AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

வியாழன், 31 ஜனவரி, 2013

விஸ்வரூபம் படத்துக்குத் தடை ஏன்? - முதல்வர் ஜெயலலிதா விளக்கம்

"சட்ட ஒழுங்கை பாதுகாப்பதே அரசின் கடமை. அதை தமிழக அரசு செய்து வருகிறது. 

இந்தப் படம் 524 திரையரங்களில் திரையிட இருந்தது. பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். இந்தப் படத்தை தடை செய்யக் கோரினர். அவர்கள் பல இடங்களில் போராட்டம் நடத்தினர். இந்தப் படத்துக்கு அனுமதி அளித்திருந்தால் பெருமளவில் வன்முறை வெடித்திருக்கக் கூடும். 

உளவுத் துறை மூலம் கிடைத்தத் தகவல்படி, அனைத்து திரையரங்குகளுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். ஆனால், அதற்கு உரிய போலீஸார் எண்ணிக்கை இல்லை. 

ஒவ்வொரு திரையரங்குக்கும் தினமும் மூன்று வேளைக்கு தலா 60 போலீஸார் தேவை. ஆனால், அதற்கு உரிய எண்ணிக்கையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த முடியாது.

பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பியை தடை செய்! தமிழகம் முழுவதும் எஸ்.டி.பி.ஐ ஆர்ப்பாட்டம்!


சென்னை:நாட்டில் நடைபெறும் பயங்கரவாத செயல்களை கண்டித்தும், நாட்டில் நடைபெற்ற குண்டு வெடிப்புகளுக்கு காரணம் சங்க்பரிவார அமைப்புகள் தான் என்ற உள்துறை அமைச்சர் ஷிண்டேவின் கருத்தை ஆதரித்தும், சங்பரிவார அமைப்புகளை தடை செய்ய மத்திய அரசை வலியுறுத்தியும் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
சென்னையில் நேற்று (ஜனரி-30)  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில  தலைவர் கே.கே.எஸ்.எம் தெஹ்லான் பாகவி தலைமை தாங்கினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றிய  கே.கே.எஸ்.எம் தெஹ்லான் பாகவி தமது உரையில் கூறியதாவது:

ரூ.2015 கோடியில் மேம்படுத்தப்பட்ட சென்னை விமான நிலைய முனையங்கள் இன்று திறப்பு

சென்னை : சென்னை விமானநிலைய உள்நாட்டு மற்றும் சர்வதேச முனையங்கள் புதுப்பிக்கப்பட்டு, அதோடு ஓடுபாதையும் மேம்படுத்தப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடக்கிறது. இதுகுறித்து இந்திய விமான நிலைய ஆணைய தலைவர் அகர்வால் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை விமான நிலையம் விரிவுபடுத்தி, புதுப்பிக்கும் பணி 2008 நவம்பரில் தொடங்கியது. 

ரூ. 1808 கோடியில் தொடங்கப்பட்ட பணி, 36 மாதங்களில் முடிந்திருக்க வேண்டும். மின்தட்டுப்பாடு, கட்டுமான பொருள் விலையேற்றம், நிலங்கள் கையகப்படுத்துவதில் தடங்கலால் தாமதமாகி திட்ட செலவு  ரூ. 2015 கோடியாகிவிட்டது. இந்த புதிய முனையத்தை 31ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி திறந்து வைக்கிறார். எனினும் பயன்பாட்டுக்கு வருவதற்கு ஓரிரு மாதம் ஆகலாம். 

புதன், 30 ஜனவரி, 2013

பள்ளி சிறுமிக்காக தெருவோரம் உட்கார்ந்திருந்த அபுதாபி இளவரசர்!

பள்ளிக்கு வெளியே செய்வதறியாது தனியாக நின்று கொண்டிருந்த சிறுமியின் பெற்றோர் வரும் வரை அவருக்கு துணையாக அபுதாபி இளவரசர் ஜெனரல் ஷேக் முகமது பின் ஜயத் அல் நஹ்யான் சாலையோரத்தில் அமர்ந்திருந்தார். 

அபுதாபியின் இளவரசரும், ராணுவ துணை தளபதியுமான ஜெனரல் ஷேக் முகமது பின் ஜயத் அல் நஹ்யான் காரில் சென்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது ஒரு பள்ளிக்கு வெளியே சிறுமி ஒருவர் தொலைந்தது போன்று தனியாக நின்று கொண்டிருந்திருக்கிறார். இதைப் பார்த்த இளவரசர் காரை நிறுத்துமாறு கூறி தனது உதவியாளருடன் அந்த சிறுமி அருகே சென்று நீ ஏன் இங்கு நின்று கொண்டிருக்கிறாய் என்று கேட்டார்.

அதற்கு சிறுமி, தனது தந்தை வந்து அழைத்துச் செல்ல வேண்டும். ஆனால் இன்னும் வரவில்லை, அதனால் தான் காத்துக் கொண்டிருக்கிறேன் என்றார். 

விஸ்வரூபம் படத்துக்கு மீண்டும் தடை விதித்தது ஹைகோர்ட் பெஞ்ச்: தனி நீதிபதி தந்த அனுமதி ரத்து!

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று விஸ்வரூபம் படத்துக்கு உயர் நீதிமன்ற பெஞ்ச் இன்று தடை விதித்தது. இந்தத் தடையை நீக்கி நேற்று தனி நீதிபதி விதித்த உத்தரவை ரத்து செய்துவிட்டது. முன்னதாக இந்தப் படத்துக்கு தமிழக அரசு தடை விதித்தது. இதை எதிர்த்து கமல் தரப்பு உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இதை விசாரித்த நீதிபதி வெங்கட்ராமன் நேற்றிரவு 10 மணிக்கு படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்து உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று இரவு 11 மணிக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எலிபி தர்மராவின் வீட்டுக்குச் சென்ற அரசு வழக்கறிஞர்கள் படத்துக்கு தடை விதிக்கக் கோரி அப்பீல் மனு தாக்கல் செய்யப் போவதாகத் தெரிவித்தனர். 

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி நாளை காலை (இன்று) இந்த வழக்கை விசாரிப்பதாக அறிவித்தார்.இதையடுத்து இந்தப் படத்தின் மீதான தடை நீக்கத்தை எதிர்த்து இன்று காலை மேல் முறையீடு செய்தது தமிழக அரசு. இதை ஏற்று அரசு வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன் தலைமையிலான குழு காலை 10.30 மணிக்கு முதல் வழக்காக இதனை பதிவு செய்தது. 

விஸ்வரூபதிற்கு தடை நீக்கம்… அமைதியும் , கட்டுப்பாடும் அவசியம்…


விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு விதித்த தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கி இருக்கிறது.
ஒரு சமூகத்தின் கோபத்தை, கோரிக்கையை கவனத்தில் கொண்டு சில காட்சிகளையாவது நீக்க வேண்டும் என நீதிபதி சொல்லி இருந்தால் அது ஓரளவாவது நீதிமன்றத்தின் நீதிமன்றத்தின் மீது நம்பிக்கையை கொடுத்திருக்கும்.
ஆனால் எந்த கட்டுப்பாடும், அறிவுரையும் சொல்லப்படாமல் முழுமையாக தடையை நீக்க நீதிபதி கொடுத்திருக்கும் தீர்ப்பு அதிர்ச்சியை அளிக்கிறது.
எனினும் இது இறுதியானது அல்ல. மேல்முறையீடு செய்யப்படும் என அரசு வழக்கறிஞர் கூறி இருப்பது சற்று ஆறுதல் தருகிறது.
எனினும் இது தோல்வி அல்ல. இதுவரை இப்படத்திற்கு கொடுத்த எதிர்ப்பு என்பதே பெரிய வெற்றியாகும். இனி இதுபோன்ற சமூக விரோத திரைப்படங்களை எடுக்க வேண்டுமென்ற துணிச்சல் யாருக்கும் வராது என்பது உண்மை..

செவ்வாய், 29 ஜனவரி, 2013

சென்னை விமான நிலையத்தில் விரிவுபடுத்தப்பட்ட முனையம் வரும் 31ம் தேதி திறப்பு

சென்னை : புதிய விமான நிலையம் ஜனவரி 31 ஆம் தேதி திறக்கப்படுவதாக விமான நிலைய இயக்குனர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் உள்நாடு, பன்னாட்டு விமான முனையத்தின் விரிவாக்கபணி 2008ம் ஆண்டு தொடங்கியது. ரூ.2000 கோடி செலவில் பணிகள் நிறைவடைந்து திறப்பு விழாவுக்கு தயாராக உள்ளன. இவற்றை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அல்லது பிரதமர் மன்மோகன்சிங் திறந்துவைப்பார் என்று விமான நிலைய ஆணைய தலைவர் அகர்வால், 2 மாதத்துக்கு முன்பு கூறினார். இதில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. துணை ஜனாதிபதி அமீத் அன்சாரி, வரும் 31ம் தேதி புதிய விமான முனையங்களை திறந்து வைக்கிறார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

திங்கள், 28 ஜனவரி, 2013

கொள்ளுமேட்டில் தமுமுக ஆய்வு கூட்டம்.

கடலூர் தெற்கு மாவட்டம் கொள்ளுமேடு கிளை தமுமுகவின் சார்பில் நிர்வாகிகள் உறுப்பினர்கள் பங்கேற்ற செயல் வீரர்கள் கூட்டம் 28-01-2013 திங்கள்கிழமை மாலை மாவட்டத் தலைவர் எம்.ஹெச்.மெஹராஜ்தீன் தலைமையில் கிளை அலுவலகத்தில் நடைபெற்றது.

தமுமுக மாவட்ட செயலாளர் என்.அமானுல்லா உள்ளிட்ட தமுமுக-மமக கிளை நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்த அமர்வில் மமக மாநில அமைப்பு செயலாளர் மண்டலம் எம்.ஜெயினுல்லாபிதீன் கலந்து கொண்டு கிளை நிர்வாகம் செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கினார்.

விஸ்வரூபம் – தீர்ப்பு நாளை ஒத்திவைப்பு!


சென்னை:இஸ்லாமியர்களையும், புனித திருக்குர்ஆனையும் தவறாக சித்தரித்து எடுக்கப்பட்ட சர்ச்சைக்குரிய கமலின் விஸ்வரூப படத்தின் மீதான தீர்ப்பை நீதிபதி வெங்கட்ராமன் நாளை ஒத்திவைத்தார்.
மேலும்;  ‘நடிகர் கமலஹாசன் அரசுடன் கலந்து ஒரு சுமூக தீர்வை ஏற்ப்படுத்த முயற்சிக்க வேண்டும்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
விஸ்வரூபம் படத்தின் மீது இன்று தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்ப்பார்த்த நிலையில் தமிழகம் முழுவதும் இன்று பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

ஞாயிறு, 27 ஜனவரி, 2013

காட்டுமன்னார்கோவிலில்-சிதம்பரம் போக்குவரத்துக்கு இடையூறாக தேசிய நெடுஞ்சாலையில் ஜல்லி கற்கள் குவிப்பு

காட்டுமன்னார்கோவிலில்-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளியங்கால் ஓடையில் சாலை ஓரத்தில் தடுப்பு கட்டை கட்ட குவிக்கப்பட்ட ஜல்லி கற்கள் போக்குவரத்துக்கு இடையூறாக கொட்டப்பட்டு இருப்பதால் விபத்து அபாயம் உருவாகி இருக்கிறது.
 காட்டுமன்னார்கோவிலில் உள்ள வீராணம் ஏரியிலிருந்து மழை காலங்களில் உபரிநீர் வெள்ளியங்கால் மதகு வழியாக வெள்ளியங்கால் ஓடையில் வெளியேற்றப்படும். இதன் காரணமாக கரையோரங்களில் உள்ள கிராமங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும். மேலும் வெள்ளியங்கால் ஓடை மழை காலங்களில் விளை நிலங்களில் உள்ள வெள்ளநீர் வடிவதற்கு வடிகாலாகவும் உள்ளது. இதனால் வெள்ளியங்கால் ஓடை செல்லும் பாதையில் உள்ள கிராமங்களில் வெள்ளநீர் வடிவதற்கு மதகுகள் கட்டப்பட்டுள்ளது. இந்த மதகுகள் திருச்சி, சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்த மதகுகள் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆவதால் சேதமடைந்து காணப்படுகிறது. பொதுப்பணித்துறை சார்பில் சேதமடைந்த மதகுகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

ஏர் இந்தியா உலகின் மூன்றாவது பாதுகாப்பற்ற விமானம்!


வாஷிங்டன்:ஏர் இந்தியா விமானம் சீனா மற்றும் டம் விமானத்தை அடுத்து மூன்றாவது பாதுகாப்பற்ற விமானமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மேலும் 60 விமான சேவையை பரிசீலித்த ஹம்பர்கை சேர்ந்த ஜாக்டேக் (JACDEC – Jet Airliner Crash Data Evalution Centre) என்னும் இணையத்தளம் இந்தியாவின் தேசிய விமானமான ஏர் இந்தியாவிற்கு 58_வது இடத்தை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகின் பாதுகாப்பான விமானமாக பின்னைர் விமானம் என்றும் 2_வதாக நியூசிலாந்து விமானமும், 3_வது இடமாக கேத்தே பசிபிக்கும் 4_வது இடத்தில் எமிரேட்ஸ் விமானமும் தேர்தெடுக்கப்பட்டுள்ளது. மேலும் முதல் 9 இடத்தை பிடித்துள்ள எந்த விமானமும் கடந்த 30 ஆண்டுகளில் ஒரு விமானத்தைக் கூட இழக்கவில்லை மேலும் அவை விபத்துக்கு உள்ளாகவும் இல்லை என்பது அந்த இணையத்தளத்தின் அறிக்கை ஆகும்.

