AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

புதன், 20 பிப்ரவரி, 2013

அரசிதழில் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு: மத்திய அரசின் முடிவு பாராட்டுக்குரியது


மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி வெளியிடும் பத்திரிகை அறிக்கை:
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பினை, உச்ச நீதிமன்ற வழிகாட்டலின்படி அரசிதழில் வெளியிட்ட மத்திய அரசின் முடிவை மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கிறது.
இம்முடிவு தமிழக அரசின் உறுதியான நடவடிக்கைகளுக்கு கிடைத்த  மகத்தான வெற்றியாகும். மத்திய அரசின் நடவடிக்கை காவிரிப் பாசன விவசாயிகளுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக மக்களையும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
கர்நாடக அரசு இம்முடிவை அமல்படுத்த மத்திய அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.
அன்புடன்
(எம். தமிமுன் அன்சாரி)

சவூதி வரலாற்றில் முதல்முறையாக... 'ஷுரா' ஆலோசனை குழு உறுப்பினர்களாக 30 பெண்கள் பதிவேயற்பு


சவூதி அரேபியாவில் மன்னரின் ஆட்சி முறை குறித்து ஆலோசனை வழங்கும் ஷுரா குழுவில் முதல்முறையாக 30 பெண்கள் இடம்பெற்றுள்ளனர். 30 பெண்கள் உள்பட 150 பேர் கொண்ட ஷுரா குழு நேற்று மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜீஸ் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர்.

புதன், 13 பிப்ரவரி, 2013

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் சென்னை மாநகர மகளிரணி மாநாடு

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் சென்னை மாநகர மகளிரணி மாநாட்டில்நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
பாலியல் வன்கொடுமை போன்ற கொடூரமான குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்க சட்டத்தில் இடமளிக்க வேண்டும் என்ற வர்மா குழு பரிந்துரையை உடனடியாக நடைமுறை படுத்த வேண்டும். இந்தத் தண்டனைகளைப் பொதுமக்கள் முன்னிலையில் நிறைவேற்ற வேண்டும். இதுபோன்ற தண்டனைகளைப் பொதுமக்களைச் சாட்சியாக்கி வழங்கினால் அது நிச்சயமாக குற்றத் தடுப்பு நடவடிக்கையாக அமையும்.
Conference of Islami Hind jamaatte makalirani1அச்சு ஊடகங்களிலும் காட்சி ஊடகங்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், திரைப்படங்களிலும் விளம்பரங்களிலும் பெண்களை அரைகுறையாகக் காட்டுவதை கட்டாயம் தடை செய்ய வேண்டும். அதனைக் குற்றமாக அறிவிக்க வேண்டும்.

இன்ஷாஅல்லாஹ்! கடலூர் மாவட்டம் லால்பேட்டை TNTJ நடத்தும் ”மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம்”


திங்கள், 11 பிப்ரவரி, 2013

இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக சதித் திட்டங்கள் தீட்டுவதில் காங்கிரஸ்சும் பாஜகவும் இணைந்து செயல்பட்டு வருகின்றன.

இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக சதித் திட்டங்கள் தீட்டுவதில் காங்கிரஸ்சும் பாஜகவும் இணைந்து செயல்பட்டு வருகின்றன.இது இன்று நேற்றல்ல.. ஜவஹர்லால் நேரு காலம் முதல் சமீபத்தில் தூக்கிலிடப்பட்ட அப்ஸல் குரு வரை இந்த ஜனநாயக தேசத்தில்; 23 சதவீதம் இருக்கும் முஸ்லிம்களை ஒழித்தே தீர வேண்டுமென்று கங்கனம் கட்டிக் கொண்டு ஆட்சி செய்து வருகிறார்கள்.

காஷ்மீரியான குலாம் நபி ஆசாத் மற்றும் உபி யைச் சேர்ந்த சல்மான் குர்ஷித் உள்ளிட்ட சில முஸ்லிம் பெயர் தாங்கிகள் காங்கிரஸ்சின்; இத்தகைய துரோக செயல்களுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
காந்தி,மொரார்ஜி தேசாய்,வி.பி.சிங்,ஜெயப்பிரகாஷ் நாராயணன்,மது தண்டவதே போன்ற வட இந்தியாவைச் சேர்ந்த தேசிய தலைவர்கள் இந்த தேசத்தின் இஸ்லாமியர்களுக்காகவும் அவர்களது நலனுக்காகவும் ஆதரவாக இருந்துள்ளனர்.இவர்களைத் தவிர மற்ற அரசியல்வாதிகள் அணைவருமே முஸ்லிம் சமுதாயத்துக்கு எதிராகத் தான் அரசியல் செய்து வருகின்றனர்.

ஞாயிறு, 10 பிப்ரவரி, 2013

ஹஜ் விண்ணப்ப படிவத்தை இலவசமாக வழங்க கோரிக்கை

சென்னை: இந்திய தேசிய முஸ்லிம் லீக் மாநில தலைவர் ஜவஹர்அலி வெளியிட்ட அறிக்கை:ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் இருந்து ஹஜ் பயணம் செல்ல 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கின்றனர். விண்ணப்ப படிவ கட்டணம் ரூ.300 வசூலிக்கப்படுகிறது. விண்ணப்பித்த அனைவருக்கும் விசா கிடைப்பதில்லை. விசா கிடைக்காதவர்களுக்கு விண்ணப்ப படிவ கட்டண தொகை திரும்ப கொடுப்பதில்லை. எனவே, விண்ணப்ப படிவத்தை அரசு இலவசமாக வழங்க வேண்டும்.மேலும், ஹஜ் பயணத்துக்கு தமிழகத்தில் இருந்து 3,300 பேருக்கு மட்டும் மத்திய அரசு அனுமதி அளிக்கிறது. இந்த ஆண்டு 7,000 பேருக்கு அனுமதி தரவேண்டும். ஹஜ் பயணத்துக்கு சர்வதேச பாஸ்போர்ட் தேவைப்படுகிறது. இதை பெற பிறப்பு சான்றிதழ், பள்ளி சான்றிதழ் கொடுக்க வேண்டியதுள்ளது. ஆனால், தமிழகத்தில் உள்ள வயதான முஸ்லிம்களிடம் இத்தகைய சான்றிதழ்கள் இருக்க வாய்ப்பில்லை. எனவே, அவர்களுக்கு இதிலிருந்து விலக்கு அளித்து பாஸ்போர்ட் வழங்க வேண்டும். இவ்வாறு ஜவஹர் அலி தெரிவித்துள்ளார்.

சனி, 9 பிப்ரவரி, 2013

அப்சல் குருவுக்கு கூட்டு மனசாட்சிப்படி தூக்குத்தண்டனை தமுமுக கண்டனம்

அப்சல் குரு விவகாரத்தில் நேரடியான சாட்சியம் இல்லாத நிலையில் கூட்டு மனசாட்சியின் அடிப்படையில் அப்சல் குருவுக்கு நிறைவேற்றப்பட்டுள்ள தூக்குத்தண்டனை கண்டிக்கத்தக்கது.

இந்திய நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக இந்திய உச்சநீதிமன்றத்தினால் கூட்டு மனசாட்சி என தீர்ப்பின்படி அப்சல் குரு இன்று அதிகாலை தூக்கில் இடப்பட்டுள்ளார். எந்த நேரடி சாட்சியமும் இல்லாத நிலையில் அப்சல் குருவுக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. 2005ஆம் ஆண்டு ஆகஸ்ட் அன்று உச்சநீதிமன்றம் அப்சல் குருவுக்கு எந்த பயங்கரவாத குழு அல்லது அமைப்பை சேர்ந்தவர் அல்ல என்று தெளிவுபடுத்தியுள்ளது.
அப்சல் குருவுக்காக வாதாட நியமிக்கப்பட்ட வக்கீல் மிக முக்கியமான சாட்சியங்களைக்கூட குறுக்கு விசாரணை செய்யவில்லை என்ற தகவல்கள் வெளிவந்தன. நாடாளுமன்றம் தாக்கப்பட்டது கடுமையான கண்டனத்துக்குரியது என்பதிலும் அது எந்த விதத்திலும் பொறுத்துக்கொள்ள முடியாத அக்கிரம செயல் என்பதிலும் எவ்வித சந்தேகமும் இல்லை ஆனால் அந்த கொடிய குற்றம் குறித்த விசாரணைகள் தீர்ப்புகள் வழங்கப்பட்ட வழிமுறையின் மீது பல்வேறு கேள்விகள் எழுகின்றன.

வியாழன், 7 பிப்ரவரி, 2013

லால்பேட்டை சிவன்கோயில் தெரு பாத்திமா பீவி மறைவு


லால்பேட்டை சிவன்கோயில் தெருவில் இருக்கும் சட்டி ஜெக்கரியா அவர்களின் மனைவி பாத்திமா பீவி அவர்கள் இன்று மதியம் 4 மணியளவில் தாருல் பனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள், இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று இரவு 10 மணிக்கு பெரிய பள்ளியில் நடைபெறுகிறது.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் கொள்ளுமேடுடைம்ஸ் இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது.

டெல்லியில் மோடிக்கு கடும் எதிர்ப்பு – மாணவர்கள் போராட்டம்! போலீஸ் தடியடியால் பரபரப்பு!


டெல்லி:குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திரமோடி டெல்லி ஸ்ரீராம் காலேஜ் ஆஃப் காமர்ஸில் வளர்ச்சியைக் குறித்து உரை நிகழ்த்துவதை எதிர்த்து பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த மாணவர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கேம்பஸ் ஃப்ரண்ட், எஸ்.ஐ.ஒ, டி.எஸ்.யு, ஐஸா உள்ளிட்ட மாணவர் அமைப்புகளின் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. பேராசிரியர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கலந்துகொண்டனர்.
மாலை 3 மணி அளவில் ஆர்ட் காலரியின் அருகில் இருந்து துவங்கிய மோடி எதிர்ப்புப் பேரணியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்துகொண்டனர். இப்பேரணி ஸ்ரீராம் கல்லூரிக்கு செல்லும் வழியில் போலீஸ் தடுப்புகளை ஏற்படுத்தியிருந்தது. இதனை அகற்றிவிட்டு முன்னேறிய பேரணி மீது போலீசார் தடியடி மற்றும் தண்ணீரை பாய்ச்சினர்.
இதனிடையே பேரணியில் ஊடுருவிய ஏ.பி.வி.பி, பா.ஜ.க குண்டர்கள் குழப்பத்தை ஏற்படுத்த முனைந்தனர். சிறிய அளவிலான மோதலும் ஏற்பட்டது. பின்னர் போலீசார் மாணவர்களை கைது செய்தனர். போலீஸ் கைது செய்த மாணவர்களை ஏ.பி.வி.பி குண்டர்கள் தாக்குவதற்கான வாய்ப்பை போலீசார் ஏற்படுத்தியது மோதலுக்கு வழிவகுத்தது.

புதன், 6 பிப்ரவரி, 2013

லால்பேட்டை இஜ்திமா இரண்டாம் நாள் காட்சி தொகுப்பு


 லால்பேட்டை தப்லீக் இஜ்திமாவில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு

திங்கள், 4 பிப்ரவரி, 2013

கோவையில் மக்கள் வாழ்வுரிமை மாநாடு புகைப்படக்காட்சிகள்:



 கோவையை ஸ்தம்பிக்க வைத்தது ம.ம.க...

லால்பேட்டை தப்லீக் இஜ்திமாவில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு



 லால்பேட்டை தப்லீக் இஜ்திமாவில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு இஜ்திமா முதல் நாள் காட்சி தொகுப்பு

ஞாயிறு, 3 பிப்ரவரி, 2013

விஸ்வரூபம்: 7 காட்சிகளை நீக்க சம்மதம்; வெளியீடு குறித்து உடனடி அறிவிப்பு: கமல்


சென்னை :”விஸ்வரூபம்’ பட விவகாரம் தொடர்பாக, அரசு தரப்பு, முஸ்லிம் அமைப்பினர், கமல் தரப்பினர் இடையே நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது. இதில் இரு தரப்புக்கும் உடன்பாடு ஏற்பட்டது. சர்ச்சைக்குரிய 7 காட்சிகளை நீக்க கமல் சம்மதம் தெரிவித்துள்ளார்.
விஸ்வரூபம் பட விவகாரத்தில், “முஸ்லிம் அமைப்பினருடன், கமல் பேசி சமரச ஒப்பந்தம் செய்து கொண்டால், படத்தை வெளியிட, அரசு ஒத்துழைக்கும்’ என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். இதையடுத்து, நேற்று முன் தினம், முஸ்லிம் அமைப்புகளுடன் பேச்சு நடத்த, கமல் தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டது. அரசு தரப்பு, கமல்ஹாசன், முஸ்லிம் அமைப்பினர் என, முத்தரப்பும் ஒரே நேரத்தில் பேச்சு நடத்த வேண்டும் என்று, முஸ்லிம் அமைப்புகள் சார்பில், ஒரு மனதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, நேற்று, 12:00 மணிக்கு, தலைமை செயலகத்தில், ராஜ்கமல் பிலிம்ஸ் நிர்வாகி சந்திரஹாசன், டைரக்டர் அமீர், முஸ்லிம் அமைப்புகள் சார்பில், இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஹனீபா, சிக்கந்தர் ஆகியோர், உள்துறை செயலர் ராஜகோபாலை சந்தித்து பேசினர்.
அப்போது, முத்தரப்பு பேச்சு வார்த்தையில் பங்கேற்க சம்மதம் தெரிவித்து கடிதம் கொடுத்தனர். முத்தரப்பு பேச்சுவார்த்தை குறித்தும், ஆலோசனையை எங்கே நடத்துவது என்பது குறித்தும், உள்துறை செயலர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து பேசினர். சுமார் ஒரு மணி நேரம் நடந்த ஆலோசனைக்கு பின், நேற்று மாலை பேச்சுவார்த்தை நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், மாலையில் கூட்டம் நடக்கவில்லை.

சனி, 2 பிப்ரவரி, 2013

விஸ்வரூபம் திரைப்படத்திற்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் அதிகாரப்பூர்வ தடை!


அபுதாபி:வளைகுடா நாடான ஐக்கிய அரபு அமீரகத்தில் இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் அவமதிக்கும் வகையில் நடிகர் கமலஹாசன் இயக்கி தயாரித்துள்ள  ‘விஸ்வரூபம்’ திரைப்படத்திற்கு அதிகாரப்பூர்வமாக தடை
விதித்துள்ளதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய மீடியா கவுன்சில்(என்.எம்.சி) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த 24-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தடபுடலான சடங்குகளுடன் இத்திரைப்படம் வெளியாக இருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் இத்திரைப்படத்திற்கு எதிராக எழுந்த எதிர்ப்புகள் அரசின் காதுகளுக்கு எட்டியதை தொடர்ந்து தற்காலிகமாக தடைவிதிக்கப்பட்டிருந்தது.

லால்பேட்டையில் நாளை ஞாயிறு துவங்க இருக்கின்ற தப்லீக் இஜ்திமா


லால்பேட்டையில் நாளை ஞாயிறு  துவங்க இருக்கின்ற தப்லீக்  இஜ்திமாவுக்கான பணிகள் சிறப்பாக அமைக்கப்பட்டு லால்கான் தோப்பு வெள்ளை பந்தலுடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது மேலும் ஒளு செய்வதற்கான ஏற்பாடுகளும் சிறப்பாக அமையபெற்றுள்ளது .

Thanks lalpet.net

வெள்ளி, 1 பிப்ரவரி, 2013

பிளாஸ்டிக் தடை மாவட்டத்தில் இன்று முதல் அமலுக்கு வருகிறது…!


கடலூர் : பிப்-01
கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து உள் ளாட்சி அமைப்புகளில் இயற்றப்பட்ட தீர்மானங்களின் கருத்துக்கள் இன்று முதல் செயல்முறைக்கு வருகிறது. இது குறித்து கலெக்டர் கிர்லோஷ்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
கடலூர் மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிகள், 16 பேரூராட்சிகள் மற்றும் 683 கிராம ஊராட்சிகளில் பிளாஸ்டிக் கேரி பைகளினால் ஏற்படும் தீய விளைவுகளை தடுக்கும் பொருட்டும் சுற்றுப்புற சூழலை பாதுகாக்கும் பொருட்டும் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் தானாக முன்வந்து தீர்மானங்களை இயற்றியுள்ளன.
/
கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊரக மற்றும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் பிளாஸ்டிக் கேரி பைகளை தடை செய்வது ஒருமித்த கருத்துக்களை பிரதிபலிக்கும் வகையில் இயற்றப்பட்ட தீர்மானங்களின் சாராம்சம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
/
கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளில் இயற்றப்பட்ட தீர்மானங்களின் கருத்துக்கள் இன்று முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்படுகிறது.