AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

புதன், 21 செப்டம்பர், 2011

சீன, அரபு மொழிகளில் திருக்குறள்

திருக்குறளையும், பாரதியார், பாரதிதாசன் படைப்புகளையும் அரபு, சீன மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட தமிழக அரசு 3 கோடியே 20 லட்ச ரூபாயை ஒதுக்கி யுள்ளது. இதற்கான அறிவிப்பை இந்து அறநிலைய அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் புதன்கிழமை சட்டமன்றத்தில் வெளியிட்டார். தமது அறிவிப்பில், “அரபு மொழியில் மொழிபெயர்த்து நூல்களாகவும், இணையத் திலும் வெளியிட உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு மொத்தம் 20 லட்ச ரூபாய் வழங்கப்படும். “இவற்றை சீன மொழி யிலும் மொழிபெயர்த்து நூல் களாகவும், இணையத்திலும் வெளியிட தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்கு ஆண்டுக்கு 60 லட்ச ரூபாய் வீதம் ஐந்து ஆண்டுகளுக்கு 3 கோடி ரூபாய் வழங்கப்படும்,” என்று அமைச்சர் சண்முகநாதன் குறிப்பிட்டார். சிங்கப்பூரில் நாளை மறுதினம் ‘பாரதியார்-பாரதி தாசன் விழா 2011’ நடைபெற இருக்கும் வேளையில் இந்த இனிப்பான அறிவிப்பு வந்துள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக