AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

ஞாயிறு, 31 மார்ச், 2013

சவூதி நிதாகத் சட்டம்: இந்தியர்களின் வேலை இழப்பை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க தமுமுக கோரிக்கை


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ வெளியிடும் அறிக்கை:
சவூதி அரேபியாவில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகப்படுத்தும் நோக்கில் லட்சக்கணக்கான வெளிநாட்டு தொழிலாளர்களை சவூதியிலிருந்து திருப்பி அனுப்ப சவூதி அரசு முடிவுசெய்துள்ளது. இதனால் 20 லட்சத்திற்கும் அதிகமான வெளிநாட்டவர்கள் வேலைவாய்பை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது மேலும் வெளி நாட்டவர்களை கண்டறியும் நோக்கில் ஆயிரக்கானக்கான வெளிநாட்டு தொழிலாளர்களை சோதனை என்ற பெயரால் நிதாகத் என்ற சட்டத்தின் கீழ் சவூதி அரசு கைது செய்துவருகிறது. இந்த சட்டதினால் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சனி, 30 மார்ச், 2013

காட்டுமன்னார்கோவில் பஸ்நிலையத்தில் செயல்படாத குடிநீர் தொட்டி

காட்டுமன்னார்கோவில் கிராமங்கள் நிறைந்த பகுதி. இங்கு வசிக்கும் மக்கள் காட்டுமன்னார்கோவில் நகரத்திற்கு  தினமும் வருகின்றனர். 
அதிக அளவில் கிராம மக்கள் பஸ்கள் மூலமே வருகின்றனர். காட்டுமன்னார்கோவில் நகரின் மையத்தில் பேருந்து நிலையம் உள்ளது. தினமும் 100க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வந்து செல்கின்றன. கோடைக்காலம் தொடங்கியுள்ளதால் பேருந்து நிலையத்தில் கிராமத்திற்கு செல்வதற்கு பல மணி நேரம் காத்திருக்கும் பயணிகள் குடிநீருக்காக சிரமப்பட வேண்டிய நிலை  உள்ளது. 

வியாழன், 28 மார்ச், 2013

ரேஷன் கார்டுகளில் உள்தாள் ஒட்டும் பணி மீண்டும் இன்று தொடங்கியது

தமிழ்நாட்டில் 1 கோடியே 95 லட்சத்து 24 ஆயிரத்து 154 ரேசன் கார்டுகள் உள்ளன. ரேஷன் கார்டுகளில் உள் தாள் ஒட்டுவதற்காக அளிக்கப்பட்ட 70 நாட்கள் அவகாசத்தில் 1 கோடியே 93 லட்சத்து 90 ஆயிரத்து 957 குடும்ப அட்டைகளுக்கு உள்தாள் ஒட்டப்பட்டுள்ளது. 
இன்னும் 1 லட்சத்து 33 ஆயிரத்து 797 பேர் உள்தாள் ஒட்டாமல் உள்ளனர். இவர்களுக்கு மேலும் வாய்ப்பு அளிக்கும் வகையில் உள்தாள் ஒட்டும் பணி நீட்டிக்கப்பட்டுள்ளதாக சட்டசபையில் நேற்று உணவுத் துறை அமைச்சர் காமராஜ் அறிவித்தார். 

புதன், 27 மார்ச், 2013

எதிஹாட் நிறுவனம் ஜெட் ஏர்வேஸ் விமானத்தை குத்தகைக்கு எடுக்கின்றது

ஐக்கிய அரபுக் குடியரசின், எதிஹாட் ஏர்லைன்ஸ் நிறுவனம், இந்தியாவின் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் ஏர்பஸ் ஏ-330-200 ஒன்றை குத்தகைக்கு எடுக்கின்றது. அத்துடன் 60 ஊழியர்களையும் ஜெட் நிறுவனம் ஒப்பந்தத்தின்படி, எத்திஹாட் நிறுவனத்திற்கு அளிக்கின்றது.
பேச்சு வார்த்தையின் இறுதிக்கட்டத்திற்கு வந்துவிட்ட இத்திட்டம், பங்குகளின் பிரிப்பு, நிர்வாகம் மற்றும் ஒழுங்குமுறை விதிகள் தெளிவுபடுத்தப்பட்டபின் நடைமுறைக்கு கொண்டு வரப்படும்.

சமீபத்தில்தான் ஜெட் நிறுவனம், லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில், தனக்கென ஒதுக்கப்பட்டிருந்த மூன்று அனுமதி நேரங்களை, 70 மில்லியன் டாலருக்கு, எதிஹாடிற்கு விற்று, பின் அவற்றையே குத்தகைக்கு எடுத்துள்ளது.

லால்பேட்டை சகோதரருக்கு மருத்துவ உதவி செய்யுங்கள்…!


இந்த புகைப்படத்தில் இருப்பவர் லால்பேட்டையில் வசிக்கும் ஹபீபுல்லா..கடந்த சில நாட்களாக சிறுநீர் கோலாரால் அவதிப்பட்டு வரும் இவர் தற்போது கடலூர் கிருஷ்ணா மருத்துவமணையில் அனுமதிகப்பட்டுள்ளார்.
இவருக்கு ஏற்கனவே இரண்டுமுறை operation செய்யபட்டது.,மேலும் ஒரு operation செய்ய இவரிடம் போதிய வசதி இல்லை.
கருனை உள்ளம் கொண்ட நல் உள்ளங்கள் இவருடைய மருத்துவ செலவுக்கு உதவுங்கள்…
இவருடைய தொலைப்பேசி எண்-9942176205

எஸ் பி யின் அதிரடி நடவடிக்கையால் கடலூர் மாவட்ட போலீசார் கலக்கம்

சிதம்பரம், :  கடலூர் எஸ்பி ராதிகா பொறுப்பேற்றவுடன் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இன்ஸ்பெக்டர்கள், டிஎஸ்பிக்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் அரசு மூலம் வழங்கப்பட்ட செல்போனில் தான் உயர் அதிகாரிகளிடம் பேசவேண்டும் என்றும் உத்தரவிட்டார். மேலும் ஓய்வுபெற்ற போலீசாரின் கிராஜுவிட்டி முறைகேடு நடந்துள்ளதை கண்டு பிடித்து மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீசாரும் சம்பளக்கணக்கு வைத்திருக்கும் வங்கியின் கணக்கு புத்தகத்தின் முதல் பக்கத்தை ஜெராக்ஸ் எடுத்து அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டார். அதன்படி அனைத்து போலீசாரின் வங்கி கணக்கு புத்தகத்தின் ஜெராக்சையும் சரி பார்த்து அவர்களுக்கான சம்பளப்பணம் அவர்களது கணக்கில் சேருகிறதா என்று ஆய்வு செய்துள்ளார். முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கையும் எடுத்துள்ளார். 

முறைகேடுகளை தடுக்க பறக்கும் படை தீவிர கண்காணிப்பு 11 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதும் 10ம் வகுப்பு தேர்வு தொடங்கியது...

சென்னை: பத்தாம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி.) பொதுத் தேர்வு இன்று தொடங்கியது. தமிழகம், புதுச்சேரியில் சுமார் 11 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். முறைகேடுகளை தடுக்க பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு இன்று தொடங்கியது. இரு மாநிலங்களை சேர்ந்த 10 ஆயிரத்து 312 பள்ளிகளை சேர்ந்த 11 லட்சம் மாணவ, மாணவிகள்  தேர்வு எழுதுகின்றனர். இதற்காக 3050 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று நாள் தமிழ் முதல் தாள் தேர்வு நடந்து வருகிறது. நாளை தமிழ் 2ம் தாள் தேர்வு நடக்கிறது. தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கியது.

திங்கள், 25 மார்ச், 2013

முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து பொதுத் தேர்வு எழுதலாம்

கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வின் போது கடலூர் மாவட்டத்தின் சில தேர்வு மையங்களில் ஹிஜாப் அணிந்த நிலையில் தேர்வு எழுத வந்த முஸ்லிம் மாணவிகள் ஹிஜாபை களைந்து விட்டு தேர்வு எழுதுமாறு கல்வி அதிகாரிகளால் நிர்பந்திக்கப் பட்டுள்ளனர்.

2005 ஆம் ஆண்டில் இதே பிரச்சனை தொடர்பாக லால்பேட்டை நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

இந்த மனுவை பரிசீலித்த அன்றைக்கு கடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த ககன்தீப் சிங் பேடி அவர்கள் கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களுக்கு வழங்கிய உத்தரவு எண் ஓ.மு (சி4) 14805/05 நாள்:12-03-2005 படி முஸ்லிம் பெண்கள் பர்தா அணிந்த நிலையில் பொதுத் தேர்வு எழுதவும்,வகுப்புகளில் பங்கேற்க அனுமதிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக வக்பு வாரிய உறுப்பினர் தேர்வு செல்லாது: ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை, மார்ச். 25-

தமிழ்நாடு வக்பு வாரியத்தின் உறுப்பினர்களாக எம்.பி.கள் ஜெ.எம்.ஆரூண் முகமது ஜின்னா ஆகியோரும் எம்.எல்.ஏ.க்கள் ரகீம், முகமது ஜான் (அமைச்சர்) ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். இவர்கள் 4 பேரும் சேர்ந்து தமிழ் மகன் உசேன்னை வக்பு வாரியத்தின் தலைவராக தேர்வு செய்திருந்தனர். 

இந்த தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என எம்.எல்.ஏ. ஜவாகருல்லா, வக்கீல் அப்துல்ரஹ்மான் உள்பட பலர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில், மக்கள் பிரதிநிதிகளாக தேர்வு செய்யப்படும் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் மட்டும் இருந்தால் அவர்களை எந்த தேர்தலும் நடத்தாமல் வக்பு வாரிய உறுப்பினர்களாக நியமனம் செய்யலாம். ஆனால் முஸ்லிம் சமுதாயத்தின் 3 எம்.பி.க்களும், 5 எம்.எல்.ஏ.க்களும் இருக்கும் நிலையில் தேர்தல் நடத்திதான் தலா 2 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். 

ஞாயிறு, 24 மார்ச், 2013

லால்பேட்டை இமாம் கஸ்ஸாலி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆண்டுவிழா!


லால்பேட்டை, மார்ச் -24
/
இருபத்திரண்டாம் ஆண்டைநோக்கிச் செல்லும் லால்பேட்டை இமாம் கஸ்ஸாலி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் ஆண்டுவிழா திறந்த வழி மைதானமான குத்பா பள்ளி திடலில் அமைந்துள்ள ஹாஜி.ஃபஜ்லுத்தீன் நினைவரங்கில் காலை 10 மணிக்குதுவங்கியது.

நிகழ்ச்சிக்கு பள்ளியின் முன்னாள் தாளாலர் ஹாஜி ஜாஃபர்அலி தலமை வகித்தார்.நிர்வாகக்குழு உறுப்பினர் முஹம்மது யஹ்யா வரவேற்று பேசினார்.பள்ளியின் தாளாலர் ஆண்டரிக்கை வாசித்தார்.சமூகநீதி அறக்கட்டளையின் செயலார் C.M.N. சலீம் மற்றும் பரங்கிப்பேட்டை ஹாஜி முஹம்மது யூனுஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

சனி, 23 மார்ச், 2013

இலங்கை பிரச்சினையில் மத்திய அரசு தமிழர்களின் உணர்வுகளை ஊனப்படுத்திவிட்டது: தேசிய லீக் பொதுக்குழு கண்டனம்

தேசிய லீக் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் இன்று காலை (சனிக்கிழமை) எழும்பூர் ஓட்டல் இம்பீரியல் வளாகத்தில் உள்ள பயாஸ் மகாலில் நடந்தது. கூட்டத்துக்கு கட்சித் தலைவர் அல்ஹாஜ் எம்.பஷீர் அகமது தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் அப்துல்காதர் முன்னிலை வகித்தார். 

பொதுக் குழுவில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- 

இலங்கையில் நடத்தப்பட்ட இனப்படுகொலைகளை மன்னிக்க முடியாது. சரணடைந்தவர்களை கூட இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்றது. குழந்தைகளை கூட ஈவு இரக்கமற்ற வகையில் படுகொலை செய்ததை சர்வ தேசமும், தமிழ் சமுதாயமும் கணடித்து இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவித்துள்ளது.

வெள்ளி, 22 மார்ச், 2013

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை: மனிதநேய மக்கள் கட்சி கருத்து


மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி வெளியிடும் அறிக்கை:
தமிழக அரசு சமர்ப்பித்துள்ள நிதிநிலை அறிக்கை, புதிய வரிவிதிப்புகள் இன்றி சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. இது ஒருவகையில் வரவேற்கத்தக்கது என்றாலும், விசேஷ அம்சங்கள் ஏதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சென்றாண்டு பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்ட பல்வேறு அம்சங்கள் இதில் வழிமொழியப்பட்டிருக்கின்றன.
வெளிச்சந்தையில் அரிசியின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அமுதம் அங்காடி மற்றும் கூட்டுறவு அங்காடிகளில் ஒருகிலோ அரிசி ரூ.20க்கு விற்பனை செய்யப்படும் என்ற அறிவிப்பும், ரேஷன் கடைகளில் மலிவு விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில் ஆகியவை அடுத்த ஓர் ஆண்டிற்கு நீட்டிப்பு செய்யப்படும் என்ற அறிவிப்பும், காய்கறிகளை மலிவு விலையில் விற்பனை செய்ய பசுமை நுகர்வோர் கடைகள் அமைக்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை.
அதேசமயம், தற்போது நிலவிவரும் கடும் மின்தட்டுப்பாடு குறித்து மாற்று திட்டங்கள் எதுவும் கூறப்படவில்லை. முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகரிப்பது குறித்தும், தமிழகத்தில் பூரண விலக்கு குறித்தும் அறிவிப்பு ஏதும் வெளியிடப்படாததும் பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது.
அன்புடன்
(எம். தமிமுன் அன்சாரி)

வியாழன், 21 மார்ச், 2013

இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் வெற்றி தீர்மானத்துக்கு 25 நாடுகள் ஆதரவு : 13 நாடுகள் எதிர்ப்பு - இந்தியா ஆதரவு அளித்தது

ஜெனீவா: இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் நிறைவேறியது. ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் விவாதத்துடன் தொடங்கிய வாக்கெடுப்பில் தீர்மானத்துக்கு இந்தியா உட்பட ஆதரவாக 25 நாடுகள் வாக்களித்தது. தீர்மானத்துக்கு எதிராக 13 நாடுகள் வாக்களித்தது. வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் ஜப்பான் உள்ளிட்ட 8 நாடுகள் புறக்கணித்தனர். இந்த வாக்கெடுப்பில் இலங்கைக்கு ஆதரவாக பாகிஸ்தான் வாக்களித்தது. 

திருத்தம் கொண்டு வராத இந்தியா
ஐ.நா. கவுன்சிலில் அமெரிக்க தீர்மானத்தில் இந்தியா எந்த திருத்தமும் கொண்டு வரவில்லை. இதனையடுத்து இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா திருத்தமின்றி ஆதரித்தது.

வட இந்தியாவின் பிரபல இஸ்லாமிய அழைப்பாளர் மௌலானா கலீம் சித்திகி லால்பேட்டை வருகை.


வட இந்தியாவை சேர்ந்த இஸ்லாமிய அறிஞர் மௌலானா கலீம் சித்திகி அவர்கள் தப்லீக் ஜமாத் கொள்கை சார்ந்து முஸ்லிம் அல்லாத மக்களிடையே தாஃவா பணியில் ஈடுபட்டு வருபவர்.முஸ்லிம் அல்லாதவர்கள் மத்தியில் இஸ்லாத்தை அறிமுகம் செய்து வைக்கும் தப்லீக் கொள்கையுடை முதலாமவர் இவராகத் தான் இருக்க முடியும்.

லால்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமல்படுத்த கோரிக்கை

தமிழக அரசே……!!
கல்வி துறையே…..!!
லால்பேட்டை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியை வரும் கல்வி ஆண்டிற்குள் அமல்படுத்து…!

புதன், 20 மார்ச், 2013

கடலூரில் பிளாஸ்டிக்கை ஒழிக்க தீவிர நடவடிக்கை: திட்டக்குழு கூட்டத்தில் அதிகாரி அறிவிப்பு

கடலூர், மார்ச் 20-

கடலூர் மாவட்ட திட்டக்குழு கூட்டம் மாறுபட்ட வளர்ச்சி மன்ற கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட திட்டக்குழு தலைவரும், ஊராட்சி குழு தலைவருமான மல்லிகா வைத்தியலிங்கம் தலைமை தாங்கினார்.

மாவட்ட திட்ட இயக்குனர் மகேந்திரன், திட்டக்குழு அலுவலர் ஆனந்தன், ஒன்றிய குழு தலைவர்கள் மணிமேகலை பழனிசாமி, ஜெயபால், மணிகண்டன், சுந்தர்ராஜன், செல்வராஜ், சுந்தரிமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக முருகுமாறன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.

பின்னர் கூட்டத்தில் திட்டக்குழு உறுப்பினர், பேரூராட்சி தலைவர்கள் நடந்த விவாதங்கள் பின்வருமாறு:-

கந்தன் (திட்டக்குழு உறுப்பினர்): கடலூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என கலெக்டர் அறிவித்துள்ளார். ஆனால் தற்போது பிளாஸ்டிக் பயன்பாடு குறையவில்லை.

காட்டுமன்னார்கோவிலில் 2,224 பயனாளிகளுக்கு இலவச மிக்சி-கிரைண்டர்: முருகுமாறன் எம்.எல்.ஏ. வழங்கினார்

காட்டுமன்னார்கோவில், மார்ச் 20-

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் ஒன்றியத்திற்குட்பட்ட சிறுகாட்டூர், சண்டன், எடையார், கருப்பூர், அத்திப்பட்டு, பரிவிளாகம், கூடலையாத்தூர் உள்ளிட்ட 7 கிராமங்களை சேர்ந்த 2224 பயனாளிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் வழங்கும் விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிகளுக்கு வட்டாட்சியர் தில்லை கோவிந்தன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக முருகுமாறன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பயனாளிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் வழங்கினார்.

செவ்வாய், 19 மார்ச், 2013

ஐ.மு.கூட்டணியிலிருந்து திமுக விலகல்: மனிதநேய மக்கள் கட்சி வரவேற்பு


மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:
“ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
ஈழத் தமிழர்களுடைய பிரச்சனையில் திமுகவின் கடந்தகால செயல்பாடுகள் எப்படி இருந்தாலும், இப்போதைய திமுகவின் முடிவு தாமதமான முடிவாக இருந்தாலும் வரவேற்கப்பட வேண்டிய ஒரு முடிவு.
மனிதநேய மக்கள் கட்சி இதனை வரவேற்கிறது. தமிழகத்தின் ஒட்டு மொத்த கல்லூரி மாணவர்களின் போராட்டங்களுக்கும், தமிழ் மக்களின் உணர்வுகளுக்கும் திமுக முக்கியத்துவம் கொடுத்திருப்பதை வரவேற்கிறோம். போராடிக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.”

கடலூர் மாவட்ட இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவருக்கு பாராட்டு விழா


பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்றத் தலைவரும், கடலூர் மாவட்ட இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தின் தலைவருமான எம்.எஸ் முஹம்மது யூனுஸ் கடந்த மாதம் மதிப்புறு முனைவர் பட்டம் பெற்றதையடுத்து, அவருக்கு பாராட்டு விழா நேற்று மாலை பரங்கிப்பேட்டை கலிமா நகரில் நடைப்பெற்றது.

மீராப்பள்ளி நிர்வாகி கே. ஷேக் அப்துல் காதிர் மரைக்காயர் தலைமையில் நடைப்பெற்ற இவ்விழாவில் மீராப்பள்ளி இமாம் எம். அஹமது கபீர் காஷ்மி கிராஅத்  ஓதி துவக்கி வைத்தார்.
சிறப்பு விருந்தினர்களாக பங்குபெற்ற முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், முன்னாள் நீதிபதி எஸ்.எஃப். அக்பர், சிதம்பரம் சடடமன்ற  உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன், லால்பேட்டை மன்பவுல் அன்வார் கல்லூரி முதல்வர் மௌலவி எ. நூருல் அமீன், சமூக பொருளாதார அறக்கட்டளை  தலைவர் எஸ்.எம். இதயதுல்லா, எஸ்.என். சிக்கந்தர், சசி தொண்டு நிறுவன தலைவர் ரமேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

திங்கள், 18 மார்ச், 2013

1,70,000 இந்திய ஹஜ் பயணிகளுக்கு அனுமதி அளிக்க சவூதி அரேபியா அரசு முடிவு!


ஜித்தா:இந்த ஆண்டு-2013 புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற இந்தியாவைச் சார்ந்த 1, 70,000 பயணிகளுக்கு அனுமதி வழங்க சவூதி அரேபியா அரசு முடிவுச் செய்துள்ளது.
இதுக் குறித்து சவூதி அரேபியாவின் ஜித்தா நகரில் உள்ள இந்திய துணைத் தூதரகம் கூறியது: மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் இ.அஹ்மது, சவூதி அரேபியாவின் ஹஜ் பயணத்துக்கான அமைச்சர் முஹம்மது அல் ஹஜ்ஜாரை சனிக்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது, ஹஜ் பயணத்துக்கான ஏற்பாடுகள் குறித்தும் ஹஜ் ஒப்பந்தம் மேற்கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.  ஹஜ் பயணிகளிடமிருந்து அதிகப்படியான விண்ணப்பம் பெறப்பட்டுள்ளதால் கூடுதலாக 10,000 பேருக்கு அனுமதி வழங்க வேண்டும் என அஹ்மது கோரிக்கை வைத்துள்ளார். இந்த சந்திப்பின்போது, சவூதிக்கான இந்திய தூதர் ஹமீத் அலி ராவ் மற்றும் துணைத் தூதரக அதிகாரி ஃபயாஸ் அஹ்மது கித்வாய் உடனிருந்தனர்.

ஞாயிறு, 17 மார்ச், 2013

வீராணம் தண்ணீர் வரத்தொடங்கியது: சென்னையில் கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வராது


சென்னை நகர குடிநீர் தேவைக்காக வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. 230 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் வீராணம் ஏரியில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் தினமும் சென்னைக்கு 180 மில்லியன் லிட்டர் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது.
 
ஏரியின் நீர்மட்டம் மிகவும் குறைந்ததால் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னைக்கு தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து வீராணம் ஏரிக்கு கடந்த 15 நாட்களாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. தினமும் 150 கனஅடி தண்ணீர் வீராணம் ஏரிக்கு வந்து கொண்டிருந்தது. தற்போது வீராணம் ஏரியில் 310 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரியின் அன்பான வேண்டுகோள்


அன்புடையீர் அஸ்ஸலாமு அழைக்கும்  வரஹ் நமது முன்னோர்களால் மனத்தூய்மையுடன் அல்லாஹ்வின் திருபோருத்தத்தை நாடி ஆரம்பிக்கப்பட்ட நமது ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரி தொடராக நடந்து 150வது ஆண்டை தொட்டுவிட்டது இது மாபெரும் அல்லாஹ்வின் அருட் கொடையாகும்.
/
அதை நினைவு கூறும் வகையில் அல்லாஹ்வுக்கு நன்றி கூறி மேலும் பல ஆயிரம் ஆண்டுகள் ஜாமிஆ-விலிந்து வெளியாகும் ஆலிம்கள் உலக மக்களுக்கு மார்க்க பணியாற்றிட ஊக்கமளிக்கும் வகையில் 2013-ஜூன் 22-23, ஆகிய இரண்டு தினங்களுக்கு தலைசிறந்த ஆலிம் பெருமக்களையும் சமுதாய தலைவர்களையும் அழைக்கப்பட்டு 150 ஆண்டு விழாவை பெரும் மாநாடாக நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

சனி, 16 மார்ச், 2013

மாணவ, மாணவிகள் போராட்டம் எதிரொலி அனைத்து கல்லூரிகளும் மூடப்பட்டன


சென்னை : இலங்கை பிரச்னையில் மாணவ மாணவிகள்  போராட்டம் தொடர்வதால், தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் கலை, அறிவியல், சட்ட, பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டன.  இவற்றுக்கு இன்று முதல் காலவரையற்ற விடுமுறை விடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்..
இலங்கை ராணுவத்தின் போர் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும்; இலங்கை அரசுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் மன்றத்தில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பரவலாக பல கல்லூரிகளின் மாணவ மாணவிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். சில கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் தொடர் உண்ணாவிரதம் இருக்கின்றனர்.

வெள்ளி, 15 மார்ச், 2013

ஹஜ் பயணிகளிடம் இந்திய அரசு சேவை வரி வசூலிப்பது நிறுத்தப்படும் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் உறுதி


மெக்காவில் ஹஜ் புனிதப்பயணம் செய்யும் யாத்ரீகர்களிடம் சேவை வரி வசூலிக்கப்படமாட்டாது என்று தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர்களிடம் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் உறுதியளித்தார். இது தொடர்பாக, சிதம்பரத்தை தமிழ்நாடு காங்கிரஸ்கமிட்டி தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் தலைமையிலான காங்கிரஸ் உறுப்பினர்கள் ஜே.எம். ஆருண், கே.எஸ்.அழகிரி, என்.எஸ்.வி. சித்தன்,எஸ்.எஸ். ராமசுப்பு, பி. விஸ்வ நாதன் ஆகியோர் நாடாளுமன்ற வளாகத்தில் வியாழக்கிழமை சந்தித்தனர். அப்போது சிதம்பரத்திடம் காங்கிரஸ் உறுப்பினர்கள் கூறியதாவது:
ஆண்டுதோறும் இந்தியாவில் இருந்து லட்சக்கணக்கானஹஜ் யாத்ரீகர்கள் மெக்காவுக்குபுனிதப் பயணம் செய்கின்றனர்.தமிழகத்தில் இருந்துசெல்லும் யாத்ரீகர்களில் பெரும்பாலானோர் 60 வயதைக்கடந்தவர்கள்.சவூதியில் தங்கியுள்ள நாள்களில் யாத்ரீகர்களுக்குவழங்கப்படும் சேவைக்காகமத்திய அரசு சேவை வரிவசூலிப்பதாக இந்தியாவில்உள்ள ஹஜ் பயண ஏற்பாட்டாளர்கள் முறையிடுகின்றனர்.வழக்கமாக ஹஜ் யாத்ரீகர்கள் சவூதியில் இறங்கியதும்அவர்களைப் பாதுகாப்பது,புனிதக் கடமையை நிறைவேற்றுவது,  பராமரிப்பது, அங்குள்ள இடங்களை சுற்றிப்பார்ப்பது, மீண்டும் அவர்களைசவூதி விமான நிலையத்துக்குக்கொண்டு வந்து விடுவதுவரையிலான ஏற்பாடுகளைசவூதி அரசு அங்கீகரித்தடிராவல் ஆபரேட்டர் நிறுவனம்தான் மேற்கொள்ளும்.ஏற்கெனவே, இந்தியாவில்ஹஜ் யாத்ரீகர்களின் பயணத் துக்கான விமான டிக்கெட்டுக்கும் அவர்கள் கொண்டுசெல்லும் வெளிநாட்டு இந்தியரூபாய்க்கும் சேவை வரிவிதிக்கப்படுகிறது.

நமதூரில் பெண்களுக்கான தர்பியா முகாம்!



Thanks kollumeduxpress

புதன், 13 மார்ச், 2013

தேர்தல் சீர்த்திருத்தம் தேவை! டெல்லியில் மமக, முஸ்லிம் லீக்,முழக்கம்!


தலைநகர் டெல்லியில் கடந்த மார்ச் 6 மற்றும் 7 தேதிகளில் தேர்தல் சீர்த்திருத்திற்கான தன்னார்வ அமைப்பான ‘CERI’ சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. தற்போது இந்தியாவில் இருக்கும் தொகுதி வாரி தேர்தல் முறைக்கு மாறாக, ஜெர்மனி, சுவீஸ் போன்ற நாடுகளில் நடைமுறையில் இருக்கும் விகிதாச்சார அடிப்படையிலான தேர்தல் முறையை இந்தியாவில் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற அக்கருத்தரங்கில் மமக சட்டமன்ற கட்சித் தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ், பொதுச் செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி, பொருளாளர் ஓ.யூ.ரஹ்மத்துல்லாஹ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

6ஆம் தேதி நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய பேரா. ஜவாஹிருல்லாஹ் அவர்கள், புள்ளி விபரங்களுடன் இன்றைய நடைமுறைத் தேர்தல் முறையின் தவறுகளை சுட்டிக் காட்டினார். மேலும் முஸ்லிம் லீக் முன்னாள் தலைவர் பனாத்வாலா அவர்கள் இதுகுறித்து நாடாளுமன்றத்தில் தனிநபர் மசோதா கொண்டு வந்து வாதாடியதையும் குறிப்பிட்டார். இப்பிரச்சாரத்தை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

மீண்டும் வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு குடிநீர்


கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியிலிருந்து சென்னை குடிநீர் வாரியத்திற்கு இன்று முதல் மீண்டும் நீர் அனுப்பப்படுகிறது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே மிகப்பெரிய ஏரியான வீராணம்ஏரி உள்ளது. இந்த ஏரியிலிருந்து புதிய வீராணம் திட்டத்தின் மூலம் தினமும் விநாடிக்கு 76 கனஅடி நீர் சென்னை குடிநீர் வாரியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இந்த பருவமழை பொய்தத்தாலும், மேட்டூரிலிருந்து போதிய அளவு நீர் திறந்து விடப்படாததாலும் ஏரிக்கு நீர் வரத்து குறைந்தது. இதனால் ஏரியின் மொத்த கொள்ளளவான 1460 மில்லியன் கனஅடி, படிப்படியாக குறைந்து வெறும் 60 மில்லியன் கனஅடியாக குறைந்தது. இதனால் சென்னை குடிநீர் வாரியத்திற்கு சேத்தியாத்தோப்பு அருகே உள்ள பூதங்குடி நீர்வாங்கி நெடுமாடத்திலிருந்து நீரை பம்ப் செய்து அனுப்ப முடியாமல் போனதால் கடந்த பிப்.10-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை முதல் நீர் அனுப்புவது முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

முஸ்லிம்களின் ஒற்றுமை மற்றும் போராட்ட உணர்வுக்கு கிடைத்த வெற்றி! – இடிக்கப்பட்ட கெளஸியா மஸ்ஜித் மீண்டும் கட்டப்படுகிறது!


புதுடெல்லி:முஸ்லிம் அமைப்புகள் ஒற்றுமையுடன் போராடியதன் விளைவாக தெற்கு டெல்லியின் மெஹ்ராலியில் உள்ள கவுஸியா காலனியில் டெல்லி வளர்ச்சி ஆணையம் இடித்த மஸ்ஜித் மற்றும் வீடுகள் மீண்டும் கட்டப்பட்டு வருகின்றன.
மஸ்ஜிதின் கட்டிடப் பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துவிட்டன. இடிக்கபட்ட வீடுகளை திரும்பவும் கட்டும் பணி விரைவில் துவங்க உள்ளது. தற்போது தற்காலிக டெண்டுகளில் வீடுகளை இழந்த முஸ்லிம்கள் தங்கியுள்ளனர்.
கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி எவ்வித முன்னறிவிப்பும் இன்றி முஸ்லிம்கள் அதிகமாக வாழும் கெளஸியா காலனியில் டெல்லி வளர்ச்சி ஆணைய அதிகாரிகள் புல்டோசரை பயன்படுத்தி வீடுகளையும், 400 ஆண்டுகால பழமையான மஸ்ஜிதையும் போலீஸ் பாதுகாப்புடன் இடித்து தள்ளினர்.

ஞாயிறு, 10 மார்ச், 2013

காவிரி நீர் வரத்து அதிகரிப்பால் வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு தண்ணீர் அனுப்ப ஏற்பாடு: அமைச்சர்கள் ஆய்வு

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் உள்ள வீராணம் ஏரி கடந்த ஒரு மாதமாக வறண்டு கிடந்தது. கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு காவிரி நீர் வருகிறது. அங்கிருந்து கல்லணைக்கு 250 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதிலிருந்து கீழ் அணைக்கு 250 கன அடி தண்ணீர் வந்து சேர்ந்தது. 

கீழ் அணையிலிருந்து வீராணம் ஏரிக்கு நேற்று காலை 1,500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதில் 945 கன அடி தண்ணீர் வீராணம் ஏரிக்கு வந்து சேர்ந்தது. இன்றும் அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 

வீராணம் ஏரியின் மொத்த கொள்ளவு 47.50 அடி ஆகும். தற்போது அணையில் 40-40 அடி தண்ணீர் உள்ளது. வீராணம் ஏரியில் தண்ணீர் குறைந்ததையட்டி சென்னைக்கு குடிநீருக்கு தண்ணீர் அனுப்புவது நிறுத்தப்பட்டது. 

திருச்சியில் நடைபெற்ற எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொதுக்குழு-புதிய நிர்வாகிகள் தேர்வு


திருச்சியில் நேற்று (09.03.2013) துவங்கிய எஸ்.டி.பி.ஐ (சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா )கட்சியின் தமிழ்மாநில பொதுக்குழு இன்று (10.03.2013)மாலையுடன் முடிவடைந்தது
திருச்சி எல்.கே.எஸ் மஹாலில் நடைபெற்ற இப்பொதுக்குழு கூட்டத்திற்கு மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி தலைமை தாங்கினார்.மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது அனைவரையும் வரவேற்றார்.மாநில செயற்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்
இதில் கடந்த 2 ஆண்டுகளில் கட்சியின் செயல்பாடுகள் பற்றிய ஆய்வறிக்கையை மாநில பொதுச்செயலாளர் நெல்லை முபாரக் சமர்ப்பித்தார். அதனை தொடர்ந்து ஆய்வறிக்கையின் மீதான விவாதம் நடைபெற்றது.ஆய்வறிக்கை சம்பந்தமாக பொதுக்குழு உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு மாநில நிர்வாகிகள் விளக்கம் அளித்தனர்.