AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

இரண்டு ரியால் மட்டுமே வரதட்சணை பெற்று சவூதி பெண் புரட்சி..

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளில் திருமணத்தின் போது மணமகனுக்கு வரதட்சணையாகப் பெரும்தொகை தரவேண்டியிருக்கிறது. இதனால் ஏழை குமரிகள் கல்யாணச் சந்தையில் விலைபோகாமல் வரதட்சணை என்பது இந்நாடுகளில் பெரும் சமுதாயத் தீமையாக உள்ளது, 

சவுதி துபாய் பஹ்ரைன் போன்ற இஸ்லாமிய நாடுகளில் இதற்கு மாற்றமாக மணப்பெண்ணுக்கு மணமகன் தட்சணை
கொடுக்க வேண்டியுள்ளது. மணப்பெண்ணுக்குக் கொடுக்கப்படவேண்டிய இந்த தட்சணை (மணக்கொடை) அரபு மொழியில் மஹர் என்றும் குறிப்பிடப்படுகிறது,

அரபியப் பெண்கள் தங்களின் மணாளரிடமிருந்து அதிக அளவில் மணக்கொடை கோருவதால், அரபிய ஆண்கள் திருமணம் செய்துகொளதில் சிரமம் கொண்டு எகிப்து, மொரோக்கோ, போன்ற குறைவான மணக்கொடை கோரும் நாட்டுப் பெண்களையும், இந்தியா, பாகிஸ்தான், பொன்ற பெண்ணுக்கான மணக்கொடை வழக்கிலில்லாத நாட்டு மணப்பெண்களையும் திருமணம் செய்து கொள்ள நாடுகின்றனர். மேலும், திருமணத்திற்காக சவுதி அரேபிய போன்ற அரசுகள் திருமணமாகாத வாலிபர்களுக்கு கடனுதவித் திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி வருகின்றன,
இந்நிலையில், மணப்பெண்கள் வரதட்சணைத் தொகையைக் குறைத்துக் கேட்கும் வகையில் விழிப்புணர்ச்சிப் பிரசாரங்கள் நடைபெற்று வருகின்றன. சவூதி மணப்பெண் ஒருவர் தான் மணக்க விரும்பிய மணமகனிடம் வெறும் இரண்டு ரியால்கள் மட்டுமே மணக்கொடையாகப் பெற்று புரட்சி செய்துள்ளார்.

வாலிபர் ஒருவருக்கு தன் மகளை மணமுடித்து வைத்த அப்பெண்ணின் தந்தை சவூதி விமானப் படையின் ஓய்வு பெற்ற ஊழியர் ஆவார்.

செய்தியாளர்களிடம் பின்னர் பேசிய அந்தத் தந்தை அப்துல் ஹக்கீம் அப்துல் ஹத்தாத் "குறைவாக மணக்கொடை பெறுவதே நபிவழியாகும் - அப்படிச் செய்வதன் மூலமே சமூகத்தில் திருமணச்சந்தையில் நிலவும் ஏற்றத் தாழ்வைப் போக்க முடியும்; எவ்வளவு மணக்கொடை பெறுகிறோம் என்பதல்ல, எவ்விதம் வாழ்கிறோம் என்பதில் தான் வாழ்வின் வெற்றி இருக்கிறது என்று கூறினார். "பெண்கள் கோரும் மணக்கொடை ஒரு அடையாளமாகத் தான் பார்க்க வேண்டும் " என்றும் அவர் சொன்னார்.

சாதரணமாக சவூதியில் திருமணத்தின் போது மணக்கொடையாக சுமார் 30,000 ரியால்கள் வரை மணப்பெண்ணுக்கு மணம் முடிக்க விரும்பும் வாலிப வழங்கவேண்டியுள்ளது குறிக்கத் தக்கது. 

சனி, 29 செப்டம்பர், 2012

கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து 3-வது நாளாக மழை


கடலூர் மாவட்டத்தில் கடந்த 26, 27-ந் தேதிகளில் பரவலாக மழை பெய்தது. நேற்று 3-வது நாளாகவும் மழை நீடித்தது. கடலூர், நெல்லிக்குப்பம், விருத்தாசலம், சிதம்பரம், புவனகிரி உள்பட பல்வேறு பகுதிகளிலும் நேற்று மாலை சுமார் 1 மணி நேரம் மழை பெய்தது. கடலூர் பகுதியில் இரவு முழுவதும் விட்டு விட்டு மழை தூறியது. காட்டுமன்னார் கோவிலில் 2 மணி நேரம் பெய்த கன மழைக்கு கும்பகோணம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வேரோடு புளியமரம் சாய்ந்தது.
அதேபோல் விழுப்புரம் மாவட்டத்திலும் தொடர்ந்து 3-வது நாளாக நேற்று மழை பெய்தது. விழுப்புரத்தில் இரவில் 7 மணி முதல் 10 மணி வரை கனமழை நீடித்தது. உளுந்தூர்பேட்டை, திண்டிவனம், கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், செஞ்சி, திருக்கோவிலூர், மரக்காணம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. திருவெண்ணைநல்லூர், அரசுசூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று மாலை 5 மணி முதல் இரவு 11 மணிவரை விட்டு விட்டு கனமழை கொட்டியது. 3 நாட்களாக பெய்த தொடர் மழை, பலத்த காற்றால் இந்த பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 2 ஆயிரம் ஏக்கர் கம்பு பயிர் சாய்ந்து நாசமடைந்தது.

அக்.1ம் தேதி முதல் அமல் பாஸ்போர்ட் கட்டணம் ரூ.1,500 ஆக உயர்வு

திருச்சி: வரும் 1ம் தேதி முதல் பாஸ்போர்ட் கட்டணம் ரூ.1,500 ஆக உயர்த்தப்படுகிறது. தட்கல் முறையில் பாஸ்போர்ட் பெற இனி ரூ.3,500 செலுத்த வேண்டும்.

 திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலர் பாலமுருகன் கூறியதாவது:
பாஸ்போர்ட் கட்டணங்கள் கடந்த 1993வது ஆண்டு முதல்முதலாக ரூ.60ல் இருந்து ரூ.300 ஆக உயர்த்தப்பட்டது. அதன் பின்னர் 9 ஆண்டுகளுக்கு பின் ரூ.1000 ஆக உயர்த்தப்பட்டது. இது கடந்த 10 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வந்தது. 

இந்நிலையில் பாஸ்போர்ட் நடைமுறையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு, தனியார் துறையுடன் இணைந்து நாடு முழுவதும் ஏற்கனவே இருந்த 37 பாஸ்போர்ட் அலுவலகங்களுடன், 77 இடங்களில் பிஎஸ்கே எனப்படும் பாஸ்போர்ட் சேவை மையங்கள் துவங்கப்பட்டுள்ளன.

பாஸ்போர்ட் வழங்கும் முறைகளில் கணினி மயம், ஆன்லைன் விண்ணப்பங்கள், ஆன்லைனில் போலீஸ் பரிசீலனை மற்றும் சான்று வழங்குதல், பாஸ்போர்ட் விரைவுத் தபால் மூலம் டெலிவரி என பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு பாஸ்போர்ட் வழங்கும் முறைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இவற்றுக்கான செலவினங்களை கருத்தில் கொண்டு, பாஸ்போர்ட் கட்டணத்தை ரூ.500 கூடுதலாக்கி புதிய கட்டணமாக ரூ.1,500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மைனர் பாஸ்போர்ட்டுகளுக்கு ரூ.600 லிருந்து ரூ.1000மாகவும், இதர சேவைகள் அனைத்துக்கும் ஏற்கனவே உள்ள கட்டணங்களை விட ரூ.500 அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் தட்கல் பாஸ்போர்ட் கட்டணம் ரூ.1,000த்துடன் ரூ.1500 சேர்த்து மொத்தம் ரூ.2,500 ஆக ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது தட்கல் பாஸ்போர்ட்டுக்கு புதிய கட்டணமாக ரூ.3,500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கான பாஸ்போர்ட் கட்டணங்களும் அமெரிக்க டாலரில் 40 லிருந்து 75 ஆகவும் ஐரோப்பிய யூரோவில் 48லிருந்து 60 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறை அக்டோபர் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும்..

வெள்ளி, 28 செப்டம்பர், 2012

முஸ்லிம்களை இழிவுபடுத்தும் வகையில் திரைப்படம் தயாரித்த நபர் கைது..



முஸ்லிம்களை இழிவுபடுத்தும் வகையில் திரைப்படம் தயாரித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முகமது நபியை கேவலமாக சித்தரித்து அமெரிக்காவில் வெளியான Innocence of Muslim திரைப்படத்திற்கு உலகம் முழுவதும் பெரும் எதிர்ப்பு எழுந்தது.
இந்நிலையில் திரைப்படத்தை தயாரித்த நகௌலா பஸ்ஸெல்லி நகௌலா(வயது 55) என்பவர் அமெரிக்க பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நபருக்கு பிணை வழங்க, நீதிபதி மறுப்பு தெரிவித்துள்ளார்.
நகௌலாவுக்கு உலக அளவில் பெரும் எதிர்ப்பு கிளம்பி உள்ளதால், பிணை வழங்க முடியாதென நீதிபதி தெரிவித்துள்ளதுடன், அவரை சிறையில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

கூடங்குளம்:செலவழித்த தொகை அல்ல! மக்களின் பாதுகாப்பே முக்கியம் – உச்சநீதிமன்றம்!


புதுடெல்லி:கூடங்குளம் மக்களின் பாதுகாப்புதான் முக்கியம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பில் வீழ்ச்சி ஏற்பட்டால் அணுமின்நிலையத்தின் பணிகளை நிறுத்தவேண்டிய சூழல் ஏற்படும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்யா நாட்டு உதவியுடன் ரூ.13 ஆயிரத்து 615 கோடி செலவில் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையத்தில் மின் உற்பத்தியை தொடங்க அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். கடந்த ஒரு ஆண்டாக இந்த போராட்டம் நடக்கிறது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தியை தொடங்கக் கூடாது என்று கூடங்குளம் போராட்டக்குழு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வேறு சிலரும் வழக்குகள் தொடர்ந்தனர். சென்னையைச் சேர்ந்த என்ஜினீயர் சுந்தராஜன் தொடர்ந்த வழக்கு மீதான விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நடந்து வந்தது.
கடந்த மாதம் 31-ந்தேதி கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட சென்னை ஐகோர்ட்டு அனுமதி வழங்கி உத்தரவிட்டது. கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்த நிலையில் கடந்த 9-ந்தேதி போராட்டக்காரர்கள் கூடங்குளம் அணுமின் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் போலீசார் தடியடியில் முடிந்தது. இதற்கு கண்டனம் தெரிவித்து நடந்த போராட்டத்தின்போது துப்பாக்கி சூட்டில் மீனவர் ஒருவர் உயிரிழந்தார்.
அணுஉலையில் எரிபொருள் நிரப்ப ஐகோர்ட்டு கொடுத்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோட்டில் மேல்முறையீடு செய்வோம் என்று போராட்ட ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் ஏற்கெனவே வழக்கு தொடர்ந்த என்ஜீனியர் சுந்தர்ராஜன், டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவில் மாசு கட்டுப்பாடு வாரியம் தடையில்லா சான்றிதழ் வழங்கியதில் குறைபாடு உள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பாக பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் வாதாடினார். அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்களும் வாதம் செய்தனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள்,  “எவ்வளவு பணம் செலவழிக்கப்பட்டது என்பதல்ல. சுற்றுவட்டார மக்களின் பாதுகாப்புதான் முக்கியம். மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் சமரசம் கிடையாது. தேவைப்பட்டால் கூடங்குளம் அணுமின் நிலையத்தை நிறுத்தி வைப்போம்.” என்று தெரிவித்தனர்.
கூடங்குளம் அணுஉலைக்கு தமிழ்நாடு மாசு கட்டுபாடு வாரியம் தடையில்லா சான்றிதழ் வழங்கியது குறித்து ஒரு வாரத்திற்குள் சுப்பரீம் கோர்ட்டுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டுள்ளனர். இந்த வழக்கு விசாரணை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 25 செப்டம்பர், 2012

இறைத்தூதருக்கு அவமதிப்பு: ஈரானில் ஜி மெயிலுக்கு தடை!


டெஹ்ரான்:இறைத்தூதரை அவமதிக்கும் அமெரிக்க திரைப்படத்தை கண்டித்து மின்னஞ்சல் சேவை இணையதளமான ஜிமெயிலுக்கு ஈரான் தடை விதித்துள்ளது. ஈரான் செய்தி நிறுவனமான மெஹர் இச்செய்தியை வெளியிட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை முதல் ஈரானில் ஜிமெயில் முடக்கப்பட்டது.
கூகிளின் வீடியோ பகிர்வு இணையதளமான யூ ட்யூப் இஸ்லாத்தின் இறுதித் தூதரும், முஸ்லிம்களின் உயிரினும் மேலான முஹம்மது நபி(ஸல்)அவர்களை இழிவுப்படுத்தும் அமெரிக்க திரைப்படத்தின் காட்சிகளை வெளியிட்டது. யூ ட்யூபிற்கு ஏற்கனவே ஈரான் தடைவிதித்துள்ளது.
இந்நிலையில், ஆஸ்கர் விருது அமைப்பாளர்கள் இத்திரைப்படத்தை கண்டிக்காவிட்டால் ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியை புறக்கணிக்கப் போவதாக ஈரான் அறிவித்துள்ளது. மிகச்சிறந்த வெளிநாட்டு திரைப்படப் பிரிவில் ஈரானின் ரிஸா மிர்கராமியின் வன் பீஸ் ஆஃப் க்யூப் ஷுகர் என்ற திரைப்படம் பரிந்துரைச் செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே க்ரீஸ் நாட்டில் இறைத்தூதரை அவமதிக்கும் திரைப்படத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய 40 பேரை போலீஸ் கைது செய்துள்ளது. ஏதன்ஸில் போராட்டத்தின் போது போலீசாருடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து கைது நடந்துள்ளது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் சட்டப்பேரவை இத்திரைப்படத்தை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இஸ்லாம் மற்றும் இறைத்தூதருக்கு எதிரான அவமதிப்புகளை கட்டுப்படுத்த அமெரிக்கா தயாராகவேண்டும் என்று அத்தீர்மானத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையிலும் இறைத்தூதரை அவமதிக்கும் திரைப்படத்திற்கு எதிராக போராட்டங்கள் நடந்தேறின.

திங்கள், 24 செப்டம்பர், 2012

நார்வே அமைச்சராக முஸ்லிம் பெண் நியமனம்!


ஓஸ்லோ:நார்வே நாட்டின் கலாச்சாரத்துறை அமைச்சராக முஸ்லிம் பெண்மணியொருவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்கேண்டநேவியன் நாடுகளின் (சுவீடன், நார்வே, டென்மார்க், ஐஸ்லாந்து, பின்லாந்து மற்றும் பல தீவுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய பிரதேசம்) வரலாற்றிலேயே முதன் முதலாக ஒரு முஸ்லிம் பெண் அமைச்சராக தேர்வுச் செய்யப்படுவது இதுவே முதன் முறையாகும்.
இதுக்குறித்து நார்வே பிரதமர் ஜென்ஸ் ஸ்டால்டன்பெர்க் செய்தியாளர்களிடம் கூறுகையில், “புதிய சக்தி, புதிய விழுமியங்கள், புதிய சிந்தனைகளை உருவாக்கும் களமாக நாங்கள் ஏற்படுத்திய இந்த மாற்றம் அமையும். இது புதுப்பித்தல் மற்றும் தொடர்ச்சியின் ஒரு கலவையாகும்.” என்று தெரிவித்தார்.
ஏற்கனவே கலாச்சாரத்துறை அமைச்சராக பதவி வகித்த Anniken Huitfeldt தொழிலாளர்கள் மற்றும் சமூக விவகாரத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
புதிய முஸ்லிம் பெண் அமைச்சரான ஹாதியா தாஜிக்கிற்கு 29 வயதாகிறது. இவர் பாகிஸ்தான் வம்சாவழியைச் சார்ந்தவர். இவர் லேபர் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆவார். தாஜிக் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 2009 வரை நீதித்துறை அமைச்சர் க்னட் ஸ்டோர்பெர்கெட்டின் அரசியல் ஆலோசகராக பணியாற்றியவர். அவ்வேளையில் பெண்கள் போலீஸ் பணியில் ஈடுபடும்பொழுது ஹிஜாப் அணிய அனுமதி வழங்க காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சராக தேர்வுச் செய்யப்பட்டுள்ள ஹாதியா தாஜிக் கூறுகையில், “வருங்காலத்தில் கலாச்சார பன்முகத் தன்மையே தனது அமைச்சக திட்டத்தின் முதன்மையாக இடம்பெறும்” என்று தெரிவித்தார்.
நார்வேயில் 1,50,000 முஸ்லிம்கள் வாழ்கின்றார்கள். அந்நாட்டின் மொத்த மக்கள் தொகை 45 லட்சம் ஆகும். முஸ்லிம்களில் பெரும்பாலோர் பாகிஸ்தான், சோமாலியா, ஈராக் மற்றும் மொரோக்கோ நாடுகளின் பின்னணியைக் கொண்டவர்கள் ஆவர். நார்வேயில் 90 முஸ்லிம் அமைப்புகள் மற்றும் மையங்கள் இயங்குகின்றன.

ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி படமெடுத்த அமெரிக்கர் தலைக்கு 1 லட்சம் டாலர்: பாக். அமைச்சர்


இஸ்லாமாபாத்: நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் விதமாக படத்தை வெளியிட்ட அமெரிக்கரை கொலை செய்வோருக்கு 1 லட்சம் அமெரிக்க டாலர் பரிசு வழங்கப்படும் என்று பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் குலாம் அகமது பிலோர் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம் உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு நாடுகளில் அமெரிக்க தூதரகங்கள் தாக்குதலுக்குள்ளாகின. பாகிஸ்தானிலும் பல்வேறு நகரங்களில்தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. பாகிஸ்தானில் நடைபெற்ற போராட்டங்கள் வன்முறைகளாக வெடித்ததில் மொத்தம் 23 பேர் பலியாகி உள்ளனர்.
இந்த நிலையில் பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் குலாம் அகமது பிலோர், நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி படம் எடுத்த அமெரிக்கரை கொலை செய்தால் 1 லட்சம் அமெரிக்க டாலர் வழங்கப் போவதாக அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக குலாம் அகமது பிலோர் கூறுகையில். நபிகள் நாயகத்தை இழிவு படுத்தி படம் தயாரித்து வெளியிட்ட அமெரிக்கரை கொல்பவருக்கு 1 லட்சம் அமெரிக்க டாலர் பரிசு தொகை வழங்கப்படும். பொது மக்கள் தவிர பாகிஸ்தானில் தடை செய்யப்பட்டுள்ள தலிபான் மற்றும் அல்- கொய்தா தீவிரவாதிகள் அவரை கொலை செய்தால் கூட அவர்களுக்கும் இந்த பரிசு தொகை பொருந்தும். , ஒருவரை கொலை செய்யும்படி பொது மக்களை தூண்டி விடுவது கிரிமினல் குற்றம்தான். எந்த நீதிமன்றத்திலும் என் மீது வழக்குத் தொடர்ந்தாலும் கவலை கிடையாது என்றார்.

மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் இரயில் மறியல்!


சென்னை டீசல் விலை உயர்வு, சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு அனுமதி ஆகியவற்றைக் கண்டித்தும், அதனை திரும்பப் பெறக்கோரியும், மேலும் கூடங்குளம் அணுஉலையில் எரி பொருள் நிரப்பும் பணியை நிறுத்தக் கோரியும் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் தமிழகம் முழுவதும்  நேற்று இரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.  திருநெல்வேலியில் நடந்த போராட்டத்திற்கு அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நெல்லை முபாரக் தலைமை தாங்கினார்.
இதுகுறித்து நெல்லை முபாரக் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்;
“அண்மையில் மத்திய அரசு டீசல் விலை ரூபாய் 5  உயர்த்தியுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே  மத்திய அரசு டீசல் விலை உயர்வை  திரும்ப பெற வேண்டும்.  அதே போன்று சில்லறை வர்த்தகத்தில் 51 % அந்நிய முதலீட்டிற்கு அனுமதி அளித்திருப்பது தேச நலனுக்கு விரோதமானது. மத்திய அரசு இந்த தேச விரோத செயலை கைவிட வேண்டும். கூடங்குளம் அணு உலையில் யுரேனியம் நிரப்பப்படுவதை  நிறுத்த வேண்டும்.

போராட்டக்காரர்களின் மீதான அடக்குமுறைகளை மத்திய, மாநில அரசுகள்  நிறுத்திக்கொள்ள வேண்டும். கூடங்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்கள் மீதான 144 தடை உத்தரவு திரும்பப்பெறப்பட வேண்டும்.  போராட்ட குழுவினருடன் மத்திய மாநில அரசுகள் எந்தவித நிபந்தனையும் இன்றி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
இந்த மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களின் தலைநகரங்களில் ரயில் மறியல் போராட்டம் இன்று நடைபெறுகிறது. மத்திய அரசு தனது இந்த முடிவுகளை  திரும்ப பெறாவிட்டால் மக்களை திரட்டி மிகப் பெரிய போராட்டத்தை எஸ்.டி.பி.ஐ கட்சி நடத்தும்.” என்று அவர் தெரிவித்தார்.
மத்திய அரசை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நடைபெற்ற இந்த ரயில் மறியல் போராட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.

அமெரிக்க திரைப்படத்​தை எதிர்த்து கடலூரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆர்ப்பாட்ட​ம்




இஸ்லாத்தை இழிவுப் படுத்தி அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படத்தை தடை செய்யக் கோரி கடலூரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் 22 -09 -12 சனிக்கிழமை காலை 10 மணியளவில்  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது கடலூர் மாவட்ட தலைவர் கே.ஏ.அமானுல்லாஹ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் ஏ.சுக்கூர் முன்னிலை வகித்தார்
மாநில துணைத்தலைவர்  மௌலான தளபதி.ஏ.ஷபிகுர் ரஹ்மான் ,மாநில செயலாளர் ஏ.எம்.ஷாஜஹான் ,அமீரக காயிதேமில்லத் பேரவை செயலாளர் ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் , முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.வி,அப்துல் நாசர் ,தலைமை நிலைய பேச்சாளர் ரஷித் ஜான் ,சிதம்பரம் தாஜுத்தீன்,கடலூர் நகர தலைவர் ஜாபார் ,செயலாளர் இஸ்மாயில் ஆகியோர் கண்டன  உரையாற்றினர் மாவட்டத்தின் அனைத்து ஊர்களிலிருந்தும் ஏராளமானோர் கலந்துகொண்டனர்...

சனி, 22 செப்டம்பர், 2012

மனித உடலில் அல்சர் நோய் (குடற்புண்) பற்றிய தகவல்:-



அல்சர் என்றால் என்ன....????
நம் வயிற்றுக்குள்ளே, வயிற்றைப் பாதுகாக்க வழவழப்பான திரை அமைப்பு இருக்கிறது. ஜீரண நீர் சுரந்து, உணவோடு சேர்ந்து செரிமானமாகும். சாப்பாட்டில் காரமோ, புளிப்போ, உப்போ அதிகமானால், அது அந்தத்திரை அமைப்பை சீண்டிப் பார்க்கும். லேசாக கிழிந்தால் கூட, நேரடியாக வயிறு அல்லது குடலுக்குத்தான் பாதிப்பு. இதன் காரணமாக அடி வயிற்றில் வலி, புளித்த ஏப்பம், நெஞ்செரிச்சல், சாப்பிட்டது செரிக்காமல் அப்படியே தொண்டையில் உணவு நிற்பது போன்ற ஒரு உணர்வு...... இதெல்லாம் இருக்கும்.... இது தான் அல்சர்....


அல்சர் வர கரணங்கள்:-
முதல் காரணம் நேரங்கெட்ட நேரத்தில் சாப்பிடுவது, காலை உணவை தவிர்ப்பது, மதிய சாப்பாட்டை தள்ளிப் போடுவது, அடிக்கடி காபி, டீயை குடிப்பது...
சாதாரண தலைவலி, காய்ச்சல் என்றதும் உடனே மாத்திரை போடும் பழக்கம் பலருக்கு உண்டு. இப்படி தானாவே எந்தப் பிரச்சினைக்கும் அடிக்கடி மாத்திரை சாப்பிடுபவர்களுக்கும் கட்டாயம் அல்சர் வரும்.
சக்தி வாய்ந்த ஆன்ட்டிபயாடிக்ஸ் மாத்திரைகள் சாப்பிடுவதும் ஒரு காரணம். ஏதோ சுகமின்மைக்காக மருத்துவரை பார்க்கிறோம். மருத்துவர் "ஆன்ட்டிபயாடிக்" எழுதிக் கொடுப்பார். ஆன்ட்டிபயாடிக் கொடுக்கும் போது, பிகாம்ப்ளக்ஸூம், லேக்டோ பேசிலஸூம் கலந்த மாத்திரையும் அவசியம் கொடுக்க வேண்டும். இதை சில மருத்துவர்கள் செய்வதில்லை. மருத்துவர்கள் எழுதிக் கொடுத்தாலும், 'சத்து மாத்திரை வேணாம்'னு சொல்லி ஆன்ட்டிபயாடிக் மட்டும் வாங்கி சாப்பிடுபவர்களும் இருக்கின்றார்கள். சில வகை மருந்துகளை சாப்பிடும் போது, வயிறு வலி, நெஞ்சு எரிச்சல் வருவதை உங்களில் பலர் உணர்ந்திருப்பீர்கள்..... காரணம் இது தான்....

அதிக காபி, டீ, ஃபாஸ்ட்ஃபுட் அயிட்டங்கள், சிகரெட், கோலா கலந்த பானங்கள், ஊறுகாய், காரமான உணவுகள்... இவைகள் அனைத்தும் அல்சர் வருவதற்கு முக்கியமான காரணிகள்....

மூட்டுவலி போன்ற சில பிரச்சினைகளுக்காக காலங்காலமாக சிலர் மருந்து சாப்பிடுவார்கள். மாத்திரைகள் கொஞ்சம் ஸ்ட்ராங்கா இருக்கலாம். அதற்கேற்றபடி சாப்பாடு இருக்க வேண்டும். இல்லையெனில் அதுவும் அல்சரை ஏற்படுத்தலாம். அபூர்வமாக சிலருக்கு பரம்பரையாகவும் அல்சர் பாதிக்கலாம். அடிக்கடி உணர்ச்சிவசப்படுபவர்களுக்கும் அல்சர் இருக்கும்.

எடை குறைவது, ரத்த சோகை, வாந்தி... இதெல்லாம் கூட அல்சரின் அறிகுறிகளாக இருக்கலாம். எந்த அறிகுறியும் தினசரி தொடர்ந்தால் உடனே மருத்துவரை பார்க்க வேண்டும்.



அல்சரை முழுமையாக குணப்படுத்திடலாம். வந்ததை போக்க சிகிச்சைகள் உண்டு. வராமல் இருக்க...? சரியான நேரத்துக்கு சாப்பாடு... சரிவிகித சாப்பாடு இரண்டும் முக்கியம். கோபத்தை குறைத்து கொள்ள வேண்டும்.....



அல்சர் வந்தவர்களுக்கு சில உபயோகமான விஷயங்கள்.....
நார்ச்சத்து உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். குழைய வேக வச்ச அரிசி சாதம், அவல், பொரி கஞ்சி மாதிரி செய்து சாப்பிடலாம். கீரை, காய்கறிகளைக் கூட நன்றாக வேக வைத்து, மசித்து சாப்பிட வேண்டும். பாலுக்கு பதில் மோர் அதிகம் சேர்த்து கொள்ளலாம். ஸ்ட்ராங்கான காபி, டீ வேண்டாம். இனிப்புகள், அதிகமாக தாளித்த, பொறித்த உணவுகள், பாதி பழுத்தும் பழுக்காத பழங்கள், பச்சை காய்கறிகள் (வெங்காயம், வெள்ளரி உள்பட), இஞ்சி, கரம் மசாலா, காரமான "கிரேவி" இதெல்லாம் அறவே தவிர்க்க வேண்டும்.

மூன்று வேளையும் அதிகமாக சாப்பிடாமல், கொஞ்சம் கொஞ்சமாக அடிக்கடி சாப்பிடலாம். எதையும் நன்கு "மென்று" பொறுமையாக சாப்பிட வேண்டும்.



நீரிழிவு வந்தவங்களுக்கு சொல்வது போலத்தான் அல்சர் வந்தவங்களுக்கும்...


"விருந்தும் கூடாது... விரதமும் கூடாது".

துபாயில் வேலை செய்வதற்கு புதிய விசா கட்டுப்பாடுகள்

மனாமா: இந்தியா, இலங்கை, பிலிப்பைன்ஸ், வங்கதேசம் உள்பட பல நாடுகளில் இருந்து வேலை தேடி துபாய் செல்கின்றனர். அவர்களில் பலர் சுற்றுலா விசாவிலும், கருத்தரங்கு, மாநாட்டில் பங்கேற்கும் விசாக்களிலும் வருகின்றனர். அப்படி வரும் பலர் ஆட்களையும் கடத்தி வருகின்றனர். அவர்களில் பலர் நாடு திரும்பாமல், துபாயிலேயே சட்டவிரோதமாக தங்கி விடுகின்றனர். அங்கு வேலை தேடி அலைகின்றனர். வேலை கிடைக்காமல் பலர் மசூதி, ஷாப்பிங் மால்கள், மருத்துவமனை அருகில் பிச்சை எடுக்கின்றனர். பிழைப்பதற்கு வழி இல்லாததால் பலர் கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதால், விசா நடைமுறைகளை கடுமையாக்க துபாய் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் வேலைக்காக என்ற போர்வையில் சட்டவிரோதமாக துபாய்க்குள் பலர் நுழைவதை தடுக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக சில நாட்டு தொழிலாளர்களுக்கு விசா வழங்க தடை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் எலக்ட்ரீஷியன், பைப் பிட்டர்கள், விவசாயிகள், டிரைவர்கள், டெய்லர்கள், தூய்மை பணி போன்ற வேலைக்கான தொழிலாளர்களுக்கு விசா தடை செய்யப்பட உள்ளது.

வெள்ளி, 21 செப்டம்பர், 2012

சென்னை தவிர 31 மாவட்டங்களில் தினசரி 14 மணி நேரம் மின்வெட்டு


தமிழகத்தில்  சென்னையை தவிர 31 மாவட் டங்களில் மின்வெட்டு இயல்பு வாழ்க்கையை முடக்கியுள்ளது.  தொழில்சாலைகளுக்கு மின் விடுமுறை அளிக்கும் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தும் நிலை உருவாகி உள்ளது. மாநிலத்தில் நாள்தோறும் சுமார் 13 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படும் நிலையில் காற்றாலை மின் உற்பத்தியை தவிர்த்து சராசரியாக பாதி அளவே மின்சாரம் உற்பத்தியாகிறது. 3 மாதங்களாக காற்றாலைகள் மூலம் 2,500 மெகாவாட் மின்சாரம் கிடைத்து வந்தது.
 
தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் 12 மணி நேரம் அறிவிக்கப்படாத மின்வெட்டு அதிரடியாக அமல் படுத்தப்பட்டது. நேற்று அதிகாலை 6 மணி நிலவரப்படி நெல்லை மண்டலத்தில் 300 மெகாவாட் மற்றும் ஈரோடு மண்டலத்தில் 200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியானது. இதனால் 2 மணி நேரம் மின் விநியோகமும் அடுத்த 2 மணி நேரம் மின் தடையும் என மாறி மாறி அளித்து சமாளிக்க முடிவு செய்தனர்.

ஆனால் அதற்கு பிறகு காற்றாலைகள் சுழல்வது அடியோடு நின்றது. நேற்று பகல் முழுவதும் பெரும்பாலான காற்றாலைகள் முடங்கியதால் காற்றாலை மின் உற்பத்தி பூஜ்யம் நிலைக்கு சென் றது. இதனால் செய்வதறியாது திகைத்த மின் வாரியத்தினர் அறிவிக்கப்படாத மின்தடையை முழுமையாக அமல்படுத்தினர். காலை முதல் இரவு வரை மின்சார சப்ளை இல்லாததால் தொழில் கூடங்களில் மட்டும் அல்லாமல் வீடுகளிலும் எந்த வித பணிகளையும் செய்ய முடியாமல் இயல்பு வாழ்க்கையை முடங்கியது.

இரவு முழுவதும் 1 மணி நேரம் மின் தடையும், 1 மணி நேரம் மின் சப்ளையும் நடைபெற்றது. இதனால் குழந்தைகள், முதியவர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பினரையும் தூங்கவிடாமல் செய்த மின் தடை பகலிலும் கொளுத்தும் வெயிலில் புழுக்கத்தில் தவிக்க வைத்தது. குமரி மாவட்டத்தில் இரவில் தூக்கமில்லை: குமரி மாவட்டத்தில் 8 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை மின்வெட்டு அமலில் உள்ளது.

காலை 5 மணிக்கு தொடங்கி, 2, 3 மணி நேரத்துக்கு ஒருமுறை குறைந்தபட்சம் 3 மணி  நேரம் முதல் 5 மணி நேரம் வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. காலை 9 மணிக்கு சென்றால், 5 மணி நேரம் கழித்து பகல் 2 மணிக்கு தான் மின்சாரம் வருகிறது. பின்னர் மாலை 4 மணிக்கு கட் செய்யப்பட்டு, இரவு 7 மணிக்கு வருகிறது. மாவட்டம் முழுவதும் சுழற்சி முறையில் மின்வாரியம் இதை அமல்படுத்தி வருகிறது. இது தவிர 10 நாட்களுக்கு ஒரு முறை பராமரிப்பு என கூறி காலை முதல் இரவு வரை மின்சாரத்தை நிறுத்தி விடுகிறார்கள். இந்த மின் வெட்டு காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி இருக்கிறது.

மதுரை உள்பட 6 மாவட்டங்கள், தொழிற்சாலைகள் கடும் பாதிப்பு: மதுரை, தேனி மாவட்டங்களில் 3 நாளாக 12 மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு நிலவுகிறது. இதனால் தொழிற்சாலைகளுக்கு விடுப்பு அறிவிக்கப்பட்டன. விருதுநகர் மாவட்டத்தில் 13 மணி நேரம் மின்வெட்டு நிலவுகிறது. இதனால் எண்ணெய், பருப்பு, பஞ்சாலை மில்கள், சிவகாசியில் பிரிண்டிங் தொழிலும், அருப்புக்கோட்டை, திருவில்லிபுத்தூர், ராஜபாளையம் பகுதியில் நூற்பாலைகளும், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்டங்களில் 14 மணி நேரத்திற்கு மேலாக மின்வெட்டு ஏற்படுகிறது. இங்கு 150க்கும் மேற்பட்ட டெக்ஸ்டைல் நிறுவனங்க ளில் உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் கடலோரங்களில் உள்ள ஐஸ் தொழிற்சாலைகளில் உற்பத்தி முடங்கியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் மின்தடையால் காவிரி கூட்டுகுடிநீர் திட்டத்தில் இருந்து பம்பிங் செய்ய இயலவில்லை. இதனால் குடிநீர் சப்ளை மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில்...

வேலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக மின்வெட்டு நேரம் 10 மணி நேரமாக அதிகரித்துள்ளது. பகல் நேரங்களில் 3 மணி நேரம் வீதம் 2 முறை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இரவு நேரங்களில் 4 மணி நேரத்தை ஒரு மணி நேரம் வீதம் மின்வெட்டு அமல் படுத்தப்படுகிறது. கோவை: கோவை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக 12 மணி நேரம் முதல் 14 மணி நேரம் வரை மின்வெட்டு ஏற்படுகிறது. இதே நிலை நீடித்தால் அடுத்த சில வாரங்களில் தொழிற்சாலைகள் மொத்தமாக முடங்கி விடும்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மின்வெட்டு நேரம் 7 மணி முதல் 10 மணி நேரமாக அதிகரித்துள்ளன. காலை நேரத்தில் தொடர்ச்சியாக 3 மணி நேரமும், பிற்பகலில் 3 மணி நேரமும் மின்வெட்டு உள்ளது. இரவு நேரத்தில் ஒரு மணி நேரம் என்ற அளவில் இரண்டு அல்லது 3 முறை மின்வெட்டு ஏற்படுகிறது.

கடலூர், விழுப்புரத்தில்...
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் 12 மணி நேர மும்முனை மின்சார வினியோகம் திடீரென நிறுத்தப்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் முதல் திடீரென மும்முனை மின்சார வினியோகத்தை 3 மணி நேரமாக குறைத்து வழங்க தமிழக அரசு மின்சார வாரியத்துக்கு உத்தரவிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சம்பா சாகுபடி விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் நகரம், பேரூராட்சி பகுதிகளில் கிராமங்களில் பகலில் தலா 3 மணி நேரம் என 6 மணி நேரம், இரவில் தலா 1 மணி நேரம் என 6 மணி நேரம் என்று மொத்தம் 12 மணி நேரம் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

சேலம் மாவட்டத்தில் 14 மணி நேரம் மின்வெட்டு அதிகரிக்கப்பட்டுள்ளது. காலையில் 3 மணி நேரமும், பின்னர் மதியம் 3 மணி நேரமும், அதன்பின் மாலையில் 2 மணி நேரமும் என பகலில் மட்டும் 8 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இரவு 7 மணிக்கு பின் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை என 6 மணி நேரம் மின்வெட்டு ஏற்படுகிறது. இந்த மின்வெட்டால் பல்வேறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டத்தில். இரவு நேரங்களில் 2 மணி நேரத்திற்கு ஒரு முறை 1 மணி நேரம் மின்வெட்டு செய்யப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 8 மணி நேரம் வரை மின்சப்ளை துண்டிக்கப்படுகிறது.

இந்த அளவுக்கு ஏன்?

றீ தமிழகத்தில் நீர் மின் திட்டம், காற்றாலை, அனல் மின் நிலையங்கள் மூலம் மொத்தம் 12,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. றீ தற்போது 4,500 மெகாவாட் மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், தினமும் 10 முதல் 12 மணி நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் குந்தா, பைக்காரா, அப்பர் பவானி பகுதிகளில் நீர்மின் திட்டங்கள் மூலமாக 2,223 மெகாவாட்டும்,

திருநெல்வேலி, பல்லடம், பொங்கலூர் பகுதிகளை சேர்ந்த காற்றாலை மூலம் 4 ஆயிரம் மெகாவாட்டும், நெய்வேலி, மேட்டூர், எண்ணூர், வடசென்னை ஆகிய அனல் மின் நிலையகளில் இருந்து சுமார் 5 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்பட வேண்டும்.  ஆனால், தற்போதைய வறட்சியால் நீர் மின் நிலையங்கள் மூலம் மொத்தம் உற்பத்தி ஆக வேண்டிய 2223 மெகாவாட்டில் வெறும் 450 மெகாவாட்டும், காற்றாலை மூலம் உற்பத்தி ஆக வேண்டிய 4 ஆயிரம் மெகாவாட்டில் வெறும் 150 மெகாவாட் மட்டுமே மின் உற்பத்தியாகிறது.

அனல் மின் திட்டங்களை பொருத்தவரை எண்ணூர் அனல் மின் திட்டத்தில் 450 மெகாவாட்டுக்கு பதிலாக 100 மெகாவாட்டும், நெய்வேலியில் 2,085 மெகாவாட் மட்டுமே மின் உற்பத்தி ஆகிறது. நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் கணிசமான அளவு மத்திய மின்தொகுப்புக்கு அனுப்பப்படுகிறது. மேலும் வழுதூர், கோபால்கலப்பால், குற்றாலம் ஆகிய பகுதிகளில் காசிப்பயர் மூலமாக 150 மெகாவாட்டும்,

மத்திய மின் தொகுப்பிலிருந்து 3 ஆயிரம் மெகாவாட் என மொத்தமே 8,635 மெகாவாட் மட்டுமே மின் உற்பத்தியாகிறது. ஏறத்தாழ 4,500 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறை உள்ளதால் தொடர்ந்து மின்விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே தினமும் 10 முதல் 12 மணி நேரம் மின்வெட்டு ஏற்படுகிறது. வழக்கமாக மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தென்மேற்கு பருவமழையின்போது காற்றாலை மூலம் மின் உற்பத்தி அதிகமாக இருக்கும். தற்போது வெறும் 150 மெகாவாட் மட்டுமே காற்றாலை மூலம் உற்பத்தியாகிறது. இதுவே தற்போதைய மின்தட்டுபாட்டுக்கு காரணம். இவ்வாறு மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரிசி ஆலைகள், விவசாய பணிகள் முற்றிலும் பாதிப்பு

திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை கடந்த சில நாட்களாக 10 முதல் 12 மணி நேரம் வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதன் காரணமாக நவீன அரிசி ஆலைகளில் பெருமளவில் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நாள் ஒன்றுக்கு ரூ.2 கோடி இழப்பு ஏற்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களான திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கடந்த ஒரு வாரகாலத்திற்கும் மேலாக 10 மணிநேரம் மின்வெட்டு செய்யப்படுவதால் விவசாயப்பணிகள் முற்றிலும் முடங்கியுள்ளது. கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை முக்கியத் தொழிலான ஜவுளித்தொழில் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

புதன், 19 செப்டம்பர், 2012

A.M.ஷாகுல் ஹமீது-பாரிஸ்பர்வீன் திருமணம்

பாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர்{அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும் மேலும் உங்கள் மீது அபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்றிணைத்து வைக்கட்டும்}  வாழ்த்துக்களுடன்.. கொள்ளுமேடுடைம்ஸ் இணையதளம்  

சனி, 15 செப்டம்பர், 2012

முஸ்லிம் உலகம் கொதிக்கிறது (படங்கள் இணைப்பு)


Add caption





























எவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நோவினை செய்கிறார்களோ, அவர்களை நிச்சயமாக அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் சபிக்கின்றான்; மேலும், அவர்களுக்கு இழிவுதரும் வேதனையைச் சித்தப்படுத்தி இருக்கின்றான். (qur'an 33-57)