லால்பேட்டை,ஜுன் 23
/
நாளை 24.06.2012 லால்பேட்டை நகரில் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன்,அப்துல் ரஹ்மான் எம்.பி.ஆகியோர் கலந்து கொள்ளும் இரண்டு முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
இதையொட்டி அக்கட்சியினர் தலைவர்களை வரவேற்க புது பஜார் சந்திப்பு பகுதியில் கொடி,பேனர்கள் வைத்துள்ளனர்.
/
நாலை லால்பேட்டை அருகில் உள்ள மானியம் ஆடூர் கிராமத்திர்க்கு தமுமுக,ம ம க வின் தலைவர் வருகிறார் அப்போது லால்பேட்டை புது பஜாரில் கொடி ஏற்ற ஏர்பாடு செய்து பஜார் மற்றும் வடக்கு தெரு பகுதியில் தமுமுக, மமக கட்ச்சியினர் தோரனம் கட்டினர் ஆனால் தோரனம் கட்டுவதில் முஸ்லிம் லீக், தமுமுக, மமக கட்சிக்கிடையே இரண்டு நாட்களாக கருத்து வேறுபாடாக இருந்து வந்தது.
/
இன்று பிர்பகள் 12.30 மணியளவில் புது பஜாரில் உள்ள முஸ்லில் லீக் அலுவலகம் அருகில் முஸ்லிம் லீக் கட்சியினர் தோரனம் கட்டினர் அப்போது தமுமுக தொண்டர்கள் அங்குவந்து இந்த இடத்தில் நாங்கள் கொடுயேற்ற உள்ளோம் எனவே இங்கு தோரணம் கட்டகூடாது என்று தடுத்தனர் அதனால் முஸ்லிம் லீக் .தமுமுக இருவருக்கும் கடுமையான வாக்கு வாதம் ஏற்பட்டது ஆபாசாவார்தைகள் அல்லி வீசப்பட்டது இதனால் லால்பேட்டையில் பெரும் பதட்டமான சூல்நிலை ஏற்பட்டது உடன் காவல் துரைக்கு தகவல் தெறிவிக்கப்பது உடன் டி எஸ் பி தலைமையில் மத்திய சிறப்புப்படை சம்பவ இடத்திர்க்கு வந்து முகாமிட்டு அமைதி படுத்தியது.
/
மதியம் 2.30 மணியளவில் காட்டுமன்னார்குடி காவல் நிலையத்தில் இருதரப்பினர்கள் பேச்சுவர்த்தை நடைப்பெற்றது அந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில் லால்பேட்டை உள் பகுதியில் இரு அணிகளும் எந்த தோரனமும் கட்டக்கூடாது எனவும் கட்டிய அனைத்து தோரணங்களையும் அகற்றவும் முடிவு செய்யப்பட்டது.
/
மாலை 5.30 மணியளவில் காவல்துரை அதிகாரிகள் முன்னிலையில் அனைத்து தோரணங்களும் அகற்றப்பட்டது.