு கருதி புது மதகு வழியாக வெள்ளாற்றில் 500 கன அடி தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. சென்னையிலும் மழை பெய்வதால் சென்னைக்கு குடிநீர் அனுப்பும் அளவும் குறைக்கப்பட்டு தற்போது 21 கன அடி தண்ணீர் மட்டுமே அனுப்பப்பட்டு வருகிறது.ஏரியின் நீர்மட்டம் அதிகரிக்காமல் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் தற்போது 687 மில்லியன் கன அடி தண்ணீர் ஏரியில் உள்ளது. தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.Thanks    lpt xpress