AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

திங்கள், 31 டிசம்பர், 2012

புதிய வாக்காளர்களுக்கு 25ல் அடையாள அட்டை

ஆண்டுதோறும் ஜனவரி 25ல் வாக்காளர்கள் விழிப்புணர்வு தினம் கொண்டாடப்படுகிறது. வரும் 25ம் தேதி புதிய வாக்காளர்களாக சேர்க்கப்பட்டவர்களுக்கு அடையாள அட்டை வழங்க தேர்தல் அதிகாரிகளை, தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. ஓட்டுச்சாவடி மையங்களில், அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள், வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, மாணவர்களுக்கு கலை நிகழ்ச்சிகள், பேச்சு, கட்டுரை, கவிதை, ஓவியப்போட்டிகள் நடத்தி, பரிசுகள் வழங்க வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள், தொண்டு நிறுவனங்கள் இணைந்து, விழிப்புணர்வு ஊர்வலங்கள் நடத்த வேண்டும். இதில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட வேண்டும்.

ஞாயிறு, 30 டிசம்பர், 2012

மதுபானக் கடைகள், ஆலைகள் முற்றுகைப் போராட்டம்: மனிதநேய மக்கள் கட்சியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கைது!


மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் டிசம்பர் 20 முதல் 30 வரை மது ஒழிப்பு பரப்புரை பெரும் மக்கள் எழுச்சியுடன் நடைபெற்றது. மதுவின் தீமையை விளக்கி நகரங்கள் தொடங்கி கிராமங்கள் வரை துண்டுப் பிரசுரம் வினியோகம், சுவரொட்டி மற்றும் சுவர் எழுத்து பரப்புரை, வாகனப் பரப்புரை, வீதிமுனைக் கூட்டங்கள், குறுந்தகடு வினியோகம் என பல்வேறு வடிவங்களில் நடைபெற்ற பரப்புரைகளில் சுமார் 1 கோடி மக்களிடம் மதுவின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு செய்யப்பட்டது.
7 ஆயிரம் கிராமங்கள் உட்பட 8 ஆயிரம் இடங்களில் இவ்விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
இறுதியாக இன்று (டிசம்பர் 30) தமிழகம் முழுவதும் 48 இடங்களில் நடைபெற்ற மதுபான ஆலைகள் மற்றும் மதுக்கடைகள் முன்பு மனிதநேய மக்கள் கட்சியினர் அணிதிரண்டனர்.
காவல்துறை தடையை மீறி மதுபான ஆலைகள் மற்றும் மதுக்கடைகளை முற்றுகையிட முயன்ற ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். இந்த முற்றுகைப் போராட்டத்தில் ஏராளமான பெண்களும் கலந்துகொண்டனர்.
இம்மாபெரும் அறப்போராட்டம் வெற்றிபெற ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து மக்களுக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

நெல்லை கிழக்கு

மலேகான் குண்டுவெடிப்பு:குண்டுவைத்த ஹிந்துத்துவா தீவிரவாதி கைது!


புதுடெல்லி:2006-ஆம் ஆண்டு மலேகானில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியில் குண்டுவைத்த ஹிந்துத்துவா தீவிரவாதியை தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) கைது செய்துள்ளது. இக்குண்டுவெடிப்பின் பின்னணியில் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் செயல்பட்டது குறித்து சுவாமி அஸிமானந்தா அளித்த வாக்குமூலத்தை தொடர்ந்து முதல் கைது சம்பவம் நடந்துள்ளது.

சனி, 29 டிசம்பர், 2012

நமதூர் ஓர் வபாத் செய்தி

நமதூர் M.I. இக்பால் மனைவியும் ,மர்ஹும் முஹம்மத் கவுஸின் மகளும் ,என் நண்பன் ரில்வான் தாயாருமான செல்லகனி என்கின்ற சலிமா  அவர்கள்  இன்று மாலை சவுதியில் தாருல் பனாவை விட்டும்தாருல் பகாவை அடைந்து விட்டார்கள்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன் ....

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின்  பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருள வேண்டும் என.  கொள்ளுமேடுடைம்ஸ் இணையதளம்  பிரார்த்தனை செய்கிறது.



டிசம்பர் 30ல் மது ஆலைகள், டாஸ்மாக் கடைகள் முற்றுகை! மனிதநேய மக்கள் கட்சி அறிவிப்பு


மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ அவர்கள் வெளியிடும் பத்திரிகை அறிக்கை:
மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் பூரண மதுவிலக்கை வலியுறுத்தி, மது-மதுக் கடைகளுக்கு எதிரான தொடர் பரப்புரை டிசம்பர் 20 அன்று தொடங்கியது. டிசம்பர் 30வரை நடைபெறும் இத்தொடர் பரப்புரை, மதுவின் தீமையை விளக்கி நகரங்கள் தொடங்கி கிராமங்கள் வரை துண்டுப் பிரசுரம் வினியோகம், சுவரொட்டி மற்றும் சுவர் எழுத்து பரப்புரை, வாகனப் பரப்புரை, வீதிமுனைக் கூட்டங்கள், குறுந்தகடு வினியோகம் என பல்வேறு வடிவங்களில் பரப்புரை நடைபெறுகிறது.

குடும்ப அட்டைகளுக்கு உள்தாள் இணைப்பு பணி

கடலூர், : கடலூர் மாவட்ட ஆட்சியர் கிர்லோஷ்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தற்போது நடைமுறையில் உள்ள குடும்ப அட்டைகளில் புழங்கு காலத்தை 1.1.13 முதல் 31.12.13 வரை நீட்டித்து அரசு ஆணை பிறப்பித்துள்ளது. 
அதன்படி குடும்ப அட்டைகளை புதுப்பிக்கும் பணி நியாய விலை கடைகளில் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நடைபெற உள்ளது. எனவே குடும்பத்தலைவர் அல்லது வயது வந்த குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் நியாயவிலை கடைக்கு சென்று 2013ம் ஆண்டிற் கான உள்தாள் இணைப்பு பெற்று கொண்டு கடைகளில் பராமரிக்கப்படும் 2012ம் ஆண்டின் வழங்கல் பதிவேட்டில் கையொப்பமிட்டு அல்லது இடது கை பெருவிரல் ரேகை பதிக்க கேட்டு கொள்ளப்படுகிறது.

காட்டுமன்னார்கோவில், சிதம்பரத்தில் திடீர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி

காட்டுமன்னார்கோவில் பகுதியில் நேற்று காலை திடீரென கனமழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில், குமராட்சி பகுதியில் கடந்த 3 மாதங்களாக பருவமழை பெய்யாததால் பயிரிடப்பட்ட விளை நிலங்களில் பயிர்கள் கருகின. 
சில பகுதிகளில் பொதுமக்கள் பயிரிடப்பட்ட வயல்களில் ஆடு, மாடுகளை மேய்த்தனர். தொடர்ந்து தண்ணீர் திறக்க கோரி சாலை மறியல்கள், உருவபொம்மை எரிப்பு, கண்டன ஆர்ப்பாட்டம் என பல்வேறு போராட்டங்கள் நடந்தது. மழை வேண்டி யாகங்கள், சிறப்பு பூஜைகள் ஆகியவையும் நடத்தப்பட்டது. தொடர்ந்து பயிர்கள் பாதிக்கப்படுவதை அறிந்து விவசாயிகள் கவலையுற்ற நிலையில் நேற்று அதிகாலை கனமழை பெய்து வருகிறது. இந்த மழை விவசாயிகளுக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதமாக கருதுகின்றனர். 

2013 ரேஷன் கார்டு உள்தாள் இணைப்புக்கு 8 இலக்க எண்

2013ம் ஆண்டுக்கான ரேஷன் கார்டு உள்தாளுக்கு 8 இலக்க பிரத்யேக எண் வழங்கப்பட்டுள்ளது. இந்த உள்தாள் தொலைந்தாலோ, கிழிந்தாலோ வேறு உள்தாள் இணைப்பு வழங்க முடியாது. தமிழகம் முழுவதும் 1.97 கோடி ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. இதில் 20 சதவீதத்திற்கும் மேல் போலி கார்டுகள் இருப்பதாக கூறப்படுகிறது. போலி கார்டுகளை ஒழிக்க தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிக்கும் பணி முடிந்த பின்னர் பயோ மெட்ரிக் ரேஷன் கார்டுகள் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே பொதுமக்களுக்கு அரசு வழங்கிய ரேஷன் கார்டு 2009ம் ஆண்டுடன் முடிவடைந்தது. 2010, 2011, 2012 ஆகிய ஆண்டுகளுக்கு தனியாக உள்தாள் இணைப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் 2013ம் ஆண்டுக்கும் உள் தாள் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான உள் தாள் இணைப்பு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

வியாழன், 27 டிசம்பர், 2012

கடலூர் விவசாயிகள் மகிழ்ச்சி : வீராணம் ஏரியிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு

வீராணம்: வீராணம் ஏரியிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் விவசாயிகள் மகிழச்சி அடைந்துள்ளனர். பாசனத்திற்காக வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கடந்த 4 நாட்களாக விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வந்தனர். இதனையடுத்து பொதுப்பணித் துறை அதிகாரிகளால் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வீராணம் ஏரியிலிருந்து வினாடிக்கு 396 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

புதன், 26 டிசம்பர், 2012

வக்பு வாரிய தலைவர் நியமனத்தை எதிர்த்து மேலும் ஒரு வழக்கு

சென்னை, டிச. 26-
 
சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த நைனா முகமது ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
 
தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராக தமிழ் மகன் உசேன், உறுப்பினராக எஸ்.ஏ.பரூக் ஆகியோரை தமிழக அரசு நியமனம் செய்துள்ளது.
 
இதுபற்றி அரசு முஸ்லிம் சமுதாய பெருமக்களிடம் இருந்து விருப்பம் கேட்காமல் நியமித்துள்ளது. வக்பு சட்ட விதிமுறைகள் பின் பற்றப்படவில்லை. எனவே அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

செயல்படாத ஏடிஎம் மையம்

கொள்ளுமேடு அருகே நெடுஞ்சேரி. இங்கு பாரத ஸ்டேட் வங்கி செயல்படுகிறது. தினந்தோறும் இப்பகுதியில் உள்ள சுமார் 20 கிராமங்களிலிருந்து பொதுமக்கள் வங்கிக்கு வருகின்றனர். 
ஆட்கள் பற்றாக்குறை காரணமாக வங்கி கணினிமயமாக்கப்பட்டு வருகிறது. பணம் எடுப்பதற்கு அனை வருமே ஒரே நேரத்தில் வங்கியின் கவுண்டரை அணுகுவதால் கூட்டம் அதிகமாகிறது. இதை கருத்தில் கொண்டு ஏடிஎம் சென்டர்களை திறந்து வரு கிறது. இதனால் பணம் எடுக்க செல்பவர்கள் எளிதில் பணத்தை எடுத்து செல்கின்றனர். விழா காலங்களில் ஏடிஎம் முன்பு திருவிழா போன்று கூட்டம் காணப் படும்.

வீராணம் தண்ணீரை திறக்க கோரிக்கை

சிதம்பரம், : வீராணம் ஏரி உரிமை மையத்தின் ஒருங்கிணைப்பாளர் காவியச்செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக வீராணம் ஏரி விளங்கி வருகிறது. இந்த ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீருக்காக வினாடிக்கு 76 கனஅடி கொண்டு செல்லப்படுகிறது.இந்நிலையில் வீராணம் ஏரியை நம்பி சம்பா சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

வீராணம் ஏரியில் தண்ணீர் திறக்க கோரி மறியல் செய்த விவசாயிகள் மீது போலீஸ் தடியடி

காட்டுமன்னார்கோவில், டிச. 25-

வீராணம் ஏரிக்கு நீர்வரத்து குறைந்தது. எனவே கடந்த மாதம் 24-ந்தேதி முதல் தண்ணீர் திறந்து விடுவது நிறுத்தப்பட்டது. இதனால் காட்டுமன்னார்கோவில், லால்பேட்டை, பரங்கிப்பேட்டை, சிதம்பரம், குமராட்சி உள்ளிட்ட கடைமடை பகுதியில் சம்பா பயிர்கள் நீர் வசதியின்றி வாடத்தொடங்கின.

அதையடுத்து காட்டு மன்னார்கோவிலை அடுத்த லால்பேட்டை பொதுப் பணித்துறை அலுவலகம் முன்பு இன்று விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்துக்கு விவசாய சங்க தலைவர் விநாயகமூர்த்தி தலைமை தாங்கினார். சங்க நிர்வாகிகள் இளங்கீரன், பிரகாஷ், பார்த்தீபன் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். சாலை மறியலால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.

திங்கள், 24 டிசம்பர், 2012

வீராணம் ஏரியை திறக்க கோரி விவசாயிகள் மறியல் போராட்டம்

காட்டுமன்னார்கோவில்: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில், குமராட்சி உள்ளிட்ட பகுதிகளின் விவசாயிகள் வீராணம் ஏரி மூலம் சுமார் 4500 ஏக்கர் பரப்பளவுள்ள நிலங்கள் பாசனம் பெற்று வருகின்றனர். இந்த ஆண்டு தண்ணீர் பற்றாக்குறையால் வீராணம் ஏரி தாமதமாக திறக்கப்பட்டது. அதனால் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பை தாமதமாக தொடங்கினர். இந்நிலையில் ஏரியில் கொள்ளளவு குறைந்ததால் ஏரி மூடப்பட்டது. இதனால் தண்ணீர் பற்றாக்குறையால் பயிர்கள் கருகி வந்தன.

அயோத்தியில் பாபர் மஸ்ஜிதை,இடிப்பதற்கு காரணமான அத்வானி முரளி மனோகர் ஜோஷி போன்ரவர்கள் அதை முன்னின்று கட்டித்தர முன் வர வேண்டும் . – பேராசிரியர் .கே.எம்.காதிர் மொஹிதீன்


23.12.12 லால்பேட்டையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழகத் தலைவர் பேராசிரியர் .கே.எம்.காதிர் மொஹிதீன் நிருபர்களிடம் கூறும்போது ,
டெல்லியில் இடிக்கப்பட்ட பள்ளிவாசல் மீண்டும் கட்டப்படும் என்று அறிவித்த டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் போன்று அயோத்தியில் இடிக்கப்பட்ட பாபர் மஸ்ஜிதை,இடிப்பதற்கு காரணமான அத்வானி முரளி மனோகர் ஜோஷி போன்றவர்கள் அதை முன்னின்று கட்டித்தர முன் வர வேண்டும் .
இன்று இளம்பெண்கள் கற்பழிகப்படுவது அதிகரித்துள்ளது வேதனையளிக்கிறது,கற்பழிப்புக்கு தூக்கு தண்டனை என்று மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தால் அதை நாங்கள் முதலில் வரவேற்போம்.

வெள்ளி, 21 டிசம்பர், 2012

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இக்பால் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பதவி உயர்வு: ஜனாதிபதி உத்தரவு


கடந்த 2010-ம் ஆண்டில் இருந்து சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக எம்.ஒய்.இக்பால் பணியாற்றி வருகிறார். சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீரின் தலைமையில் 5 நீதிபதிகளைக் கொண்ட குழு கடந்த மாதம் பரிந்துரைத்தது.
அந்த பரிந்துரை கடிதம், மத்திய சட்டத்துறைக்கு அனுப்பப்பட்டு, ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டது. இதனை பரிசீலனை செய்த ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருக்கும் இக்பால், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பதவி உயர்வு பெறுவதற்கான உத்தரவை இன்று பிறப்பித்தார்.

இ.யூ. முஸ்லிம் லீக் பிரம்மாண்ட பேரணி மகாராஷ்டிரா முதல்வரிடம் கோரிக்கை மனு அளித்தனர்


மகாராஷ்டிரா மாநில சிறைகளில் வாடும் அப்பாவி முஸ்லிம்களை விடுவிக்கக் கோரி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நாகபுரியில் பிரம்மாண்டப் பேரணியை நேற்று (19-ம் தேதி) நடத்தி யது. அதில் தமிழக முன்னாள் சட்டமன்ற உறுப்பி னரும், முஸ்லிம் லீக் தேசிய துணைச் செயலாளருமான அப்துல் பாஸித் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
ஆய்வறிக்கை
மகாராஷ்டிர மாநில மைனாரிடி கமிஷன் சமீபத்தில் டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயன்ஸ் (டி.ஐ. எஸ்.எஸ்.) என்னும் நிறுவனத் தாரிடம், மகாராஷ்டிரா மாநில சிறைச்சாலைகளில் அடைபட் டுள்ள கைதிகள் குறிப்பாக முஸ்லிம் கைதிகள் பற்றிய விவரங்களைச் சேகரித்துத் தரும் பொறுப்பை ஒப்படைத் தது.
அந்த நிறுவனத்தைச் சேர்ந்த கிரிமினாலஜி எனப்படும் குற்றச் சட்டயியல் மற்றும் நீதித்துறையைச் சேர்ந்த பேராசிரியர்கள் விஜய் ராகவன், ரோஸ்னி நாயர் இருவரும் அந்தப் பொறுப்பை ஏற்று, ஓராண்டு காலம் ஆய்வு நடத்தி அறிக்கை அளித்தனர்.

புதன், 19 டிசம்பர், 2012

புனித ஹஜ் பயணம் 2013- விண்ணப்பிக்கும் முன் பாஸ்போர்ட் அவசியம்!


2013-ஆம் ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பிக்க உள்ளவர்கள் விண்ணப்பத்தின்போது பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப் பட்டுள்ள செய்திக் குறிப்பில்:
2013 ஆம் ஆண்டில் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள, குறைந்தபட்சம் 31.03.2014 வரையில் செல்லத்தக்க பன்னாட்டு பாஸ்போர்ட்டுகளை வைத்திருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் என்று இந்திய ஹஜ் குழு முடிவெடுத்துள்ளது.  எனவே, ஹஜ் 2013-ற்கான அறிவிப்பு பிப்ரவரி 2013-ல் வெளியிடப்படலாம் என்பதால் தற்போது பாஸ்போர்ட் இல்லாதவர்கள் அதற்கு முன்னதாகவே புதிதாக பாஸ்போர்ட்டு பெறுவதற்காக விண்ணப்பித்து, அவற்றைப் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

செவ்வாய், 18 டிசம்பர், 2012

நமதூர் ஓர் வபாத் செய்தி

நமதூர் பண்டாரி ஜக்கரியா & ஜலீல் இவர்களின் தாயார் ரைஹானா பீவி அவர்கள் இன்று தாருல் பனாவை விட்டும்தாருல் பகாவை அடைந்து விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன் ....

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின்  பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருள வேண்டும் என.  கொள்ளுமேடுடைம்ஸ் இணையதளம்  பிரார்த்தனை செய்கிறது.

அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி மாபெரும் பேரணி!


அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி மாபெரும் பேரணி!நாளை மகாராஷ்டிர மாநில முதல்வரிடம் நேரில் மனு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய துணைச்செயலாளர் எச்.அப்துல் பாசித் Ex.MLA.அளிக்கிறார்.
மகாராஸ்ட்ரா மாநில மைனாரிடி கமிஷன் சமீபத்தில் டாடா இன்ஸ்டிட்டியூட் ஆஃப் சோஸியல் சயன்ஸ் (டி.ஐ.எஸ்.எஸ்.) என்னும் நிறுவனத்தாரிடம், மகாராஸ்ட்ரா மாநில சிறைச்சாலைகளில் அடைபட்டுள்ள கைதிகள், குறிப்பாக முஸ்லிம் கைதிகள் பற்றிய விவரங்களைச் சேகரித்துத் தரும் பொறுப்பை ஒப்படைத்தது. அந்த நிறுவனத்தைச் சார்ந்த கிரிமினாலஜி எனப்படும் குற்றச் சட்டயியல் மற்றும் நீதித்துறையைச் சேர்ந்த பேராசிரியர்கள் விஜய் ராகவன், ரோஸ்னி நாயர் இருவரும் அந்தப் பொறுப்பை ஏற்று, ஓராண்டு காலம் ஆய்வு நடத்தினர்.
மகாராஸ்ட்ராவில் உள்ள 15 சிறைச்சாலைகளில் 339 ஆண், பெண் முஸ்லிம் கைதிகளிடம் பேட்டி கண்டு, தங்களின் ஆய்வுகளை, “”"”சோஸியோ எகனாமிக் ஃபுரோபைல் அண்டு ரிஹாபிலிடேஷன் நீட்ஸ் ஆஃப் முஸ்லிம் கம்யூனிடி இன் பிரிசன்ஸ் இன் மகாராஸ்ட்ரா’’ என்னும் தலைப்பிட்டு அறிக்கையாக அவ்விரு பேராசிரியர்கள் தந்துள்ளனர். அதனை மகாராஸ்ட்ரா மாநில மைனாரிடீஸ் கமிஷன் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் படிப்போர் குருதியை உறைய வைக்கக்கூடிய செய்திகள் தரப்பட்டுள்ளன. 141 பக்கம் கொண்டுள்ள அந்த அறிக்கை தரும் செய்திகளைப் படித்து, இதயம் துடிதுடித்து, ஆவேசப்படுவதைத் தவிர்த்துவிட்டு, இத்தகைய கோரப் பிடியில் இருந்து சமுதாய இளைஞர்களைக் காப்பாற்றுவதற்கு எது வழி? என்று ஆய்ந்தறிந்து செயல்படுவதற்கு முன்வருதல் இன்றைய அவசரமும் அவசியமும் ஆகிறது!
மகாராஸ்ட்ரா மாநிலத்தில் உள்ள 15 சிறைச்சாலைகளில் உள்ள முஸ்லிம் கைதிகளில் 70 சதவீதம் பேர் விசாரணைக் கைதிகள். இவர்களில் ஆண்கள் 64.5 சதவீதம்; பெண்கள் 5.2 சதவீதம் பேராவர்.

மாநிலங்களவையில் முஸ்லிம்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பிய சமாஜ்வாதிக் கட்சி!


புதுடெல்லி:தலித்துகளை விட முஸ்லிம்களின் நிலைமை மோசமாக இருக்கிறது.எனவே கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சி உறுப்பினர் ராம்கோபால் யாதவ் வலியுறுத்தினார்.
அரசுப் பணிபுரியும் எஸ்.சி., எஸ்.டி. ஊழியர்களுக்குப் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா, மாநிலங்களவையில் திங்கள்கிழமை நிறைவேறியது.
மாநிலங்களவை திங்கள்கிழமை கூடியதும் சமாஜவாதி கட்சியின் அவைத் தலைவர் ராம்கோபால் யாதவ் எழுந்து, கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரினார்.

திங்கள், 17 டிசம்பர், 2012

லால்பேட்டையில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உருவாக போராட்டம் நடத்தப்படும் தமுமுக தீர்மானம்


லால்பேட்டை நகர தமுமுக, மமக பொதுக்குழு கூட்டம் 15.12.2012 மாலை நடைப்பெற்றது.
தமுமுக, மமக கடலூர் {தெர்கு} மாவட்ட தலைவர் எம்.ஹெச்.மெஹராஜ்தீன் தலைமை தாங்கினார் முஹம்மது மாசூக் கிராத் ஓதினார் தமுமுக மாவட்ட செய்லாளர் என்.அமானுல்லா, மமக மாவட்ட செயலாளர் ஏ. யாசர் அரபாத், தமுமுக, மமக மாவட்ட பொருளாலர் முஹம்மது அய்யூப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மவுலவி எம்.ஒய்.முஹம்மது அன்சாரி தமுமுக வின் பணி பற்றி உரையாற்றினார்.
பொதுக்குழு கூட்டதில் மாவட்ட துனை , நகர ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் .
பொதுக்குழு கூட்டதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரியின் 150 – வது ஆண்டு விழா அறிவிப்பு…


எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நமது ஜாமிஆ நிறுவப்பட்டு இவ்வருடத்துடன் 150 ஆண்டுகள் நிறைவடைகிறது. அல்ஹம்துலில்லாஹ்!
இதனைத் தொடர்ந்து இவ்வருடம் 150-வது ஆண்டு விழா நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆகவே நமது ஜாமிஆவில் மவ்லவி மன்பஈ, ஃபாஜில் மன்பஈ, ஹாபிழ் ஸனது பெற்ற கண்ணியத்திற்குறிய உலமாக்கள் மற்றும் ஹாபிழ்கள் ஜாமிஆவோடு உடனடியாக தொடர்புக்கொண்டு தங்கள் முகவரி, மற்றும் கைபேசி எண்களை தெரியபடுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

ஞாயிறு, 16 டிசம்பர், 2012

கடலூர் மாவட்ட புதிய கலெக்டராக கிர்லோஷ் குமார் பதவி ஏற்பு


கடலூர் மாவட்ட புதிய கலெக்டராக நேற்று பதவி ஏற்ற ஆர்.கிர்லோஷ்குமார், ‘பொதுமக்களின் குறைகளை விரைவாக தீர்க்க முன்னுரிமை கொடுத்து பணியாற்றுவேன்‘ என உறுதியளித்தார்..
புதிய கலெக்டர்
கடலூர் மாவட்ட கலெக்டராக பணியாற்றிய ராஜேந்திரரத்னூ திடீரென மாற்றப்பட்டு வணிகவரித்துறை இணைக்கமிஷனராகவும், அப்பதவியில் இருந்த ஆர்.கிர்லோஷ்குமார்(வயது36) கடலூர் மாவட்ட கலெக்டராகவும் மாற்றப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து கடலூர் மாவட்ட புதிய கலெக்டராக ஆர்.கிர்லோஷ்குமார் பதவி ஏற்கும் நிகழ்ச்சி கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மதியம் 12–30 மணிக்கு நடந்தது. அங்கு புதிய கலெக்டராக ஆர்.கிர்லோஷ்குமார் பதவி ஏற்றுக்கொண்டார். அவரிடம் பணிமாறுதலாகி செல்லும் ராஜேந்திரரத்னூ பொறுப்புகளை ஒப்படைத்து விடைபெற்றார்.
மகிழ்ச்சி அடைகிறேன்
புதிய கலெக்டராக பதவி ஏற்ற ஆர்.கிர்லோஷ்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:–
கடலூர் மாவட்ட கலெக்டராக பொறுப்பு ஏற்றதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இதற்கு முன்பு கலெக்டராக இருந்த ராஜேந்திரரத்னூ எனது நெருங்கிய நண்பர். நானும் அவரும் ஒரே ஆண்டில் ஐ.ஏ.எஸ். பணிக்கு தேர்வு செய்யப்பட்டோம். அவர் ஏறத்தாழ 5 ஆண்டுகள் கடலூர் மாவட்டத்தில் நல்ல முறையில் பணியாற்றியிருக்கிறார்.

H.ஹனஸ்-நசீரா பாணு திருமணம்

பாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர்{அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும் மேலும் உங்கள் மீது அபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்றிணைத்து வைக்கட்டும்}
வாழ்த்துக்களுடன்.. கொள்ளுமேடுடைம்ஸ் இணையதளம்..

வியாழன், 13 டிசம்பர், 2012

பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகம்: ப.சிதம்பரம் தகவல்

காகித ரூபாய் நோட்டுகள் விரைவில் சேதம் அடைவதால் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை வெளியிட மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின. இதை மத்திய மந்திரி ப.சிதம்பரம் உறுதி செய்தார். பாராளுமன்றத்தில் இன்று கேள்வி நேரத்தின் போது கேட்டப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் வருமாறு:-

இந்தியாவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. முதலில் 10 ரூபாய் நோட்டு பிளாஸ்டிக்கில் வெளியிடப்படும். தொடர்ந்து மற்ற ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்படும் தற்போது வெளியிடப்படும். காகித ரூபாய் நோட்டுக்கள் 1 வருடம் கூட உழைப்பதில்லை. எனவே பிளாஸ்டிக் நோட்டுகளை அச்சடிக்க அரசு முடிவு செய்துள்ளது.

புதன், 12 டிசம்பர், 2012

சிதம்பரம், காட்டுமன்னார்கோவிலில் விவசாயிகளுக்கு சிட்டா வழங்க சிறப்பு ஏற்பாடு

கடலூர் மாவட்டத்தில் காவிரி டெல்டா பாசன பகுதிகளில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் தண்ணீர் இன்றி கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதையடுத்து காவிரி டெல்டா விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு பிரிமிய தொகையை அரசே செலுத்த முடிவு செய்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் இத்திட்டம் மூலம் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் வட்டங்களை சேர்ந்த விவசாயிகள் பயன்பெறுவார்கள்.
 இத்திட்டத்தில் சேரும் விவசாயிகள் உரிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதனுடன் சிட்டா மற்றும் அடங்கல் நகல்களை இணைத்து அருகில் உள்ள வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேற்று மாலைக்குள் அளிக்க உத்தரவிடப்பட்டது. ஆனால் இணைய தள தொடர்பு மற்றும் மின்வெட்டு காரணமாக சிட்டா வழங்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. 

செவ்வாய், 11 டிசம்பர், 2012

மங்கலம்பேட்டையில் ஜமாஅத்துல் உலமா சபை பொதுக்குழு

விருத்தாசலம், : விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டையில் ஜமாஅத்துல் உலமா சபை பொதுக்குழு கூட்டம் நடந்தது. 
விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டையில்  கடலூர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர்  ஷபியுல்லாஹ்மன்பஈ தலைமை   தாங்கினார். மாவட்ட செயலாளர் அப்துர்ரஜாக் வரவேற்றார். மாவட்ட துணை செயலாளர்கள் அப்துர்ரஷீத்ரஹ்மானி முன்னிலை வகித்தனர்.  மாநில தலைவர்  அப்துர்ரஹ்மான், மாநில துணை பொதுச்செயலாளர் நூருல்அமீன், லால்பேட்டை அரபி கல்லூரி பேராசிரியர் ஜாகிர்உசேன் ஆகியோர் பேசினர். 

வியாழன், 6 டிசம்பர், 2012

புவனகிரியில் நடைபெற்ற தமுமுகவின் தொடர் முழக்க ஆர்பாட்டம்.



பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட நினைவு நாளான டிசம்பர் 6 ஆம் தேதியை முன்னிட்டு,பாபர் மஸ்ஜித் வழக்கில் விரைந்து தீர்ப்பு வழங்கவும் பாபர் மஸ்ஜிதை இடித்த குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் தமுமுக கடலூர் தெற்கு மாவட்டத்தின் சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் தமுமுகவின் மாவட்ட துணைச் செயலாளர் சவுக்கத் அலி கான் தலைமையில் நடைபெற்றது.

தமுமுக ஊழியர் கொள்ளுமேடு ரிஃபாயி இறைமறை வசனங்களை ஓதினார்.தமுமுக மாவட்ட செயலாளர் என் அமானுல்லா வரவேற்புரையாற்றினார்.தமுமுக மாவட்ட பொருளாலர் ஏ.எம்.அய்யுப் மமக முன்னாள் மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.யாசிர் அரஃபாத் உள்ளிட்ட மாவட்ட தமுமுக நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

பாபர் மஸ்ஜித் நிஜங்களும்-போராட்டங்களும்


கி.பி.1526 - முதல் பாணிபட் போர் டெல்லிக்கு அருகே (இன்றைய ஹரியானா மாநிலத்தில்) பாபருக்கும் அப்போது டெல்லியை ஆண்ட இப்ராஹிம் லோடிக்கும் இடையே நடந்தது. லோடி கொல்லப்பட்டு பாபர் வெற்றி பெறுகிறார். இந்தியாவின் வரலாறு மாறுகிறது. பாபர் முகலாயப் பேரரசின் தலைவராக அறியணை ஏறுகிறார்.
கி.பி.1528 - பாபரின் தளபதி மீர்பாகி அயோத்திக்கு வருகிறார். அங்கு முழுமை அடையாமல் கிடந்த பள்ளிவாசலை கட்டி முடித்து அதற்கு பாபரின் பெயரை சூட்டுகிறார். 1524ல் இப்ராஹிம் லோடி டெல்லியை ஆண்டபொழுது இப்பள்ளிவாசலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டிருந்தது.
கி.பி.1853 - முதல் முறையாக பாபர் மஸ்ஜித் நிலம் தொடர்பான சர்ச்சை ஆங்கிலேயர்களால் தூண்டிவிடப்படுகிறது
கி.பி.1855 - பாபர் பள்ளிவாசலின் ஒரு பகுதி நிலம், ராம பக்தர்கள் என கூறிக்கொண்ட ஒரு கூட்டத்தாரால் ஆக்கிரமிக்கப்படுகிறது.

புதன், 5 டிசம்பர், 2012

லால்பேட்டையில் நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த தமுமுகவின் தொடர் முழக்க ஆர்பாட்டம் புவனகிரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.


டிச 6 – தமுமுக தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் புவனகிரி யில் நடைப்பெறும்


பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட டிசம்பர் 6ல் பாபர் மஸ்ஜிதை இடித்த குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பாபர் மஸ்ஜித் தொடர்பான வழக்குகளை உச்ச நீதிமன்றம் விரைந்து முடிக்க வேண்டும் ஆகிய இரட்டைக் கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் கடலூர் மாவட்ட {தெர்கு} சார்பாக  காட்டுமன்னார்குடியில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தது.
தர்போது 01.12.2012 முதல் 10.12.2012 வரை காட்டுமன்னார்குடி பகுதியில் 144 தடை உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ளது தடையை மீறி காட்டுமன்னார்குடியில் ஆர்ப்பாட்டம் நடத்த கூடாது என்று தலைமை நிர்வாகம் கூரியதால் சிதம்பரம் அருகில் உள்ள புவனகிரி யில்  தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் கடலூர் மாவட்ட {தெர்கு} சார்பாக தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடைப்பெரும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

செவ்வாய், 4 டிசம்பர், 2012

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் புதிய தேசிய நிர்வாகிகள் தேர்வு


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவராக இ. அஹமது சாஹிப், பொதுச் செயலாள ராக பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், பொருளா ளராக பி.கே. குஞ்ஞாலி குட்டி ஆகியோரும், துணைத் தலைவர்கள் இருவர், செயலாளர்கள் ஐவர், துணைச் செயலாளர் கள் ஐவரும் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடை பெற்ற தேசிய கவுன்சில் கூட்டத்தில் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்ற ஒரே பெயரில் செயல்படுவது என முடிவெடுக்கப் பட்டு கேரள ராஜ்ஜிய முஸ்லிம் லீகின் முழுமையான ஒத்துழைப் போடு சட்டப்பூர்வமாக பணிகள் செய் யப்பட்டன.
இந்தியத் தேர்தல் ஆணை யம் இந்திய யூனியன் முஸ்லிம் லீகை அங்கீகரித்து ‘ஏணி’ சின்னமும் வழங்கியது. இதனை யொட்டி, புதிய சட்டத் திட்ட விதிகளின்படி இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு மாநில நிர்வாகி கள் தேர்தலும் நடத்தப்பட்டன. பத்தாயிரம் உறுப்பினர்க ளுக்கு ஒரு தேசிய கவுன்சில் உறுப்பினர் என்ற வகையில் 398 தேசிய கவுன்சில் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
தேசிய நிர்வாகிள், ஒவ் வொரு மாநிலத்தின் தலைவர், செயலாளர்கள், அந்தந்த மாநிலத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட தேசிய கவுன்சில் உறுப்பினர்கள் எண்ணிக் கையில் 10 சதவீதம் மற்றும் தேசியத் தலைவரால் நியமிக் கப்பட்டவர்கள் ஆகியோர் அடங்கிய தேசிய செயற்குழு உறுப்பினர்களும் தேர்வு செய் யப்பட்டனர்.

பிப்ரவரி 8, 9, (வெள்ளி, சனி) தேதிகளில் கோட்டக்குப்பத்தில் தப்லீக் இஸ்திமா


பிப்ரவரி 8, 9, 2013 (வெள்ளி, சனி) தேதிகளில் கோட்டக்குப்பத்தில் இஸ்திமா கடந்த பல வருடங்களாக முயற்சி செய்து இடவசதி இல்லாத காரணத்தால் கோட்டக்குப்பம் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு வந்த நிலையில் இவ்வருடம் கோட்டக்குப்பத்தில் இஸ்திமா நடத்த இறைவன் நாட்டப்படி முடிவு செய்யப்பட்டுள்ளது.
.
கடந்த அக்டோபர் மாதம், பாண்டிச்சேரி மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் இஸ்திமா நடத்த இடம் ஆய்வு செய்யப்பட்டது.
.
பல இடங்கள் ஆய்வு செய்யப்பட்டு கோட்டக்குப்பம் புதிய கிழக்கு கடற்கரை சாலை ஒட்டி அமைந்துள்ள பரகத் நகர் மேற்கு பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டது. கடலூர், விழுப்புரம்,பாண்டிச்சேரி மாவட்டத்திற்கான
இஸ்திமாவை எந்ததெந்தபகுதியில் நடத்துவது என்பதற்கான ஆலோசனை (ஜோடு) கூட்டம் லால்பேட்டை லால்கான் ஜாமிஆ  மஸ்ஜித் வளாகத்தில் 02.12.2012 இன்று  நடைபெற்றது.

திங்கள், 3 டிசம்பர், 2012

காசோலை கையொப்பம் மாறினாலும் குற்றவியல் நடவடிக்கை – உச்சநீதிமன்றம்!


புதுடெல்லி:வங்கியில் அளித்த கையொப்பமும், காசோலைகளில் இடப்படும் கையொப்பமும் மாறுபட்டு இருந்தாலும் அந்த நபர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
காசோலை மோசடி தொடர்பான வழக்கில் குஜராத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், “வங்கிக் கணக்கில் போதுமான பணம் இல்லாத நிலையில் வழங்கப்படும் காசோலை மீதுதான் குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியும். வங்கியில் கணக்கு வைத்திருப்பவரின் கையொப்பம் பொருந்தாத காரணத்துக்காக குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியாது” என்று தெரிவித்திருந்தது.

ஞாயிறு, 2 டிசம்பர், 2012

லால்பேட்டை புதுப்பள்ளி தெரு சமனன் ஹபீபுல்லா மனைவி மறைவு


லால்பேட்டை புதுப்பள்ளி தெரு சமனன் ஹபீபுல்லா அவர்களின் மனைவியும், நூருல் அமீன் {தமுமுக}  தாயாருமான  காமிலா பீவி அவர்கள் இன்று 02.12.2012 காலை 6.00 மணியளவில்   தாருல் பனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்
                                                இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின்  பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருள வேண்டும் என.  கொள்ளுமேடுடைம்ஸ் இணையதளம்  பிரார்த்தனை செய்கிறது.

சனி, 1 டிசம்பர், 2012

காட்டுமன்னார்குடி பகுதியில் 144 தடை உத்தரவு


காட்டுமன்னார்குடி பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு லால்பேட்டை அருகில் உள்ள   ரம்ஜான் தைக்காலில் பள்ளிவாசல் காம்பவுண்ட் சுவரில் அமர்ந்து திங்கள் கிழமை இரவு அமர்ந்து மது அருந்தியுள்ளனர் இதனால் இப்பகுதியில் பதட்டம் நிலவியது இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து மேலும் வன்முறைச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் அங்கு இன்று முதல் வரும் 10ம் தேதி வரை தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று கடலூர் சார்பு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
சம்பவ பகுதியில் 4 பேருக்கு மேல் கூடுவோர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.