சனி, 26 ஜனவரி, 2013

கொள்ளுமேடு மதீனா மஸ்ஜீத் கந்தூரீ விழா (படங்கள்)

 மதீனா மஸ்ஜீத் கந்தூரீ விழா புகைப்படங்கள்

கொள்ளுமேடு அல்-அமான் நர்சரி & பிரைமரி பள்ளி 64 வது குடியரசு தினம் கொண்டட்டம் (படங்கள்)


உறுதிமொழி
இந்தியா என் நாடு. இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்கள். என் நாட்டை நான் பெரிதும் நேசிக்கிறேன். இந்நாட்டின் பழம்பெருமைக்காகவும், பன்முக மரபுச் சிறப்புக்காகவும் நான் பெருமிதம் அடைகிறேன். இந்நாட்டின் பெருமைக்குத் தகுந்து விளங்கிட என்றும் பாடுபடுவேன்.

என்னுடைய பெற்றோர், ஆசிரியர்கள், எனக்கு வயதில் மூத்தோர் அனைவரையும் மதிப்பேன்; எல்லோரிடமும் அன்பும் மரியாதையும் காட்டுவேன். 

வியாழன், 24 ஜனவரி, 2013

விஸ்வரூபத்திற்கு இடைக்காலத் தடை: சமுதாய ஒற்றுமைக்கு முதல் வெற்றி!


இந்தியாவில் சமூக நல்லிணக்கத்தை கெடுக்கவல்ல விஸ்வரூபம் திரைப்படத்தை தடை செய்ய வேண்டுமென தமுமுக உள்ளிட்ட அனைத்து முஸ்லிம் இயக்கங்கள் அடங்கிய முஸ்லிம் கூட்டமைப்பு தலைவர்கள் தமுமுக மூத்த தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ. தலைமையில் தமிழக உள்துறைச் செயலாளரை  நேற்று (23.01.2013) காலை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். மேலும் இப்படம் திரைப்படம் வெளியானால் நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என்றும் கூறினர்.
முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு தமிழக அரசு மதிப்பளித்து விஸ்வரூபம் படத்தினைத் திரையிட 15 நாட்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காமல் படத்தைத் திரையிட அனுமதிக்க முடியாது என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மீலாதுந் நபி விழா ஆளுநர்,முதல்வர் தலைவர்கள் வாழ்த்து


மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் “மீலாதுன் நபி” திருநாள் வாழ்த்துச் செய்தி
/
அண்ணல்  நபிகள் நாயகம் பிறந்த நன்நாளாம்  “மீலாதுன் நபி” திருநாளில் உலகெங்கும் வாழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
/
எளியோர்களிடம் கருணைக் காட்டுங்கள்; சிந்தனையிலும், நடத்தையிலும் தூய்மை உடையவராக இருங்கள்; பசித்தவர்களுக்கு உணவு அளியுங்கள் என்பது இறைத் தூதர் நபிகள் நாயகம் அவர்கள் உலகிற்கு எடுத்துரைத்த போதனையாகும்.
/
உலகில் அமைதி தவழ்ந்திட அன்னார் போதித்த பொறுமை, சகிப்புத் தன்மை, சமாதானம், சகோதரத்துவம் போன்றவற்றை பின்பற்றி வாழ்ந்தால் வாழ்வில் ஏற்றம் பெறலாம் என்பதை உணர்ந்து  பெருமானார் நபிகள் நாயகத்தின் வழியை பின்பற்றிட  உறுதியேற்போம்.  இந்த இனிய நாளில், இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது இனிய  “மீலாதுன்  நபி” நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

விஸ்வரூபம் படத்திற்கு உலகின் பல நாடுகளிலும் எதிர்ப்பு வலுக்கிறது


விஸ்வரூபம் படத்திற்கு எதிராக இந்தியா முழுவதும், மலேசியா ஆஸ்திரேலியா போன்ற உலகின் பல நாடுகளிலும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. படத்திற்கு எதிராக முஸ்லிம்கள் அணிதிரண்டு வருகிறார்கள்.
ஏற்கனவே துபை, குவைத், சிங்கப்பூர் உட்பட பல நாடுகளில் படம் தடை செய்யப்பட்டிருக்கிறது. மலேசியாவிலும், ஆஸ்திரேலியாவிலும் படத்திற்கு தடை கோரி ஊர்வலமாகத் திரண்டு வருகிறார்கள்.
தேச நலனில் அக்கறைக் கொண்ட பன்முக சமுதாயம் வாழக்கூடிய இந்தியாவில் ஒற்றுமையை விரும்புகின்ற அனைவருமே இந்தப் படத்தை எதிர்ப்பார்கள். கமலஹாசன், பிரித்தாளும் சூழ்ச்சியை தனது கொடுமதியால் இந்தப் படத்தைப் பயன்படுத்தியுள்ளார்.
Thanks: tmmk in

செவ்வாய், 22 ஜனவரி, 2013

அபுதாபியில் உத்தமத் திருநபி உதய தின விழா!


விஸ்வரூபம் திரைப்படத்தை தடை செய்யாவிட்டால் போராட்டம்

முஸ்லிம்களின் கூட்டமைப்பு அறிவிப்பு
நடிகர் கமல்ஹாசன், விஸ்வரூபம் என்ற பெயரில் ஒரு திரைப்படத்தை எடுத்திருக்கிறார். இந்தப் படத்தை கடந்த 21.01.2013 அன்று முஸ்லிம் கூட்டமைப்பைச் சேர்ந்த தலைவர்களுக்கு சிறப்புக் காட்சியைப் பார்க்க கமல்ஹாசன் ஏற்பாடு செய்திருந்தார். 
படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கொச்சைப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. திருக்குர்ஆன், தீவிரவாதிகளின் கையேடு என்பதைப் போல் காட்சிகள் அமைக்கப் பட்டுள்ளன.
தொழுகை உட்பட முஸ்லிம்களின் வணக்க வழிபாடுகள் தீவிரவாதத்திற்கு ஊக்கம் அளிக்கின்றன என்பது போல் காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் அறிமுகம் அவசர உதவிக்கு பெண்கள் 181ஐ டயல் செய்யலாம்

புதுடெல்லி : பெண்களின் அவசர உதவிக்கு டெல்லியில் அறிமுகப்படுத்தப்பட்ட 181 போன் எண் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என தொலை தொடர்புத்துறை அமைச் சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார். மருத்துவ மாணவி பலாத்கார சம்பவத்துக்கு பின், டெல்லியில் பெண்களின் அவசர உதவிக்கு மூன்று இலக்க போன் எண்ணை அறிமுகம் செய்யும்படி முதல்வர் ஷீலா தீட்சித் வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து 167 என்ற எண்ணை தொலை தொடர்புத்துறை அறிமுகம் செய்தது. பின் அது எளிதாக ஞாபகம் வைத்திருக்கும் வகையில் 181 என மாற்றப்பட்டது.

ஞாயிறு, 20 ஜனவரி, 2013

கொள்ளுமேடு தமுமுக மாணவரணி சார்பில் தர்பியா


கொள்ளுமேடு தமுமுக மாணவரணி சார்பில் தர்பியா

கடலூர் தெற்கு மாவட்டம் கொள்ளுமேடு தமுமுக மாணவரணி சார்பில் மாணவர்களுக்கான தர்பியா நிகழ்ச்சி 20-01-2013 ஞாயிற்றுக் கிழமை மாலை மக்ரிப் தொழுகைக்கு பின் கிளை அலுவலகத்தில் நடைபெற்றது.கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

அல்அய்ன் மண்டல தமுமுக நிர்வாகி முஹம்மது ரிஃபாயி "இந்திய முஸ்லிம்களின் நிலை குறித்து"வகுப்பெடுத்தார்.
இம்முகாமில் ஏராளமான மாணாக்கர் பங்கேற்றனர்.
 

எழுச்சியுடன் நடைபெற்ற மமக வின் பேச்சாளர் பயிற்சி முகாம்


மமக வின் சார்பில் பேசாலர்களுக்கான பயிற்சி முகாம் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் 19-01-2013 அன்று நடைபெற்றது.
இதில் பிரபல இடதுசாரி - முற்போக்கு சிந்தனையாளர் பேராசிரியர் அருணன் அவர்கள் "பேச்சாளராக உருவாவது எப்படி?" என்ற தலைப்பில் வகுப்பெடுத்தார்.
யாரும் எதிர்பாராத விதமாக கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்ட குழுவின் தலைவர் சுப. உதயகுமார் அவர்கள் இடிந்தகரை கிராமத்தில் இருந்தவாறே வீடியோ CONFERENCE மூலம் வகுப்பெடுத்து எல்லோரையும் உற்சாகப்படுத்தினார். இவரது உரையை எதிர்பார்க்காத பங்கேற்பாளர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்தனர்.
பேராசிரியர். எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் POWER POINT மூலம் வகுப்பெடுத்தார். அதில் பேரறிஞர் அண்ணா, வைகோ, தமிழருவி மணியன், நாஞ்சில் சம்பத் ஆகியோரின் உரைகள் ஒளிபரப்பு செய்யப்பட்டு அதுகுறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

நாடு முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்!


டெல்லி:ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று நாடு முழுவதும் நடைபெறுகிறது. போலியோ எனப்படும் இளம்பிள்ளைவாத நோயை முற்றிலுமாக ஒழிக்க ஆண்டுதோறும் இலவச சொட்டு மருந்து முகாம் நடத்தப்படுகிறது.
அதன்படி, இந்த ஆண்டுக்கான முதல்கட்ட போலியோ முகாம் இன்று நடைபெற உள்ளது. மாநிலம் முழுவதும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் முக்கியமான இடங்களில் போலியோ மருந்து வழங்கப்படும். பேருந்து மற்றும் ரயில் நிலையங்களிலும் சொட்டு மருந்து வழங்கப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.

செவ்வாய், 15 ஜனவரி, 2013

லால்பேட்டை தமுமுக மாணவரணி சார்பில் தர்பியா நிகழ்ச்சி..!!

கடலூர் தெற்கு மாவட்டம் லால்பேட்டையில் நகர தமுமுக மாணவரணியின் சார்பில் மாணவர்களுக்கான தர்பியா முகாம் 13-01-2013 ஞாயிற்றுக்கிழமைமாலை மக்ரிப் தொழுகைக்கு பின் இமாம் கஸ்ஸாலி மெட்ரிக் மேனிலைப் பள்ளியில் தமுமுக மாவட்ட தலைவர் எம்.ஹெச்.மெஹராஜூத்தீன் தலைமையில் நடைபெற்றது.

அல் அய்ன் மண்டல தமுமுக நிர்வாகி கொள்ளுமேடு முஹம்மது ரிஃபாயி திருக்குர்ஆன் விளக்கவுரையாற்றினார்.தமுமுக மாவட்ட செயலாளர் என் அமானுல்லா வரவேற்புரையாற்றினார்.மாவட்ட பொருளாளர் அய்யூப் மமக முன்னாள்மாவட்ட செயலாளர் எஸ்ஏ.யாசிர் அரஃபாத் தமுமுக மாவட்ட துணை செயலாளர் அப்துல் சமது தமுமுக மாவட்ட மனித உரிமை மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு அணி செயலாளர் மௌலவி எம்.ஒய்.முஹம்மது அன்சாரி தமுமுக லால்பேட்டை நகர தலைவர் எஸ்.ஏ.முஹம்மது ஹாரிஸ் லால்பேட்டை பேரூராட்சி துணைத்தலைவர் எஸ்.ஏ.அஹமது அலி உள்ளிட்ட தமுமுக-மமக மாவட்ட நகர நிர்வாகிகள் மற்றும் மாணவரணி பொறுப்பாளர்கள் முன்னிலை வகித்தனர்.

திங்கள், 14 ஜனவரி, 2013

ரிசானாவின் மரண தண்டனை -சவூதி அரசு விளக்கம்!



ரியாத்: ரிசானா நபீக்கிற்கு நிறைவேற்றப் பட்ட மரண தண்டனை சவூதி அரசின் சட்டத்திற்க்கு உட்பட்டே வழங்கப் பட்டது என்று சவூதி அரசாங்கம் விளக்கம் அளித்துள்ளது.
இலங்கையை சேர்ந்த ரிசானா நபீக்கிற்கு சவூதி அரேபியாவில் நான்கு மாத குழந்தை ஒன்றை பால் ஊட்டும் போது கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இந்த தண்டனை குறித்து உலக நாடுகள் கண்டனம் வெளியிட்டுள்ளமை தொடர்பாக சவூதி அரேபியா தமது விளக்கத்தை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து சவூதி அரசாங்கப் பேச்சாளர் குறிப்பிடுகையில், "கடவுச்சீட்டின்படி ரிசானா கொலையை மேற்கொண்ட போது அவருக்கு 21 வயதாகும். எனவே அவர் 17 வயதானவர் என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது. அதாவது  1988ஆம் ஆண்டு பிறந்த ரிசானா சவுதிக்கு செல்லும் போது 1982 ஆம் ஆண்டு பிறந்ததாக பிறப்பு சான்றிதழ் போலியாக எடுக்கப்பட்டு கடவுச் சீட்டில் ரிசானாவின் வயது 21 என குறிப்பிடப்பட்டிருந்ததாகவும், அதன்படியே ரிசானாவுக்கு தண்டனை வழங்கப்பட்டது.

சனி, 12 ஜனவரி, 2013

ஆப்பிளைவிட சிறந்ததா வாழைப்பழம்?


எல்லா காலங்களிலும் எல்லா இடத்திலும் அனைத்து தரப்பினரும் வாங்கக் கூடிய விலையில் கிடைப்பது வாழைப்பழம்.
இப்படிப்பட்ட வாழைப்பழத்தின் அருமை பெருமைகள் நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. உடலுக்கு தேவையான சத்துகள், வைட்டமின்கள் வாழைப்பழத்தில் மலிந்து கிடைக்கின்றன.ஆப்பிளை விட சிறந்தது, பல வகை சத்துகளைக் கொண்டது ஆப்பிளைவிட பலமடங்கு சிறந்தது வாழைப்பழம். கார்போஹைட்ரேட் ஆப்பிளில் உள்ளதைவிட இரண்டு மடங்கு அதிகமாக வாழைப்பழத்தில் உள்ளது.
பாஸ்பரஸ் மூன்று மடங்கும் புரோட்டீன் அளவு இன்னும் அதிகமாக நான்கு மடங்கும் உள்ளது.
வைட்டமின் ஏ மற்றும் இரும்புசத்தின் அளவு ஆப்பிளில் உள்ளதைவிட ஐந்து மடங்கு இதில் அதிகமாக இருக்கிறது.

கடலூர் மாவட்டத்தில் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் குறைவு


கடலூர் மாவட்டத்தில் 17 லட்சத்து 84 ஆயிரத்து 167 வாக்காளர்கள் உள்ளதாகவும், ஆண் வாக்காளர்களைக் காட்டிலும் 20 ஆயிரத்து 185 பெண் வாக்காளர்கள் குறைவாக உள்ளனர் என்பது இறுதி வாக்காளர் பட்டியல் மூலம் தெரியவந்துள்ளது.
வாக்காளர் தினமான இம்மாதம் 25-ம் தேதி ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறும் விழாவின் அடையாள அட்டை வழங்கப்படும் என கடலூர் ஆட்சியர் ரா.கிர்லோஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் சென்னை தலைமைத் தேர்தல் ஆணையர் அவர்களது அறிவுரைகளின்படி கடலூர் மாவட்டத்தில் 01-10-12 முதல் 20-11-12 வரையிலான காலத்தில் 01-01-13 தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தங்கள் தொடர்பான 99 ஆயிரத்து 547  படிவங்கள் பெறப்பட்டு, உரிய பரிசீலனைக்குப் பின் 10 ஆயிரத்து 785 படிவங்கள் நிராகரிக்கப்பட்டு, 88 ஆயிரத்து 762 படிவங்கள் ஏற்கப்பட்டு அதன்படி புதிய வாக்காளர் பட்டியல் வாக்குப் பதிவு ஆணையர்களால் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

தடையை உடைத்து தொடங்கியது "பீஸ்' கண்காட்சி


கடந்த பலமுறை சென்னையில் நடைபெற்ற பீஸ் இஸ்லாமியக் கண்காட்சி(Peace Islamic Exhibition) இவ்வாண்டும் சென்னையில் நடைபெற திட்டமிட்டிருந்தது. அரசியல் சாயமின்றியும், சார்புமின்றியும் நடைபெறும் இக்கண்காட்சி முன்பு சென்னையில் நடைபெற்ற போதெல்லாம் முஸ்லிம்கள் மட்டுமின்றி அனைத்து சமூக மக்களும் பேராதரவு அளித்தனர்.
இந்நிலையில், இவ்வருடம் இதற்கான முயற்சிகளை ஏற்பாட்டுக் குழுவினர் செய்தபோது, திட்டமிட்டே சிலர் இடையூறுகளை செய்தனர். சமுதாய துரோகிகள் சிலர், இந்துத்துவ தீவிர குழுவினர் சிலர் மட்டுமின்றி உளவுத்துறையும் இதில் தீவிர கவனமெடுத்து நிகழ்ச்சியைத் தடுக்கும் முயற்சிகளில் இறங்கினர். நேரடியாகவும், மறைமுகமாகவும் தொந்தரவுகள் தொடர்ந்தன.
காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.எம்.ஹாரூண் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் இடத்தில் (உத்தரண்டி) நடத்தவும் கூட உளவுத்துறையினர் அனுமதிக்க மறுத்தனர்.
இதைக் கண்டித்து தமுமுக மூத்த தலைவர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், "இது அரசியல் சாசனம் தந்த அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் செயல்' என கண்டன அறிக்கையை வெளியிட்டார்.

வெள்ளி, 11 ஜனவரி, 2013

சென்னையில் இஸ்லாமிய கண்காட்சி மற்றும் மாநாடு நடத்த தடை காவல்துறைக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கண்டனம்


சென்னையில் இஸ்லாமிய கண்காட்சி மற்றும் மாநாடு நடத்த தடை: காவல்துறைக்கு தமுமுக கண்டனம்!
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
சென்னையில் ஜனவரி 11 முதல் 20 வரை பீஸ் கண்காட்சி மற்றும் மாநாடு என்ற பெயரில் இஸ்லாமியக் கண்காட்சி மற்றும் மாநாடு நடத்துவதற்கு பல்வேறு முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்தவர்களைக் கொண்ட சென்னை பீஸ் கண்காட்சிக் குழு ஏற்பாடுகளை செய்திருந்தது. முதலில் பின்னி நிறுவனத்திற்குச் சொந்தமான திடலில் முறையாக உரிமையாளர்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு ஏற்பாடுகள் நடைபெற்றன. ஏற்பாடுகள் இறுதிக் கட்டத்தை அடைந்த நிலையில் சென்னைப் பெருநகர காவல்துறை அளித்த நெருக்கடி காரணமாக கண்காட்சி மற்றும் மாநாடு நடத்தும் திடலை அளிக்க இயலாது என்று அதன் உரிமையாளர் அறிவித்துவிட்டார் என்று தெரிய வருகின்றது.

வியாழன், 10 ஜனவரி, 2013

வெளிவருகின்றது முஸ்லிம் பதிவர்களின் புத்தகம்...


நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக.,.

நீங்கள் ஆர்வமுடன் கையில் தாங்கியிருக்கும் இந்த புத்தகம் பல வகைகளில் தனித்துவமிக்கதாக திகழப்போகின்றது (இறைவன் நாடினால்). ஒரே எழுத்தாளரின் நடை, சிந்தனை ஓட்டத்திலிருந்து விலகி உங்களுக்கு புதுவித அனுபவத்தை கொடுக்கும் இந்நூல், இணையத்தில் செயலாற்றும் பல்வேறு முஸ்லிம் பதிவர்களின் சிறந்த படைப்புகளை ஒருசேர இங்கு கொண்டுவந்து சேர்க்கின்றது.

வெவ்வேறு விதமான எழுத்து நடைகள், வித்தியாசமான சிந்தனைகள், பலதரப்பட்ட பார்வைகள். இப்படியான ஒரு பயணத்திற்கு தான் நீங்கள் ஆயத்தமாகி கொண்டிருக்கின்றீர்கள். ஒரு தலைப்பிலிருந்து அடுத்த தலைப்பிற்கு மாறும் போது நீங்கள் உணரப்போகும் தனித்துவத்தையும், வாசிப்பு  அனுபவத்தையும் உங்கள் பார்வைக்கே விட்டுவிடுகின்றேன். 

ஒவ்வொரு முயற்சிக்கும் விதை எங்கிருந்தாவது தூவப்பட வேண்டும். எங்களுக்கான விதை என்றால் அது உம்மத் குழுமம் தான். சில வருடங்களுக்கு முன்பாக, இணையத்தில் நிலவும் தவறான இஸ்லாமிய புரிதல்களை களைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருந்தது. அப்படியான தருணத்தில் சில பதிவர்களை ஒருங்கிணைத்து ஆரம்பிக்கப்பட்டது தான் இந்த குழுமம். 

செவ்வாய், 8 ஜனவரி, 2013

தாய் நாட்டை எப்படி நேசிக்கவேண்டும் என்பதுக் குறித்து காந்தியை கொன்றவர்கள் எங்களுக்கு கற்றுத்தர வேண்டாம்! – அஸாதுத்தீன் உவைசி!


ஹைதராபாத்:எனது தாய்நாட்டை நேசிப்பது எப்படி என்று காந்தியைக் கொன்றவர்கள், பாபர் மஸ்ஜிதை இடித்தவர்கள், குஜராத்தில் ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம்களைக் கொன்றவர்களிடம் இருந்து பாடம் கற்க வேண்டிய அவசியம் இல்லை ஹைதராபாத் எம்.பி.யும், மஜ்லிஸ் இ இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சி தலைவருமான அஸாதுத்தீன் ஒவைசி கூறியுள்ளார்.
ஆந்திர மாநிலம் ஆதிலாபாத் மாவட்டத்தில் உள்ள நிர்மல் நகரில் கடந்த மாதம் 24ம் தேதி நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மஜ்லிஸ் இ இத்திஹாதுல் முஸ்லிமீன் எம்.எல்.ஏ.அக்பருத்தீன் ஒவைசி மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக குற்றம்சாட்டப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவரது சகோதரர் ஹைதராபாத் எம்.பி.யும், மஜ்லிஸ் இ இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சி தலைவருமான அஸாதுத்தீன் ஒவைசி ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள டண்டூரில் நடந்த கூட்டத்தில் பேசினார்.

திங்கள், 7 ஜனவரி, 2013

நாடளுமன்ற தேர்தலில் ம.ம.க. வலுவான கூட்டணியில் இடம் பெறும்: ஜவாஹிருல்லா!

கடலூர்: நாட்டு நலன் கருதியும் சமுதாய நலன் கருதியும் எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி வலுவான கூட்டணியில் இடம் பெறும் என்று பேராசிரியர் ஹெச். ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
த.மு.மு.க. மற்றும் ம.ம.க.வின் மூத்தத் தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஹெச். ஜவாஹிருல்லா தொகுதி நலப்பணிகளுக்காக சென்னையிலிருந்து இராமநாதபுரம் செல்லும் வழியில் கடலூர் மாவட்டத்தில் புதிய கிளை அலுவலகங்கள் திறப்பு விழாவிற்காக பரங்கிப்பேட்டை மற்றும் லால்பேட்டைக்கு வருகை புரிந்தார்.

பாப்புலர் ஃப்ரண்டின் தமிழக தலைவராக மீண்டும் ஏ.எஸ்.இஸ்மாயீல் தேர்வு!


தேனி:பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழக தலைவராக கோவையைச் சார்ந்த ஏ.எஸ்.இஸ்மாயீல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தேனி மாவட்ட முத்துதேவன் பட்டியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொதுக்குழு நடைபெற்றது. ஜனவரி 4,5,6 ஆகிய தினங்களில் நடைபெற்ற இப்பொதுக்குழுவுக்கு மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயீல் தலைமை வகித்தார்.
தலைமை உரையாற்றிய ஏ.எஸ்.இஸ்மாயீல் தனது உரையில், பாப்புலர் ஃப்ரண்ட் கடந்த காலங்களில் பயணித்த பாதை மற்றும் அதன் வளர்ச்சி குறித்து சுட்டிக்காட்டினார்.
மாநில பொதுச் செயலாளர் ஏ.காலித் முஹம்மது ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார். அதனைத் தொடர்ந்து பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய அளவிலான பணிகளைக் குறித்து தேசிய செயலாளர் எம்.முஹம்மது அலி ஜின்னா உரையாற்றினார்.

லால்பேட்டை மதினா தெரு எம்.ஏ. ஜமாலுத்தீன் மறைவு…

லால்பேட்டை மதினா தெரு மதார்கனி எம்.ஏ. ஜமாலுத்தீன் அவர்கள் இன்று 07.01.2013 காலை 08 மணியளவில்   தாருல் பனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்.இன்னாலில்லாஹி வ இலைஹி ராஜிஊன்.  ஜனாசா நல்லடக்கம் இன்று அஸர் தொழுகைக்கு பின் பெரிய பள்ளிவாசல் கபருஸ்தானில் நடைப்பெறும். {இவர் மவுலானா தெருவில் இருக்கும் ஹாஜி எம்.ஏ. பத்ஹூத்தீன் அவர்களின் சகோதர் ஆவார்}

ஞாயிறு, 6 ஜனவரி, 2013

லால்பேட்டை மதரஸாவிற்கு தமுமுக நிர்வாகிகள் வருகை..

 கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகை புரிந்த தமுமுக-மமக மூத்த தலைவரும் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ்,மமகபொதுச்செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி,மமக இணை பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது,தமுமுக மாநில செயலாளர் முனைவர் ஜெ.ஹாஜா கனி,தமுமுக தலைமைக் கழக பேச்சாளர் என்.ஏ.தைமிய்யா ஆகியோர் புகழ்பெற்ற லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக்கல்லூரிக்கு மரியாதை நிமித்தமாக வருகை புரிந்தனர்.

காட்டுமன்னார்கோவிலில் கள்ளநோட்டுகள் புழக்கம் அதிகரிப்பு: பொதுமக்கள், வியாபாரிகள் அச்சம்

சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதியல் சில நாள்களாக கள்ளநோட்டுகள் புழக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள், வியாபாரிகளிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. 

காட்டுமன்னார்கோவில் கச்சேரி தெருவில் உள்ள ஒரு பலசரக்கு கடையில் நேற்று முன்தினம் ஒரு பெண் 500 ரூபாய் கொடுத்து சில்லறை வாங்கி சென்றுள்ளார். இரவு வழக்கம்போல் வியாபாரம் முடிந்து கல்லாப்பெட்டியில் உள்ள பணத்தை கடை உரிமையாளர் எண்ணியுள்ளார், அதில் 500 ரூபாய் கள்ளநோட்டு ஒன்று இருந்தது.

இதுகுறித்து கடையில் வேலை செய்யும் பெண்ணிடம் கேட்டபோது, ஒரு பெண் 500 ரூபாயை கொடுத்து தன்னிடம் சில்லரை வாங்கி சென்றதாக அவர் கூறினார். சில்லரை வாங்கி சென்ற அதே பெண் நேற்றும் அந்த கடைக்கு வந்து 500 ரூபாய் கொடுத்து சில்லரை கேட்டுள்ளார். அப்போது சுதாரிக்கொண்ட கடையின் உரிமையாளர் காட்டுமன்னார்கோவில் போலீசாருக்கு தகவல் அளித்தார்.

யாசர் அரஃபாத் – ராபியத்துல் பசரியா திருமணம்

பாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர்{அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும் மேலும் உங்கள் மீது அபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்றிணைத்து வைக்கட்டும்}
வாழ்த்துக்களுடன்..  கொள்ளுமேடு தமுமுக, கொள்ளுமேடுடைம்ஸ் இணையதளம்..

கொள்ளுமேடு தமுமுக மாணவரணி பொதுக்குழு கூட்டம்..!!

கடலூர் தெற்கு மாவட்டம் கொள்ளுமேடு கிளை தமுமுக மாணவரணிபொதுக்குழுக் கூட்டம் 05-01-2013 சனிக்கிழமை மக்ரிப் தொழுகைக்கு பின்னர் கிளை செயலாளர் ஏ.கே.வஜ்ஹூல்லா தலைமையில் கிளை அலுவலகத்தில் நடைபெற்றது.கிளைநிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.கிளை மாணவரணி செயலாளர் வி.முஹம்மது ரியாஸ் மாணவரணியின்செயல்பாடுகள் பற்றி விளக்கினார்.அல்அய்ன் மண்டல தமுமுக நிர்வாகி எப்.முஹம்மது ரிஃபாயி மாணவரணி ஏன்..? எதற்கு..? என்ற தலைப்பில் உரையாற்றினார்.

வெள்ளி, 4 ஜனவரி, 2013

விஸ்வரூபம் திரைப்படத்தை எங்களிடம் காட்டிய பிறகே திரையிட வேண்டும் – இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு


முஸ்லிம் தலைவர்களிடம் காட்டிய பிறகே விஸ்வரூபம் திரைப்படத்தை திரையிட வேண்டும் !தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு கோரிக்கைகேளிக்கை , பொழுதுபோக்கு , சுயசம்பாத்தியம் ஆகியவற்றை மைய்யமாகக் கொண்டு எடுக்கப்படும் திரைப்படங்களில் கோடிக்கணக்கான மக்கள் தங்களின் கொள்கை நெறியாக ஏற்றுச் செயல்படும் இஸ்லாத்தையும் , அதை வாழ்வியல் நெறியாகக் கொண்ட முஸ்லிம்களையும் தவறாகச் சித்தரிப்பது தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது .
அந்த வகையில் அண்மையில் வெளியான ” துப்பாக்கித் ” திரைப்படம் தமிழக முஸ்லிம்களின் உணர்வுகளைக் காயப்படுத்தி கொந்தளிப்பான சூழலை உருவாக்கியது . முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் விதமாகத் துப்பாக்கி படக்குழுவினர் மன்னிப்புக் கோரியதுடன் , ஆட்சேபனைக்குரிய காட்சிகளையும் நீக்கினர் .” துப்பாக்கி ” ஏற்படுத்திய காயத்தின் வலி தீரும் முன்னே மீண்டும் கமல்ஹாசன் “விஸ்வரூபம் ” எடுத்திருக்கிறார் . மென்மையான மத உணர்வுகளைக் காயப்படுத்தும் விதமாக இத்திரைப்படம் வெளிவரும் பட்சத்தில் அது அமைதிப் பூங்காவான தமிழகத்தின் நல்லிணக்கச் சூழலைச் சிதைத்து விடுமோ என நாங்கள் அஞ்சுகிறோம் .
மேலும் கமல்ஹாசனின் “விஸ்வரூபம் ” திரைப்பட முன்னோட்டக் காட்சிகள் அடிமட்டத்திலிருக்கும் முஸ்லிம் சகோதரனுக்கும் கூட பெரும் ஐயத்தை ஏற்படுத்துகிறது . இந்த அச்சத்தையும் ஐயத்தையும் போக்க ஒட்டு மொத்த தமிழக முஸ்லிம்களின் பிரதிநிதிகளான 24 முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்புகளின் தலைவர்களுக்குத் திரையிட்டுக் காட்டுவதற்கு கமல்ஹாசன் கடமைப்பட்டிருக்கிறார் .

காவிரி பாசனப் பகுதிகள் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட 32 கிராமங்களை மீண்டும் பட்டியலில் சேர்க்க மமக கோரிக்கை


மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி வெளியிடும் பத்திரிகை அறிக்கை:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில், கீரப்பாளையம் ஆகிய வட்டங்களைச் சேர்ந்த 32 கிராமங்கள் காவிரிப் பாசனப் பகுதிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
இதுதொடர்பாக, விவசாயிகளிடம் கருத்து எதுவும் கேட்கப்படாத நிலையில் யாருடைய பரிந்துரையின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டது எனத் தெரியவில்லை. தமிழக அரசின் இந்த நடவடிக்கையால், காவிரி பாசனப் பகுதிகள் என்ற அடிப்படையில் இப்பகுதி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த 12 மணி நேர மும்முனை மின்சாரம் நிறுத்தப்பட்டு, தினந்தோறும் 3 மணி நேரம் மட்டுமே வழங்கப்படுகிறது.

வியாழன், 3 ஜனவரி, 2013

முஸ்லிம்களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மார்ச்சில் பேரணி


முஸ்லிம்களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி வரும் மார்ச் மாத இறுதியில் மாநில தலைநகரங்களில் பேரணி நடத்தப்படும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவரும், மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சருமான இ. அகமது தெரிவித்தார்.
சென்னையில் செவ்வாய்க்கிழமை அபு பேலஸ் நட்சத்திர ஹோட்டலில்  நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய நிர்வாகிகள் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியது:-
இந்தியாவில் 18 சதவிகித சிறுபான்மையினர் உள்ளனர். இதில் 13.5 சதவிகிதம் பேர் முஸ்லிம்கள். ஆனால், ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். உள்பட மத்திய, மாநில அரசுப் பணிகளில் முஸ்லிம்கள் 3 சதவிகிதத்துக்கும் குறைவாகவே உள்ளனர்.
எனவே, சச்சார் கமிட்டி, ரங்கநாத் மிஸ்ரா கமிட்டி ஆகியவற்றின் பரிந்துரைகளின் அடிப்படையில் முஸ்லிம்களுக்கு கல்வி, அரசு வேலைவாய்ப்புகளில் 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதன், 2 ஜனவரி, 2013

பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை அளிப்பது குறித்து சட்டத் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு கேட்டுக் கொள்ளப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையிலும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை ஒழித்திடும் வகையில் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், தமிழகத்தில் 1992-ம் ஆண்டு தொடங்கப்பட்டன.

பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஒடுக்கும் வகையில், ""தமிழ்நாடு பெண்கள் இன்னல் தடுப்புச் சட்டத்தின்'' கீழ் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனைகள்

2002-ம் ஆண்டு கடுமையாக்கப்பட்டது. இதன்படி, துன்புறுத்தலால் ஏற்படும் மரணம் மற்றும் தற்கொலை ஆகியவற்றில் குற்றம் அற்றவர் என்று நிரூபிக்கும் பொறுப்பு குற்றவாளிகளைச் சார்ந்ததாக மாற்றி அமைக்கப்பட்டது.

இவை காரணமாக மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது, பெண்களுக்கு எதிரான

குற்றங்கள் தமிழகத்தில் குறைவாகவே இருந்தாலும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறிப்பாக பாலியல் பலாத்காரம் இல்லாத மாநிலமாக தமிழகம் திகழ வேண்டும் என அரசு விரும்புகிறது. 

இந்த நிலையில், பாலியல் குற்றங்களைத் தடுக்கும் வகையில், முதல்வர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட 13 உத்தரவுகள்:

முறைகேடான பாலியல் உறவு முஸ்லிம், ஹிந்து சமூகத்தில் மிகவும் குறைவு! – ஆய்வில் தகவல்!


