AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

ஞாயிறு, 2 அக்டோபர், 2011

கடந்த 4 நாட்களாக ஏற்பட்டுள்ள மின்சார குறைபாடு சீர் செய்யப்படும்; ஜெயலலிதா அறிவிப்பு

சென்னை, அக் 2-
 
முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-  
 
எனது தலைமையிலான அரசு பொறுப்பேற்ற உடன் மின் நிர்வாகத்தில் பல்வேறு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்ததன் காரணமாக சென்னை நீங்கலாக மாநிலத்தின் பிற இடங்களில் இருந்து வந்த மூன்று மணி நேர மின் தடை 1.7.2011 முதல் இரண்டு மணி நேரமாகக் குறைக்கப்பட்டது.
 
மாநிலத்தில் நிலவும் மின் பற்றாக்குறை நிலையை சீராக்க குறுகிய கால மற்றும் நீண்ட கால திட்டங்களின் அடிப்படையில் எனது அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பழுதடைந்த மின் நிலையங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் மின் திட்டங்களை விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கைகளையும் எனது அரசு மேற்கொண்டுள்ளது.
 
2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தமிழ்நாட்டில் மின் வெட்டு அறவே நீக்கப்படும் வகையில் எனது அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.   இந்த நிலையில், ஆந்திர மாநிலத்தில் தெலுங்கானாவை தனி மாநிலமாகப்பிரிக்கக் கோரி நடைபெற்று வரும் போராட்டத்தின் காரணமாக சிங்கரேனி நிலக்கரி சுரங்கத்தில் பணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. அதன் காரணமாக தேசிய அனல்மின் கழகத்தின் ராமகுண்டம் அனல் மின் நிலையத்தில் 1100 மெகாவாட் அளவுக்கு மின் உற்பத்தி குறைந்து விட்டது.
 
இதன் விளைவாக, ராமகுண்டம் அனல் மின் நிலையத்தில் இருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய மின் அளவில் பாதி அளவு மின்சாரம் தான் தற்போது கிடைக்கப்பெறுகிறது. அதே போல் ஒரிசா மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாக தால்ச்சர் அனல் மின் நிலையத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய மின்சார அளவும் குறைந்துள்ளது.
 
மேலும், மத்திய அரசின் மின் உற்பத்தி நிலையங்களான நெய்வேலி அனல்மின் நிலையம், கல்பாக்கம் அணு மின் நிலையம், கர்நாடகா மாநிலத்தில் உள்ள கைகா அணு மின் நிலையம், ஆந்திரா மாநிலத்தில் உள்ள சிம்மாத்ரி அனல் மின் நிலையம் ஆகியவற்றில் இருந்து தமிழகத்திற்கு கிடைக்கப் பெற வேண்டிய மின்சாரத்தின் அளவிலும் குறைவு ஏற்பட்டுள்ளது. இவற்றின் காரணமாக கடந்த நான்கு நாட்களில் தமிழகத்திற்கு கிடைக்கப் பெற வேண்டிய மின்சாரத்தின் அளவில் 1026 மெகாவாட் குறைந்துள்ளது.
 
இதன் காரணமாக தமிழ் நாட்டில் பல இடங்களில் எதிர்பாராத மின்தடை ஏற்பட்டு வருகிறது.   மேலும், தமிழ்நாட்டில் காற்றாலை மூலம் பெறப்படும் மின்சாரத்தின் மொத்த நிறுவு திறன் 6007 மெகாவாட் ஆக இருந்தாலும், காற்றாலை மூலம் எப்போதும் ஒரே அளவில் மின்சாரம் கிடைப்பதில்லை. தற்போது காற்றின் அளவு குறைந்துள்ளதால் காற்றாலை மூலம் பெறப்படும் மின்சாரம் வெகுவாகக் குறைந்துள்ளது.
 
தமிழ்நாட்டில் மின் தடையை நீக்குவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை எனது அரசு எடுத்து வரும் நிலையில், எதிர்பாராத விதமாக கடந்த நான்கு நாட்களாக ஏற்பட்டுள்ள 1026 மெகாவாட் மின்சார குறைபாட்டை ஈடு செய்தால் தான் தற்போது வழங்கப்பட்டு வரும் நிலையிலேயே மின்சாரத்தை தமிழக மக்களுக்கு வழங்க இயலும். கடந்த நான்கு நாட்களாக ஏற்பட்டு வரும் எதிர்பாரா மின் தடையையும், அதன் காரணமாக மக்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்களைத் தவிர்த்திடவும் இயலும்.
 
எனவே, ஆந்திரா மாநிலத்தில் நடைபெற்று வரும் தெலுங்கானா போராட்டம், ஒரிசா மாநில வெள்ளப் பெருக்கால் ஏற்பட்ட மின் உற்பத்திக்குறைவு போன்ற காரணங்களால் ஏற்பட்ட மின்சார குறைபாட்டு பிரச்சினை தீரும் வரை வெளிச் சந்தையில் மின் சாரத்தை வாங்கி தற்போது ஏற்பட்டுள்ள மின்சாரக் குறைபாட்டை உடனடியாக ஈடு செய்ய வேண்டும் என்று நான் உத்தரவிட்டுள்ளேன். அந்த அடிப்படையில், தமிழ்நாடு மின்சார வாரியம் வெளிச் சந்தையில் இருந்து மின்சாரத்தை வாங்குவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளும். இவ்வாறு வெளிச்சந்தையில் இருந்து மின்சாரம் வாங்குவதன் மூலம், தற்போது ஏற்பட்டுள்ள மின்சாரக் குறைபாடு சீர் செய்யப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தல்: புகார்களை தெரிவிக்க அதிகாரிகளின் “செல்” நம்பர்

சென்னை, அக் 1-
 
உள்ளாட்சி தேர்தல் சந்தேகங்கள் புகார்களை தெரிவிக்க உயர் அதிகாரி களின் தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.
 
மாநில தேர்தல் ஆணையர் சோ.அய்யர்- 24753004, செல்- 9884797847. செயலாளர்: வி.எம். சேவியர் கிறிஸ்கோ நாயகம்- 24753003, 9444400044 பரமேஸ்வரன்- 24750500. முதன்மை தேர்தல் அதிகாரி, பஞ்சாயத்து- 94440 14766. முதன்மை தேர்தல் அதி காரி குபேந்திரன் (நகராட்சி)- 24759922, 9486846884. சென்னை: மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன்- 25381330, 9445190999, பேக்ஸ்: 25383962.
 
காஞ்சீபுரம்- கலெக்டர் சிவசண்முக ராஜா- 27237433, 9444134000, பேக்ஸ்: 27237789. திருவள்ளூர்: கலெக்டர் ஆசிஷ்சாட்டர்ஜி- 27661600, 9444132000, பேக்ஸ்: 27661200. வேலூர்: கலெக்டர் நாக ராஜன்- 2252345, 9444135000, பேக்ஸ்: 2253034. வேலூர் மாநகராட்சி கமிஷனர் சீனிஅஜ்மல்கான்- 2215456, 9842491918.
 
நகராட்சி நிர்வாக கமிஷனர் சந்திரகாந்த் காம்ளே- 28549924, 9445029555, பேக்ஸ்: 28411364. பஞ்சாயத்து கமிஷனர் எஸ்.விஜயகுமார்- 24323794, 9840045215, பேக்ஸ்: 24343205. பேரூராட்சி இயக்குனர் எம்.சந்திரசேகரன்- 25340352, 9445588588, பேக்ஸ்: 25358762.

இன்டர்நெட்டில் ஒளிபரப்பாகும் எவரெஸ்ட் சிகரம்

காத்மாண்டு, அக் 2-
 
எவரெஸ்ட் உலகிலேயே மிக உயரமான சிகரமாகும். இது. இமயமலையில் உள்ளது. பனி படர்ந்த இந்த சிகரத்தின் இயற்கை எழில் நேபாளத்தில் இருந்து இன்டர்நெட்டில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
 
அதற்காக இமயமலையில் 5675 மீட்டர் உயரத்தில் வெப் காமிரா பொருத்தப்பட்டுள்ளது. இது சூரியசக்தியில் இயங்கும் தானியங்கி காமிராவாகும். இதனால் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை எவரெஸ்ட் சிகரத்தின் இயற்கை எழிலை இன்டர்நெட்டில் கண்டுகளிக்கலாம்.
 
மைனஸ் 30 டிகிரி தட்பவெப்ப நிலையில் இமயமலையின் அருகே இருந்து இது ஒளிபரப்பப்படுகிறது.

இங்கிலாந்தில் எந்திரம் மூலம் சிகரெட் விற்பனைக்கு தடை

இங்கிலாந்தில் கடைகளில் மட்டுமின்றி கிளப்புகள் மது விடுதிகளில் தானியங்கி எந்திரங்களின் மூலம் சிகரெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. அந்த எந்திரத்திற்குள் ரூபாயை செலுத்தினால் அதற்குரிய சிகரெட் அதிலிருந்து தானாக வெளியே வரும்.
 
இந்த முறையிலான விற்பனையின் மூலம் இங்கிலாந்தில் தினமும் 80 லட்சம் பேர் சிகரெட் பிடிக்கின்றனர். அவர்களில் பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகளும் அடங்குவர். சிகரெட் பழக்கத்தால் குழந்தைகளின் உடல் நலம் பாதிக்கப்படுகிறது. எனவே, அதை முடிவுக்கு கொண்டு வர இங்கிலாந்து அரசு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
 
அதன்படி எந்திரம் மூலம் சிகரெட் விற்க தடை விதித்துள்ளது. கிளப்புகள் மற்றும் மது விடுதிகளில் எந்திரம் மூலம் சிகரெட் விற்றால் ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை சுகாதார செயலாளர் ஆண்ட்ரூ லான்ஸ்லீ தெரிவித்தார்.

தமுமுக நிர்வாகிகள் ஜாமீனில் விடுதலை

கோவையில் 1997 நவம்பர்-டிசம்பரில் நடைபெற்ற முஸ்லிம் விரோத கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி வழங்கப்பட்டது தொடர்பாக சி.பி.ஐ. தொடுத்த வழக்கில் சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் தமுமுக தலைவர் பேரா.எம்.ஹெச்.ஜவாஹிருல்லா மற்றும் பொதுச் செயலாளர் செ.ஹைதர் அலி ஆகியோருக்கு ஓராண்டு சிறை வழங்கியது. உடனடியாக தண்டனையை நீதிபதி நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்கினார். எனவே யாரும் பதற்றமடைய வேண்டியதில்லை. இது குறித்து விரைவில் மேல்முறையீடு செய்ய உள்ளோம்.

தமிழக உள்ளாட்சித் தேர்தல் விளம்பர மாதிரிகள்

கொள்ளுமேடு மமக ஊராட்சிமன்ற வேட்பாளர் மனுதாக்கல் செய்தார்.

கொள்ளுமேடு மமக ஊராட்சிமன்ற வேட்பாளர் இன்று(28.09.2011) காட்டுமன்னார்குடி பாஞ்சாயத் யூனியனில் மனுதாக்கல் செய்தார்.அவருடன் மமக மாவட்ட  தலைவர் மெஹ்ராஜ்த்தின்,தமுமுக மாவட்ட செயலார் அமானுல்லாஹ்,கொள்ளுமேடு ஜமாத்தார்கள் ,கிளைகழக நிர்வாகிகள்,பொதுமக்கள் பெரும்திரளாக சென்று மனுதாக்கல் செய்தார்.


" இன்ஷா அல்லாஹ் வெற்றிபெற தூவா செய்வோமாக"


மனிதநேய மக்கள் கட்சியின் கடலூர் தெற்கு மாவட்ட வேட்பாளர்கள் அறிவிப்பு