AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

புதன், 21 செப்டம்பர், 2011

பூகம்பம் பற்றி எச்சரிக்காத விஞ்ஞானிகள் மீது வழக்கு

மிலன் : பூகம்பம், புயல், எரிமலை உட்பட இயற்கை சீற்றங்கள் பற்றி மக்களுக்கு சரியான தகவல் தர தவறும் விஞ்ஞானிகள் சிக்கலை சந்திக்க நேரிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இத்தாலியில் பூகம்ப எச்சரிக்கை விடுக்காத விஞ்ஞானிகள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இத்தாலியின் லாகுய்லா பகுதியில் 2009ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. ரிக்டரில் அது 6.3 ஆக பதிவானது. அதில் கட்டிடங்கள் இடிந்து விழுந்து 300 பேர் பலியாகினர். பூகம்பத்துக்கு ஒரு சில நாட்கள் முன்பிருந்தே அந்த பகுதியில் சிறிய நிலநடுக்கங்கள் உணரப்பட்டன.

அதுபற்றி புவியியல் ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் பலமுறை ஆலோசனை கூட்டங்கள் நடத்தினர். அதில் பூகம்ப ஆபத்து பற்றி விரிவாக ஆராய்ந்தனர். விஞ்ஞானிகள் இடையே பல்வேறு தகவல்களை பரிமாறிக் கொண்டனர். எனினும், சிறிய அதிர்வுகளை தொடர்ந்து சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்படக்கூடும் என்று மக்களுக்கு எச்சரிக்கை விடவில்லை.

அடுத்த சில நாட்களில் பூகம்பம் ஏற்பட்டு 300 பேர் பலியாக நேர்ந்தது. இதுபற்றி ஆலோசனை நடத்தியும் மக்களுக்கு எச்சரிக்கை வெளியிடாதது விஞ்ஞானிகள்  கடமை தவறியதாகும் என்று நீதிமன்றத்தில் சிலர் வழக்கு தொடர்ந்தனர். இதுவரை இயற்கை சீற்றங்கள் குறித்த விஞ்ஞானிகளின் அறிவுரை மற்றும் கருத்துகள் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டதில்லை. முதல்முறையாக விஞ்ஞானிகள் கடமை தவறியதாக தொடரப்பட்ட வழக்கு உலகம் முழுவதும் கவனத்தை கவர்ந்துள்ளது.

அதேநேரம், இயற்கை சீற்றங்கள் பற்றிய கணிப்புகள் துல்லியமாக இருக்க வாய்ப்பு குறைவு என்பதால் இதில் விஞ்ஞானிகளை தண்டிக்க முடியாது என்றும் ஒரு தரப்பில் விவாதம் எழுந்தது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக இத்தாலி புவியியல் ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த 6 விஞ்ஞானிகள் இந்த வாரத்தில் விசாரணையை சந்திக்க உள்ளனர். இதனால், விஞ்ஞானிகளின் பணிக்கு சட்ட பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ள
து.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக