AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

வெள்ளி, 30 நவம்பர், 2012

துபாயில் கன மழை மக்கள் பெரும் மகிழ்ச்சி


துபாய் மற்றும் அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் கன மழை பெய்து வருகிறது.
துபாய் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று காலை முதலே கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலைகளின் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை விடுமுறை என்பதால் போக்குவரத்தில் பெரும் பாதிப்பு ஏற்படவில்லை.



 எனினும் விடுமுறை தினத்தை குடும்பத்தினருடன் வெளியில் சென்று களிக்க திட்டமிட்டவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. வெளியே செல்ல முடியாவிட்டாலும் வீட்டில் இருந்தபடியே வெளுத்து வாங்கும் மழையை மக்கள் ரசித்து வருகின்றனர்.
நீண்ட நாட்களுக்குப் பின்னர் துபாயில் கனமழை பெய்து வருவது மக்கள் மனதை குளிர வைத்துள்ளது.

சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் மூடப்படுகிறது - இந்தியாவுக்கான தூதர் தகவல்



சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் கவலைக்கிடமாக இருக்கும் அபுதாஹிரை பரோலில் விடுவிக்க மறுப்பது ஏன்?


வியாழன், 29 நவம்பர், 2012

ஆஸிஃப் இப்ராஹீம்: இந்தியாவின் 125 வருடகால வரலாற்றில் உளவுத்துறையின் தலைவராக முதல் முஸ்லிம்!

புதுடெல்லி:இண்டலிஜன்ஸ் பீரோவின்(ஐ.பி) தலைமை இயக்குநராக செய்யத் ஆஸிஃப் இப்ராஹீம் பதவி யேற்கும்போது திருத்தப்படுவது இந்தியாவின் 125 ஆண்டுகால வரலாறாகும். பிரிட்டீஷ் ஆட்சிகாலத்தில் இருந்தே தொடரும் இந்தியாவின் மிகவும் பழமை வாய்ந்த உளவுத்துறையான ஐ.பியின் முதன் முதலாக ஒரு முஸ்லிம் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளார். நான்கு சீனியர் அதிகாரிகளையும் கடந்து ஆஸிஃப் இப்ராஹீம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இப்பதவியை ஏற்கவுள்ளார்.

‘துப்பாக்கி’ படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம்: முதல்வரை சந்தித்து இஸ்லாமிய அமைப்பினர் நன்றி!

சென்னை:இஸ்லாமியர்களுக்கு எதிரான சர்ச்சைக்குரிய காட்சிகளை ‘துப்பாக்கி’ படத்தில் இருந்து நீக்க  நடவடிக்கை எடுத்ததற்காக முதலமைச்சர் ஜெயலலிதாவை, ஜமாதுல் உலமா சபையின் தலைவர் மெளலவி அப்துற்றஹ்மான் தலைமையில் தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பினர்  நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
இதுத் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “மதச்சார்பற்ற  கொள்கைகளை தொடர்ந்து பின்பற்றுவதோடு மட்டுமல்லாமல், சிறுபான்மையினரின்  நலன் காத்திடும் வகையிலும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு  செயல்பட்டு வருகிறது.

முகமது நபியை இழிவுப்படுத்தி வீடியோ: 7 பேருக்கு எகிப்து கோர்ட் மரண தண்டனை


கெய்ரோ, நவ. 28- 

நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில் கடந்த செப்டம்பர் மாதம் இன்டர்நெட்டில் வெளியிடப்பட்ட குறும்படத்திற்கு உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்தியாவிலும் தமிழ்நாடு உள்ளிட்ட எல்லா மாநிலங்களில் உள்ள முஸ்லிம்களும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டனர். 

இந்த குறும்படத்தை தயாரித்தவரை அமெரிக்க அரசு கைது செய்து தண்டனை விதிக்க வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வற்புறுத்தினர். அமெரிக்காவில் வாழும் முஸ்லிம்கள், இந்த குறும்படத்தை தயாரித்த எகிப்து - அமெரிக்கரான நகோலா பேஸலே நகோலாவின் வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

முஸ்லிம் நாடுகளில் உள்ள மேற்கத்திய நாடுகளின் தூதரகங்கள் மீது தாக்குதல்களும் நடத்தப்பட்டன. இதையொட்டி, அமெச்சூர் குறும்பட தயாரிப்பாளரான நகோலா பேஸலே நகோலாவை, லாஸ் ஏஞ்செல்ஸ் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 

புதன், 28 நவம்பர், 2012

ரம்ஜான் தைக்காலில் பள்ளிவாசலி​ல் சமூக விரோதிகள் மது அருந்தியதை கண்டித்ததா​ல் கலவரம்

லால்பேட்டை அருகில் உள்ள   ரம்ஜான் தைக்காலில் பள்ளிவாசல் காம்பவுண்ட் சுவரில் இருதயபுரத்தை சேர்ந்த தலித் கிறிஸ்தவ இளைஞர்கள் திங்கள் கிழமை இரவு அமர்ந்து மது அருந்தியுள்ளனர் இதை பார்த்த  ரம்ஜான் தைக்காலை சேர்ந்த முஸ்லிம் இளைஞர்கள் ஏன் இங்கு அமர்ந்து மது குடிக்கிறீர்கள் என கேட்டுள்ளனர் அப்போதே பிரச்சனைக்குரியவர்கள்  வீண் தகராறு செய்ய  முற்பட்டுள்ளனர் இந்நிலையில் செவ்வாய்கிழமை காலை இருதயபுரத்திருலிந்து  20 பேர் கொண்ட  சமூக விரோத கும்பல் ரம்ஜான் தைக்கால் வந்து முஸ்லிம் இளைஞர்களை தாக்கினர் இதையடுத்து இரு தரப்பினருக்கு மத்தியில் மோதல் ஏற்பட்டது இது குறித்து தகவல் அறிந்த டி.எஸ்.பி.ஆறுமுகசாமி .இன்ஸ்பெக்டர் ,ராமமூர்த்தி , காட்டுமன்னார்குடி சப்-இன்ஸ்பெக்டர் முத்துகுமரன் மற்றும் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்  இரு தரப்பினர் மீதும்  வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது

மத்திய அரசு அதிரடி பள்ளி, கல்லூரி, மருத்துவமனை அருகே செல்போன் டவர் அமைக்க தடை


புதுடெல்லி: பள்ளி, கல்லூரி, மருத்துவமனை, ஜெயில் அருகே செல்போன் டவர்கள் இருக்க கூடாது. இருந்தால் அதை உடனே அப்புறப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. செல்போனின் உபயோகம் பெருகிய அதே நேரம் செல்போன் கோபுரங்களின் கதிர்வீச்சுகளால் ஏற்படும் பாதிப்புகளும் அதிகரித்துள்ளன. செல்போன் கோபுரங்களுக்கு மத்திய அரசு, டிராய் நிறுவனம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தபோதும், வணிக வளாகங்கள், பொது இடங்கள் என்று எங்கு திரும்பினாலும் செல்போன் கோபுரங்களின் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் செல்போன் கோபுரங்களுக்கு குட்டு வைக்கும் வகையில் மத்திய அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதன்படி பள்ளி, கல்லூரி, வழிபாட்டுத்தலங்கள் மருத்துவமனைகள், விளையாட்டு மைதானங்கள் அருகே செல்போன் கோபுரங்கள் இருக்க கூடாது. மேற்படி இடங்களில் தற்போது செல்போன் கோபுரங்கள் இருந்தால் அவற்றை அந்த இடங்களிலிருந்து 500 மீட்டருக்கு அப்பால் மாற்றியமைக்க வேண்டும். வருங்காலங்களில் இது போன்ற இடங்களில் எந்த நிறுவனமும் செல்போன் கோபுரங்களை அமைக்க கூடாது. தலைவர்களின் நினைவிடங்கள், தொல்பொருள் ஆய்வுத்துறையினரால் அறிவிக்கப்பட்ட இடங்கள், பாரம்பரிய சின்னங்கள், போற்றத்தக்க இடங்கள் ஆகியவற்றின் அருகே செல்போன் கோபுரங்கள் அமைக்க கூடாது. இருந்தால் அவற்றை அப்புறப்படுத்த வேண்டும். இவ்வாறு மத்திய அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் கருத்து: 2 பெண்களுக்கு தண்டனை விதித்த மாஜிஸ்திரேட் திடீர் இடமாற்றம்: மும்பை ஐகோர்ட்


சிவசேனா தலைவர் பால்தாக்கரே மரணம் அடைந்ததைத் தொடர்ந்து மறுநாள் மும்பையில் முழு அடைப்பு நடத்தப்பட்டது. இதை மராட்டிய மாநிலம் பல்கர் நகரை சேர்ந்த 2 இளம்பெண்கள் பேஸ்புக் இணையத்தளத்தில் விமர்சனம் செய்திருந்தனர்.
சிவசேனா நிர்வாகிகள் கொடுத்த புகாரின் பேரில் அந்த 2 இளம்பெண்களும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது போலீசார் 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை 15 நாள் காவலில் வைக்க பல்கர் மாவட்ட ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு ராமச்சந்திர பகடே உத்தரவிட்டார். பிறகு ரூ.15 ஆயிரம் ஜாமீனில் விடுவித்தார்.
இதற்கிடையே பேஸ்புக்கில் கருத்து வெளியிட்ட 2 பெண்கள் கைதானது நாடெங்கும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 2 பெண்களுக்கு தண்டனை கொடுத்ததும் விமர்சனம் செய்யப்பட்டது. இந்த நிலையில் மாஜிஸ்திரேட்டு ராமச்சந்திர பகடே இன்று திடீரென பல்கர் மாவட்டத்தில் இருந்து ஜல்கான் மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை மும்பை ஐகோர்ட் வெளியிட்டுள்ளது.

ஞாயிறு, 25 நவம்பர், 2012

இந்திய வரலாற்றில் முதன் முறையாக உளவுத்துறைக்கு முஸ்லிம் ஒருவர் தலைவர் ஆகிறார்!

புதுடெல்லி:புலனாய்வுத் துறையின் இயக்குநராக எஸ். ஆசிப் இப்ராஹிம் நியமிக்கப்பட உள்ளார். இத்தகைய உயரிய பதவிக்கு முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட உள்ளது இதுவே முதல் முறையாகும். 1977ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான இவர் உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.
இப்போது புலனாய்வுத்துறை இயக்குநராக உள்ள நேச்சல் சாந்துவின் பதவிக்காலம் டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிகிறது. ஆசிப் நியமனம் தொடர்பான உத்தரவு திங்கள்கிழமை அதிகாரபூர்வமாக வெளியாகும். இவரது நியமனத்துக்கு பிரதமர் மன்மோகன் தலைமையிலான பணி நியமனத்துக்கான அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்தது.

வியாழன், 22 நவம்பர், 2012

சார்மினார் அருகே முன்பு கோயில் இருந்ததில்லை – புகைப்படம் ஆதாரம்!

ஹைதராபாத்:இந்தியாவின் பெருமையை பறைசாற்றும் கோபுரங்களில் ஒன்றான சார்மினார் சர்ச்சையில் சிக்கியிருக்கும்சூழலில் மினாராக்களின்(சார்மினார் கோபுரம்) வரலாற்று ரீதியான உண்மையை வெளிச்சம் போட்டு காட்டும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
நான்கு மினாராக்களுடன்(கோபுரங்கள்) வானை நோக்கி கம்பீரமாக நிற்கும் ஹைதராபாத்தில் 420 வருடகால பழமையான சார்மினாரும், அதன் சுற்றுவட்டாரமும் கடந்த சில வாரங்களாக செய்திகளில் இடம் பிடித்துள்ளன. சார்மினாரின் வலப்புறம் புதிதாக கட்டப்படும் கோயில்தான் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இஸ்ரேலின் கூட்டுப் படுகொலை தொடருகிறது! – மரணம் 125!

காஸ்ஸா:சர்வதேச நாடுகள் சமாதான முயற்சிகளை மேற்கொண்டுவரும் வேளையில் தொடர்ச்சியாக 7-வது நாளாக இஸ்ரேல், காஸ்ஸாவின் மீது கொடூர தாக்குதலை நேற்று தொடர்ந்தது. நேற்று 20 பேர் கொல்லப்பட்டனர். இத்துடன் காஸ்ஸாவில் இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 125 ஆக உயர்ந்துள்ளது.
கான் யூனுஸ், பைத்துலாஹியா, காஸ்ஸா சிட்டி, ரஃபா, தைருல் பலாஹ், ஹஜருல் தீக் ஆகிய இடங்களில் இஸ்ரேலின் ஏவுகணைகள் தாக்கின. காஸ்ஸா சிட்டியில் தேசிய இஸ்லாமிய வங்கியும், அகதிகள் முகாமும் இஸ்ரேலின் கொடூரத் தாக்குதலில் தகர்ந்து போயின. மத்திய காஸ்ஸாவில் அங்கு வாழும் மக்கள் வெளியேற வேண்டும் என்று கூறி இஸ்ரேல் போர் விமானம் நோட்டீஸை வீசியது.

புதன், 21 நவம்பர், 2012

புயல் எச்சரிக்கை கூண்டுககளின் அர்த்தம்…

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி வருவதால் கன மழை பெய்யத் தொடங்கியுள்ளது.
தொலைக்காட்சிகளிலும் வானிலை அறிவிப்புகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கின்றன. ஆனால் புயல் எச்சரிக்கை பற்றி கூறப்படும் சில குரியீட்டு எண்கள் பொதுமக்களில் பலருக்கு இன்றளவும் விளங்கமலேயே இருக்கின்றது.
பொதுமக்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்க துறைமுகங்களில் ஏற்றப்படும் புயல் கூண்டுகளையும், அந்த குறியீடுகள் குறித்த விளக்கங்களின் விபரம் பின்வருமாறு :

கருணை மனு நிராகரிப்பு – கசாப்பிற்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றம்!

மும்பை:மும்பை தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்ட அஜ்மல் கசாப்பின் கருணை மனுவை குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி நிராகரித்துவிட்டதை தொடர்ந்து, கசாப்பிற்கு இன்று காலை 7.30 மணிக்கு தூக்குத் தண்டனை  நிறைவேற்றப்பட்டது. இதனை மஹராஷ்டிர உள்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

பஹ்ரைன் பாராளுமன்றத்தில் இஸ்ரேல் கொடி எரிப்பு!

மனாமா:பஹ்ரைன் பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கு இடையே இஸ்ரேலின் கொடி தீக்கிரையாக்கப்பட்டது.
பாராளுமன்ற கூட்டம் நடக்கும் பொழுது உஸாமா முஹன்னா என்பவர் இஸ்ரேல் கொடியை தீவைத்துக் கொளுத்தினார். இதனைத் தொடர்ந்து பாராளுமன்ற ஹாலில் புகை நிறைந்து, நடவடிக்கைகளை சபாநாயகர் நிறுத்திவைத்தார். அனைவரது கவனத்தையும் ஈர்க்கவே கொடியை எரித்ததாக உஸாமா தெரிவித்தார்.

திங்கள், 19 நவம்பர், 2012

திருத்தப்பட்ட துப்பாக்கி திரைபடம். மமக பொதுச்செயலாளர் நேரில் உறுதி செய்தார் தாணு.

  • திருத்தப்பட்ட துப்பாக்கி திரைபடம். பொதுச்செயலாளரிடம் நேரில் உறுதி செய்தார் தாணு.
    துப்பாக்கி படத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான சர்ச்சைக்குரிய சில காட்சிகளை நீக்க …
    வேண்டும் என்று தமுமுக உள்ளிட்ட சமுதாய அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.
    • திருத்தப்பட்ட துப்பாக்கி திரைபடம். பொதுச்செயலாளரிடம் நேரில் உறுதி செய்தார் தாணு.துப்பாக்கி படத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான சர்ச்சைக்குரிய சில காட்சிகளை நீக்க வேண்டும் என்று தமுமுக உள்ளிட்ட சமுதாய அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.அதனை ஏற்று சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கி விட்டு அது குறித்த விவரங்களை சென்னை கமிஷனர் ஜார்ஜ் ஐ சந்தித்து விளக்கி உள்ளனர். இன்று மாலை மமக பொதுச்செயலாளர் எம். தமிமுன் அன்சாரியை சந்தித்த தயாரிப்பாளர் தாணு அது குறித்த விவரங்களை ஒப்படைத்தார். அவருக்கு காவி பயங்கரவாதம் குறித்து பல்வேறு செய்திகளை உள்ளடக்கிய மக்கள் உரிமை பிரதிகளை மமக பொதுச்செயலாளர் கையளித்தார். அதன் பிறகு நடந்த உரையாடலில் காவி பயங்கரவாதம் குறித்தும், முஸ்லிம்கள் எப்படியெல்லாம் பொய் பலிக்கு ஆளாகிறார்கள் என்பது குறித்து தாணுவிடம் விவரமாக விளக்கப்பட்டது.அப்போது தாணுவின் அலைபேசியில் வந்த இயக்குனர் சீமான், பொதுச்செயலாலரிடம் இப்படத்தினால் ஏற்பட்ட தவறுகளுக்காக தனது வருத்தத்தையும், கவலையையும் பகிர்ந்து கொண்டார். இனி தமிழ் திரைப்படங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான அவதூறு காட்சிகள் வெளிவராமல் தடுக்க வேண்டும் என்றும் பொதுச்செயலாளர் கேட்டுக் கொண்டார்.இதனிடையே திருத்தப்பட்ட படத்தின் காட்சிகளை உறுதி செய்வதற்காக நாளை மதியம் 2 மணிக்கு முஸ்லிம் பிரதிநிதிகளுக்காக சிறப்பு காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.இந்த சந்திப்பு குறித்த விவரங்களை கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள சகோதரர்கள் ஜே.எஸ். ரிபாயி, அப்துல் சமது, அ. ச. உமர் பாருக், ஹனிபா ஆகியோரிடம் அங்கிருந்தவாறே பகிர்ந்து கொண்ட பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி இதை மற்ற அமைப்புகளிடமும் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுகொண்டார்.
    அதனை ஏற்று சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கி விட்டு அது குறித்த விவரங்களை சென்னை கமிஷனர் ஜார்ஜ் ஐ சந்தித்து விளக்கி உள்ளனர். இன்று மாலை மமக பொதுச்செயலாளர் எம். தமிமுன் அன்சாரியை சந்தித்த தயாரிப்பாளர் தாணு அது குறித்த விவரங்களை ஒப்படைத்தார்.

ஞாயிறு, 18 நவம்பர், 2012

இதுவரை 19 லட்சம் பேர் விண்ணப்பம் வாக்காளர் பட்டியலில் 20க்குள் பெயர் சேர்க்கலாம்

சென்னை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, வரும் 20ம் தேதி கடைசி நாள் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறினார். வரும் 2013ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதியை அடிப்படையாக கொண்டு, வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த அக்டோபர் 1ம் தேதி வெளியிடப்பட்டு அந்தந்த மாநகராட்சி மண்டல அலுவலகம், அங்கீகரிக்கப்பட்ட வாக்கு சாவடி மையம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், நகராட்சி ஆணையர் அலுவலகம் மற்றும் தாசில்தார் அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், இடமாற்றம் செய்வதற்கான படிவங்கள் அங்கேயே வழங்கப்பட்டன. இதனால், பெரும்பாலானவர்கள் அங்கேயே படிவங்களை பூர்த்தி செய்து வழங்கி வருகின்றனர்.

புதன், 14 நவம்பர், 2012

நமதூர் ஓர் வபாத் செய்தி

கொள்ளுமேடு நமதூர் மேலத்தெருவிலிருக்கும் அஷ்ரப் அலி ,மற்றும்  ஹலிபுல்லாஹ் இவர்களின் தாயாரும் எங்கள் ஊரின்பெண்கள்    மதரஸாவின் நீண்ட காலம்  தலைமை ஆசிரியர்மான ஹஸீனா பூ அவர்கள் இன்று அதிகாலை தாருல் பனாவை விட்டும்தாருல் பகாவை அடைந்து விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன் ....

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின்  பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருள வேண்டும் என.   கொள்ளுமேடுடைம்ஸ் இணையதளம்  பிரார்த்தனை செய்கிறது.

சனி, 10 நவம்பர், 2012

சிம் கார்டு வாங்க போலியான ஆவணம் தருவார்கள் மீது போலீஸ் நடவடிக்கை...

புதுடெல்லி: செல்போன், சிம் கார்டு வாங்க போலியான ஆவணம் தருவார்கள் மீது கடும் நடடிவக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. செல்போன் மற்றும் சிம் கார்டு வாங்க மத்ததிய அரசு புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. போலியான ஆவணங்களை கொடுத்து. சேல்போன் சேவை நிறுவனங்களிலிருந்து, சிம் கார்டு பெவதை கட்டுபடுத்தும் வகையில், புதிய வழிமுறைகளை வகுத்து வெளியிட்டுள்ளது. இதன்படி, ப்ரீபெய்டு, போஸ்ட் பெய்டு செல்போன் இணைப்பு பெற தவறான தகவல்களை அளிக்கும் வாடிக்கையாளர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

டெங்கு கொசுவை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை

கடலூர்:டெங்கு கொசுவை முழுமையாக ஒழிக்க கடலூர் மாவட்ட கலெக்டர் தொலைபேசி மூலம் நூதன பிரசாரம் செய்து வருகிறார். இந்த பிரசாரம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நூதன பிரசாரம் கடலூர் மாவட்டத்தில் டெங்கு கொசுவை முற்றிலும் ஒழித்து முன்மாதிரி மாவட்டமாக மாற்ற கலெக்டர் ராஜேந்திரரத்னூ பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

அதன் முன்னோடி திட்டமாக ஒரே நாளில், ஒரே நேரத்தில் கொசு ஒழிப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள தொலைபேசிகளில் ரிசீவரை எடுத்தவுடன் மாவட்ட கலெக்டர் ராஜேந்திரரத்னூ டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு குறித்த பேச்சு ஒலிப்பரப்பாகி வருகிறது. அது பற்றி விவரம் வருமாறு:– டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு வணக்கம், நான் கடலூர் மாவட்ட கலெக்டர் ராஜேந்திரரத்னூ பேசுகிறேன்.

விஸ்வரூபம் திரைப்படம்: முதலில் எங்களுக்கு காண்பிக்கப்படவேண்டும்-தமுமுக கோரிக்கை


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜே.எஸ். ரிபாயி வெளியிடும் அறிக்கை:
பிரபல திரைப்பட நடிகர் கமல்ஹாசன் விஸ்வரூபம் என்ற படத்தை நடித்து இயக்கியிருக்கிறார். அதில் ஆப்கானிஸ்தான் போரை முன்னிலைப்படுத்தி கதை இருப்பதாகவும் அதில் முஸ்லிம்களை வன்முறையாளர்களாக சித்தரிக்கும் காட்சிகள் இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.
கடந்த பல வருடங்களாக தமிழகத்தில் சிலர் தங்களின் பிழைப்புக்காகவும், வளர்ச்சிக்காகவும் முஸ்லிம்களை மட்டுமே குற்றவாளிகளாக சித்தரித்து படம் எடுத்து வருகிறார்கள். ஈராக்கில் 6 லட்சம் மக்களை கொன்ற அமெரிக்க பயங்கரவாதம் பற்றியோ, 60 ஆண்டுகளுக்கு மேலாக பாலஸ்தீனர்கள் மீது இன அழிப்பை நடத்தி வரும் இஸ்ரேலின் பயங்கரவாதம் பற்றியோ யாருக்கும் படம் எடுக்க மனமில்லை, துணிவில்லை. இந்தியாவில் குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் அவலங்களை தோலுரிக்க தைரியமில்லை. எதிர்விளைவுகளையும், உலக அளவில் வஞ்சிக்கப்படும் சமூகத்தையும் மட்டுமே குறிவைத்து திரைப்படம் எடுப்பது இப்போது வழக்கமாகி வருகிறது.

வியாழன், 8 நவம்பர், 2012

அல்-அய்னில் இஸ்லாமிய சிறப்பு நிகழ்ச்சி


இஸ்லாமிய சிறப்பு நிகழ்ச்சி
நாள்:09.11.2012 வெள்ளிக்கிழமை
நேரம்:மகரிப் தொழுகையைத் தொடர்ந்து…
இடம்: மஜ்யத் கிளின்கோ கேம்ப் பள்ளிவாசல்
தலைமை: மௌலவி. பஷிர் அஹ்மது பைஜி
(தாயி.தமுமுக.அல்-அய்ன்)
கிராஅத்: மாணவர் A.முஹம்மது அர்ஷத்
த/பெ அ.அஸ்கர்அலி (தாவ்வா பணி நிர்வாகி)
சிறப்புரை: சகோதரர் திருச்சி. அப்துல் ரஹ்மான்
தலைப்பு : “சஹாபாக்களின் தியாகம்”
நன்றியுரை: அம்பகரத்தூர் சகோதரர்.A.ஹபீப் ரஹ்மான் (மஜ்யாத் கிளைச் செயலாளர்)
அனைவரும் வருக! அளவிலா அறிவமுதம் பருக!!
அன்புடன் அழைக்கின்றது:
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் அல்-அய்ன்

Thanks .lalpetexpress

மேட்டுப்பாளையத்தில் காவி பதற்றம்


கோவை மாவட்டம் மேட்டுப்பாலயத்தை சார்ந்த ஆனந்தன் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தாலுகா செயலாளராக இருக்கிறார். கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் அவரை சிலர் தாக்கி இருக்கின்றனர்.
இதை வழக்கம்போல சமூக மோதல்களாக சங்பரிவார் அமைப்புகள் திரித்து பதற்றத்தை உருவாக்கி இருக்கிறார்கள். தனி நபர மோதல்களை வன்முறையாக்க முயன்றுள்ளனர். சுற்று வட்டாரம் முழுக்க கடைகளை அடைத்து பொது மக்களை அச்சுறுத்தி உள்ளனர். மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்துக்குள் நுழைந்து அரசு பேருந்தை தீ வைத்து எரித்துள்ளனர். கோவை, ஊட்டி, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்ற பேருந்துகளை நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டுள்ளனர். சில இடங்களில் இந்து முன்னணியுடன் பொதுமக்கள் வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

செவ்வாய், 6 நவம்பர், 2012

வாக்காளர் பட்டியலில் திருத்தம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

கடலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ விடுத்துள்ள செய்திகுறிப்பு:
/
1-1-13ஐ தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் தொடர்பாக கடந்த 1-10-12 அன்று கடலூர் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த 1-10-12 முதல் 31-10-12 வரை சிறப்பு சுருக்க முறை பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
தற்பொழுது இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் சென்னை முதன்மை தேர்தல் அலுவலர் ஆகியோரது அறிவுரைகளின்படி எதிர்வரும் 20-11-12 வரை விண்ணப்பங்கள் பெற்றிட கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

மழைக்கால நோய் வராமல் தடுக்க வேண்டுமா? தண்ணீரை காய்ச்சி குடியுங்கள்


தமிழகத்தில் பருவமழை தொடங்கி விட்டது. இந்த சமயத்தில் பெரும்பாலும் குடிநீர் மூலம் பரவும் நோய்கள்தான் அதிகம் தாக்குகிறது. அதற்கு அடுத்து, கொசு மற்றும் பூச்சிகளால் ஏற்படும் நோய். மழைநீரும், சாக்கடை நீரும் கலந்து ஓடும் இடங்களில் நடந்து செல்லும்போதும் வைரஸ் கிருமிகள் பரவி நோய்கள் ஏற்படும்.
சுகாதாரம் இல்லாத குடிநீர் மூலம் காலரா, வாந்தி, பேதி, மஞ்சள்காமாலை ஆகிய நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இது எல்லா வயதினருக்கும் வரும். மழை நீர் தேங்கிய பகுதியில் உருவாகும் கொசுக்கள் மூலம் மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா, மூளைக்காய்ச்சல், யானைக்கால் ஆகிய நோய்கள் வரும். மூளைக்காய்ச்சல், டெங்கு நோய் குழந்தைகளை அதிகம் பாதிக்கும்.தெருவில் ஓடும் சாக்கடை நீரால் எலி காய்ச்சல் நோய் ஏற்படும்.தமிழகத்தில் சுகாதாரத்துறை நடத்திய ஆய்வின்படி, மழை காலமான அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் வழக்கத்தைவிட அதிகம் பேர் நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.

ஞாயிறு, 4 நவம்பர், 2012

‘குறி வைக்கப்படும் முஸ்லிம் சமூகம் – நீதிக்கான முழக்கம்’ – சென்னை மற்றும் மதுரையில் இன்று மாநாடு!


சென்னை: ‘குறிவைக்கப்படும் முஸ்லிம் சமூகம் – நீதிக்கான முழக்கம்’ என்ற தலைப்பில் சென்னை-மதுரை ஆகிய இரு நகரங்களிலும் இன்று  (நவ.4) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநாடுகளை நடத்துகிறது. மக்களை சந்திப்போம்! உண்மையை சொல்வோம்! என்ற முழக்கத்துடன் இம்மாநாடுகள் நடைபெறுகின்றன.
சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள விசாரணை கைதிகளை விடுதலை செய்யக் கோரியும், மக்கள் விரோத கருப்புச் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தியும், நாட்டின் அனைத்து மக்களும் அரசியல் சாசன சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை அனுபவிக்கவும், சமூகத்தில் கீழ் நிலையில் உள்ள மக்களை சக்திப்படுத்திடவும், இந்த மாநாடுகள் நடத்தப்படுகின்றன.

சனி, 3 நவம்பர், 2012

திருச்சியில் நடைபெற்று வரும் உள்ளாட்சி மன்ற உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் - படங்கள்



அநியாமாக உடைத்து நொறுக்கப்பட்ட முஸ்லிம் கடைகள்: காவி பயங்கரவாதிகள் அட்டூழியம்


ஹைதராபாத்:ஹைதராபாத்தை அடுத்த தப்பசபூத்தரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சப்ஸி மண்டி பகுதியில், நேற்று மாலை முஸ்லிம்களின் கடைகள் “தீ” வைத்து கொளுத்தப்பட்டன. கடந்த 10 தினங்களாகவே குர்பானிக்கு கொண்டு வரப்படும் மாடுகளை அபகரித்தும், சிறு சிறு சண்டை சச்சரவுகளிலும் ஈடுபட்டு வந்தனர் காவி பயங்கரவாதிகள், பக்ரீத் பெருநாள் முடிந்த பிறகும், கடந்த 28-ம் தேதி அன்று சப்ஸிமண்டி பகுதி யில் உள்ள “தர்கா”வை சேதப்படுத்திய கும்பல் மீது போலீசார் லேசான தடியடி நடத்தினர்,
இதற்கிடையில், போலீஸ் பாதுகாப்பையும் மீறி நேற்று ஒரு கும்பல், முஸ்லிம்களின் கடைகளுக்கு தீ வைத்தது.

வியாழன், 1 நவம்பர், 2012

ஹாஜிகளுக்கு IFF தன்னார்வத் தொண்டர்களின் அபார சேவை!


மக்கா:IFF என்னும் இந்தியா ஃபிராட்டர்னிட்டி ஃபோரம் வருடா வருடம் புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற வரும் ஹாஜிகளுக்கு தன்னலமற்ற தொண்டுகள் பல ஆற்றி வருகின்றது. இந்த வருடமும் அவர்களின் சேவை அபாரமாக இருந்தது. IFF தன்னார்வத் தொண்டர்கள் அரஃபாவிலும், முஸ்தலிபாவிலும், கூடார நகரமான மினாவிலும் பெரு வெள்ளமாகத் திரண்டு சென்ற ஹாஜிகளுக்கு இடைவிடாது சேவைகள் செய்தனர். இது ஹாஜிகளுக்கு மிகுந்த உதவியாகவும், நிவாரணமாகவும் இருந்தது.
குறிப்பாக கூடார நகரமான மினாவில் IFF தன்னார்வத் தொண்டர்களின் சேவை தனித்துவமிக்கதாக இருந்தது.