நியூயார்க்:குடும்ப கட்டமைப்பை சீர்குலைப்பதில் முக்கிய பங்கினை வகிக்கும் திருமண உறவு வெளியேயான  முறைகேடான பாலியல் உறவுகள் முஸ்லிம், ஹிந்து சமூகத்தில் மிகவும் குறைவு என்று அமெரிக்கன் சோசியலாஜிக்கல் ரிவியூ நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
31 வளர்ச்சியடைந்த நாடுகளில் 15-59 வயது வரையிலான ஆறுலட்சத்திற்கும் மேற்பட்ட நபர்கள் பங்கேற்ற ஆய்வில் பொதுவாகவே பாலியல் ஒழுக்கங்களை பேணுவதில் முஸ்லிம் நாடுகள் முன்னணியில் இருப்பதாக தெரியவந்துள்ளது. அனைத்து மதங்களும் திருமண உறவிற்கு வெளியே உள்ள முறைகேடான பாலியல் உறவுகளை ஊக்கப்படுத்துவதில்லை. ஆனால், அனைத்து மத நம்பிக்கையாளர்களும் ஒன்றுபோல் இல்லை என்று இந்த ஆய்விற்கு தலைமை தாங்கிய ஆமி ஆடம்ஸிக் சுட்டிக்காட்டுகிறார்.

லால்பேட்டையில் மமக மது ஒழிப்பு பரப்புரை நடத்தியது.


லால்பேட்டையில்  30/12/12 மாலை மமக மது ஒழிப்பு பரப்புரை  நடத்தியது.
மதுவால் ஏற்படும் தீமைகள் பற்றிய துண்டு பிரசுர வினியோகம் செய்யப்பட்டது இதில் தமுமுக,மமக தொண்டர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Thanks lalpet.net

செவ்வாய், 1 ஜனவரி, 2013

கடலூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் இன்று முதல் அமுலுக்கு வருகிறது


கடலூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். இந்த உத்தரவு  (செவ்வாய்க்கிழமை) முதல் அமுல்படுத்தப்படுவதாக மாவட்ட கலெக்டர் கிர்லோஷ்குமார் அறிவித்துள்ளார்.
கலெக்டர் அறிவிப்பு
கடலூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தடை செய்ய வேண்டும். மீறி பயன்படுத்தினால் ஜனவரி மாதம் முதல் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று அப்போதைய மாவட்ட கலெக்டர் ராஜேந்திரரத்னூ அறிவித்து இருந்தார். இதற்கிடையில் அவர் திடீரென வணிகத்துறை இணை கமிஷனராக மாற்றப்பட்டார்.
இதையடுத்து புதிய கலெக்டராக கிர்லோஷ்குமார் பதவி ஏற்றார். இதையடுத்து அந்த திட்டம் மீண்டும் அமுல்படுத்தப்படுமா? என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்தது. இந்நிலையில் அந்த திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என்று மாவட்ட கலெக்டர் கிர்லோஷ்குமார் அறிவித்து உள்ளார்.
இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் கிர்லோஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

பிளஸ்–2 தேர்வு மார்ச் 1–ந்தேதி தொடங்குகிறது எஸ்.எஸ்.எல்.சி. மார்ச் 27–ல் ஆரம்பம்


பிளஸ்–2 பொதுத்தேர்வு மார்ச் 1–ந் தேதி தொடங்கி 27–ந்தேதி முடிவடைகிறது. இதே போல், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மார்ச் 27–ந் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 12–ந்தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது.இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;–
மார்ச் 1–ந் தேதி பிளஸ்–2 தேர்வு
பிளஸ்–2 தேர்வை மார்ச் மாதம் 1–ந்தேதி தொடங்கி நடத்தவும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை மார்ச் 27–ந் தேதி தொடங்கி நடத்திடவும் தமிழக அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. பிளஸ்–2 தேர்வு தினமும் காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை நடக்கும்.காலை 10 மணிக்கு வினாத்தாள் விநியோகிக்கப்படும். மாணவர்கள் கேள்வித்தாளை படித்து பார்ப்பதற்கு 10 நிமிடம் கொடுக்கப்படும். விடைத்தாளில் உள்ள விவரங்களை பூர்த்தி செய்வதற்கு 5 நிமிடம் வழங்கப்படும். தட்டச்சு தேர்வு மட்டும் காலை 10 மணி முதல் மதியம் 12.20 மணி வரை நடைபெறும். தேர்வு தொடங்கி 15 நிமிடம் கழித்து தாமதமாக வரும் தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வு அட்டவணை கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.
தேர்வு காலஅட்டவணை
மார்ச் 1–ந் தேதி – மொழித்தாள்–1
மார்ச் 2, 3–ந் தேதிகள் – விடுமுறை
மார்ச் 4–ந் தேதி – மொழித்தாள்–2
மார்ச் 5–ந் தேதி – தேர்வு இல்லை
மார்ச் 6–ந் தேதி – ஆங்கிலம் முதல் தாள்
மார்ச் 7–ந் தேதி – ஆங்கிலம் 2–ம் தாள்
மார்ச் 8–ந் தேதி – தேர்வு இல்லை
மார்ச் 9, 10–ந் தேதிகள் – விடுமுறை
இயற்பியல்–பொருளாதாரம்
மார்ச் 11–ந் தேதி – இயற்பியல், பொருளாதாரம்
மார்ச் 12, 13–ந் தேதிகள் – தேர்வு இல்லை
மார்ச் 14–ந் தேதி – கணிதம், விலங்கியல், மைக்ரோபயாலஜி, நியூட்ரிஷியன் மற்றும் டயட்டிக்ஸ்
மார்ச் 15–ந் தேதி – வணிகவியல், மனையியல், புவியியல்
மார்ச் 16, 17–ந் தேதிகள் – விடுமுறை
மார்ச் 18–ந் தேதி – வேதியியல், கணக்குப்பதிவியல்
மார்ச் 19, 20–ந் தேதிகள் – தேர்வு இல்லை
உயிரியல்–வரலாறு
மார்ச் 21–ந் தேதி – உயிரியல், வரலாறு, தாவரவியல், பிசினஸ் மேத்ஸ்
மார்ச் 22–ந் தேதி – தேர்வு இல்லை
மார்ச் 23, 24–ந் தேதிகள் – விடுமுறை
தட்டச்சு பாடம்
மார்ச் 25–ந் தேதி – கம்யூனிக்கேட்டிவ் இங்கிலீஷ், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், உயிரி–வேதியியல், அட்வான்ஸ் தமிழ், தட்டச்சு தமிழ் மற்றும் ஆங்கிலம்
மார்ச் 26–ந் தேதி – தேர்வு இல்லை
மார்ச் 27–ந் தேதி – அரசியல் அறிவியல், நர்சிங் (பொதுப்பிரிவு), புள்ளியியல், தொழிற்கல்வி பாடங்கள்
மார்ச் 27–ல் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மார்ச் மாதம் 27–ந் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 12–ந்தேதி முடிவடைகிறது. தேர்வு தினமும் காலை 10 மணி முதல் மதியம் 12.45 மணி வரை நடைபெறும். காலை 10 மணிக்கு வினாத்தாள் கொடுக்கப்படும். வினாத்தாளை படிக்க 10 நிமிடம் வழங்கப்படும். அதன்பிறகு விடைத்தாளில் விவரங்களை பூர்த்தி செய்ய 5 நிமிடம் கொடுக்கப்படும்.