AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

புதன், 21 செப்டம்பர், 2011

அமைதி கவுன்சில் தலைவராக இருந்தவர் ஆப்கன் முன்னாள் அதிபர் குண்டுவெடிப்பில் பலி

காபூல் : ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபரும், நாட்டின் அமைதி கவுன்சில் தலைவருமான பக்ருதீன் ரப்பானி, குண்டுவெடிப்பில் நேற்று கொல்லப்பட்டார்.
ஆப்கானிஸ்தான் எதிர்க் கட்சியின் முக்கிய தலைவர் ரப்பானி. முன்னாள் அதிபராக இருந்தவர். ஆப்கனில் தலிபான், அரசு இடையே அமைதி ஏற்படுத்த முயன்று வந்தார். ஆப்கன் அமைதி கவுன்சில் தலைவராக இருந்தார்.

தலைநகர் காபூலில் நேற்று அவரது வீட்டுக்கு தலிபான் தீவிரவாத அமைப்பின் பிரதிநிதிகள் இருவர் பேச்சுவார்த்தைக்கு வந்தனர். அவர்களுடன் ரப்பானி பேசிக் கொண்டிருந்தார். 
அப்போது திடீரென வீட்டுக்குள் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. வீடு தீப்பற்றி எரிந்ததுடன் இடிந்து தரைமட்டமானது. இந்த குண்டுவெடிப்பில் ரப்பானி உடல் சிதறி பலியானார். 

அவருடன் எத்தனை பேர் பலியாகினர் என்ற விவரம் தெரியவில்லை. பேச்சு நடத்த வந்த தலிபான் தீவிரவாதிகள் தற்கொலை படையினரா, அவர்கள் வெடித்து சிதறினரா என்று போலீசார் தீவிர ஆய்வு நடத்தி வருகின்றனர். காபூலில் அமெரிக்க தூதரகம் மற்றும் நேட்டோ படை தலைமையகத்துக்குள் 6 தலிபான் தீவிரவாதிகள் புகுந்து பயங்கர தாக்குதல் நடத்திய சில நாட்களில் முன்னாள் அதிபர் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக