AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

புதன், 21 செப்டம்பர், 2011

எலக்ட்ரானிக் கருவிகள் ரிப்பேர் செயலிழந்தது ஜிபிஎஸ் தொழில்நுட்பம் கி.ஜெயப்பிரகாஷ்

சென்னை : மாநகர போக்குவரத்து கழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஜிபிஎஸ் தொழில்நுட்பம், எலக்ட்ரானிக் கருவிகள் பழுதானதால் பல்வேறு இடங்களில் செயலிழந்துள்ளது. 2008 ஆண்டு முதன்முதலில் மாநகர அரசு பஸ்களில் ஜிபிஎஸ் (வாகன நகர்வு கண்காணிப்பு) கருவியை அறிமுகப்படுத்தியது. இதன் கருவிகள் பஸ்களில் பொருத்தப்பட் டுள்ளன. பஸ் நிறுத்தங்களிலும் எலக்ட்ரானிக் போர்ட்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன. 

இதன்மூலம் பஸ் எங்கு செல்கிறது என்பதை கண்காணிக்க முடியும். போக்குவரத்து ஊழியர்கள் தொடர்பான புகார்களை செல்போன் மூலம் தெரிவிக்க முடியும். போக்குவரத்து ஊழியர்கள் கண்காணிப்பு அறைக்கு தொடர்பு கொண்டு புகார்களை அளிக்க முடியும். நடத்துனர் விதிமீறல்கள், சரியான நேரத்திற்கு வராத பஸ், பொருட்களை தவற விடுதல் உள்ளிட்ட புகார்கள் பொதுமக்களிடம் இருந்து வந்துள்ளன. 

இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சில நேரங்களில் குழந்தைகளும் மீட்கப்பட்டுள்ளன. இப்படி சிறப்பான பல்வேறு சேவைகளை செய்து வந்த ஜிபிஎஸ் தொழில்நுட்பம் தற்போது செயலிழந்து காணப்படுகிறது. தற்போது இருக்கும் நிலையின்படி, மொத்தம் 150 பஸ் நிறுத்தங்களில் ஜிபிஎஸ் போர்டுகளை வைக்க முடியும். ஆனால் 51 பஸ் நிறுத்தங்களில் மட்டுமே போர்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

 இதில் பெரும்பாலானவை மத்திய மற்றும் தெற்கு சென்னையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மழைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில் பழுதான எலக்ட்ரானிக் கருவிகளால் பல்வேறு ஜிபிஎஸ் தொழில்நுட்ப போர்டுகள் செயலிழந்துள்ளன.

இதுகுறித்து போக்குவரத்து அதிகாரி கூறுகையில், ÔÔஜிபிஎஸ் தொழில்நுட்பத்தில் உள்ள எலக்ட்ரானிக் கருவிகளை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றம் செய்ய வேண்டும். புதிய கருவிகளை பொருத்த வேண்டும். அப்போதுதான் தொடர்ந்து சிறப்பாக செயல்படும். தற்போது 3 ஆண்டுகளையும் கடந்து இருப்பதால், கருவிகள் செயலிழந்துள்ளன. அதனால்தான் மழைக்காலத்தில் முழுமையாக செயல்பட முடிவதில்லைÕÕ என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக