AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

புதன், 21 செப்டம்பர், 2011

வன்முறையைக் கைவிடுங்கள்: நக்ஸல்களுக்கு பிரதிபா வேண்டுகோள்

லகு (ராஜஸ்தான்), செப்.20: நக்ஸலைட்டுகள் வன்முறையைக் கைவிட்டு அமைதிப் பாதைக்கு திரும்ப வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 நாட்டின் வளர்ச்சிக்கு ஸ்திரமான சூழலும், அமைதியும் அவசியம். எனவே நக்ஸலைட்டுகள் வன்முறையைக் கைவிட்டு தங்களது பங்களிப்பை நாட்டின் முன்னேற்றத்துக்கு அளிக்க முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
 சத்தீஸ்கர் மாநிலம் தந்தேவாடாவில் கடந்த ஆண்டு ஏப்ரலில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை அதிகாரி சத்யவான் சிங் யாதவின் சிலை திறப்பு விழா ராஜஸ்தான் மாநிலம் லகு கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 இவ்விழாவில் கலந்து கொண்டு சிலையை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல். அப்போது நக்ஸலைட்டுகளுக்கு அவர் மேற்கண்ட வேண்டுகோள் விடுத்தார்.
 இவ்விழாவில் அவர் மேலும் பேசியது:
 இந்தியாவுக்கு மட்டுமல்லாது இந்த உலகத்துக்கே பயங்கரவாதம் அச்சுறுத்தலாகவுள்ளது. நக்ஸலிசம் இந்தியாவுக்கு பெரும் பிரச்னையாகவுள்ளது. நக்ஸலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கையில் சிறப்பாகச் செயல்பட்டவர் சத்யவான் சிங் யாதவ். தந்தேவாடா நிகழ்வில் நாட்டுக்காக உயிரை நீர்த்த வீரர்கள் அனைவருக்கும் நான் மரியாதை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் பிரதிபா பாட்டீல்.
 மாவோயிஸ்டுகளால் கொல்லப்பட்ட சிஆர்பிஎப் அதிகாரி ஒருவருக்கு இப்படி சிலை திறந்து கெüரவிப்பது இதுவே முதல்தடவை.
 இவ்விழாவில் ராஜஸ்தான் ஆளுநர் சிவராஜ் பாட்டீல், முதல்வர் அசோக் கெலாட், மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக