AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

ஞாயிறு, 29 ஜூலை, 2012

ஜூடோ வீராங்கனை பர்தா அணிய அனுமதி மறுத்தால் ஒலிம்பிக்கை புறக்கணிப்போம் சவுதி அரேபியா மிரட்டல்


லண்டன் ஒலிம்பிக் போட்டியில் சவுதி அரேபியா வீரர்-வீராங்கனைகள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்கிறார்கள். இதில் மகளிர் ஜூடோ போட்டி யில் மோதும் சவுதி வீராங்கனைகள் முஸ்லிம் மத வழக்கப்படி பர்தா அணிய அனுமதிக்க வேண்டும் என்று சவுதி அரேபியா கோரிக்கை விடுத்துள்ளது. 

இதையடுத்து லண்டனில் நேற்று முன்தினம் சர்வதேச ஜூடோ பெடரேஷன் ஆலோசனை கூட்டம் தலைவர் மரியஸ் வியெர் தலைமையில் நடந்தது. அதில் பர்தா அணிவதால் ஏற்படும் சாதக பாதகங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. 

ஜூடோ வீராங்கனை தனது தலையில் முககவசம் போல் உடை அணிந்து மோதுவது கடினம். மேலும் அது பாதுகாப்பானதும் அல்ல, ஜூடோ போட்டி முறைக்கு எதிரானது என்று கருத்து தெரிவிக்கப்பட்டது. ஜூடோ போட்டியில் வீராங்கனைகள் மோதிக் கொள்ளும் போது தலையை மறைக்கும் விதமாக பர்தா அணிந்து இருந்தால் ஆபத்து விளைவிக்கும் என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டது. 

ஆனால் சவுதி ஆரேபியா பிரதிநிதி கூறுகையில்:

எங்கள் நாட்டு வழக்கப்படி தலையில் பர்தா அணிய அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆசிய ஜூடோ பெடரேசன் அமைப்பானது முஸ்லிம் பெண்கள் தலையில் பர்தா அணிய அனுமதித்துள்ளது. எனவே சர்வதேச ஜூடோ பெடரேசனும் அனுமதிக்க வேண்டும். அனுமதி மறுத்தால் ஒலிம்பிக் போட்டியையே புறக்கணிப்போம் என்று சவுதிஅரேபியா மிரட்டல் விடுத்துள்ளது.

புதன், 25 ஜூலை, 2012

இந்தியாவின் 13வது ஜனாதிபதியாக பிரணாப் பதவியேற்பு


டெல்லி: நாட்டின் 13-வது ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜி இன்று பதவி ஏற்றார். அவருக்கு  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
ஜனாதிபதி பிரதிபா பாட்டீலின் பதவிக்காலம் முடிவடைவதை தொடர்ந்து, கடந்த 19-ம்  தேதி புதிய ஜனாதிபதிக்கான தேர்தல் நடைபெற்றது.
காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் பிரணாப் முகர்ஜிக்கும், பா.ஜனதா கூட்டணி வேட்பாளர்  பி.ஏ.சங்மாவுக்கும் இடையே, இந்த தேர்தலில் நேரடி போட்டி ஏற்பட்டது. கடந்த  ஞாயிற்றுக்கிழமை அன்று ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டது. இதில், 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரணாப் முகர்ஜி அமோக வெற்றி  பெற்றார்.
இந்நிலையில், தற்போதைய ஜனாதிபதி பிரதிபா பாட்டீலின் பதவிக்காலம் நேற்றுடன்  நிறைவடைந்தது. அதைத்தொடர்ந்து நாட்டின் 13-வது ஜனாதிபதியாக, பிரணாப் இன்று  பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி ஜனாதிபதியாக பதவியேற்பதற்காக இன்று காலை தனது இல்லத்திலிருந்து  கிளம்பிய பிரணாப் முகர்ஜி, மகாத்மா காந்தியின் நினைவிடமான ராஜ்காட், நாட்டின்  முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நினைவிடம், முன்னாள் பிரதமர் ராஜீவ்  காந்தியின் நினைவிடமான வீர் பூமி, இந்தியாவின் முதல் பெண் பிரதமர் இந்திரா காந்தி  ஆகியோரது நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.
இதனையடுத்து விழா தொடங்குவதற்கு முன்பாக, ஜனாதிபதி பிரதிபா பாட்டீலும், புதிய  ஜனாதிபதியாக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள பிரணாப் முகர்ஜியும் ஜனாதிபதி மாளிகையில்  இருந்து, நாடாளுமன்ற வளாகத்துக்கு சம்பிரதாய முறைப்படி ஊர்வலமாக அழைத்து  வரப்பட்டனர்.
அவர்களை தலைமை நீதிபதி கபாடியா, துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, சபாநாயகர்  மீராகுமார் ஆகியோர் வரவேற்று நாடாளுமன்ற மத்திய மண்டபத்துக்கு அழைத்துச்  சென்றனர்.
அதனைத் தொடர்ந்து வரலாற்று சிறப்புமிக்க நாடாளுமன்ற மைய மண்டபத்தில்  நடைபெற்ற விழாவில், காலை 11.30 மணிக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி  எஸ்.எச்.கபாடியா,பிரணாப் முகர்ஜிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
பிரணாப் முகர்ஜி ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டதும், 21 துப்பாக்கி குண்டுகள்  முழங்க அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
ஜனாதிபதியாக இன்று பதவியேற்றதும் பிரணாப் முகர்ஜி  ஆற்றிய தனது முதல் உரையில், ‘அரசியல் சாசனத்தை பாதுகாக்கும் வகையில் பாரபட்சமற்ற  ஜனாதிபதியாக பணியாற்றுவேன்’ எனக்  கூறினார்.
வெறும் வார்த்தைகளில் மட்டுமல்லாது உண்மையிலேயே தாம் அவ்வாறு செயல்படப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேற்குவங்க மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்த தாம், நாட்டின் தலைமை  பீடத்தில் அமர்ந்திருப்பது குறித்த மிக்க மகிழ்ச்சி அடைவதாக கூறிய பிரணாப், ஏழைகளும்  இந்தியாவின் வளர்ச்சியில் ஒரு அங்கமாக இருக்க வேண்டும் என்று கூறினார்.
மேலும் தீவிரவாதத்தை ஒழிப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிப்பதாக குறிப்பிட்ட அவர்,  மேலும் பேசுகையில்,”நாட்டு நலனிற்காக விருப்பு வெறுப்பின்றி பணியாற்றுவேன்.  அரசியல் சாசனத்தை காக்க உறுதி கொண்டுள்ளேன். நாட்டிலிருந்து வறுமையை  முற்றிலும் ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை, மக்களோடு இணைந்து மேற்கொள்வேன்.
நாட்டின் பாதுகாப்பிற்கு அரணாக இருப்பதே ஜனாதிபதி அலுவலகத்தின் நோக்கத்தை  முழுமூச்சாக கொண்டு நிறைவேற்றுவேன்.பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான  நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்வேன்.
ஏழைகளும் இந்நாட்டின் அங்கம் என்பதை உணர்ந்து அதன்படி செயலாற்றுவேன்.  மகாத்மா காந்தி, நேரு, அம்பேத்கர் கண்ட கனவை நனவாக்க பாடுபடுவேன். இனம்,  மதம் மற்றும் ‌மொழி அடிப்படையிலான வேறுபாடுகளை களைவேன்.நாட்டின்  இறையாண்மையை காப்பேன்.எனது எண்ணங்களை பேச்சில் மட்டுமல்லாமல் செயலிலும்  காட்டுவேன்’ என்றார்.
துணை ஜனாதிபதியும்,மாநிலங்களவை துணைத் தலைவருமான ஹமீது அன்சாரி,  நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் மீராகுமார், பிரதமர் மன்மோகன்சிங், ஐக்கிய  முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, பல்வேறு கட்சி தலைவர்கள், மத்திய  அமைச்சர்கள், மாநில ஆளுநர்கள் மற்றும் முதல்வர்கள் இந்த விழாவில் பங்கேற்றனர்.

செவ்வாய், 24 ஜூலை, 2012

கடலூர் மாவட்டத்தில் போக்குவரத்து விதி மீறுவோருக்கு ஸ்பாட் பைன் அமலுக்கு வந்தது

கடலூர், :  போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோருக்கு கடலூர் மாவட்டத்தில் நேற்று முதல் ஸ்பாட் பைன் விதிக்கும் முறை அமலுக்கு வந்தது. செல்போன் பேசியபடியே வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட விதிமீறலில் ஈடுபட்டோருக்கு அபராதம் விதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 
விபத்துகளை தவிர்க்க வும், விலை மதிக்க முடியாத மனித உயிர்களை காப்பாற்றவும், போக்குவரத்து விதிமுறைகளை தீவிரமாக அமல்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி போக்குவரத்து விதிமுறை களை மீறும் 34 விதமான குற்றங்களுக்கு ஸ்பாட் பைன் வசூலிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை போன்ற பெருநகரங்களில் பின்பற்றப்பட்டு வந்த இந்த முறை தற்போது முதன் முறையாக கடலூர் மாவட் டத்திலும் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. 
34 வித குற்றங்கள்: பதிவு செய்யாமல் வாகனங்களை ஓட்டினால் முதல் முறை 
ரூ. 2, 500 ம் இரண்டாம் முறையாக ரூ 5 ஆயிரமும் அபராதம். காப்பீடு செய்யாமல் வாகனங்களை ஓட்டினால் இரு சக்கர வாகனங்களுக்கு முதல் முறை 
ரூ. 500 ம், சொந்த வாகனத்திற்கு ரூ. 700, போக்குவரத்து வாகனத்திற்கு ரூ. 1000, இரண்டாம் முறையாக அனைத்து வாகனங்களுக் கும் ரூ. 1000 மும் அபராதம். அளவிற்கு அதிகமாக எடை ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு ரூ. 2 ஆயிரம் மற்றும் கூடுதலாக எடை டன் ஒன்றிற்கு ஆயிரம் ரூபாய் அபராதம்.
செல்போன் பேசியபடி வாகனங்கள் ஓட்டுவது, ஆவணங்களின்றி வாகனங் கள் ஓட்டுவது, தலை கவசமின்றி ஓட்டுவது., போக்குவரத்து விதிமுறைகளை மீறுவது, அதிக நபர்களை ஏற்றிச் செல்வது, வயது வரம்பினை மீறி சிறுவர் சிறுமியர் வாகனங்களை ஓட்டுவது போன்ற குற்றங்களுக்காக முதல் முறையாக ரூ.100ம் இரண்டாவது முறையாக ரூ. 300ம் அபராதம். உரிமம் இன்றி வாகனம் ஓட்டுவது, சாலையில் அனுமதியின்றி சோதனையோட்டம் நடத்துவது, அனுமதியின்றி வாகனங்களின் வடிவமைப்பை மாற்றுவது, பொய்யான தகவல்களை தருவது போன்ற குற்றங்களுக்காக ரூ. 500 அபராதம். வேகமாக வாகனத்தை ஓட்டினால் முதல்முறையாக ரூ. 400 ம், இரண்டாம் முறையாக ரூஆயிரமும் அபராதம்.தகுதியற்றவர்கள் வாகனம் ஓட்டினால் முதன் முறையாக ரூ 200, இரண்டாம் முறையாக ரூ 500, அதிக புகையை கக்கிய வாறு சுற்றுச்சூழலை மாசு படுத்தியும் அதிக சத்தம் எழுப்பி ஒலியை மாசுப்படுத்தியும் வாகனம் ஒட்டி னால் முதன் முறை யாக ரூ. 1000 மும், இரண்டாம் முறையாக ரூ. 2000 மும் அபராதம் விதிக்கப்பட்டுவருகிறது.  கடலூரில் நேற்று காலை கடலூர் டவுன்ஹால் அருகே  போக்குவரத்து ஆய்வாளர் ராமதாஸ் மற்றும் போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் போக்குவரத்து விதிமுறை களை மீறிய வாகன ஓட்டிகளை பிடித்து ஸ்பாட் பைன் போட்டனர். முதல் நபராக செல்போன் பேசியபடி பைக்கில் சென்ற வாலிபர் ஸ்பாட் பைன் கட்டினார். ஹெல்மெட் போடாதது உரிய ஆவணங்கள் வைத்திருக்காதது ஆகிய குற்றங் களை சொல்லி ஸ்பாட் பைனாக ரூ. 100 கட்டுமாறு போலீ சார் கூறியதை கேட்டு வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் பைனை கட்டிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச்சென்றனர்.  thanks  Dinakaran

திங்கள், 23 ஜூலை, 2012

த.மு.மு.க அபுதாபி மண்டலம் சார்பாக இன்ஷா அல்லாஹ் வரும் 02.08.2012


த.மு.மு.க அபுதாபி மண்டலம் சார்பாக இன்ஷா அல்லாஹ் வரும் 02.08.2012 (வியாழக்கிழமை), அன்று மாலை 4.30 மணிக்கு 15 வது ஆண்டு ரமலான் (இப்தார்) சிறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அனைவரும் தவறாது கலந்து கொள்ளவும்.

சிறப்புரை நிகழ்த்துபவர் : சகோ. தர்மபுரி. சாதிக் (த.மு.மு.க - தலைமை நிர்வாகி)

குறிப்பு: பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது.

- த.மு.மு.க அபுதாபி மண்டலம்

ஞாயிறு, 22 ஜூலை, 2012

உலகின் மிகப்பெரிய பல்கலைக் கழகம் ( Largest university in the world )

அனைத்து நண்பர்களுக்கும் assalamu alaikkum.
கடந்து ஒரு வாரமாக தேர்தல் முடிவுகள், புதிய முதல்வர், புதிய அமைச்சர்
என பல எதிர்பார்ப்புகளுடன் கழிந்து போனது. சரி இனி நாம் விசயத்திற்கு
வருவோம். பொதுவாக இப்பொழுது உலகில் ஒவ்வொரு நாடுகளும் தங்கள் நாட்டின்கல்வி வளர்ச்சியில் மிகவும் முனைப்புடன் திகழ்ந்து வருகிறது. காரணம்
சிறந்தக் கல்விதான் ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்க
முடியும் என்பதை நாம் அனைவரும் நன்றாக அறிவோம். அந்த வகையில் உலகமேதிரும்பிப் பார்க்கும் ஒரு பிரமிப்பை கல்வி சார்ந்தத் துறையில்
ஏற்படுத்தி இருக்கிறது சவூதி அரேபியா ரியாத் தலை நகரில் என்றால்
நம்புவீர்களா !?ஆம் நண்பர்களே..!! இதுநாள் வரை நம் அனைவருக்கும் சவூதி அரேபியா என்றாலேஉடனே ஞபாகத்திற்கு வருவது உலகத்தின் மிகப்பெரிய மசூதி என்பது நாம்அனைவரும் நன்கு அறிந்ததே. அத்துடன்இப்பொழுது ஒரு புதிய சாதனையைபெண்களுக்காக மட்டுமே நிகழ்த்தி இருக்கிறார்கள் சவூதி அரபியர்கள். ஆம்..!உலகத்தில் மிகப்பெரிய பெண்கள் பல்கலைக் கழகம் (World's LargestUniversity Gives Saudi Women Hope for Change ) ஒன்றை உருவாக்கி
இருக்கிறார்கள். இதில் என்ன சிறப்பு என்றால் இந்தப் பல்கலைக் கழகத்தில்
ஒரே நேரத்தில் ஐம்பது ஆயிரம் பெண்கள் பயிலும் அளவில் இந்த பிரமாண்டப்
பல்கலைக் கழகத்தை வடிவமைத்து இருக்கிறார்கள்.அது மட்டுமல்லாது இதுவரை உலகத்தில் எங்கும் இல்லாத அளவில் ஒரு பல்கலைக்
கழகத்திற்குள் ஆராய்ச்சிக்காகவும், நூலகத்துக்காகவும் இங்கு கிட்டத்தட்ட
ஐந்து மில்லியன் புத்தகங்கள் கொண்ட நூலகம் அமைக்கப் பட்டிருப்பது இதுவே
முதல் முறையாகும். மேலும் மாணவிகள் ஒரே நேரத்தில் தங்கிப் படிப்பதற்காக
12,000 அறைகள் கொண்ட தங்கும் விடுதிகளும் அருகில் ஏற்படுத்தி
இருக்கிறார்கள்.உடற்பயிற்சி, மற்றும் விளையாட்டு, சிறப்பு ஆய்வுகள் என இதன் சுற்றளவு 26கி.மீ தூரத்தை தாண்டி நீள்கிறது இதன் பரப்பளவு என்றால் பார்த்துக்
கொள்ளுங்கள்..!!உலகத்தில் முதன் முறையாக பல்கலைக் கழகத்தை முழுவதும் சுற்றி வருவதற்குமெட்ரோ ரயில் அமைத்திருக்கும் ஒரே பல்கலைக் கழகம் இதுதான் என்றுசொல்லவேண்டும். அந்த அளவிற்கு பல்கலைக் கழகத்தில் பரப்பளவு விரிந்துக்கிடக்கிறது என்றால் பார்த்துகொள்ளுங்கள்..!
கால நிலையை மாற்றி அமைப்பதற்காக செயற்கையான முறையில் பல புதுமைகளை
ஏற்படுத்தி இருக்கிறது சவூதி அரேபியா. 40000 சதுர மீட்டரில் சூரிய
ஒளியின் மூலம் மின்சார தேவையை பூர்த்தி செய்யும் விதமாக கட்டிடம்
வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மின்சார செலவுகளையும் ஓரளவு
மிச்சப்படுத்தலாம். அதிக குளிர் இல்லாமல், அதிக வெப்பமும் இல்லாமல்
பல்கலைக் கழகத்தின் வெப்பநிலையை சீராக
வைக்க சூரிய ஒளி பயன்படுத்தப்படுகிறது.
இதுமட்டுமல்லாது தேவைகள் அனைத்தையும் ஒரே இடத்தில் அமைக்கும் பொருட்டு
700 படுக்கை அறை கொண்ட ஹாஸ்பிடல், கான்ஃபரன்ஸ் ஹால், பரிசோதனைக் கூடம்,நோனோ டெக்னாலஜி சம்பந்தமான ஆராய்ச்சிப் பிரிவு, தகவல் தொழில் நுட்பம்,உயிரியியல் போன்றவற்றிற்காக தனித்தனி துறைகள் இயக்கி இருக்கிறார்கள்.இத்தனை சிறப்பு மிக்க இந்தப் பல்கலைக் கழகத்தின் பெயர் நூரா பின்த்அப்துல் ரஹ்மான் பல்கலைக் கழகம் (Princess Nora Bint Abdulrahman
University in Riyadh) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 20
பில்லியன் ரியால் தாண்டும் என்கிறது தகவல்கள். என்ன நண்பர்களே..!
இன்றையத் தகவல் உங்கள் அனைவரையும் கவர்ந்திருக்கும் என்று நம்புகிறேன்
மறக்காமல் தங்களின் கருத்துக்களை பதிவு செய்துவிட்டு
செல்லுங்கள்:--

வெள்ளி, 20 ஜூலை, 2012

ரமலான் மாத சிறப்புகள்

ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்.

இறைவேதம் குர்ஆன் 2:183



ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் இறக்கியருளப் பெற்றது; ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்; எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்; அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை; குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்).

இறைவேதம் குர்ஆன் 2:185



(இவ்வாறு விதிக்கப் பெற்ற நோன்பு) சில குறிப்பட்ட நாட்களில் (கடமையாகும்); ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும்; எனினும்(கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக - ஃபித்யாவாக - ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும்; எனினும் எவரேனும் தாமாகவே அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது - ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறீவீர்களானால்), நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும் (என்பதை உணர்வீர்கள்).

இறைவேதம் குர்ஆன் 2:184



‘நம்பிக்கை கொண்டு, நன்மையை எதிர்பார்த்து ரமலான் மாதம் நோன்பு நோற்பவரின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா(ரலி), நூல்: புஹாரி(38)



“ரமலான் வந்துவிட்டால் சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன.” என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா(ரலி), நூல்: புஹாரி(1898)



“ரமலான் மாதம் வந்துவிட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்” என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா(ரலி), நூல்: புஹாரி(1899)



“ரமலான் பிறையை நீங்கள் காμம் வரை நோன்பு நோற்காதீர்கள்; (மறு) பிறையைக் காμம்வரை நோன்பை விடாதீர்கள்; உங்களுக்கு மேக மூட்டம் தென்படுமானால் (முப்பது நாள்களாக) அதைக் கணித்துக் கொள்ளுங்கள்.” என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி), நூல்: புஹாரி(1906)

செவ்வாய், 17 ஜூலை, 2012

சட்டமன்ற பேரவை மனுக்கள் குழுவிடம் மனு அளிக்கலாம்

 காட்டுமன்னார்கோவில் பகுதியில் வசிக்கும் மக்கள், சங்கங்கள், நிறுவனங்கள் ஆகியவற்றின் சார்பில்  தங்களுடைய குறைகளை மனுக்களாக எழுதி `தலைவர், மனுக்கள் குழு, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை, சென்னை` என்ற முகவரிக்கு இந்த மாதம் 31ம் தேதிக்குள் அனுப்ப மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்ததாக வட்டாட்சியர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மனுக்கள் பொது பிரச்சனைகள் குறித்தும், அரசு அலுவலகங்களில் பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருக் கும் பிரச்சனை உள்ளடக்கியதாகவும், ஒரே ஒரு துறையை சார்ந்ததாகவும் இருக்க வேண்டுமெனவும் கூறப்பட்டுள்ளது. இதில் தனிநபர் குறை நீதிமன்ற வழக்கு சம்மந்தப்பட்டவை, வேலைவாய்ப்பு, பட்டா, முதியோர் உதவிதொகை, வங்கி கடன், தொழில் கடன், அரசு பணிமாற்றம், அரசு அலுவலர்களின் குறைகள் ஆகியவை பற்றி மனுக்களாக அனுப்பக்கூடாது. சட்டமன்ற பேரவை விதிகளின் வரம்பிற்குட்பட்டு மனுக்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும். மனு பற்றிய விவரங்கள் மனுதாரருக்கு தெரிவிக்கப் படும் ஆகவே மனுதாரர்கள் அரசு விதிகளுக்குட்பட்டு மனுக் களை அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தமுமுக ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு மற்றும் சமுதாய எழுச்சி பொதுக்கூட்டம்


லால்பேட்டையில் நடைபெற்ற தமுமுக ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு மற்றும் சமுதாய எழுச்சி பொதுக்கூட்டம் (புகைப்படங்கள்)





 பொதுக்கூட்டம் (புகைப்படங்கள்)














Thanks   Tmmk .in

வெள்ளி, 13 ஜூலை, 2012

காட்டுமன்னார்கோவில் அருகே சாலையில் விபத்து ஏற்படுத்தும் பள்ளங்களை சீரமைத்த பொதுமக்கள், தமுமுக

காட்டுமன்னார்கோவில் அருகே ரம்ஜான் தைக்கால் உள்ளது. இப்பகுதி சிதம்பரம் காட்டுமன்னார்கோவில் சாலையில் உள்ளது. இப்பகுதிக்கு அருகே சாலையில் குண்டும் குழியும் காணப்பட்டது. தொடர்ந்து இருசக்கர வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து காயம் ஏற்பட்டு மருத்துவ மனைக்கு செல்லும் நிலை தொடர்ந்து நீடித்து வந்தது.
 ஒரு நாளைக்கு 5க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதை கருத்தில் கொண்டு இப்பகுதியில் உள்ள மக்கள் சாலையை சீர்செய்ய நெடுஞ்சாலை துறையிடம்  வலியுறுத்தினர். ஆனால் நெடுஞ்சாலைதுறை அலட்சியப்படுத்தினர். இந்நிலையில் பொதுமக்கள், தமுமுக கட்சியினர் தாங்களாகவே முன்வந்து சாலையை சீர்செய்யும் பணியை நள்ளிரவில் தொடங்கினர்.  இதே போன்று காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனை அருகே மேடும் பள்ளமுமாக உள்ளது. இதனால் தினந்தோறும் காட்டுமன்னார்கோவில் நகரத்திற்குள்ளேயே 20க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன விபத்துகள் ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.      
                                        thanks - dinakaran

வியாழன், 12 ஜூலை, 2012

கடலூர் மாவட்டத்தில் இடி-மின்னலுடன் கனமழை


கடலூர் மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் கோடை வெயில் குறையவில்லை. பருவ மழையும் திருப்தியளிக்கும் வகையில் பெய்யாமல் கண்ணாமூச்சி காட்டி வந்தது. கடலூரில் நேற்று பகலில் வழக்கம்போல் “சுள்” என வெயிலடித்தது. இதனால் அவதிப்பட்ட பொதுமக்களுக்கு ஆறுதல் அளிப்பது போல் இரவு 7 மணி முதல் 10 மணி வரை இடி - மின்னலுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. 

அதேபோல் நெல்லிக்குப்பம், பண்ருட்டி மற்றும் சுற்றுப்பகுதிகளிலும் மழை பெய்தது. நெய்வேலி, விருத்தாசலம், காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், ஸ்ரீமுஷ்ணம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. 

திட்டக்குடி, ராமநத்தம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இரவில் சுமார் 1/2 மணி நேரம் மழை பெய்தது. மவட்டத்தில் பரவலாக பெய்த மழையால் பொதுமக்கள் குறிப்பாக விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

11ம் வகுப்பு சேர்க்கை விதிகள் அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

புதுடெல்லி: குறைந்தபட்ச மதிப்பெண்ணை உயர்த்தி, வெளியிடப்பட்ட 11ம் வகுப்பு சேர்க்கை விதிகள் குறித்து விளக்கம் அளிக்கும்படி மாநில அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. டெல்லியைச் சேர்ந்த மாணவர்கள் அபிஷேக் மற்றும் மோஹித் குமார். இவர்கள் காமர்ஸ் மற்றும் அறிவியல் இணைந்த 11ம் வகு ப்பு பாடப்பிரிவில் படிக்க விரும்பினர். ஆனால், இப்பிரிவில் சேர குறைந்தபட்ச மதிப்பெண் உயர்த்தப்பட்டுள்ளது. 11ம் வகுப்பு சேர்க்கை விதிகளில் இதற்கான மாற்றங்கள் செய்யப்பட்டு அரசால் சுற்றறி க்கை அனுப் பப்பட்டிருந்தது. இதை எதிர்த்து மாணவர்களின் தந்தை, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள் ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: 201213ம் ஆண்டுக்காக கல்வித்துறை இயக்குநரகம் வெளியிட்டுள்ள உத்தரவு மூலம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், காமர்ஸ் மற்றும் அறிவியல் இணைந்த பாடப்பிரிவுக்கு விண்ணப்பித்த 26,000 மாணவர்களின் விண்ணப்பங்களை பள்ளிகள் தள்ளுபடி செய்துள்ளன.

அறிவியல் பிரிவில் சேர விரும்பும் மாணவர்கள் 7 கூட்டு புள்ளிகளை பெற்றிருக்க வேண்டும் என்று விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இது 6 புள்ளிகளாக மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இதேபோல் ஆங்கிலம், கணக்கு மற்றும் அறிவியலில் பி2 கிரேட் பெற்றிருக்க வேண்டும் என்று விதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் இது சி1 கிரேடாக இருந்தால் போதும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் ஏராளமான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். புதிய விதிகளை தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.எஸ்.சிஸ்தானி, இதுகுறித்து அக்டோபர் 8ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி கல்வித்துறை இயக்குநரகத்துக்கும், மாணவர்களை பள்ளியில் சேர்க்க மறுப்பு தெரிவித்த 2 பள்ளிகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

புதன், 11 ஜூலை, 2012

கொள்ளுமேடு சகோதர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய,அல்லாஹ்வின் பெயரால்! (தொடங்குகிறேன்)...

'அகிலங்கள் அனைத்தையும் படைத்து பரிபக்குவபடுத்திய ''அல்லாஹ்''விற்கே புகழ் அனைத்தும்..

அன்பார்ந்த கொள்ளுமேடு சகோதர்களே !!

அஸ்ஸலாமு அழைக்கும் (வராஹ்)

சமிபகாலமாக  நமதூர்க்கு மறும கடிதங்கள் வந்த வண்ணம் உள்ளது. சில விசமிகளால் நமக்குள் குழப்பத்தை ஏற்ப்படுத்தவேண்டும் என்ற நோக்கத்துடன்  ஒருவருக்கு ஒருவரை முட்டி விடும் விதமாக எழுதி வருகிறார்கள் .இந்த அயோக்கியத்தனமான காரியத்தை செய்யும் அயோக்கியர்களுக்கு என்னதான் 
  நோக்கம் ஏன் இந்த இனதனமான காரியத்தை செய்கிறார்கள் .ஒருநாள் இல்லை ஒருநாள் நிங்கள் யார் என்று வெளிச்சத்திற்கு இறைவன் கொண்டுவருவான் இன்ஷா அல்லாஹ் !!

இந்தமாதரியான செயல்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கது .....

கொள்ளுமேடு வாழ் சகோதர்களே ..இன்று நாம் இயக்கங்களால் , ஒருவருக்கொருவர் பரஸ்பர இயக்க வேறுபாடு காரணமாக மனம் வேறுபட்டு..இருப்பதை இந்த கயவர்கள் பயன்படுத்தி குளிர்காய இருக்கிறார்கள் இதற்க்கெல்லாம் நாம் இடம் அளிக்க கூடாது அனைத்துக்கும் ஒருநாள் தீர்வு வரும் பொறுமை காத்துயிருங்கள் பொருமையாலருடன் இறைவன் இருக்கிறான்


நமக்கு கஷ்டங்கள் ஏற்படும் போது அதை சகித்துகொண்டு,பொருமையோடு இருக்க வேண்டும்.நாம் செய்யும் நன்மை,தீமை பொறுட்டே சோதிக்கபடுகிறோம்.

நம் வாழ்வில் நாம் அன்றாடம் பல பல பிரச்சனைகளை சந்தித்துதான் நாம் வாழ்கின்றோம்..சில சமயங்களில் ஏன் பிறந்தோம் என்ற சலிப்பும் ஏற்படுகிறது. இந்த நிம்மதி அற்ற வாழ்வுக்காக(மறுமையை மறந்த) மனிதன் என்னவேனாலும் செய்யும் நிலைக்கு தள்ள படுகிறான்.

எவர்கள் ஈமான் கொண்டுள்ளோரிடையே மானக் கேடான விசயங்கள் பரவவேண்டுமென  பிரியப்படுகிறார்களோ  அவர்களுக்கு நிச்சியமாக இம்மையிலும் மறுமையிலும் நோவினை செய்யும் வேதனையுண்டு  அல்லாஹ் யாவற்றையும் அறிவான். நிங்கள் அறியமாட்டீர்கள் . (அல் குர்ஆன் ;24 -19 )

அவதூர் பாரப்புவதில்லிருந்து தம்மை காப்பாதிக்கொள்ள ;

அறிஞர்களின் அழகியகூற்றுகளிருந்து;

நேரத்தை வீணடிப்பது மரணத்தை விட கடுமையானது .
ஏனெனில்;மரணத்தின் முலம் துண்டிக்கப்படுவது

உனது இவ்வுலக வாழ்வும், உறவுகளும் தான் .

ஆனால்! நீ நேரத்தை வீணடிப்பதன் முலம் உன்னிடமிருந்து துண்டிக்கப்படுவது அல்லாஹ்வுடனும்,உனது நிலையான மறுமை வீட்டோடுமுள்ள தொடர்பாகும் ...

'எவன் கடுகளவு நன்மை செய்கிறானோ அவன் அதற்குரிய கூலியைக் கண்டு கொள்வான், எவன் கடுகளவு தீமை செய்வானோ அவன் அதற்குரிய கூலியைக் கண்டு கொள்வான்' (99: 7,8).


பிறரைக் குறைகூறி புறம் பேசித் திரியும் ஒவ்வொருக்கும் கேடுதான்   (அல் குர்ஆன் ;104 .1 )

இவர்கள்   தாங்கள் செய்வது சரியா என்று இஸ்லாமிய வழியில் தங்கள்
செயலை சீர்தூக்கி பார்த்து மறுமை நன்மைக்காக திருந்திக்கொள்வது உடனடி
அவசியம்..!

ஆதலால்... அவர்களின் நயவஞ்சக குணங்களை களைய  வல்ல இறைவனிடம் பிராத்தித்து அவர்களை சிறந்த முஸ்லிம்கள் ஆக்கி அனைவருடனும் ஒற்றுமையுடன் வாழ்வோமாக..! இதற்கு நமக்கு 
அல்லாஹ் பேரருள் புரிய பிரார்த்திக்கிறேன்..! ஆமீன்..!

செவ்வாய், 10 ஜூலை, 2012

லால்பேட்டை நகர தமுமுக சார்பில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா மற்றும் சமுதாய எழுச்சிப் பொதுக்கூட்டம்



லால்பேட்டை நகர தமுமுக,மமக சார்பில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா மற்றும் சமுதாய எழுச்சி பொதுக்கூட்டம்  முன்னாள் மமக மாவட்ட செயலாளர் யாசிர் அரஃபாத் தலைமையில் நடைபெறுகிறது.
இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் 14.7.2012 அன்று லால்பேட்டை நகரில் சிதம்பரம் மெயின் ரோட்டில் நடைபெற உள்ள தமுமுக/மமக வின் எழுச்சிப் பொதுக்கூட்டத்தில் மாநிலத் தலைவர் ஜெ.எஸ்.ரிபாயி அவர்களும்,மமகவின் பொதுச் செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி,துணைப் பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.ஹாரூண் ரஷீத் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர்.

ஹஜ் பயணிகள் 31-ந் தேதிக்குள் பயண தொகையை செலுத்த வேண்டும் ஹஜ் கமிட்டி துணைத்தலைவர் தகவல்


ஹஜ் பயணிகள் இந்த மாதம் 31-ந் தேதிக்குள் பயண தொகையை செலுத்த வேண்டும் என இந்திய ஹஜ் கமிட்டி துணைத் தலைவர் அபுபக்கர் கூறினார்.
31-ந் தேதிக்குள்
இந்தியாவில் ஆண்டுதோறும் முஸ்லிம்கள் புனித ஹஜ் யாத்திரைக்காக சவுதி அரேபியாவில் உள்ள மக்கா நகருக்கு செல்வார்கள். இந்த ஆண்டு ஹஜ் பயணத்திற்காக சவுதி அரேபிய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய இந்திய அரசு சார்பில் இந்திய ஹஜ் கமிட்டி துணைத் தலைவர் அபுபக்கர் தலைமையில் நிர்வாக அதிகாரி டாக்டர் ஜாகீர் உசேன், உறுப்பினர் ஜமீல் அகமது ஆகியோர் நேற்று சவுதி அரேபியாவிற்கு சென்றனர்.
முன்னதாக ஹஜ் கமிட்டி துணைத்தலைவர் அபுபக்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் இருந்து 3,315 பேர் ஹஜ் பயணம் செய்ய உள்ளனர். ஹஜ் பயணம் செல்பவர்கள் பணம் கட்டுவதற்கு ஜுலை 31-ந் தேதி கடைசி நாளாக உள்ளது. ஹஜ் பயணத்திற்கு செல்பவர்களின் தமிழக கோட்டாவை அதிகப்படுத்த நடவடிக்கை எடுத்த முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
சிரமமின்றி சென்றுவர
சவுதி அரேபியாவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட 2 நாள் பயணமாக செல்கிறோம். அங்கு இந்தியாவில் இருந்து ஹஜ் பயணம் செல்பவர்கள் சிரமமின்றி சென்று வர நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

திங்கள், 9 ஜூலை, 2012

சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரிகளில் தண்ணீர் இருப்பு குறைந்தது


சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது. பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3232 மில்லியன் கனஅடி. இங்கு தற்போது 1408 மில்லியன் கனஅடி தண்ணீர் இருக்கிறது. ஏரிக்கு 220 கனஅடி வீதம் கிருஷ்ணா தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 

இங்கிருந்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு 619 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. புழல் ஏரியில் இன்று காலை நிலவரப்படி 1257 மில்லியன் கனஅடி தண்ணீர் இருக்கிறது. இதன் கொள்ளளவு 3330 மில்லியன் கனஅடி. பூண்டியில் இருந்து 255 கனஅடி வருகிறது. குடிநீருக்காக 180 கனஅடி திறந்து விடப்படுகிறது. 

செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவு 3645 மில்லியன் கனஅடி. இந்த ஏரியில் இன்று 800 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. பூண்டி ஏரியில் இருந்து 270 கனஅடி தண்ணீர் வருகிறது. குடிநீருக்காக 160 கனஅடி தண்ணீர் எடுக்கப்படுகிறது. சோழவரம் ஏரியின் கொள்ளளவு 881 மில்லியன் கனஅடி. இப்போது 85 மில்லியன் கனஅடி இருக்கிறது. 

வீராணம் ஏரியில் இப்போது 436 மில்லியன் கனஅடி உள்ளது. இதன் மொத்த கொள்ளளவு 1465 மில்லியன் கனஅடி. கடந்த வருடம் இதே நாளில் பூண்டி, புழல், செம்பரம் பாக்கம், சோழவரம், வீராணம் ஏரிகளில் மொத்தம் 5 ஆயிரத்து 617 மில்லியன் கனஅடி தண்ணீர் இருந்தது. 

இந்த ஆண்டு தண்ணீர் அளவு குறைந்து 3 ஆயிரத்து 550 மில்லியன் கனஅடியாக உள்ளது. பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரிகளில் இருக்கும் தண்ணீரையும் சேர்த்தால் அக்டோபர் வரை சென்னை நகரில் தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் வழங்க முடியும். 

சென்னையில் தற்போது தினமும் 830 மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அக்டோபர் வரை இதே அளவு வினியோகம் செய்ய வாய்ப்பு உள்ளது. இதற்குள் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிடும். எனவே குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பின்னத்தூர் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா!





ஹஜ் செல்பவர்களுக்கு இலவச சிம் கார்ட் ஹஜ் கமிட்டி அறிவிப்பு


இந்த வருடம் ஹஜ் புனித யாத்திரை செல்பவர்களுக்கு இலவச சிம் கார்ட் வழங்கப்பட உள்ளது.
/
சவுதி அரேபியத் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் சிம் கார்டுகளை இந்திய ஹஜ் கமிட்டி, புனித யாத்திரை செல்பவர்களுக்கு, இலவசமாக வழங்க உள்ளதாக ஹஜ் கமிட்டி துணைத் தலைவர் அபூபக்கர் தெரிவித்துள்ளார்.
இந்திய ஹஜ் கமிட்டி உறுப்பினர்களின் தொலைபேசி எண்கள் அனைத்தும் இந்த சிம் கார்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் என அவர் தெரிவித்தார். மக்காவில் உள்ள அதிகாரிகளின் எண்களும், அவசர கால சேவைப் பிரிவுகள் எண்களும் இதில் இடம் பெறும் என்றும் அபூபக்கர் குறிப்பிட்டார்.

ஞாயிறு, 8 ஜூலை, 2012

12 மணி நேரத்தில் திருக்குரானை மனப்பாடமாக ஒப்புவித்த சிறுவன்

மும்பை, ஜூலை.8- 

மராட்டிய மாநிலம் அகமத் நகரை சேர்ந்த சிறு வன் ஹபீஷ் முகமது ஜபியுல்லா (வயது 12). இவன் தரூல் உலூம் தஜூல் மஸ்ஜித் பள்ளியில் படித்து வருகிறான். 

இவன் இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குரானை முழுமையாக மனப்பாடம் செய்துள்ளான். நேற்று அவன் குரானை பார்க்காமல் மனப்பாடமாக ஒப்புவித்தான். காலை 8 மணிக்கு குரானில் உள்ளதை சொல்ல தொடங்கிய அவன் 12 மணி நேரம் ஒப்புவித்து இரவு 8 மணிக்கு முடித்தான். 

குரான் முழுவதையும் மனப்பாடமாக மனதில் பதிய வைக்க அவனுக்கு 8 மாதங்கள் ஆனதாம். குரான் முழுவதையும் மனப்பாடமாக ஒப்புவித்து முடித்த பிறகு அவனுக்கு ஏராளமானவர்கள் பரிசுகள் வழங்கினார்கள்.

கடலூர் மாவட்டத்தில் முதல் முறையாக புவி அமைப்பு தகவல் பெற ஏற்பாடு

கடலூர் மாவட்டத்தில் முதல் முறையாக வேளாண்மை துறையில் நிலத்தின் தன்மை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்த புவி அமைப்பு தகவல் பெற ஏற்பாடு செய்யப்படுகிறது. இதற்காக அமைக்கப் பட்டுள்ள அலுவலர்கள் குழுவிற்கு சிறப்பு 5 நாள் பயிற்சி வழங்கப்படுகிறது. 
புவியியல் ரீதியாக உலக வரைப்படம் உள்ளது. இதி லிருந்து பல்வேறு தகவல்கள் பெற வழிகாணப்பட்டுள் ளது. செயற்கை கோள் உதவியுடன் புவி அமைப்பு அதன் பல்வேறு இடங்களின் தன்மை துறை ரீதியாக தகவல்கள் பெற வழி உண்டு. 
இதில் வேளாண்மை துறையில் அதற்கேற்ப தகவல்களை பெற வழிவகை செய்யப்பட்டுள் ளது. இதன் ஒரு பகுதியாக கடலூர் மாவட்டத்தில் வேளாண்மை துறையின் மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள நிலத்தடி நீர், மண் உள்ளிட்டவை களின் தன்மை குறித்து விவரங்கள் செயற்கைகோள் மூலம் பெற்று தரும் பணியை மேற்கொள்ள உள்ளது.
  முதல் முறையாக இது போன்ற திட்ட செயல்பாடு மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது இதற்காக வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை, தேசிய கணினி மையம் உள்ளிட்ட துறை அலுவலர்கள் 10 பேர் கொண்ட குழு அமைக்கப் பட்டுள்ளது. இக்குழு பூலோக வரைப்படத்தில் கடலூர் மாவட்டத்தின் நிலத்தடி நீரின் தன்மை, மண் வளம் குறித்து தகவல்களை செயற்கோள் மூலம் பெற்று பதிவு செய்யும். இக்குழுவுக்கு 5 நாள் பயிற்சி கடலூர் வேளாண்மை துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேற்று துவங்கியது. 
பயிற்சியை மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ தலைமை தாங்கி துவக்கி வைத்தார். மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை உதவி செயற் பொறியாளர் சங்கரசேகர் வரவேற்றார். வேளாண்மை இணை இயக்குனர் ராதா கிருஷ்ணன் செயல்பாடுகள் குறித்து விளக்கினார். புவி தகவல் தொழில்நுட்பம் பற்றி பிரவு தொகுப்புரை யாற்றினார். மாவட்டத்தில் நிலத்தடி நீர் மேம்பாட்டுக் காக செயல்படுத்தப்படும் திட்டகளான தடுப்பணை, குளம் அமைப்பது உள் ளிட்டவைகளுக்கு திட்டத் துக்கு தேர்வு செய்யப்படும் இடம் உரிய பயனை தருமா என்பதற்கு புவி அமைப்பில் இருந்து செயற்கைகோள் மூலம் பெறப்படும் தகவல் பயனுள்ளதாக இருக்கும். 
 இது போன்று மண்ணின் தன்மை அறிந்து கொள்வதால் வேளாண்மை செழிப்பிற்கு வழிவகை செய்யும். இது போன்ற திட்டங்கள் அரசு திட்ட செயல்பாட்டுக்கு மட்டு மின்றி விவசாயிகளுக்கும் பலன் தரும். இதற்கு முக்கிய காரணம் வேளாண்மை செயல்பாடுகளுக்கு சரியான இடத்தை தேர்வு செய்ய புவி அமைப்பு தகவல் வழிகாட்டும் என்றனர் சம்மந்தப்பட்ட துறையினர்.

சனி, 7 ஜூலை, 2012

மெட்ரோ ரெயில்:நிலத்தை தோண்டிய பொழுது முகலாயர் கால மஸ்ஜித் கண்டுபிடிப்பு!


புதுடெல்லி:டெல்லி மெட்ரோ ரெயில் திட்டத்திற்காக நிலத்தை தோண்டிய பொழுது முகலாயர் கால மஸ்ஜிதின் சிதிலங்கள் பூமிக்கடியில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஜும்ஆ மஸ்ஜிதிற்கு அருகே மெட்ரோ ரெயிலுக்காக நிலத்தை தோண்டிய வேளையில் மஸ்ஜிதின் சுவரும், சிதிலங்களும் முகலாய மன்னர் ஷாஜஹானின் காலத்தில் கட்டப்பட்ட அக்பராபாதி மஸ்ஜித் என கருதுவதாக தொகுதி எம்.எல்.ஏ ஷுஐப் இக்பால் தெரிவித்துள்ளார்.
1650-ஆம் ஆண்டு அக்பராபாதி பேகத்தின் பெயரால் கட்டப்பட்ட அக்பராபாதி மஸ்ஜிது குறித்து வரலாற்று ஆவணங்களில் பதியப்பட்டுள்ளன. புனித திருக்குர்ஆன் முதன் முதலில் உருது மொழியில் இம்மஸ்ஜிதில் வைத்துதான் மொழிப் பெயர்க்கப்பட்டது.
1857-ஆம் ஆண்டு சிப்பாய்க் கலகத்தின் போது பிரிட்டீஷார் இம்மஸ்ஜிதை இடித்து தள்ளினர் என்று இக்பால் கூறுகிறார்.
கண்டுபிடிக்கப்பட்ட மஸ்ஜிதின் சிதிலங்கள் அக்பராபாதி மஸ்ஜிதிற்கு சொந்தமானதா? என்பது விஞ்ஞானப்பூர்வமாக உறுதிச் செய்யப்படவில்லை. இதற்காக அகழ்வாராய்ச்சித் துறை நிபுணர்களை காத்திருக்கிறார்கள் அப்பகுதி மக்கள்.
அரசின் உத்தரவு கிடைத்தால் பரிசோதனை நடத்துவோம் என ஆர்கியாலஜி சர்வே ஆஃப் இந்தியாவின் டெல்லி சர்க்கிள் தலைவர் டி.என்.திம்ரி கூறுகிறார்.
டெல்லி மெட்ரோ ஸ்டேசனின் 3-வது கட்ட திட்டத்தின் ஒருபகுதியாக ஜும்ஆ மஸ்ஜிதிற்கு அருகே பூமிக்கு அடியில் ஸ்டேசன் நிர்மாணிக்க திட்டமிடப்பட்ட இடத்தில் தோண்டியபொழுது மஸ்ஜிதின் சிதிலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து இப்பகுதியை கைவிட்டுவிட்டு மெட்ரோ ஸ்டேஷனும், வழியும் புனர் நிர்மாணித்ததாக டெல்லி மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் கண்ணியமான முறையில் உடை அணிந்து வரவேண்டும்: அரசு உத்தரவு

பள்ளிக்கல்வி இயக்குனர் பி.மணி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:- 
அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிக்கூடங்களில் சமுதாயத்தின் பல்வேறு நிலையில் உள்ள மாணவ-மாணவிகள் ஒருங்கே சமநிலையில் கல்வி பயில்கிறார்கள். பள்ளிகளில் அந்த மாணவ-மாணவிகள் இடையே எவ்விதமான ஏற்றத்தாழ்வு உருவாகும் நிலையைத் தவிர்க்கவும், அனைவரும் சமநிலையில் உள்ளவர்கள் என்ற சமத்துவ மனநிலையை அவர்கள் உள்ளங்களில் உருவாக்கவும் அனைத்து நிலையில் உள்ள மாணவ-மாணவிகளுக்கும் ஒரேமாதிரியான சீருடை வழங்கப்பட்டு, அவர்கள் சீருடையில் வரும் முறை நீண்ட காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. 
பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நல்லதோர் உதாரணமாகவும், வழிகாட்டியாகவும் செயல்பட வேண்டிய உன்னதமான பணியில் உள்ள ஆசிரியர்களும், ஆசிரியைகளும், பள்ளிக்கு வரும்போது தங்களது ஆடை மற்றும் அணிகலன்களை அணிந்துவரும் முறையில் பதவிக்குரிய கண்ணியமும், நமது பண்பாட்டிற்கும் கலாசாரத்திற்கும் உகந்த நாகரிகமும் இருப்பது அவசியம். 
ஆசிரியர்கள், ஆசிரியைகள் கண்ணியக்குறைவாகவும், மாணவ-மாணவிகள் இடையே ஏற்றத்தாழ்வையும், மனச்சலனத்தையும், தாழ்வு மனப்பான்மையையும், மரியாதை குறைவையும் ஏற்படுத்தக்கூடிய வகையில் உடை அணிவதை தவிர்க்க வேண்டும். 
இதை எல்லாம் வலியுறுத்தி ஏற்கனவே அறிவுரை வழங்கப்பட்டபோதிலும் சமீப காலமாக இந்த அறிவுரைகள் ஆங்காங்கே சில ஆசிரியர்களால் முறையாக கடைப்பிடிக்கப்படுவதில்லை என்பது எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டு உள்ளது. இந்த நிலை மிகவும் வருந்தத்தக்கது. 
பள்ளி மாணவ-மாணவிகளிடம் பாதிப்பையும், சமுதாயத்தில் பொது மக்களிடையே அதிருப்தியையும், ஏற்படுத்தக்கூடிய இத்தகைய நிலை வருங்காலத்தில் தவிர்க்கப்பட வேண்டும். ஆசிரியர்கள், ஆசிரியைகள் பள்ளிக்கு வரும்போது பதவிக்குரிய கண்ணியத்திற்குசிறிதும் களங்கம் ஏற்படாத வகையில் ஆடை மற்றும் அணிகலன்களை அணிந்து வருமாறும் அநாகரீகமான முறையில் உடை அணிந்து பள்ளிக்கு வருவதை தவிர்க்குமாறும் அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும், ஆசிரியைகளுக்கும் அறிவுறுத்துமாறு மாவட்ட கல்வி அதிகாரிகளும், முதன்மை கல்வி அதிகாரிகளும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

மேற்கண்ட அறிவுரைகளை பின்பற்றுவதில் தவறுகளோ, குறைபாடுகளோ சிறிதும் ஏற்படா வண்ணம் ஆசிரியர்களின் நடவடிக்கைகள் இருப்பதை தலைமை ஆசிரியர்கள் உறுதிசெய்துகொள்ள வேண்டும். 
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. 
இதேபோல், மாநில தொடக்கக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வரமுருகனும் ஆடை கட்டுப்பாடு குறித்து அனைத்து மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார் 

அதிக வெப்பம், பாக்கெட் உணவுகளால் குழந்தைகளுக்கு சிறுநீரக கல் கோளாறு அதிகரிப்பு


உலகம் முழுவதிலும் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு சிறுநீரகக் கோளாறால் அவதிப்படுவோரின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக பச்சிளங் குழந்தைகளிடமும் இக்கோளாறு அதிக அளவில் காணப்படுகிறது என்கிறார் சென்னையின் பிரபல டாக்டர் வெங்கடேசன் அவர் மேலும் கூறியதாவது:-
 
மனிதனின் முக்கிய உறுப்புகளுள் சிறுநீரகமும் ஒன்று. நாம் சரிவர தினமும் நீர் அருந்தாவிட்டாலோ, அதிக அளவில் ரசாயன குளிர்பானம் அருந்தினாலோ சிறுநீரகத்தில் கல் உண்டாகும்.
 
கடைகளில் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் நொறுக்குத் தீணிகளில் அவை கெட்டுப் போகாமல் இருக்க சில குறிப்பிட்ட ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. இந்த ரசாயனங்களும் சிறு நீரகத்தில் கல் உருவாக காரணமாக அமைகின்றன.
 
தற்போது சென்னை போன்ற பெருநகரங்களில் பாக்கெட் உணவுகள் மற்றும் அதிக வெப்பம், குழந்தையின் உடலுக்கு தேவையான நீர் கொடுக்காமல் இருப்பது போன்ற பல்வேறு காரணங்களால் குழந்தைகளுக்கு சிறுநீரக்கல் ஏற்படுகிறது.
 
குழந்தைகள் சிறுநீர் கழிக்கும்போது அதாவது, அடிக்கடி காய்ச்சல், சிறுநீரில் ரத்தம் கலந்து வருவது போன்றவை சிறுநீரகக்கல் ஏற்பட்டதற்கான சில முக்கிய அறிகுறிகளாகும்.
 
குழந்தைகளுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் குழந்தைகள் நல சிறுநீரக மருத்துவ நிபுணரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்வது நல்லது. சென்னையில் கடந்த சில மாதங்களாக சிறுநீரகக்கல் கோளாறால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
 
இவர்களில் பெரும்பாலானவர்கள் பாக்கெட் உணவுகள் மற்றும் உடலுக்கு தேவையான தண்ணீர் அருந்தாதவர்களாக உள்ளனர். எனவே குழந்தைகளின் எடைக்கு ஏற்றபடி பெற்றோர் தண்ணீர் கொடுப்பது நல்லது. அதாவது குழந்தைக்கு 1 கிலோ எடைக்கு 75 மில்லி தண்ணீர் கொடுக்க வேண்டும். 11 கிலோ குழந்தைக்கு 1 லிட்டர் தண்ணீர் கொடுக்க வேண்டும்.
 
இந்த அளவுக்கு குழந்தைகள் தண்ணீர் குடித்தால்தான் சிறுநீரகத்தில் படியும் உப்புக்கள் அதை விட்டு வெளியேறும். சரியான அளவுக்கு நீர் அருந்தாவிட்டால் சிறுநீரகத்தில் படியும் உப்புக்கள் நாளாக நாளாக கற்களாக மாறி விடுகின்றன. சிறுநீரகக்கல் உருவானால் சிறுநீர் பாதையில் வலி ஏற்படும். எனவே குழந்தைகள் சிறுநீர் போகும்போது அழுதால் உடனடியாக டாக்டரிடம் சென்று காட்டுவது நல்லது.
 
சிறுநீரகக் கற்களை தொடக்க நிலையிலேயே கண்டு பிடித்தால் அதை மாத்திரை, மருந்து மூலம் எளிதாக கரைத்து விடலாம். குழந்தைகளுக்கு உப்பு- காரம் மிகுந்த உணவுகளை அதிக அளவில் கொடுக்கக் கூடாது. இறைச்சி போன்ற அசைவ உணவுகளையும் கொடுக்கக் கூடாது. காரணம் இறைச்சி போன்ற உணவுகளில் யூரிக் ஆசிட் மிகுதியாக இருப்பதுதான்.
 
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் வெப்பம் குழந்தைகளை தாக்குகிறது. வெப்பம் அதிகமாகும் போது உடலுக்கு கூடுதல் தண்ணீர் தேவைப்படுகிறது. சிறுநீரக சுத்திகரிப்புக்கு தண்ணீர் அவசியம். அது இல்லாத போதுதான் குழந்தையின் சிறுநீரகத்தில் நோய்த் தொற்று மற்றும் கல் ஏற்படுகிறது.
 
சமீபத்தில் சென்னை ஆஸ்பத்திரிகளில் சிறுநீர கக்கல் கோளாறு பாதித்த குழந்தைகள் பலர் அனுமதிக்கப்பட்டுள்ளன. 2 வயது குழந்தை ஒன்றுக்கு சமீபத்தில் அறுவை சிகிச்சை மூலம் சிறுநீரகக்கல் அகற்றப்பட்டது.
 
எனவே சிறுநீரக கோளாறு ஏற்படுவதை தடுக்க சிறு குழந்தைகளுக்கு அதிக அளவில் சுத்தமான தண்ணீர் கொடுக்கலாம். வண்ணம் கலந்த ரசாயன குளிர்பானங்கள் கொடுப்பதை தடுக்க வேண்டும் என்கிறார் பெரம்பூர் சென் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் வெங்கடேசன்.

செவ்வாய், 3 ஜூலை, 2012

ஃபலஸ்தீன் மக்களுக்கு உறுதுணையாக இருப்போம்: முஹம்மது முர்ஸி!


கெய்ரோ:ஃபலஸ்தீன் மக்களின் உரிமைகள் முழுமையாக கிடைக்கும் வரை அவர்களுக்கு உறுதுணையாக இருப்போம் என எகிப்து அதிபர் முஹம்மது முர்ஸி தெரிவித்துள்ளார். அதிபராக பதவியேற்ற பின்னர் கெய்ரோ பல்கலைக்கழகத்தில் நிகழ்த்திய துவக்க உரையில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
ஃபலஸ்தீன் மக்கள் இழந்த அனைத்து உரிமைகளையும் மீட்டெடுக்க எகிப்து மக்களும், அரசும் உறுதுணையாக இருக்கும் என பலத்த கரகோஷங்களுக்கு மத்தியில் முர்ஸி அறிவித்தார்.
உயர் அரசியல் சாசன நீதிமன்றத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்ட முர்ஸி, கெய்ரோவில் ராணுவ பயிற்சி மையத்திற்கு சென்று ராணுவ அரசிடம் இருந்து அதிகாரப்பூர்வமாக அதிகாரத்தை பெற்றுக்கொண்டார்.
முர்ஸிக்கு அனைத்துவிதமான ஒத்துழைப்பையும் அளிப்பதாக ராணுவ தலைமை தளபதி ஃபீல்ட் மார்ஷல் முஹம்மது ஹுஸைன் தன்தாவி உறுதி அளித்தார்.

திங்கள், 2 ஜூலை, 2012

ஜாமியா மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா இறைவன் அருளால் மிகச்சிறப்புடன் நடந்தது.


லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரியின் 68 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா 01.07.2012 காலை 9.30 மணியளவில் தொடங்கியது. விழா நடைப்பெற்ற தாருத் தஃப்சீர் அரங்கம் காலை முதலே மக்கள் வெள்ளாத்தால் நிரம்பியிருந்தது.விழாவிற்கு ஜாமிஆவின் தலைவர் ஹாஜி.பி.எம்.முஹம்மது ஆதம் தலைமை வகித்தார்.ஜாமிஆவின் செயலாளர் ஹாஜி.பி.எம்.முஹம்மது எஹ்யா வரவேற்றார்.பட்டம் பெற்ற இளம் ஆலிம்களை வாழ்த்தியும் மார்க்க கல்வியின் அவசியம் குறித்தும் சென்னை அடையார் பெரியபள்ளியின் தலைமை இமாம் எம்.சதீதுத்தீன் பாகவி, இலங்கை மார்க்க அறிஞர் அய்.எம்.முஹம்மது முபாரக் ஆகியோர் பேசினர்.
பெங்களூர் ஸபீலுர் ரஷாத் அரபிக் கல்லூரியின் முதல்வரும் கர்நாடக அமீரே ஷரியத் மெலானா முஃப்தி அஷ்ரப் அலி ஹஜ்ரத் பட்டமளிப்பு பேருரை நிகழ்த்தினார்.விழாவில் ஜாமிஆவின் பேராசிரியர்கள் நாயிப் முஃப்தி அல்லாமா எஸ்.ஏ.அப்துர் ராப் ஹஜ்ரத்,ஷைகுல் ஹதீஸ் மெலானா அப்துல் ரஹ்மான் ஹஜ்ரத்,உள்ளிட்ட அனைத்து பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.ஜாமிஆவின் முதல்வர் சத்ருல் முதர்ரிஸீன் முஃப்தி ஏ. நுருல் அமீன் ஹஜ்ரத் சனது வழங்கி சிறப்புரை ஆற்றினார்.